Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய (17/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க அதிபர் மீது மேலும் ஒரு மோசமான குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இதையடுத்து ஆறுமாதங்களில் இல்லாத வகையில் டாலரின் மதிப்பு வீழ்ச்சி. * இரான் அதிபர் தேர்தலுக்கான இறுதி பிரச்சார நாள். முன்னணி வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி. * முரண்பாடுகளால் சிதறுண்டிருக்கும் மத்திய கிழக்கில் ஒரு முன்மாதிரி ஆய்வு நிலையம். ஜோர்தானில் எதிரி நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

  2. ஆஃப்ரிக்காவில் தீவிரமாகப் பரவும் எபோலா, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் வெனிஸ்வேலாவில் இருந்து வெளியேறி அண்டை நாட்டு வீதிகளில் வாழும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. வெனிசுவேலாவின் அதிகாரபூர்வமற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி பலி-பலர் காயம், அமெரிக்கா சென்றடைந்த ஆப்கன் மாணவிகளின் ரோபோடிக் கனவு! ஆப்கன் பெண்களுக்கு புதிய விடியலைத்தருமா? மற்றும் கால்நடைகள் மீதேன் வாயு வெளியேற்றுவதை குறைக்க கென்யாவில் புதிய முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  4. மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக வரும் குடியேறிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு; ஐரோப்பாவில் இருக்கும் ஐ எஸ் அமைப்பின் முன்னாள் சிறார் போராளிகளின் எதிர்காலம் என்ன? அவர்களிடம் பேசியது பிபிசி! மற்றும் மகப்பேற்றின் போதான மரணம் இன்றுவரை பல நாடுகளில் பெரும் பிரச்சினை! ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும் புதிய முயற்சி ஒன்று குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. தெற்கு சீனாவில் மங்கூட் சூறாவளியால் நான்கு பேர் பலி, கென்யா மலைப்பகுதிகளில் கலாசார முரண்களை கடந்து வருமானம் ஈட்டும் பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. மோசமாகும் இராக்கிய குர்திஸ்தான் மோதல்! கிர்குக்கை கைப்பற்றிய இராக் இராணுவம்! சிஞ்சரைக் கைப்பற்றிய அவர்கள் ஆதரவு ஆயுதக்குழு ; அண்டவெளி நட்சத்திர மோதலின் அதிசய அதிர்வலைகள்! நூற்றிமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அலைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை!! மற்றும் தொலைதூர பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியை! கனேடிய ஆர்க்டிக் பகுதியின் அதிசய பெண்மணி பற்றிய பிபிசி படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. யெமெனில் லட்சக்கணக்கானோர் பஞ்சத்தில் தவிப்பு - ஆயுத கடத்தலைத் தடுக்கவே விமான நிலையம், துறைமுகத்தை முடக்கியதாக செளதி அமைச்சர் விளக்கம். ஆசியாவின் கடைசி நாடோடி பழங்குடியினரை மதம் மாறத் தூண்டும் இந்தோனீசிய அரசு - சுமத்ரா மழைக்காடுகள் பிரதேசத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகச் செய்தி. அமெரிக்க தடையால் சூடானை விட்டுச் சென்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளூரிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூடான்வாசிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டிரம்ப் பதவியேற்றால் மெக்ஸிகோவில் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது குறித்த ஒரு பார்வை. * பிரிட்டனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதக் கருவை பரிசோதனைக்காக வைத்திருக்கும் காலத்தை இருமடங்காக்க கோரிக்கை. * பிரிட்டனில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் ஏன் சிறப்பு கமெராக்களை பொருத்துகிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.

