உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
இன்றைய (15/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * உலகளாவிய இணைய தாக்குதல் வெறும் ஆபத்தின் அறிகுறி மட்டுமே; வெள்ளியன்று நடந்த தாக்குதல் மேலும் தொடரக்கூடுமென உலக அரசாங்கங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை. * தங்கள் வீடுகளும் முழுமையான சுற்றாடலும் அழிக்கப்படும் வகையிலான மீள்குடியேற்ற திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் மாஸ்கோவில் ஆர்பாட்டம். * சிறைக்குள் பொருட்களை கடத்தும் ஆளில்லா விமானங்களை தடுப்பது எப்படி? ஆளில்லா விமான எதிர்ப்பு கட்டமைப்பால் தடுக்கமுடியுமென வழிகாட்டுகிறது பிரிட்டன் சிறை ஒன்று.
-
- 0 replies
- 354 views
-
-
இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் உடல்கள், காஸாவில் அடக்கம்; ஆஸ்திரேலியா வந்த வெளிநாட்டு வீரர்களில், டஜன் கணக்கானோர் தலைமறைவு; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களின் பயிற்சிக்கு உதவிய பிளாஸ்டிக் உடற்கூறு மாதிரிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்
-
- 0 replies
- 178 views
-
-
லண்டனின் நேற்று அதிகாலை அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அடுத்து அங்கு கட்டப்பட்டிருக்கும் அதே போன்ற கட்டிடங்களுக்கான தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பிபிசியின் சிறப்பு பார்வை, கட்டார் மீதான அண்டைநாடுகளின் தடை நடவடிக்கை பாலஸ்தீனத்தையும் பாதிக்குமா? மற்றும் பாலஸ்தீனத்துக்காக துடிக்கும் இஸ்ரேலிய இசைக்கலைஞரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 274 views
-
-
சியாரா லியோன் மண்சரிவில் முன்னூறுக்கும் அதிகமானோர் பலி. எண்ணிக்கை உயரலாம் என்று அச்சம் ! * சவுதி அரச குடும்பத்தை விமர்சித்த அந்த நாட்டு இளவரசர்கள் மூவர் இரண்டு ஆண்டுகளில் காணாமல் போனார்கள்! அவர்களுக்கு என்ன நடந்தது? பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 239 views
-
-
லண்டன் சுரங்க ரயில் வெடிப்புச் சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக லண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது, வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையை சீனா கண்டித்துள்ளது மற்றும் பாகிஸ்தான் இடைத்தேர்தல் குறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 304 views
-
-
ஸிம்பாப்வே தலைநகரத் தெருக்களில் இராணுவ டாங்கிகள்! அதிரடிப்புரட்சியல்ல என்கிறது இராணுவம்!! 37 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிபர் முகாபே பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!! பிபிசி தரும் நேரடிச் செய்திகள்!! ஆஃப்கானிஸ்தானில் அதிகரிக்கும் இளவயது ஹெராயின் அடிமைகள்! ஒன்பது வயதான சிறுவர்களை போதையிலிருந்து மீட்கப்போராடும் மருத்துவமனை!! மற்றும் உலக அளவில் அதிகரிக்கும் உடலுறுப்பு பற்றாக்குறை! பிரிட்டனில் வாழும் ஆசியர்கள், ஆப்ரிக்களுக்கு பெரும் பாதிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 368 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *அலெப்போவில் கிளர்ச்சிக்காரர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம். ஆயிரக்கணக்கானோர் வெளியேறவுள்ளனர். * சிகிச்சைக்காக சினைப்பையை நீக்கி பத்திரமாக வைத்து மீண்டும் அதன் மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் கதை. * அமைதியீனத்தை தடுக்கும் ஆயுதமாக யோகாவை கையில் எடுத்துள்ள தென்னாப்பிரிக்க சிறைகள்.
