உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவிலிருந்து வரும் அகதிகளை சிரியாவுக்கே திருப்பியனுப்புவதாக துருக்கி மீது குற்றச்சாட்டு! ஆனால் பிபிசியின் புலனாய்வில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது துருக்கி! - பிரிட்டிஷ் வரலாற்றின் மிகப் பெரிய கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீது குற்றம் உறுதி! இரண்டு கோடி டாலர்கள் மதிப்புள்ள நகைகள் லண்டனின் ஹட்டன் கார்டனில் கொள்ளையடிக்கப்பட்டன!
-
- 0 replies
- 551 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் இருந்து ரஷ்ய போர் விமானங்கள் வெளியேறுகின்றன. தமது தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டதாக அதிபர் பூட்டின் கூறுகிறார். - ஐரோப்பாவை அடைய உயிரைப் பணயம் வைக்க வேண்டாமென குடியேறிகளுக்கு வேண்டுகோள். மாசிடோனியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கிரேக்கத்துக்கு அனுப்பப்பட்டனர். - ஆப்பிரிக்க நாடான மலாவியில் ஒரு சோதனை முயற்சியாக எச் ஐ வி சோதனை முடிவுகளை துரிதப்படுத்த ஆளில்லா சிறிய விமான்ங்களை பயன்படுத்துகிறார்கள்.
-
- 0 replies
- 231 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரஸல்ஸில் செவ்வாயன்று தேடுதலின் போது கொல்லப்பட்டவர் அல்ஜீரியாவை சேர்ந்தவராவார். இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பின் கொடியும் அங்கு காணப்பட்டது! - மத்திய ஆப்பிரிக்காவில் சட்ட விரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டு, அருகிவரும் யானைகள். - பாலியல் தொழிலாளர்கள், மாலுமிகளின் மற்றும் கைதிகளின் அடையாளமாக மாத்திரம் இருந்த பச்சை குத்தும் வழக்கம் கியூபாவில் இப்போது பிரபலமாகிவருகின்றது.
-
- 0 replies
- 377 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - கடலில் வரும் அகதிகளை மீட்க விரையும் ஐரோப்பிய கப்பல்கள். அகதிகள் நெருக்கடிக்கு துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கும் நிலையில் கடலில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ளது. - சவுதியில் புதிதாக தேர்வான பெண் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திக்கும் சவால்கள். இவர்களால் பெண்களை ஒடுக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. - புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசாரான டிமுர்லெங்கியா குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்கள்.
-
- 0 replies
- 356 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * எக்வடாரின்ன் மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 270 பேர் பலியான நிலையில் உயிர் தப்பியவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரம்; * பிரேசில் அதிபர் டில்மா ரொசெஃபை குற்றம்சாட்டி பதவிநீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியது; பிரேசிலின் தேசிய நிற ஆடைகளணிந்து அவரது எதிர்ப்பாளர்கள் இதைக் கொண்டாடினாலும் அதிபரின் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்; * போலியோவுக்கு எதிரான புதிய நோய்த்தடுப்பு மருந்து அறிமுகம்; உலக வரைபடத்தில் அழிவின் விளிம்பிலுள்ள போலியோ நோய் ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் தொடர்வது ஏன்? ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 365 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போது டென்னிஸ் விளையாட்டும் சிக்கியுள்ளது! பிரத்யேகமாக செய்தித் திரட்டியது பிபிசி! - சர்வதேச தண்டனைத் தடைகள் நீங்க இரானுக்கு இது மறக்கமுடியாத முக்கியத் தருணம்! புதிய தொழில்வாய்ப்புகள் பற்றி அண்டையிலுள்ள துபாயிலுருந்து ஒரு ஆய்வு! - எதிர்காலத்தில் ஒருவேளை மனித இனத்தையே காக்கும் பொக்கிஷமாகத் திகழக்கூடிய வடதுருவ விதைகள் காப்பகத்துக்கு ஒரு பயணம்!