  9. சிரியாவில் விசாரணைக்கு சென்ற சர்வதேச குழுவை நோக்கி துப்பாக்கி சூடு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ ரகசிய சந்திப்பு, 86 வயதிலும் பளு தூக்குதலில் அசத்தும் முன்னாள் உலகச் சாம்பியன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. பிரிட்டன் பிரதமர் தெரீசா மே திடீர் பொதுத்தேர்தலை அறிவித்திருப்பது குறித்த செய்தி; வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரிக்கும் மோதல் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம், லண்டனில் உருவாகும் பிரம்மாண்ட பாதாள சாக்கடைத்திட்டம் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டுமா? என்பது குறித்த நேரடி செய்தி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லப்பிராணிகளை கொண்டுவரும் போக்கு அதிகரிப்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  11. இன்றைய (18/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ரஷ்யா, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதா? இதுகுறித்த குற்றச்சாட்டை ஆராய்வதற்கான குழுவுக்கு தலைவராக எஃப்.பி.ஐ-யின் முன்னாள் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்! * அடைக்கலம் தேடி ஆட்துணையின்றி நாடு கடந்து வந்த சிறார்கள். அவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறித்த பிபிசியின் சிறப்புப் பார்வை. * காதலுக்காக அரச அந்தஸ்தை துறக்கும் ஜப்பானிய இளவரசி. அரச குடும்பத்துக்கு வெளியே ஒருவரை திருமணம் செய்ய அனைத்தையும் துறக்க இளவரசிக்கு எப்படி மனது வந்தது?

  12. அகதிகளின் கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பாவில் சட்டவிரோத வர்த்தகம் - பிபிசி நடத்திய பிரத்யேக புலனாய்வில் கண்டுபிடிப்பு, காங்கோவில் தீவிரமாகும் இபோலா தொற்று - பாதிப்பு குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தைக் கூட்டுகிறது உலக சுகாதார அமைப்பு, நாளை நடைபெறவுள்ள பிரிட்டிஷ் இளவசர் ஹேரி - மெகன் திருமணத்துக்காக வின்ட்சர் கோட்டையில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. அமெரிக்காவில் குடியேறிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால் குடும்பங்கள் சிதறுண்டு போகும் நிலை குறித்த சிறப்பு பார்வை, கிழக்கு யுக்ரைனில் தொடரும் மோதல் ஐரோப்பாவின் மறக்கப்பட்ட யுத்தமாகப் பார்க்கப்படும் நிலையில், மூன்றாண்டுகளாக மோதல் நடைபெறும் பகுதியிலிருந்து நேரடிச் செய்திகள் மற்றும் கானாவில் நூறு பிள்ளைகளுக்கும் அதிகமாக பெற்ற தந்தையின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  15. ரொஹிஞ்சா நெருக்கடி இன்று ஐநா கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எர்மா சூறாவளியால் தாக்கப்பட்ட பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளை நோக்கி இன்னுமொரு பலமான சூறாவளி வந்து கொண்டிருக்கிறது; தனது எடை அதிகமாக இருப்பதாகக்கூறி தனது சம்பளத்தை குறைத்த விமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுத்த விமான பணிப்பெண் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. தீவிரமாகும் இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள், பிரிட்டனை உலுக்கிய காட்டு அணில்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. சீனாவுக்கு புதுயுகம் பிறந்திருக்கிறது என்கிறார் அதன் அதிபர் ஷீ ஜின்பிங். உலக அரங்கின் நாயகனாக சீனா வலம்வரும் காலம் கனிந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிப்பு ; ரக்காவை கைப்பற்றிய இராக்கிய படைகள், ஐஎஸ் அமைப்பின் தலைமையகமாக திகழ்ந்த இடத்தில் வெற்றிக் கொண்டாட்டம்! ஆனால் ஐஎஸ் அமைப்புக்கெதிரான போர் முடியவில்லை; தொடர்கிறது!! மற்றும் கடலோர சுறாக்களை கண்காணிக்கும் டிரோன் தொழில்நுட்பம்! ஆஸ்திரேலிய கடற்கரையில் குளிப்பவர்களை பாதுகாக்க புது முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  18. இன்றைய நிகழ்ச்சியில், * அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளின் பாகங்கள் பகிரங்கமாக விற்கப்படுவது குறித்த அதிர்ச்சித்தகவல்கள். * சொமாலியாவின் இருண்டகாலம் முடிவுக்கு வருகிறதா? முப்பதாண்டுகளுக்குப் பின் நடக்கும் தேர்தலில் மொகதிஷு நிலவரம் குறித்த பிபிசியின் நேரடி செய்தி. * உருவாகிறது இன்னொரு பசுமைப்புரட்சி; உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்க புதிய வழியை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு.

