உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில், * மாறி வரும் போர் முன்னரங்கில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்க அலெப்போவில் போர் நிறுத்ததுக்கு மீண்டும் கோரிக்கை. * கொடிய போரின் பிடியில் சிக்கிய குழந்தைகள்.யேமன் போரின் மனிதநேய நெருக்கடியின் விளைவு. * அழிவுப் பாதையில் உலகின் உயரமான விலங்கினம். ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி.
-
- 0 replies
- 414 views
-
-
ஜெருசலேம் விவகாரம் - பாலத்தீனத்தில் வெடித்தது போராட்டம் நைஜீரியாவில், அறிவுத் திறன் சோதனையில் தோல்வியடைந்த 22,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால் செயற்கைகோள்களுக்கு ஆபத்து ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 294 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இரானின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானிக்காக மூன்று நாள் துக்கம் அனுட்டிக்கிறது. * ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் குளிர் தாக்கியதில் இருபது பேர்வரை பலி. * பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போது உயிர்களை காப்பாற்ற ஒரு ஏற்பாடு. தனது பிரஜைகளுக்கு முதலுதவி பயிற்சிகளை பிரிட்டன் வழங்குகின்றது.
-
- 0 replies
- 547 views
-
-
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் கடும் மோதல்,தென்கொரியாவில் களைகட்டியது குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 196 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தெற்கு சூடான்,, இனப்படுகொலையை நெருங்குவதாக ஐநா எச்சரிக்கை; அரச படைகளும் ஆயுதக்குழுக்களும் காரணம் என்று குற்றச்சாட்டு. * வடக்கு வசிரிஸ்தானை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பாகிஸ்தான் இராணுவம்; அல்கயீதா, தாலிபனுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலுக்குப்பின்னுள்ள நிலவரம் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * காதலுக்குத் தூது சென்ற புறாக்கள், காற்றின் மாசை குறைக்கும் ஆய்வுக்கு உதவுமா? உதவும் என்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்.
-
- 0 replies
- 391 views
-
-
அமெரிக்க அதிபர் - வடகொரிய தலைவர் நேருக்கு நேராக சந்திக்க ஆர்வம், மழைக்காலம் நெருங்குவதால், ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் வங்கதேச எல்லை முகாம்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 168 views
-
-
ரசாயன ஆயுதங்களால் தாக்கப்படும் சிரியா, தென் சீன கடல் பகுதியில் போர்க்கப்பல்களை குவிக்கும் சீனா, வன உயிரினங்களை கட்டுப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.
-
- 0 replies
- 203 views
-
-
இன்றைய செய்தியறிக்கையில், * இஸ்லாத்தை நிந்தித்ததாக ஜகார்த்தாவின் கிறிஸ்த்தவ ஆளுனர் குற்றங்காணப்பட்டார்; இந்தோனேசியர்களின் மத சகிப்புத்தன்மைக்கு இது ஒரு சோதனையா? * கோடிக்கணக்கானவர்களை மாரடைப்பில் இருந்து காக்கும் ஸ்டாடின் மருந்து மல்டிபிள் ஸ்க்லெரோஸிஸுக்கும் உதவுமா? ஆராய்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். * ஊதியம் இல்லாமல் நீண்ட நேர வேலை; வேலையில்லாமல் இருப்பதைவிட ஏதாவது வேலையை செய்வது நல்லது என்று நம்பும் ஜிம்பாப்வே நாட்டு பணியாளர்களை பிபிசி சந்தித்தது.
