Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் பெஸ்லான் பள்ளியில் நடைபெற்ற படுகொலையைத் தடுக்க ரஷ்ய அரசு தவறிவிட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு; மீள் விசாரணை கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள். * வெனிசுவேலாவில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; வாழ்வதற்காக குற்றச்செயலில் இறங்கும் மக்கள்; பிபிசியின் சிறப்புச் செய்தி. * உலக நாடுகளில் பெண்கள் வாழ கடிமான நாடாக அறியப்படும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில் வாழும் பெண்கள் சிலர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.

  2. சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை, கப்பல் போக்குவரத்தால் அதிகரிக்கும் கரியமில வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள், பாலின பேதங்களை எதிர்த்து எட்டு வயது முதல் போராடும் முன்னாள் குத்துச் சண்டை வீராங்கனை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்

  3. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் வந்திருக்கிறார்! அமெரிக்க தேர்தலில் ரஷ்யத்தலையீடு இருந்த சர்ச்சை குறித்து அவரது ஆதரவு வாக்காளர்களின் கருத்தென்ன? கீழைத்தேசங்களில் வர்த்தகத்தை விரிவாக்க விரும்பும் ஐரோப்பிய திட்டத்துக்கு சீனாவின் புதிய பட்டுப்பாதை உதவியா? உபத்திரமா? மற்றும் சேர்ந்து விளையாடும் சிறாரும் முதியோரும்! முதியோர் இல்லத்துக்கு மத்தியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைக்கும் வித்தியாசமான முயற்சி குறித்த சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  4. ரொஹிஞ்சா அகதிகள் நெருக்கடி குறித்து மியான்மருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்த நிலையில், ஐநா பொதுச்சபையில் கலந்துகொள்வதற்கான ஆங் சான் சூச்சியின் திட்டம் ரத்துச் செய்துள்ளார், போரில் சிக்கியுள்ள சிரியாவுக்குள் ஒரு வான் பயணம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன்10 குறித்த ஒரு பார்வை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. குர்துக்களுக்கு எதிராக திரும்புகிறதா இராக் இராணுவம்? இராக் பிரதமர் மறுப்புக்கு மத்தியில் அணிதிரளும் இராணுவம்! குவியும் குர்துப்படைகள்!! பாகிஸ்தானில் இந்துப்பெரும்பான்மை கிராமம்! அன்றாட நிகழ்வாகும் இந்து முஸ்லிம் கூட்டுப்பிரார்த்தனைகள்!! மற்றும் எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமா? ஐஸ்லாந்தின் வானத்தில் பறந்து விடைதேடும் விஞ்ஞானிகள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. இரான் இராக் எல்லையை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! நூற்றுக்கணக்கானவர்கள் பலி!! ஆயிரக்கணக்கானவர்கள் காயம்!! மணிலா சென்ற அதிபர் ட்ரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டர்டேவுடன் நல்ல நட்பு நிலவுவதாக அறிவிப்பு! கொரிய கடலோரம் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவ தளவாடங்கள்!! மற்றும் சினிமாவாகும் சிரியா ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையின் நிஜ உலக சாகசம்! ஆபத்திலிருந்த அகதிப்படகு கிரேக்கத்தில் கரையொதுங்க உதவியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவின் அரசபடைகள் அலெப்போவை முழுமையாக வெற்றிகொள்ளவுள்ள சூழலில், கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்படுவதாக ஐ நா குற்றஞ்சாட்டியுள்ளது. * இந்தோனீசியத் தலைநகரின் மேயர்,மதநிந்தனைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், தான் இஸ்லாத்தை அவமதிக்கவில்லை என அவர் கூறுகிறார். * மருத்துவ உலகில் ஒரு சாதனை. ஒலி அலைகளின் மூலம் மாத்திரம் மூளையின் உள்ளே அறுவைச் சிகிச்சை செய்யும் பிரிட்டிஷ் மருத்துவர்கள்.

  8. பட்டினிச்சாவை எதிர்நோக்கும் காங்கோவின் கஸாய் மாகாண குழந்தைகள். ஓராண்டுக்குள் நான்கு லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என யூனிசெஃப் எச்சரிக்கை ஜெருசலேம் விவகாரத்தை இஸ்தான்புல்லில் கூடி விவாதிக்கும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனில் உடலுக்கு வெளியே இதயம் தென்பட பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

  9. உலகமே வியக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை, விண்வெளியில் நடக்கும் வினோத ஆராய்ச்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. முன்னாள் உளவாளி கொலை முயற்சி விவகாரத்தில் ஒத்துழைக்க ரஷ்யா மறுப்பு; ஐன்ஸ்டைனுக்குப் பிறகு அதிகம் பிரபலம் அடைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவு; உடல் பருமன் தடையை தகர்த்து அழகை வெளிப்படுத்தும் தைவானின் தன்னம்பிக்கை பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒருமாதம்கூட ஆகவில்லை. ஆனால் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி துறக்கிறார். அதிபர் டிரம்புடன் பேச்சு நடத்த இஸ்ரேலிய பிரதமர் வாசிங்டன் வந்துள்ளார். சர்ச்சைக்குரிய இஸ்ரேலிய குடியிருப்புக்க்ள் குறித்தும் அவர்கள் பேசலாம். சட்டத்தை மீறும் நாய் உரிமையாளர். நாய்களின் அசுத்தங்களை அகற்றாத அதன் உரிமையாளர்களை கண்டுபிடிக்க புதிய டீ.என்.ஏ சோதனைத் திட்டம்.

