Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், - தாக்குதலை அடுத்து சிரிய அதிபர் பஷார் அல் அஸதுக்கான ஆதரவை ரஷ்ய நிறுத்த வேண்டும் என ஜி ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை! ஆனால் அது சாத்தியமா? -தடுப்பூசி போடலாமா? கூடாதா? தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோரால் ஒட்டுமொத்த குழந்தைகளும் ஆபத்துக்கு உள்ளாகும் போக்கு பற்றிய செய்தி -செல்வம் கொழிக்கும் மண்புழுக்கள்; ஆப்ரிக்க உதாரணம் குறித்த செய்தித் தொகுப்பு

  2. ஃப்ளோரிடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் காப்பாற்றிய தமிழக ஆசிரியை அமெரிக்காவில் இருந்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி, பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் நிறுவனர் புதிய திட்டம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்

  3. ஐ.எஸ். குழுவால் பலத்த சேதங்களை சந்தித்த இராக்கில், புதிய ஆட்சியாளருக்கு காத்திருக்கும் சவால்களை அலசும் சிறப்புச் செய்தி, பிரதமர் மோதியின் வருகைக்கு நேபாளத்தில் ஆதரவு குறைந்தது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  4. சிரியாவில் நடக்கும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான சண்டையின் நிலவரமென்ன? ரக்காவில் முன்னேறும் குர்துப்படைகளோடு செல்லும் பிபிசி செய்தியாளர் போரின் முன்னரங்கிலிருந்து தரும் பிரத்யேக செய்திகள்!! சீனாவின் வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் வளர்க்கும் புதிய பட்டுப்பாதையில் பெருகும் நவீன ரயில்கள்! சீன செல்வாக்கை பெருக்குமா? சிறுபான்மையினரை அரவணைக்குமா? மற்றும் பழங்கால கருப்பு வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமான நவீன படங்களாக மாற்றுபவரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. வடகொரியா முட்டாள்தனமாக நடந்துகொண்டால் இராணுவத் தீர்வுகள் தயாராக உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவீட் செய்துள்ளார் ; மெக்ஸிக்கோவில் ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்! அந்த நாட்டின் போதை மருத்துக் கடத்தல் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்! மற்றும் தாய்லாந்தில் தொண்ணூற்று ஒரு வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ‘இனச் சுத்திகரிப்புக்கான ஒரு பாடப்புத்தக உதாரணம்’ என்று ஐநா தெரிவித்துள்ளது மற்றும் ஒயின் தயாரிப்பு கலையை கற்றுக்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. கெடலோனியா சுதந்திர நாடா? இல்லையா? விளக்கம் கோரும் ஸ்பெய்ன் பிரதமர்! விவாதிக்கக் கூடும் அவர் அமைச்சரவை!!! செனகலை பாதிக்கும் துருக்கி அரசியல் மோதல்! வெளிநாட்டில் வாழும் துருக்கிய மதகுரு மீதான தடையால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!! மற்றும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஆண்டுக்கு எண்பது லட்சம் டன்னாக அதிகரிப்பு! ஸ்வீடனின் பாட்டில்களை திருப்பித்தரும் திட்டம் அதை தடுக்க உதவுமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இன்னமும் சில நாட்களே இருக்கின்றன; ஆனால், அவரது முதல் சண்டை அமெரிக்க புலனாய்வு துறையுடந்தான் இருக்கப்போகிறதோ? * பனிப்பொழிவால் அவதியுறும் கிரேக்கத்தில் அகதிகள் படும் பாடு; தொடரும் பெரும் குளிரால் மேலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உதவிநிறுவனங்கள் எச்சரிக்கை. * நீர் அருந்த கருவிகளை செய்து பயன்படுத்தும் சிம்பான்ஸி குரங்குகள்

  9. உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில், பசி பட்டியுடன் பரிதவிக்கும் ரோஹிஞ்சா அகதிகளின் அவலம், ஐ.எஸ். குழுவால் சின்னாபின்னமான நாட்டை மீள்கட்டியெழுப்ப இராக் அரசு புதிய முயற்சி உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.