-
- 0 replies
- 211 views
-
-
அமெரிக்கா விலகினாலும், இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை தொடர மேற்கு நாடுகள் விருப்பம்; நீதிமன்ற விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஃபிலிப்பைன்ஸ் கைதிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 290 views
-
-
இன்றைய (9/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பகலிரவாக நீடித்த பரபரப்பான பிரிட்டிஷ் அரசியல் நாடகம்; எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பிரிட்டனில் புதிய அரசொன்று உருவாகிறது. * லண்டன் தாக்குதலாளிகளுக்கான தூண்டுதலாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்கப் பிரச்சாரகர்; இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்புகள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 373 views
-
-
பாரிஸின் புறநகர் பகுதியில் இராணுவ பாசறை ஒன்றுக்கு வெளியே கார் ஒன்று படையினர் மீது வேண்டுமென்றே மோதியது! ஆறு படையினர் காயம், இருவர் கவலைக்கிடம்! அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் குவாமில் ஏவுகணை வீசுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை! அதிபர் டிரம்பின் காட்டமான மிரட்டலை அடுத்து இது வெளிவந்துள்ளது மற்றும் ஆப்பிரிக்காவில் தந்தத்துக்காக யானைகளை இலக்கு வைக்கும் சட்டவிரோத வேட்டைக்காரர்களை எதிர்கொள்ளும் வன அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் இராணுவம் பயிற்சி வழங்குவது குறித்த பிரத்யேக செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 447 views
-
-
கருக்கலைப்புக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிராகரித்தது அர்ஜன்டீனா அரசு, சிரியாவில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறார்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கும் ஐஎஸ் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம். கருக்கலைப்புக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிராகரித்தது அர்ஜன்டீனா அரசு, சிரியாவில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறார்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கும் ஐஎஸ் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 418 views
-
-
ஸ்பெய்ன் ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரம்பேர் பேர் பேரணி! இந்தவாரம் சுதந்திர பிரகடனம் செய்யுமா கெடலான் அரசு? ஐ எஸ் வசமிருந்த ஹவிஜா நகரை மீட்டது இராக்கிய இராணுவம்! ஆனால் அங்கிருந்த ஆயுததாரிகள் எங்கே? சிலரை தேடிப்பிடித்தது பிபிசி!! மற்றும் சே குவாரா இறந்து ஐம்பது ஆண்டுகள்! அவர் புகழின் நிழலை மீறி வாழ முடிகிறதா? சுற்றுலா வழிகாட்டியான அவர் மகன் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 252 views
-
-
சௌதி அரச குடும்ப கைதுகள் குறித்து அந்நாட்டு இளம்தலைமுறையின் கருத்தென்ன?பரவலான வரவேற்பும் அதிகரிக்கும் கவலைகளும்!! ஓபிய போதைமருந்தால் அதிகரிக்கும் உயிர்ப்பலிகள்! அமெரிக்க நகரம் எதிர்கொள்ளும் ஆபத்து!! அதிலிருந்து தப்பமுயலும் நகரின் எதிர்நடவடிக்கை குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள்!! மற்றும் குளிர்ச்சிக்கு பேர்போன பீர் ஆரோக்கிய மருந்தாகுமா? ஆகும் என்கிறார்கள் சிங்கப்பூர் ஆய்வாளர்கள்!! அதுகுறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு
-
- 0 replies
- 316 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மாறி வரும் போர் முன்னரங்கில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்க அலெப்போவில் போர் நிறுத்ததுக்கு மீண்டும் கோரிக்கை. * கொடிய போரின் பிடியில் சிக்கிய குழந்தைகள்.யேமன் போரின் மனிதநேய நெருக்கடியின் விளைவு. * அழிவுப் பாதையில் உலகின் உயரமான விலங்கினம். ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி.
-
- 0 replies
- 344 views
-
-
இன்றைய செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டமை விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதனை உறுதி செய்வதற்கான ஆய்வை செனட் சபை ஆரம்பித்துள்ளது. * பிரேசில் அரசாங்கம் அமெசான் பகுதிகளில் பெரும் நீரணைகளை கட்ட திட்டமிட, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே மோதல். * உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் மிக்க செனகல் மக்கள்.உடற்பயிற்சி களங்களாகும் கடற்கரைகள்.
-
- 0 replies
- 608 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பர்மிய இராணுவம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக ஐநா அதிகாரி குற்றச்சாட்டு; ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி * ஊழல்புகாரில் தென்கொரிய அதிபர் பார்க் குய்ன் ஹை நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டார்; நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து பெரும் கவலை. * லண்டனின் புகழ்பெற்ற டாக்ஸிகளை புகையை வெளியிடா வாகனங்களாக்கும் முயற்சி மும்முரம்; காற்றின் மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒரு தொழில்நுட்ப முன்னெடுப்பு.