-
- 0 replies
- 302 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வணிகம், பிரெக்ஸிட் மற்றும் குடியேறிகள் குறித்தெல்லாம் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார். இன உறவுகள் குறித்து ஒபாமா என்ன பேசினார்? அது குறித்த ஒரு பார்வை. * கிர்கிஸ்தானின் இன் தலைநகருக்கு அருகே கிராமம் ஒன்றின் மீது சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர். * ஒரு காலத்தில் உலகின் சிறந்த சர்க்கஸாக பெயர் பெற்ற அமெரிக்காவின் பெரிய சர்க்கஸ் நூற்று ஐம்பது வருடங்களின் பின்னர் மூடப்படுகின்றது.
-
- 0 replies
- 316 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலிய- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டுக் கொள்கையை கைவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஐநா விமர்சனம். * காவலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கறுப்பின இளைஞர் குற்றஞ்சாட்டியதை அடுத்து பாரிஸ் நகரில் பெரும் போராட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் குதித்தனர். * இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நீராவி ரயில் பயணம்.
-
- 0 replies
- 272 views
-
-
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம், கண்டுகொள்ளாத அதிபர் டிரம்ப். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வாடகைத்தாய்களாகும் உக்ரைன் இளம்பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 222 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மீண்டுமொரு பின்னடைவு; அவரது மறுசீரமைக்கப்பட்ட பயணத்தடை அமலுக்கு வருவதற்கு சில மணி நேரம் முன்பாக தடை வித்தார் நீதிபதி. * உலகில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம்; அடுத்த அறுபது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்தையும் முந்திவிடும். * காசநோயோடு போராட புதுவழியை கடைபிடிக்கும் கானா; காசநோயை கண்டறிவதை எளிதாக்கும் சூரிய சக்தி எக்ஸ்ரே கருவிகள்.
-
- 0 replies
- 264 views
-
-
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் உச்சகட்ட மோதல், பிரிட்டனை தொடர்ந்து கேள்விக்குறியாகும் அமெரிக்கா-ரஷ்யா நல்லுறவு, சூவிங்கம்களில் இருந்து கலைப் பொருட்கள் உருவாக்கும் புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 320 views
-
-
சிரியாவில் ரசாயன தாக்குதலில் சிக்கிய ஆறு வயது சிறுமி, கியூபாவில் முடிவுக்கு வரும் கேஸ்ட்ரோ ஆட்சி, சார்லி சாப்ளின் நிஜத் தோற்றத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 218 views
-
-
-
- 0 replies
- 256 views
-
-
அணு ஆயுத திட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வடகொரியா திடீரென எச்சரிக்கை விடுத்தது ஏன்? வன்முறை ஓய்ந்தாலும் பதற்றம் தணியாத காஸா எல்லை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 594 views
-
-
உளவுபார்ப்பதற்கான மேற்குலக தொழில்நுட்பம் மத்திய கிழக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு உதவுகிறதா? பிபிசியின் புலனாய்வுச் செய்தி; லண்டன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரிப்பு! உயிரிழந்த சிலரை அடையாளம் காண முடியாமலே போகலாமென காவல்துறை எச்சரிக்கை மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இசை பயிற்றுவிக்கும் இஸ்ரேலிய இசைக்கலைஞர் குறித்த சிறப்புச் செய்தி தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 287 views
-
-
* தெற்காசிய பெருமழை மற்றும் நிலச்சரிவால் பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு. * சவுதியில் ஷியா பெரும்பான்மை மக்களுக்கும், சுன்னி பழமைவாத அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல் குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு மற்றும் *சீனாவின் யுனான் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய கட்டங்கள் தற்போது அழிந்துவரும் ஆபாயத்தில் இருப்பது குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 311 views
-
-
