Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில், * கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறுகிறார்கள். அங்கு மக்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் பிபிசி பேசியது. * நைஜீரியாவில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரிக்கை. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்று ஹொங்காங்கின் பிரபலம் ஒருவர் பேசுகிறார். இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு சீன எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி போராளி அவர்.

  2. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கிழக்கு யுக்ரைனில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் முடிவுக்கு வரவேண்டுமென ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கோரிக்கை; * உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் ஜோர்டானுக்கு இடைபட்ட பகுதியில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சிக்கித்தவிப்பு; * உலகப்புகழ்பெற்ற கம்போடியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமான அங்கோர் வாட்டின் அருகில் வாழ்பவர்கள் அந்த பகுதியின் சுற்றுலா வருமானத்தால் பலன் பெறுகிறார்களா? ஆராய்கிறது பிபிசி.

  3. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீன நாடாளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தையொட்டி தலைநகர் பீஜிங் வரும் பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தும் பாதுகாப்புப்படையினர்; நீதி கேட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து பேட்டியெடுக்க முயன்ற பிபிசி செய்தியாளருக்கும் தடை. * செல்வந்த அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மறுபக்கம்; அமெரிக்காவின் வறிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு. * உலகிலுள்ள மொத்த சிவப்புக்கல் இரத்தினங்களில் சுமார் சரிபாதி மொசாம்பிக் நாட்டில் இருந்தாலும் அவற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் பயன்பெற்றிருக்கிறதா?

  4. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு; பத்துபேர் பலி; ஐம்பது பேர் காயம்; பயங்கரவாத தாக்குதலா என ஆராய்வதாக புடின் அறிவிப்பு. * மொசூல் நகர சண்டையில் சிறார்களை மனிதக்கேடமாக பயன்படுத்தும் ஐஎஸ் அமைப்பு; அதற்கான சாட்சியக்காட்சிகளை கண்டது பிபிசி. * கரைக்கு வந்தது தென்கொரிய கடலில் மூழ்கிய செவோல் பயணிகள் கப்பல்; இன்னமும் கணக்கில் வராத பயணிகளின் சடலங்கள் அதில் கிடைக்குமா? * ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்களின் அழகிய கண்காட்சி; ஐநூறு மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் இவை, தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன?

  5. யேமெனில் தொடரும் மனிதாபிமான நெருக்கடி, ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நாளை துவங்குகிறது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஹிட்லரின் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே தொடங்கப்பட்ட பிபிசி பிரேசிலிய சேவை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. இன்றைய (03/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்காது; ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைக்குழுவின் தலைமை பேச்சாளர் அறிவிப்பு. * வீட்டுப்பாடத்தை குறைத்து விளையாட்டை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் புதிய கல்விக்கொள்கை; மனப்பாடத்தைவிட, வாழ்வின் சவால்களை சந்திக்க கூடுதல் பயிற்சி. * மாதவிலக்கும் மாறாத நம்பிக்கைகளும்; நேபாள அரசு சட்டம் போட்டும் தீட்டு குறித்த மக்கள் மனநிலை மாறாமல் இருப்பதேன்?

  7. ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கிய கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்க முடிவு, போதைபொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகும் இராக் இளைஞர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  8. விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனை! பரம்பரை நோய்களை தடுப்பதற்காக மனித கருவின் மரபணு திருத்தப்பட்டுள்ளது! ரஷ்ய அமெரிக்க உறவுகளின் எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வருகின்றன என்கிறது ரஷ்யா. புதிய தடைகள் சட்டமூலத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து வெளிவந்த கருத்து! மற்றும் கடந்தகாலத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்! அலாஸ்கா புகைப்பட முன்னோடிகள் எடுத்த படங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. போரால் சிந்தைந்து போன லிபியாவின் சீர்ட் நகரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜிம்பாப்வே தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறையை பதிவு செய்த நிருபர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை, 25 மில்லியன் மக்கள்தொகையை எட்டிய ஆஸ்திரேலியா உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரி வீட்டில் மேலதிக ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! தாக்குதலின் நோக்கத்தை ஆராய்கிறது காவல்துறை!! மீண்டும் விவாதிக்கப்படும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடைமுறைகள்!!! முப்பதாண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணம் சென்ற இந்திய அமைதிப்படையின் முன்னாள் இராணுவ உயரதிகாரி! உடன் சென்ற பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு!! மற்றும் மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையே மடகாஸ்கரில் நடக்கும் மல்லுக்கட்டு! காதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. ஆரம்பமாகும் அமெரிக்க அதிபரின் ஆசியாவுக்கான முதல் அரசுமுறை பயணம்! ஆசிய ஆதிக்கத்துக்கான அமெரிக்க சீன போட்டி குறித்து ஆராய்கிறது பிபிசி!! பதவிபறிக்கப்பட்ட எட்டு கேடலான் அமைச்சர்களை சிறையில் அடைத்தது ஸ்பெய்ன் நீதிமன்றம்! அடுத்து கேடலான் முன்னாள் அதிபரும் கைதாவாரா? பிபிசி தரும் நேரடித்தகவல்கள்!! மற்றும் கால்பந்தாட்டத்தில் கலக்க முயலும் பிரேசில் இளம்பெண்கள்! ஆடுகளத்தில் ஆண்களின் ஆதிக்கத்தை இவர்களால் தகர்க்க முடியுமா? இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. இன்றைய (04-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * காயமுற்ற பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஆட்கொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பு. இஸ்ரேலை உலுக்கிய பரபரப்பான வழக்கின் பின்னணி என்ன? * யேமென் உள்நாட்டுப்போரில் கண்ணிவெடிகளுக்கு பலியாகும் பொதுமக்களின் கண்ணீர் கதைகள். போரின் முன்னரங்கிலிருந்து பிபிசியின் பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. * வீடியோ கேம்கள் எப்படி உருவாகின்றன? அதில் பாத்திரமாக மாறுவது எப்படி? ஆக்ஸ்போர்டிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் சுவாரஸ்யமான தகவல்கள்.