  10. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரானிய அரசு மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் பிபிசி முறையிட்டது ஏன்? வெற்றி வாய்ப்பில்லை என அறிந்த பிறகும், ரஷ்ய அதிபரை எதிர்த்துப் போட்டியிடும் பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளரின் பிரசாரம் பற்றிய சிறப்புச் செய்தி லண்டன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்து வயது ஒப்பனைக் கலைஞருக்கு இண்டர்நெட்டில் பெருகி வரும் ஆதரவு

  11. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தேவின் அடியாளாக இருந்து, தற்போது நாட்டைவிட்டு வெளியேறிய ஒருவர் கூறும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள். * பெரும் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள டோஷிபா நிறுவனத்தால் அதிலிருந்து மீள முடியுமா? * சூரியமின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆழ்கடல் கனிமங்களை அகழ்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்; இதில் எது சரி? ஆராய்கிறது பிபிசி.

  12. சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியதாக நீடிக்கும் சர்ச்சை, மெக்சிகோ வன்முறைகளில் தினமும் பலர் கொல்லப்படுவது ஏன்? உலகம் முழுவதும் இயங்கும் கப்பல்களால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. இன்றைய (12/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம்; மோசமடையும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தெருவில் இறங்கி போராடும் வெனிசூவேலா மக்கள். * போக்கோ ஹராமால் விடுவிக்கப்பட்டாலும், தம் குடும்பங்களுடன் மீண்டும் இணைய முடியாமல் சிரமப்படும் நைஜீரிய சிறுமிகள். * புவி வெப்பமடைவதால் பாதிக்கப்படும் ஆப்ரிக்க ஆப்பிள் விவசாயிகள்; ஏற்றுமதி சந்தைகளில் வந்து குவியும் வேற்றுநாட்டு ஆப்பிள்களால் கூடுதல் பாதிப்பு.

  14. மேன்சஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் போலிஸார் தாக்குதலாளியின் நடவடிக்கை குறித்து புதிய படங்களை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள், சர்ச்சைக்குரிய கடாஃபி மகன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பது லிபிய அரசியலை பாதிக்குமா? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு; மற்றும் பன்றிகளிடம் பரிசோதிக்கப்படும் ஆண்டிபயாட்டிக்ஸுக்கான மாற்று மருத்துவ வழி மனிதர்களுக்கும் பயன்தருமா? பிபிசியின் பிரத்யேக செய்தி! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  15. ரஷ்ய வழக்கறிஞரை தான் சந்தித்தது குறித்து தந்தைக்கு தெரியாது என்கிறார் டொனால்ட் ட்ரம்பின் மகன்! ஹிலரி கிளிண்டனை பற்றி தகவல் சேகரிக்க நடந்த சந்திப்பால் தொடரும் சர்ச்சை, மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்! பாதுகாப்பு தேடி வெளியேறும் குடும்பங்கள் அனாதையான குழந்தைகளையும் முதியவரையும் அரவணைத்து ஆறுதல்! மற்றும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தால் தமக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை; செல்வம் பெருகவில்லை என கசகிஸ்தானில் கவலை அதிகரித்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. ரொஹிஞ்சா அகதிகள் நெருக்கடி தொடரும் நிலையில் கண்ணிவெடியில் காயம்பட்டவர் சில அகதிகளை பிபிசி சந்தித்தது மற்றும் சுவிட்சர்லாந்தின் மிகச் சிறிய கிராமம் மீளத்துடிக்கிறது! அது எப்படி சாத்தியம்? பிபிசியின் சிறப்புத் தகவல் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. கெலிஃபோரினியா காட்டுத்தீயின் வேகத்தைக்கூட்டும் சூறைக்காற்று! இதுவரை இருபத்தி மூன்றுபேர் பலி!! நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணவில்லை!!! ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவிப்பு!!!! உலக அளவில் வேகமாக குறையும் கழுதைகள் எண்ணிக்கை! மரபு மருத்துவத்துக்காக இவை காணாமலே போகுமா? மற்றும் அமிலவீச்சு பாதிப்பைக்கடந்த ஆடை அலங்காரபோட்டி! முகம் சிதைந்தாலும் உறுதிகுலையாமல் உலகை எதிர்கொள்ளும் வங்கதேசப்பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  18. இன்றைய நிகழ்ச்சியில், * துருக்கியில் சனிக்கிழமையன்று கொல்லப்பட்ட நாற்பத்து நான்கு பேரின் இறுதிச் சடங்குகள் இன்று நடந்தன. இருநூறுக்கும் அதிகமான குர்து ஆதரவாளர்கள் கைது. * சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்து ஓராண்டு. ஆனாலும் அங்கு ஏதாவது மாறியுள்ளதா? * வயதான பசுக்களுக்கு ரஷ்யாவில் ஓய்வு இல்லம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி.