-
- 0 replies
- 263 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் நெருக்கடி குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதித்துக்கொண்டிருக்க, போகும் இடமறியாது ஆயிரக்கணக்கான அகதிகள் தவிக்கிறார்கள். - சிறைக்கம்பிகளுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை. துனிஸிய பெண்கள் சிறையில் நிலைமைகளை ஆராய்ந்த பிபிசி. - அழிந்துவரும் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க புதிய பிரிவை திறக்கும் லண்டன் மிருகக்காட்சிசாலை.
-
- 0 replies
- 342 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுத்தாக்குதலில் இருபத்தெட்டு பேர் கொல்லப்பட்டு, முன்னூறுக்கும் அதிகமானோர் காயம்! புராதன காலத்தில், ஆண்டுக்கணக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல்மேய்ரா தோரணவாயிலை சில நாட்களிலேயே வடிக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரம்! விண்வெளிக்கு சென்றுவந்த விதைகளில் பிரிட்டிஷ் பிள்ளைகள் பரிசோதனைகளை செய்கிறார்கள்.
-
- 0 replies
- 341 views
-
-
இருபத்தைந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துபோன சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் காரணமாக, பெரும் வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள். - ஜகார்த்தாவில் சென்ற வாரம் நடந்த தாக்குதல் பற்றி விசாரணைகள் நீடிக்கும் நிலையில், முக்கிய சந்தேகநபரின் சகோதரருடன் பிபிசி கண்ட செவ்வி. - புதுவகைப் படகுகளின் ஆக்கிரமிப்பால், அழியும் ஆபத்தில் சுடானின் மரப்படகு செய்யும் பாரம்பரிய கைத்தொழில்.
-
- 0 replies
- 514 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலில் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு மேலும் வெற்றிகள்! நியூயார்க் மாநிலத்தில் இருவருக்கும் கணிசமான வெற்றி! * செவ்வாய்கிரகத்தில் குடியேற ஆசையா? செவ்வாய்க் கிரகத்துக்கு ஆய்வுக்கலனை அனுப்பவிருக்கும் சீன அரசு, வானியல் மீதான ஆர்வத்தை சிறார்களிடம் ஊக்குவிக்க முயல்கிறது. * போர் மேகம் சூழ்ந்த இராக்கில் வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்கு வைக்கும் சட்டவிரோத உடலுறுப்பு வணிக குற்றக்கும்பல்கள்! பாதிக்கப்பட்ட சில குடும்பங்களை நேரில் சந்தித்து பிபிசி செய்தியாளர் அளிக்கும் நேரடித்தகவல்கள் ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 438 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பாகிஸ்தானில் மீண்டும் ஒரு ரத்தக்களரி. பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் ஆயுதபாணிகள் புகுந்து தாக்கியதில் பத்தொன்பது பேராவது கொல்லப்பட்டனர். - குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்கும் புதிய திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்க, துருக்கிக்குள் செயலாற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை ரகசியமாகப் படம்பிடித்தது பிபிசி. சீரற்ற இதயத் துடிப்புள்ள ஆண்களை விட பெண்களுக்கே உயிராபத்து மிக்க இதய பாதிப்பும் மூளைப் பாதிப்பும் வரும் ஆபத்து இருமடங்கு அதிகம் என்கிறது ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு.
-
- 0 replies
- 365 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *கார்களின் மைலேஜில் ஏமாற்றியதாக ஒப்புக்கொண்ட மிட்சுபிஸி நிறுவன அலுவலகங்களில் ஜப்பானிய அதிகாரிகள் சோதனை! *கருக்கலைப்பை தடை செய்ய போலந்து முயல்கிறது!றோமன் கத்தோலிக்க திருச்சபையால் ஆதரிக்கப்படும் இந்த திட்டத்துக்கு அங்கு நல்ல எதிர்ப்பும் உள்ளது. *சவுதி அரேபியாவின் அரச பள்ளிக்கூடங்களில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளலாமா என்று அரசாங்கம் விவாதிக்கிறது!