-
- 0 replies
- 225 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஜி ஏழு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுச்செயலர் அவசரப்பேச்சுவார்த்தை; சிரியா மற்றும் வடகொரியாவில் நிலவும் ஆபத்தானசூழல் குறித்து விவாதம். * எகிப்தில் மூன்று மாதகால அவசரநிலை பிரகடனம்; கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிபர் அறிவிப்பு. * ஆஸ்திரேலிய பவழப்பாறைகளின் நிறமிழப்பு இரண்டாவது ஆண்டாகவும் நீடிக்கிறது; இயற்கையின் அதிசயத்தை காப்பதற்கான காலஅவகாசம் கைநழுவிப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 329 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் வார்த்தைப் போர், அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராகிறார் ஃபேஸ்புக் நிறுவனர், அறுபதுகளில் புதுப்பிக்கப்பட்ட கணினி இசை தொழில்நுட்பம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்
-
- 0 replies
- 303 views
-
-
இன்றைய (10/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் தலைமை இயக்குனரை பணிநீக்கம் செய்தார் அதிபர் டிரம்ப்; டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவுக்குத் தொடர்பு இருந்ததா என்பதை ஆராய்ந்தவர் இந்த ஜேம்ஸ் கோமி. * இதுவரை இல்லாத அளவு அதிகமான குடியேறிகள் இந்த ஆண்டில் இதுவரை ஐரோப்பாவை அடைய முயற்சித்துள்ளனர்; மத்தியதரைக்கடலில் இருந்து பிபிசியின் சிறப்புத் தகவல். * புதைபடிமத்துறையின் புதிய கண்டுபிடிப்பு மனித பரிணாம வளர்ச்சியின் வரலாற்றையே மாற்றி எழுதுமா?
-
- 0 replies
- 348 views
-
-
மொசூல் நகரை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்டுவிட்டதாக இராக்கிய அரசு அறிவிப்பு! ஆனால் அதற்கு பொதுமக்கள் கொடுத்த விலையென்ன? பிபிசியின் நேரடித்தகவல்கள்; அறுபது நாடுகளுக்கு பயன் தரக்கூடிய பட்டுப்பாதையை மீண்டும் திறக்கும் சீனாவின் பெரும் திட்டம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் செல்லப்பிராணிகள் அலுவலகம் வருவதை ஊக்குவிக்கும் தாய்லாந்து நிறுவனங்கள் குறித்த வித்தியாசமான செய்தித்தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 343 views
-
-
குவாமில் அமெரிக்கா இராணுவ ஒத்திகை செய்ய, வடகொரியர்களோ தமது தலைவருக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். வடகொரியாவின் ஏவுகணைத்திட்டம் குறித்த முரண்பாடு முற்றுகிறது! வெனிசுவேலாவின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டு மக்களுக்கான சுகாதார சேவையையும் பாதித்துள்ளது! இது குறித்து செய்தித் தொகுப்பு மற்றும் நீருக்கு பதிலாக சாம்பலை பயன்படுத்தக்கூடிய நவீன கழிப்பறைகள்! மனிதக் கழிவை அவை ஆப்பிரிக்க செடிகளுக்கு உரமாக மாற்றுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 208 views
-
-
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் எழுப்பும் எல்லைவேலி பயங்கரவாதத்தை தடுக்குமா? பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ; சேற்றில் பிறந்த சிசு! மியன்மாரிலிருந்து தப்பிவந்த ரொஹிஞ்சா தாய்க்கு,, அகதி முகாமின் கோணிப்பை படுக்கையில் பிறந்த குழந்தையின் கதை மற்றும் ஆட்களை மட்டுமல்ல, அவர்களின் பின்னணி அனைத்தையும் கண்டறியும் புதிய கைரேகை தொழில்நுட்பம்! குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!! இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 208 views
-
-
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்னும் தன் கொள்கையை ஏபெக் மாநாட்டில் வலியுறுத்தினார் அதிபர் ட்ரம்ப்! ஆனால் உலகமயமாதலை இனி மாற்ற முடியாது என்கிறார் சீன அதிபர்!! பிரெஞ்சு அதிபர் , சௌதிக்கு திடீர் பயணம்! சௌதி இரான் மோதல், லெபனானை நிலைகுலையச் செய்யுமெனும் கவலை அதிகரிப்பு! மற்றும் நகர பொதுக்கழிவறை தட்டுப்பாட்டுக்கு ஜெர்மனி நகரின் வித்தியாசமான தீர்வு! மற்ற நகரங்களும் இதை பின்பற்ற முடியுமா? அதுகுறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 204 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றிய பின்னர் தனது பிரியாவிடை உரையை வழங்க தனது அரசியல் ஆரம்பக் களமான சிக்காக்கோவுக்கு சென்றார் ஒபாமா. * சைப்பிரஸின் எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. பிரிந்த நாட்டின் துருக்கிய பக்க தலைவர்கள் பிபிசியிடம் பேசினார்கள். * ஜிம்பாப்வே-யின் சர்ச்சைக்குரிய காணி மறுசீரமைப்புத் திட்டத்தை அடுத்து அங்குள்ள விவசாயிகள் எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள்?பிபிசியின் சிறப்பு தகவல்.
-
- 0 replies
- 573 views
-