  14. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதலென சந்தேகிக்கப்படும் தாக்குதலில்-சிறார்கள் உட்பட குறைந்தது- ஐம்பத்துஎட்டு பேர் பலி; பலர் படுகாயம். * உறைநிலைக் கருக்களைக்கொண்டு குழந்தை பெரும் பெற்றோர்; அறிவியல் துணையோடு அதிகரிக்கும் சீனாவின் குழந்தை பிறப்புகள். * Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்துவது மூளைச்செயற்திறனை நிறுத்திவைப்பதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு; ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை.

  15. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் தொடங்கியது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அங்காராவில் அவசர கூட்டம் - ரஷ்யா, துருக்கி, இரான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பலூசிஸ்தானில் தடைகளைத் தகர்த்து மக்கள் பணியாற்றும் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. இன்றைய (04/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அரச பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அரசியின் கணவர்; எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறார். * மதநிந்தனை செய்ததாக கூறப்படுபவரை கொலைகார கும்பலிடமிருந்து காப்பாற்றிய பாகிஸ்தான் மதகுரு; அன்பை போதிப்பதே மதம் என்று வலியுறுத்தல். * சீனாவில் அதிகரிக்கும் சைக்கிள்களின் செல்வாக்கு; சுற்றுச்சூழலை பாதுகாக்குமென செயற்பாட்டாளர்கள் வரவேற்பு.

  17. இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெறுவோரின் பெயர் அறிவிப்பு நிறுத்தம், ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் வங்கதேச முகாம்களில் காட்டு யானைகள் அட்டகாசம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு வித்தியாசமாக தீர்வை வழங்கிய யுகாண்டா மக்கள், ரமலானுக்காக தினமும் 22 மணி நேரம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  19. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரியா அறிவிப்பு, கடுமையாக கண்டித்திருக்கும் அமெரிக்கா ; மூளையின் செயற்பாட்டை மிகத்துல்லியமாக கண்டறியும் புதிய ஸ்கேன்னர் கண்டுபிடிப்பு, பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ; மற்றும் மாமிசத்துக்காக வளர்க்கப்பட்ட பசுக்களை கொல்ல மறுத்த விவசாயி, அறுபதாயிரம் டாலர் இழப்பென்றாலும் மனதுக்கு மகிழ்ச்சியான செயல் என்கிறார், இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது, உலக அளவில் சைபர் தாக்குதலை நிறுத்த உதவியதாக போற்றப்பட்டவர் இவர் ; குடியேறிகள் முகாம்களில் தடுமாறும் மக்கள்! அரசியல் தஞ்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரான்ஸில் முடங்கியுள்ள அகதிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் சாதித்த நாசாவின் சோதனை விமானிகள்! ஐம்பதுகளில் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களும் துணிச்சலும் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. வடகொரியாவின் அணு சோதனைக்கான பதிலடியாக தென்கொரியா தனது பெரும் ஆயுதங்களை காட்சிப்படுத்தியது; மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரொஹிஞ்சா அகதிகள் பாதுகாப்புக் கோரி வங்கதேசம் வருவது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவும் ஐ.எஸ் அமைப்பு குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன

  22. இத்தாலியில் கட்டாய தடுப்பூசி திட்டத்தை திரும்பப் பெற ஆளும் அரசு முயல்வதால் சர்ச்சை தட்டம்மை நோய் பாதிப்பு உயரும் அபாயம். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வான் தாக்குதல்கள் தீவிரம் - அரசுப் படையினரின் செயல்பாட்டால் பேரழிவு ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை வீட்டு உபயோக பொருட்கள் உதவியுடன் விண்வெளி படங்களை இயக்கிய கலைஞர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.

  23. கேட்டலான் பிராந்திய காவல்துறைத் தலைவர் சந்தேகநபராக நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெய்ன் உச்சநீதிமன்றம் உத்தரவு! கேட்டலான் பிரிவினைக்கான சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பால் உருவான மோதல் முற்றுகிறது!! இலக்குவைக்கப்படும் அமெரிக்க துப்பாக்கிச் சட்டங்கள்! லாஸ் வேகாஸில் நடந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானதால் சூடுபிடிக்கும் விவாதம்!! மற்றும் பிரிட்டனின் தேசத்துரோகி; ரஷ்யாவிலோ அவர் கதாநாயகன்! அமெரிக்க பிரிட்டன் ரகசியங்களை தனக்களித்த பிரிட்டன் உளவாளியை போற்றி மாஸ்கோவில் கண்காட்சி!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  24. இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.

  25. தாலிபனில் வலுப்பெறுகிறதா ஐ.எஸ். குழு? ஆப்கன் சிறையில் உள்ள முன்னாள் உறுப்பினர் பிபிசிக்கு பேட்டி, சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன வெடிகுண்டு வீசப்பட்டதா?, குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் கனடா குழந்தை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.