Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நேற்றைய லண்டன் தாக்குதலில், தாக்குதலாளி பிரட்டனில் பிறந்தவர் என்று பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தாக்குதலாளி உட்பட இதுவரை 4 பேர் கொல்லப்பட்டு நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான புலன்விசாரணையில் இதுவரை எட்டுப்பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் மேலதிக விவரங்களையும் நேயர்கள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் காணலாம்.

  2. இன்றைய (23/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேன்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் பலி; 59 பேர் காயம்; இசை கேட்கச்சென்று உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இளம்பிராயத்தினரும் அடக்கம். * இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு மேன்செஸ்டர் தாக்குலதலுக்கு பொறுப்பேற்பு; 23 வயதுடைய நபர் இது தொடர்பில் கைது. * பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் சமாதானம் உருவாக்க தன்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன் என்று அறிவிப்பு.

  3. கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க அயர்லாந்து நாட்டில் நாளை மறுதினம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, தென்னாஃப்ரிக்காவில் அதிக லாபத்துக்கு வழிவகுக்கும் மொட்டை மாடி தோட்டங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. மூன்றாண்டு போரால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் ஏமனில் இருந்து நேரடி தகவல்! தீவிரவாதிகளுக்கான உதவியை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை ஆனால், தமக்கு தலிபான்களுடன் தொடர்பு கிடையாது என்கிறது பாகிஸ்தான் மற்றும் ஒரு வித்தியாசமான நாடோடிக் குடும்பம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. அமெரிக்கா - சீனா வர்த்தக போர் வேளாண் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பாகிஸ்தானின் ஒரே ஹிந்து சமுதாய எம்.பி. மகேஷ் மலானி பிபிசிக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. ஆப்கனில் முகாமை விட்டு வெளியேறிய அமெரிக்க சிப்பாயை தண்டிக்கும் விசாரணை ஆரம்பம்! தாலிபனிடம் சிறைப்பட்டவருக்கு,, அடுத்தது என்ன? ஆழ்கடல்கள் எதிர்கொள்ளும் அமில ஆபத்து! காற்றில் அதிகரிக்கும் கரியமிலவாயு,, கடல்வாழ் உயிரிகளை கடுமையாய் பாதிக்குமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!! மற்றும் ஹாலிவுட் படங்களில் ஆச்சரியமூட்டிய டைனோசார்கள்,, இனி பெலாரஸ் வீதிகளிலும் விரைந்தோடி வரப்போகின்றன! அவை உருவாக்கப்படும் விதம் குறித்த பிபிசியின் சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. இன்றைய நிகழ்ச்சியில், * பர்மிய இராணுவத்தால் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதான புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பிபிசிக்கு கிடைத்துள்ள தகவல்கள். * யெமெனில் காலரா நோய் தாக்கியுள்ளதாக ஐநா கவலை; ஏற்கனவே போரால் அவதியுறும் அங்கு சுகாதார சேவை ஆட்டங்கண்டுள்ளதாக அச்சம் அதிகரிக்கிறது. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்றைய பெண்மணி ஐஷியா இவான்ஸ்; “கறுப்பு உயிர்களும் பெறுமதியானவையே” என்கிற போராட்டத்தில் இவர் காட்டிய உறுதிப்பாடு அவரை உலகளாவிய கதாநாயகியாக்கியுள்ளது குறித்ததொரு பார்வை.

  8. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/11/17 மனுஸ் தீவு முகாமை அதிகாரப்பூர்வமாக மூடியது ஆஸ்திரேலிய அரசு - அகதிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றுவதால் பதற்றம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க, டிரம்ப் அறிவித்த பெருஞ்சுவர் திட்டம் - சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைவதால் நிறைவேறுவதில் சிக்கல் டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள் - தாய்நாட்டுக்காக பதக்கங்களைக் குவித்து சாதனை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் நகரில் திங்களன்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார். * பல்லாயிரக்கணக்கான பார்வை இழந்தவர்களுக்கு ஒளி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இயந்திரக் கண்கள். * கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களால் பிரிட்டனின் அஞ்சல் சேவையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

  10. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒபாமாவின் உத்தரவுகளை மாற்றுகிறார் டொனால்ட் டிரம்ப். வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், அமெரிக்காவில் கருக்கலைப்பை தடுக்கவும் கொள்கையில் மாற்றங்களை அவர் செய்கிறார். * செர்பியாவில் உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் குடியேறிகள். பாதுகாப்புக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் இவர்கள். * இந்த வருட இறுதிக்குள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடுவோம் என்கிறது நைஜீர்ய அரசாங்கம். ஆனால், விமர்சகர்களுக்கோ அதில் சந்தேகம்.