  19. மியான்மர் தலைவர்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பாயுமா? பிரிட்டனில் ஆண்டுதோறும் வீணடிக்கப்படும் 10 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கிறிஸ்துமஸுக்காக கருமை நிற பொம்மைகளை வாங்கும் ஆஃப்ரிக்கா முஸ்லிம்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * போரினால் சீரழிந்த கிழக்கு அலெப்போவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரும்புவதாக ஐ நா கூறும் நிலையில், அங்குள்ள சூழலை ஆராய்கிறது பிபிசி. * தாய்லாந்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் குறைந்தது அறுபதுபேர் பலியாகும் நிலையில், அங்கு சாலை பாதுகாப்பு எப்படியுள்ளது? * அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி விலகிச் செல்லவுள்ள நிலையில், அவரது வெளியுறவு கொள்கைகள் எப்படியிருந்தன என்பது பற்றிய ஒரு பார்வை.

  21. தினமும் 30 முறை வலிப்பு நோயால் அவதிப்படும் சிறுவனுக்கு, கஞ்சா எண்ணெய் சிகிச்சை பெற பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது. டிரோன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இஸ்ரேல், இரானிடையே மோதல் அதிகரித்துள்ளது. ஐம்பது வயதைக் கடந்தும் ஸ்கேட் போர்ட் விளையாட்டில் அசத்தும் பிரிட்டன் மூத்த குடிமக்கள்

  22. தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு இடையே, ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக வெற்றி பெற்றார் புடின்; சிரியாவின் வடக்கு நகரான அஃப்ரினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது துருக்கிய அரசு ஆதரவு ஆயுதக் குழு; உடல் பருமனை தடுக்க, சுமார் நூறாண்டுகளாக சர்க்கரைக்கு வரி செலுத்தும் நார்வேஜியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  23. இன்றைய (18/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளின் பிரத்யேக நோய்களை ஒழிப்பதில் அடைந்திருக்கும் வெற்றி என்ன? தொடரும் தோல்விகள் எவை? ஆராய்கிறது சர்வதேச மாநாடு. * இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவின் கிறித்தவ ஆளுநர் தேர்தலில் தோல்வி; சகிப்புத்தன்மைக்குப்பேர்போன நாட்டின் தலைநகரத்தேர்தல்,, மத உணர்வுகளைத் தூண்டியதா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு. * ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி; பள்ளியில் படிக்க தினமும் படகில் செல்லும் உகாண்டா குழந்தைகளின் கதை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  24. அணு ஆயுத திட்டத்தை கைவிடும் வரை வடகொரியாவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முடிவு, வடகொரிய தலைவரின் ஆட்சிக்கு நிதி திரட்ட, வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்- ரகசிய புலனாய்வில் திடுக்கிடும் தகவல்,பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  25. லண்டன் மசூதிக்கு அருகே நடந்த வேன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக விசாரிக்கிறது காவல்துறை! ஒருவர் பலி பத்துபேர் காயம்!! பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அறுபது சதவீத இடங்களைக் கைப்பற்றிய மெக்ஹாங்க் கட்சி! பிரெஞ்சு அரசியல் புரட்சியின் தொடக்கமா? மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகளை நெகிழவைக்கும் இன்னிசைக் கச்சேரி! மற்ற மருத்துவமனைகளுக்கும் முன்னுதாரணமாகுமா? இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.