இராக்கில் பகையான நட்பு; குர்து - இராக்கிய படைகளுக்கு இடையில் அதிகரிக்கும் மோதல்; முப்பத்தி ஓரு வயதே ஆன உலகின் இளம் தலைவரை தேர்ந்தெடுத்த ஆஸ்டிரிய மக்கள்! ஆனால் ஆட்சியமைப்பதற்காக ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ், தீவிர வலதுசாரிகளோடு கைகோர்ப்பாரா? மற்றும் ஆப்ரிக்க கலைகளுக்கு அதிகரிக்கும் அங்கீகாரம்! வெனிஸில் நடக்கும் கலைக்கண்காட்சியிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்திக்குறிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 398 views
-
-
வீட்டுக் காவலில் உள்ள ஜிம்பாப்வே அதிபர் முகாபேவை சந்திக்க தென்னாஃப்ரிக்க அமைச்சர்கள் ஹராரி வருகை - ராணுவ தளபதிகளை சந்தித்துப் பேசவும் திட்டம் யேமென் போரினால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் ஏற்படும் தாக்கம் - டாய்ஸ் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் சிறப்புச் செய்தி ரக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோருடன் தப்பியபோது கண்ணிவெடியில் சிக்கி, குடும்பத்தை இழந்த தந்தையின் துயரம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 584 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுகு இடையே கிழக்கு அலெப்போவில் இருந்து மக்கள் வெளியேற்றம் நிறுத்தம். இராணுவ நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என்கிறது சிரியாவின் அரசு. * அமெரிக்க தேர்தலின்போது, இணையதளத்தில் அத்துமீறியதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிபர் ஒபாமா கூறுகிறார். * பிரிட்டனின் தெருக்களில் கண்ணைக்கவரும் சிவப்பு நிற பொதுத்தொலைபேசிப் பெட்டிகள் விரைவில் அகலப்போகின்றன.
-
- 0 replies
- 327 views
-
-
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டூமா நகரில் நாளை ஆய்வு செய்கிறது சர்வதேச குழு, வேற்று கிரகங்களை தேடும் நாசாவின் புதிய செயற்கைக் கோள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 406 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * புதுவருட தினத்தன்று இரவு விடுதியில் தாக்குதல் நடத்தியவரை துருக்கிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். * டொனால்ட் டிரம்புக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அதிகரிப்பு! தாய்வான் குறித்து தொடர்ந்து எரிச்சலூட்டினால், பதிலடி தருவோம் என்கிறது சீன அரச ஊடகம். * எத்தியோப்பிய மக்களுக்கு சீனாவில் செய்த கார்கள் மீது விருப்பமில்லை. பெருநிறுவனங்களின் பெறுமதியான கார்கள்தான் வேண்டுமாம்! அதற்கான வழிதான் இது.
-
- 0 replies
- 518 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக டிர்ம்பால் தெரிவானவர், அதனை நிராகரித்துவிட்டார். அதேவேளை பொய் சொல்வதாக ஊடகங்கள் மீது டிரம்ப் குற்றச்சாட்டு. * சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக ஐநா எச்சரிக்கை. மக்களும், கால்நடைகளும் உயிரிழக்க பயிர்களும் அழிகின்றன. * கால்பந்து ஆடுவதற்கும் ஞாபக மறதி நோய்க்கும் ஆன தொடர்பு குறித்த ஆய்வுக்கு ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆதரவு.
-
- 0 replies
- 372 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கூறுகிறார். *சீனாவின் தூரமேற்கே சிஞ்சாங் மாகாணத்தில் இருந்து சிறப்பு தகவல்.சீனா அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடத்துவதாக கூறுகிறது. *நூலிழையில் உயிர் தப்பிய பிபிசி குழு. இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தபோது அகப்பட்டுக்கொண்டனர்.
-
- 0 replies
- 281 views
-
-
இன்றைய (17/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி; ஆனால் வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்யும்படி பிரதான எதிர்கட்சி கோரிக்கை. * காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை நேரில் கண்டது பிபிசி; இராணுவமும் ஆயுதக்குழுக்களும் ஆட்கொலைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. * நியூசிலாந்திலுள்ள காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலையை மூடுவதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு; உலகின் முன்னணி இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளூர் மக்களிடம் கசப்பை உருவாக்குவது ஏன்?
-
- 0 replies
- 290 views
-