  11. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் சகோதரரின் உடலில் வி எக்ஸ் என்னும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சு வேதிப்பொருளை மலேசிய போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். விமாநிலையத்திலும் வி எக்ஸ்-இற்கான தடயங்கள் தேடப்பட்டன. * தனது முன்னைய நடவடிக்கைகளுக்காக தான் குற்ற உணர்வில் வாடுவதாக கெமர் ரூஜ் அமைப்பின் முன்னாள் விசாரணையாளர் கூறுகிறார். தான் தண்டிக்கப்படவும் வேண்டுமாம். * பரபரப்பான நகரத்துக்கு கீழே சுரங்கத்தில் ஒரு பெரும் விவசாயப் பண்ணை. அங்கு என்னென்ன செடிகள் மற்றும் மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன என்று பார்க்கலாமா?

  12. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * லண்டன் தாக்குதலாளி கடும்போக்கு இஸ்லாமியவாதியாக மாறியவர் என்கிறது பிரிட்டிஷ் காவல்துறை; இப்படியான மூவாயிரம் பேரை தொடர்ந்து கண்காணிப்பது சிரமம் என்கிறார் புலனாய்வுதுறைத்தலைவர். * அமெரிக்க நாடாளுமன்றத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு இன்னொரு சவால்; முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுகாதார திட்டத்தை அவரால் மாற்றமுடியுமா? * மருந்துக்கு கட்டுப்பட மறுக்கும் காசநோய்சிகிச்சையில் மேலும் ஒரு முன்னேற்றம்; நம்பிக்கையளிக்கும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.

  13. இன்றைய (24/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மாற்றத்துக்காக வாக்களித்த பிரான்ஸ்; அதிபர் தேர்தலில்- புதுவரவான இமானுவேல் மக்ஹோ(ன்)- அதிதீவிர வலதுசாரியான மரீன் லூபென்னை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்கிறார். * சிரியாவில் ரக்கா நகருக்கு வெளியே ஐ எஸ் குழு வலுவாக இருந்த பகுதி அரசபடைகளிடம் வீழ்ந்துள்ளது; அங்கிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். * உணவு வீணாகும் உலக பிரச்சனைக்கு உள்ளூர் தீர்வை முன் வைக்கிறது லண்டன் சந்தை ஒன்று; மற்ற நகரங்களால் பின்பற்ற முடியுமா?

  14. வங்கதேச ரோஹிஞ்சா முகாம்களில் மழைக்காலத்தை எதிர்கொள்ள அவசர கதியில் கட்டுமானப் பணிகள், வியட்நாமில் சிறுபான்மையாகி வரும் ஹிந்து சமூகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. இன்றைய (24/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிகபட்ச ஆபத்தை பிரிட்டன் எதிர்கொள்வதாக அறிவிப்பு; மேன்செஸ்டர் குண்டுதாரி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு. * பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கப்போராடும் ஆண்கள்; பெண்களை பாதுகாக்க ஆப்ரிக்காவில் வித்தியாசமான முன்னெடுப்பு. * அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மெக்ஸிகோ கார் உற்பத்தியை பாதிக்குமா? உலகின் நான்காவது பெரிய கார் உற்பத்தி நாட்டிலிருந்து நேரடி தகவல்கள்.