-
- 0 replies
- 297 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - முன்னாள் ரஷ்ய உளவாளி லிட்வினென்கோவின் மரணத்தை ஆராய்ந்த பிரிட்டிஷ் விசாரணை, நஞ்சு கொடுக்கப்படுவதற்கு அதிபர் புடினே ஒப்புதல் அளித்திருக்கலாம் என முடிவு தெரிவித்துள்ளது. - மதநிந்தனை செய்ததாக தவறாக நம்பி, தன் கையை தானே வெட்டிக்கொண்ட பாகிஸ்தானிய பையனை பிபிசி சந்தித்தது. - உலகின் எழில்மிகு சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான டொங்கோ தீவுமக்கள் எதிர்கொள்ளும் உடற்பருமன் பிரச்சினை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்.
-
- 0 replies
- 412 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்க- கியூப உறவில் ஒரு புதிய விடியலாக கம்யூனிஸ கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம். - தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக தொடரும் போராட்டங்கள் அங்கு மீண்டும் இன முரண்பாடு தொடர்வதை காண்பிக்கிறது. தனது தேசிய நல்லிணக்க திட்டத்தை பூர்த்தி செய்து விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. - தனது உயிரை காப்பாற்றியவரை சந்திக்க ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கும் ஒருபென்குவின்.
-
- 0 replies
- 386 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அகதிகள் நெருக்கடி ஐரோப்பாவையே ஆட்டம் காண வைத்துவிடும் என்கிறார் பிபிசிக்கு செவ்வி வழங்கிய பிரஞ்சுப் பிரதமர். - இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் கிடையாது என்கிறார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. - வெறுப்புணர்வுத் தாக்குதல்களை எதிர்கொள்ள கராத்தே கற்றுக்கொள்ளும் அமெரிக்காவின் முஸ்லிம் யுவதிகள்.
-
- 0 replies
- 291 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் பயங்கரவாத தாக்குதல். நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் முப்பத்து நான்கு பேர் பலி; நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம். விமான நிலைய குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பிரஸ்ஸல்ஸ் வாழ் தமிழரின் நேரடித் தகவல்கள். பயங்கரவாத சந்தேகநபரின் ஐஃபோனை அன்லாக் செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ள நிலையில், அதற்கு புதிய வழி ஒன்று கிடைத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான நீதிமன்றத்திடம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 337 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸின் அதிகாரபூர்வமற்ற குடியேறிகளுக்கான ஜங்கிள் என்னும் முகாமை அழிக்க புல்டோசர்கள் தயாராகிவிட்டன. ஜங்கிள் என்னும் அந்த முகாமின்வாசிகள் அங்கிருந்து வெளியேறி ஆகவேண்டும். - எகிப்தில் கொலை செய்ததாக ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுவனின் விவகாரம் தவறாக நடந்த ஒன்று என்று அதிகாரிகள் கூறுகின்றனர். - பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒரு கொரில்லாவுக்கு அவசரமாக மகப்பேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
-
- 0 replies
- 256 views
-
-
பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் சந்தேகநபர்களுக்கு வலைவீசி, தேடுதல் வேட்டை தொடர்கிறது ஸீக்கா வைரஸ் பரவிவரும் பிரெஸிலில் மேலும் பல குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளதாக உறுதிப்படுத்தும் அதிகாரிகள். முதியவர் பராமரிப்பு அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையல்ல என்று காட்டுகிறது ஜப்பானின் புதிய முயற்சி ஒன்று
-
- 0 replies
- 238 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பாவுக்கு கடல் கடந்து வரும் குடியேறிகளை தடுக்க தான் தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிரேக்கம் கோபத்துடன் நிராகரித்துள்ளது. - பிரேஸிலின் ஸீகா பரவலை உலகுக்கு காட்டிய ஒரு புகைப்படத்தால் பிரபலமான தாய் மற்றும் அவரது பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோரின் சோகக்கதை. - ஆஸ்திரேலியா தனது தளர்ந்துவரும் பொருளாதாரத்தை காப்பாற்ற ஆசியாவுக்கு விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முனைகிறது. அது சாத்தியமா என்று ஆராயும் காணொளி.