  19. பருவநிலை மாற்றத்தை விவாதிக்க பாரிஸில் மீண்டும் கூடியது உலக நாடுகளின் உச்சி மாநாடு சொந்த நாட்டில் கைதிகள் போன்று தத்தளிக்கும் பாகிஸ்தானின் சிறுபான்மை ஹஜாராக்கள் வங்கதேசம் சென்ற ரோஹிஞ்சாக்களில் நூற்றுக்கணக்கானோர் தட்டம்மையால் பாதிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. நிருபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆங் சான் சூ ச்சி ஆதரவு, பிபிசிக்கு ஆஃப்கானிஸ்தான் தலைமை நிர்வாகி பிரத்யேக நேர்காணல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  21. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சைப்ரஸ் பேச்சுவார்த்தைகள் - சமாதானம் சாத்தியமா? துருக்கிய படை அங்கு தொடர வேண்டும் என்கிறார் துருக்கிய அதிபர். * அமெரிக்கா வரும் கியூபர்களுக்கு தானாகவே விசா இன்றி வதிவிட அனுமதி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்துகிறது; கியூப அரசாங்கம் அதனை வரவேற்றுள்ளது. * உலகில் அதிக மது அருந்தும் நாடுகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா; அதனை மாற்றுவதற்கான ஒரு திட்டம் குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்

  22. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஐநா பாதுகாப்புச் சபை விவாதிக்க தயாராகிறது. அதேவேளை வடகொரியா குறித்த கொள்கை பற்றி அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. மத்திய கிழக்கின் மதக் கொள்கைகளுக்கு சவுதியின் புதிய சவால்.பெட்ரோலில் தங்கியிருப்பதையும் குறைக்க நினைக்கிறது அந்த நாடு. அணு மின் உற்பத்தியை கைவிட நினைக்கிறது தாய்வான். பதிலாக தூய எரிசக்தியை நோக்கி அது பயணிக்கிறது.

  23. தென் ஆஃப்ரிக்கா அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் இந்தோனீசிய குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.

  24. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், மொசூலில் இருந்தால் அழிவீர்கள் என்று இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எச்சரிக்கை. நகரின் மேற்கு பகுதியை இராக்கிய இராணுவம் நெருங்குகின்றது. சீன அரச எதிர்ப்பாளர்கள் பலரை சிறையிலடைத்தது சென்ற ஆண்டின் சாதனைகளில் ஒன்று என்கிறார் சீன உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. சீன நாடாளுமன்ற உரையில் பெருமிதம். இந்தோனேஷிய நச்சுப்புகைக்கு காரணமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் செயற்பாட்டாளரின் முன்னெடுப்பு.

  25. முன்னாள் உளவாளி கொலை முயற்சி குறித்து இன்று நள்ளிரவுக்குள் பதிலளிக்க பிரிட்டன் கெடு; வடகொரியா மீதான தடைகளை சில ஆசிய நிறுவனங்கள் மீறியதாக குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.