  12. தென்னாப்ரிக்க அதிபர் ஜுமாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி திட்டம், வியட்நாம்-வடகொரிய ஜோடியின் உள்ளத்தை உருக்கும் காதல் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. இன்றைய (14/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட மிகப்பெரிய குண்டுத்தாக்குதலில் முப்பத்தி ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு அறிவித்திருப்பது குறித்த செய்தி; தாம் உயிர்வாழவே கடற்கொள்ளையில் ஈடுபடுவதாக கூறும் சொமாலியர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; சனிக்கிரகத்தின் நிலவுகள் ஒன்றில் உயிர்கள் வாழக்கூடிய சிறப்பான சூழல் நிலவுவதாக நாசா செய்திருக்கும் பரபரப்பான கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

  14. ஜெருசலேத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகம் திறப்புக்கு எதிராக பாலத்தீனர்கள் போராட்டம்; இந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; மடகாஸ்கரில் நிலவும் மோசமான வானிலையால் வெனிலா ஐஸ் க்ரீம் விலை திடீர் உயர்வு உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  15. லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மோசமான தீயில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர் – இது குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள், அத்துடன் வங்கதேச நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. புர்கினா ஃபாசோ உணவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்; கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் ஷார்லட்ஸ்வில் நகரில் வன்முறையுடன் நடைபெற்ற பேரணியை அடுத்து வெள்ளையின மேலாதிக்க எண்ணம் கொண்டவர்களை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது! மற்றும் உலகளவில் ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பில்லாத மூன்று நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று! அந்த நிலை மாறுமா? என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  18. மலேசியாவில் இஸ்லாமிய கல்விக்கூடத்தில் ஏற்பட்ட தீயில் இருபத்திரெண்டு மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்; முஸ்லிம் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவது குறித்து மியான்மர் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில், ஒரு முக்கிய நகரான மண்டலே விலிருந்து ஒரு செய்தித் தொகுப்பு மற்றும் திபெத்திய பீடபூமியின் அபாவில் நடைபெறும் முத்தத் திருவிழா குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  19. இரானிய நிலநடுக்கத்தில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை ஐநூறாக அதிகரிப்பு! மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல்!! ரக்காவிலிருந்து சுதந்திரமாக தப்பிச்சென்ற நூற்றுக்கணக்கான ஐஎஸ் ஆயுததாரிகள் எங்கே? ஆராய்கிறது பிபிசி!! மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் படகுகள் Cameroon நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுமா? உதவும் என்கிறார் அவற்றை வடிவமைத்தவர்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் கிளர்ச்சிக்காரர்களின் வசம் எஞ்சியுள்ள பகுதிகள் மீது வான் தாக்குதல் மீண்டும் ஆரம்பம். அரச ஆதரவு படைகள் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் இடையே நேரடி மோதலும் நடந்தது. * டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்துவரும் நிலையில், யார் உள்ளே? யார் வெளியே? பிபிசியின் பார்வை. * போரினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், பேறுகால இறப்புகளைத் தடுக்கப் போராடும் பெண் மருத்துவர்கள்.

  21. மியான்மர் வன்முறைக்கு இதுவரை ஆறாயிரத்து எழுநூறு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பலி, முகத்தை வைத்து தனி நபர்களை அடையாளம் காணும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.

  22. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் தந்தையின் மறுதார மகனான கிம் ஜாங் நாமின் மரணம் தொடர்பில் ஒரு பெண்ணை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். * அட்லாண்டிக் நாடுகளுக்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்; நேட்டோ நாடுகளின் இராணுவ செலவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல். * லார்ஸ் மைதானத்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் தனது மின்சாரத்தேவைக்கு நூறு சதவீதம் புதிப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியை பயன்படுத்தவுள்ளது.

  23. தென் ஆப்ரிக்காவின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்பு, அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்காண இந்தியப் பெண்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் அதிபர் டிரம்பின் வரிக்கணக்கு வெளியானது.அதேவேளை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆசியாவுக்கு பயணமானார். * குடிவரவு முக்கிய விவாதமாகியுள்ள பொதுத்தேர்தலில் நெதர்லாந்து மக்கள் வாக்களிக்கின்றனர்.அகதிகளை உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை பிபிசி ஆராய்ந்தது. * ஐவரி கோஸ்டில் கடந்த மாதம் குட்டி சிம்பன்ஸி ஒன்று மீட்கப்பட்டது. அது இன்று எப்படி இருக்கிறது?

  25. பாட்டிலில் அடைக்கப்படும் முன்னோடி நிறுவனங்களின் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்; தங்கள் நாட்டில் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக ரஷ்யா எச்சரிக்கை; வன்முறை ஓய்ந்தாலும் அதன் தாக்கம் குறையாத இலங்கையின் கண்டி நகரம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.