-
- 0 replies
- 214 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… * பிரஸ்ஸல்ஸில் கைதான பாரிஸ்-தாக்குதல் சந்தேகநபர் சலா அப்தெஸ்லாம், தன்னைப் பற்றி விளக்கமளிப்பதற்காக விரைவில் தன்னை பிரான்ஸிடம் ஒப்படைக்குமாறு கோரியிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறுகின்றார். * ஆர்ஜண்டீனாவில் ஆயிரக் கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக காரணமான இராணுவ சதிப்புரட்சியின் நாற்பதாவது ஆண்டு நிறைவில், அமெரிக்க அதிபரின் விஜயத்துக்கு எதிராக போராட்டம். * லண்டனுக்கு அருகே அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய மிதக்கும் கதிரொளி மின் உற்பத்தி நிலையம் செயற்படத் துவங்கியுள்ளது குறித்த சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 502 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கியில் மிகவும் தீவிரமாக தேடப்படும் குர்து பிரிவினைவாத பிகேகே அமைப்பு தலைவரை பிபிசி சந்தித்தது. துருக்கிக்கு எதிரான சண்டையை தீவிரப்படுத்தப் போவதாக அவர் கூறுகிறார். - நேபாளத்தில் ஒன்பதாயிரம் பேர் பலியான பூகம்பத்தின் ஒரு வருடத்தின் பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டமைக்க அந்த நாடு தடுமாறுகிறது. - ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அவர் மறைந்து நானூறு ஆண்டுகளின் பின்னர், மேடையில் இருந்து மெய்நிகர் உலகுக்கு.
-
- 0 replies
- 387 views
-
-
- பனிப்புயலில் மூழ்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதி தலைதூக்கத் தடுமாற, கடும்குளிரில் நடுநடுங்குகிறது கிழக்கு ஆசியா! - இராக்கில், வகுப்புவாத வன்செயல்கள் தொடர்ந்தாலும், தென்படுகிறது மெலிதான மாற்றம்! ஒரு சில இடங்களில், ஊர் திரும்பும் சுன்னி குடும்பங்களை ஷியா ஆயுதக்குழுக்கள் வரவேற்கின்றன! - அத்துடன்.... உலகின் ஆகப் பெரிய கடலை, துடுப்பு போட்டே கடந்த நான்கு பெண்கள்! பிரிட்டிஷ் மங்கையர் உலக சாதனை!
-
- 0 replies
- 321 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் பிரச்சினை குறித்து ஆராய ஐரோப்பிய அமைச்சர்கள் பிரஸல்ஸில் சந்திக்கும் அதேநேரம் அகதிகளுக்கான கோட்டா குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஹங்கேரி நடத்துகின்றது. - லண்டன் கடைகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் தோலை வெண்மையாக்கும் கிறீம்கள். - அத்துடன், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உலக கோப்பையை வென்றும் சொந்த நாட்டில் ஏமாந்துபோன நைஜீரியாவின் கால்பந்தாட்ட வீரர்கள்.
-
- 0 replies
- 349 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சற்று முன்னர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு நபரை காவலர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக பெல்ஜியத்தில் இருந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஊடக செய்திகள்; பிரஸ்ஸல்ஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கூறும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியின் பேட்டி; இராக்கிய கிராமம் மீது ஐ எஸ் அமைப்பு நடத்திய ரசாயனத்தாக்குதல் குறித்து அங்கு சென்ற பிபிசி செய்தியாளர் தரும் நேரடித் தகவல்கள்; நோய்த்தடுப்பு மருத்துவமுறை மூலம் முதல் ரக சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா? இதற்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்த பிபிசியின் சிறப்புச் செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 381 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - உலகின் மிகவும் மோசமான அணு விபத்து செர்நோபிலில் நடந்து இன்றுடன் முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அங்கு பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம். - வங்கதேசத்தில் தொடர்ந்து கொல்லப்படும் சுதந்திர எழுத்தாளர்கள். ஒருபாலுறவு ஆதரவு செயற்பாட்டாளர் இருவரை கொன்றதாக உரிமை கோரும் இஸ்லாமியவாத ஆயுதக்குழு. - அன்னங்களோடு பறக்கும் அணங்கு. அன்னப்பறவைகள் ஆண்டுதோறும் செல்லும் பயணத்தில் சேர்ந்து பறக்கும் பெண்.
-
- 0 replies
- 287 views
-