  16. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு,யெமெனில் குடியிருப்புவாசிகள் வாழும் பகுதிகளில் செளதி கூட்டுப்படைகள் தொடர் தாக்குதல், புகை மாசுபாட்டுக்கு முடிவு கட்ட சீனாவில் அறிமுகமான மதிவண்டி பகிர்வு திட்டத்தால் புதிய பிரச்னை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. ஆப்கன் தலைநகர் காபூலில் கார்குண்டுத்தாக்குதலில் 24 பேர் பலி பலர் படுகாயம்! அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கைகள்! துருக்கிய எதிர்கட்சிப்பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்!ஊடகங்களுக்கு எதிரான தாக்குதலென வலுக்கும் குற்றச்சாட்டு! மற்றும் ஸ்காட்லாந்தில் அமையும் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் குறித்து கடலுக்குள் இருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேக செய்திகள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  18. சிரியாவின் மையப்பகுதியில் ஐ.எஸ் அமைப்பை அரசாங்க படைகள் பின்வாங்கச் செய்யும் இடத்திலிருந்து பிபிசியின் நேரடி தகவல் ; ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஓராண்டுக்கு பிறகு அங்கு அதிகரித்துள்ள வன்செயல் மற்றும் நிதி நெருக்கடி ஆகிய சவால்கள் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் சர்வதேச தடையின் அடிப்படையில் விற்க முடியாத தென்னாப்பிரிக்காவின் காண்டாமிரு கொம்புகள் இணையத்தில் ஏலம் விடப்படுவது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  19. வங்கதேச முகாம்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ரோஹிஞ்சா சிறுமிகள், சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் யுக்ரேனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஷ்யா உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. இரான் தாக்குதலுக்கு அமெரிக்காவை குற்றம்சாட்டும் அதிபர் ருஹானி, மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இப்ராஹிம் மொஹம்மத் சோலிக்கு குவியும் பாராட்டு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  21. முடிவுக்கு வந்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய மாநாடு! அதிபர் ஷி கட்டமைக்க விரும்பும் உன்னத சீனாவில் பெண்களின் பங்கென்ன? ஆராய்கிறது பிபிசி!! மியன்மாருக்கான இராணுவ உதவிகள் சிலதை நிறுத்தியது அமெரிக்கா! ரோஹிங்ஞா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடவடிக்கை!! மற்றும் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சி! நைஜீரிய தேசியவிளையாட்டான கால்பந்தாட்ட அணியை புதுப்பிக்கும் பயிற்சி குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்கர்களிடம் தேசிய ஒருமைப்பாட்டை கோருகிறார் டொனால்ட் ட்ரம்ப்; ஆனால், அவரது சொந்த வணிக சாம்ராஜ்ஜியத்தொடர்புகள் அமெரிக்க அதிபராக அவரது அரசியலை பாதிக்குமா? * இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பெரும்பாலான ஆயுதங்கள் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டவை; போர்க்கள முன்னரங்கத்திலிருந்து பிபிசியின் புலனாய்வுத் தகவல். * பிரிட்டனின் வடகடலில் நிர்மாணிக்கப்படும் காற்றாலைப் பண்ணை விரைவில் பிரிட்டனுக்கு மின்சாரத்தை வழங்கும்; 2025 ஆம் ஆண்டில் நிலக்கரி மின்சாரத்தை ஒழிக்க நினைக்கிறது பிரிட்டன்.

  23. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 24/11/17 ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார் எமர்சன் முனங்காக்வா - ஆனால் , ஊழல் , வேலைவாய்ப்பின்மைக்கு புதிய தலைமை முடிவு கட்டுமா ? செளதி பட்டத்து இளவரசரால் கைது செய்யப்பட்ட இளவரசர்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்போதைய நிலை என்ன ? சிறை வைக்கப்பட்டுள்ள ஆடம்பர ஹோட்டலுக்கு பிரத்யேகமாகச் சென்றது பிபிசி நேபாள நாடாளுமன்றம் ,சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் - புதிய அரசியலமைப்பு உருவான பிறகு நடத்தப்படும் முதலாவது வாக்கெடுப்புக்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  24. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீனப் பொருட்கள் மீது டொனால்ட் டிரம்ப் பெரும் இறக்குமதி தீர்வையை அமல்படுத்தினால் தாமும் பதிலடி கொடுப்போம் என்கிறது சீனா. * எகிப்திய அதிபர் அப்தல் ஃபதா அல் சிசி ஆட்சிக்கு வந்த புரட்சியின் ஆறாவது வருட நிறைவு இது! ஆனால், மாற்றுக்கருத்தாளர்களுக்கு எதிரான அவரது நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. * உலகின் பிரபல மேடைகளில் இசைத்து வருகிறது ஆப்கானின் இசைக்குழு ஒன்று. ஆனால், முழுவதும் பெண்களை கொண்ட இந்த குழுவுக்கு தீவிரவாதிகளின் மிரட்டலும் உண்டு.

  25. இன்றைய (25/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கொரிய தீபகற்பத்தை சூழும் போர் மேகங்கள்; வடகொரியாவும் அமெரிக்காவும் பரஸ்பர இராணுவ ஒத்திகையை மேற்கொள்வதால் அதிகரிக்கும் சர்வதேச பதற்றம். * உலகின் மிகப்பெரிய மனிதப்பேரவலம் யேமெனில் ஏற்பட்டிருப்பதாக ஐநா எச்சரிக்கை; அதைத்தீர்க்க தேவைப்படும் நிதிதிரட்ட ஜெனீவாவில் சர்வதேச மாநாடு. * அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம்; சொமாலிய சரித்திரத்தை பாதுகாக்க வித்தியாசமானதொரு முயற்சி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.