Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடைசி கட்ட முயற்சி,பிரசவ காலத்தில் நீரிழிவு நோய் தாக்கத்தால் ஆறு மடங்கு அதிகம் வளரும் சிசுவின் உடல், வாடிக்கையாளர்களே சமைத்துச் சுவைக்கும், வியட்நாமின் வீதியோர கடைகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  2. இன்றைய (25/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மேன்செஸ்டர் தாக்குதல் புலனாய்வுத்தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை நிறுத்தியது பிரிட்டன்! தகவல் கசிவை அடுத்து தடாலடி முடிவு. *அல் ஷபாப் தீவிரவாதிகளால் கடத்தி அடிமையாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்! தாம் சந்தித்த கொடுமைகளை முதல் தடவையாக பிபிசியிடம் மனம் திறந்தனர்! *நூற்று இருபது மைல் தூரத்தில் இருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்! லண்டன் சிட்டி விமானநிலையத்தில் அறிமுகமாகின்றது!

  3. உச்சி மாநாட்டை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பிறகு, சமாதானத்துக்கு முயலும் வடகொரியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள், மீண்டும் தாயகத்துக்கு சட்டவிரோதமாக திரும்ப முயற்சி, இஸ்ரேல் கடல் பகுதியில் நீராவிக் குளியலுக்கு வரும் அரிய வகை கர்ப்பம் தரித்த சுறாக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட இராக்கிய நகரின் இன்றைய நிலை என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு!! சௌதியில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறும் எத்தியோப்பிய பணியாளர்கள்! அவர்களின் எதிர்காலம் என்ன? என்பதை விளக்கும் செய்தித்தொகுப்பு!! மற்றும் கிரீன்லாண்ட் உறைபனியில் வேகமாய் வளரும் பாசி! காலநிலைமாற்றத்தின் பாதிப்பை அதிகரிக்குமா என்பதை ஆராயும் ஆய்வு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. ஊழல் மற்றும் மோசடிக்காக மிகப்பெரிய மின்னணு நிறுவனங்களின் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு சிறைதண்டனை! நெதர்லாந்தில் கிறிஸ்தவத்துக்கு மாறும் இரானின் முஸ்லிம் அகதிகள் மற்றும் ஸிம்பாப்வேவில் கொல்லப்பட்ட பிரபலமான சிசில் சிங்கத்தின் குட்டியும் இப்போது வேட்டையாடப்பட்டது! இந்த மிருக வேட்டை உள்ளூர் வறிய மக்களுக்கு உதவுவாதகவும் கூறப்படுகிறது. இது குறித்த பிபிசியின் சிறப்பு தகவல்! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. ஜெர்மனி தேர்தலில் ஆட்சி தலைவி ஆங்கலா மர்கல் வென்றாலும், வரலாற்று எழுச்சியாக வலதுசாரி தேசியவாத கட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளது இராக்கிய அரசின் எதிர்ப்பை மீறி குர்திஸ்தான் மக்களின் சுதந்திரத்துக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இராக்கில் நடைபெறுகிறது மற்றும் ஆளில்லா விமானங்களை உதவியை பெறும் நவீன விவசாயம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை நிர்வாகிகள் அறிவிப்பு!ஆனால் அதிபர் ஷீ ஜின் பிங்கின் அடுத்த வாரிசு எங்கே? அமெரிக்காவில் இன்றும் நீடிக்கும் குழந்தை திருமணங்கள்! ஆயிரக்கணக்கான சிறுமிகள் வயதான ஆண்களுக்கு கட்டாயமாக கட்டிவைக்கப்படும் அவலம்!! பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு!! மற்றும் அரசரின் விமரிசையான இறுதிக்கிரியையைக் காணக்குவியும் தாய்லாந்து மக்கள்! ஓராண்டாக செய்யப்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகள் குறித்த பிபிசியின் நேரடி படப்பிடிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்ரேலின் வடக்கு பகுதியில் பரவும் பெரும் காட்டுத்தீ; எண்பதாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். * ஐஎஸ் அமைப்பால் தமது ஊரிலிருந்து விரட்டப்பட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இராக்கிய கிறிஸ்தவர்களுக்கு பேரதிர்ச்சி; அவர்கள் கிராமமே முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. * அனாதை யானைகளுக்கு ஒரு சரணாலயம்; அவற்றை வளர்ப்பது குறித்து விளக்குகிறார் அபயம் அளித்த வளர்ப்புத்தாய்.

  10. அமெரிக்க அதிபருடன் பாலியல் உறவு கொண்டதாகக் கோரும் கவர்ச்சி நடிகையின் புதிய குற்றச்சாட்டு ரஷ்ய அதிபர் புதினுக்கு முன்னாள் உளவாளி எழுதிய கடைசி கடிதத்தில் என்ன கூறினார்? நோயாளியை நடமாடச் செய்து, மூளையை ஸ்கேன் செய்யும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு

  11. இராக் கட்டுப்பாட்டுக்குள் குர்துக்களின் பிராந்தியம் மீண்டும் வர காரணம் என்ன?, பாகிஸ்தானில் வாழும் மூன்று தலைமுறை பெங்காலிகளுக்கு குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வான் தாக்குதல்கள் தீவிரம்; குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு முடிந்த நிலையில் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்; குப்பையில் உள்ள உணவைத் தேடும் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. இன்றைய (26/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மெக்ஸிகோவுடனான எல்லையில் நீண்ட சுவர் கட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினாலும், அது எதார்த்த ரீதியில் சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன * விபத்துக்களை புலனாய்வதில் துணைக்கு வரும் ட்ரோன்கள்; பிரிட்டிஷ் புலனாய்வாளர்களின் புதிய முயற்சி * உலகின் ஒரே ஒரு வெள்ளை காண்டாமிருகத்தின் வாரிசை உருவாக்க விஞ்ஞானிகளின் வித்தியாசமான முயற்சி குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. நாளை கூடும் உச்சி மாநாட்டுக்காக எல்லை கிராமத்தில் தயாராகும் தென் கொரியா - வடகொரியா தலைவர்கள், பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்திருக்கும் நதி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. கொலம்பியாவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானது குறித்த தகவல்கள், மொசூல் நகரில் முன்னேறிய இராக்கிய படைகள் மீது இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் கடுமையான பதில் தாக்குதல் நடத்துவது குறித்து மோதல்களத்தில் இருந்து வரும் பிபிசியின் நேரடி செய்திகள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இந்திய பணியாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பிபிசியின் சிறப்பு தகவல் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகள் தஞ்சம் கோரும் உரிமை குறித்த முக்கிய தீர்ப்பு! ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்படுவார்கள் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் ; ஐஎஸ் அமைப்பில் இணைந்த வெளிநாட்டுப்பெண்களின் எதிர்காலம் என்ன? சொந்தநாடு திரும்பமுடியுமா? இழந்த வாழ்வை மீட்க முடியுமா? பிபிசியின் பிரத்யேக புலனாய்வு! மற்றும் நோயை கண்டறியும் நாய்கள்! புற்றுநோய்க்கு அடுத்து பார்கின்ஸைன்ஸ் நோயை கண்டுபிடிக்கவும் நாய்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகிறார் இம்ரான் கான், இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விருப்பமுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. சர்வதேச அழுத்தங்களை மீறி நடந்த குர்து மக்களின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு குர்து மக்கள் காத்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, வடக்கு நைஜீரியாவில் உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் போகோ ஹராம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் பாகிஸ்தானில் தெரு நாய்களிடம் அன்பு காட்டும் மீனவர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  19. ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா, இரான் இடையே வார்த்தைப்போர் தீவிரம், உலகை கொந்தளிக்கச் செய்த சர்ச்சை புத்தகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. தாய்லாந்தின் மறைந்த மன்னரின் இறுதிக்கிரியைகளைக் காணக்குவிந்த ஆயிரக்கணக்கானவர்கள்! குடும்பம் குடும்பமாக பாங்காக் தெருக்களை நிறைத்த மன்னரின் ஆதரவாளர்கள்!! ஷீ ஜின் பின்கின் நவீன சீனாவில் ஒடுக்கப்படும் எதிர்க்கருத்தாளர்கள்! தன் சொந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் சீன மனித உரிமை வழக்கறிஞர்! மற்றும் அழிவின் விளிம்பில் ஜாவா காடுகளின் பாடும் பறவைகள்! அவற்றின் இனிய குரலுக்காக கண்ணிவைத்து பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்படும் கொடூரம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. நச்சு வேதிப்பொருள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் ரஷ்ய தூதர்களை வெளியேற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் - என்ன செய்யப் போகிறது ரஷ்யா? மியான்மரில் நடைமுறைத் தலைவரின் கட்டுப்பாடின்றி செயல்படுகிறதா ராணுவம் - ஆங் சான் சூ ச்சீ இல்லாமல் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் பிரத்யேக காட்சிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரிட்டன் அரசு நியமித்த சிறார்மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த சுயாதீன விசாரணை ஆரம்பம்; இரண்டாம் உலகப்போரின்போது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் குழந்தைகள் சந்தித்த கொடுமைகள் குறித்து முதற்கட்ட விசாரணை. * போரால் இடம்பெயர்ந்து பஞ்சாத்தால் அடிபட்ட மக்கள்; பல்லாயிரக்கணக்கான தெற்கு சூடான் மக்களுக்கு உணவு உதவி செல்லத்துவங்கியது. * கடைசி ஜார் மன்னனின் காதல் கதை பற்றிய திரைப்படத்தை தடை செய்யக்கோரும் பழமைவாத கிறிஸ்தவர்கள்; புனிதரின் கடந்தகால காதலைப்பேசும் திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார்.

  23. அதிபர் பதவிக்கால வரம்பை நீக்கும் முடிவால் சீனாவில் பாதிப்பு ஏற்படுமா? வங்கதேச முகாம்களில் ரோஹிஞ்சா சமுதாய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் மோசூல் நகரிலிருந்து ஐ எஸ் அமைப்பினரை வெளியேற்ற நடைபெறும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த கவலை அதிகரிப்பு *லண்டனில் நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவத்தை அடுத்து சங்கேத மொழியில் அனுப்பப்படும் தகவல்களை பார்க்க உரிமை வேண்டும் என்று பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்புகள் கோரிக்கை. * யேசுநாதர் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள தேவாலயம் புனரமைப்புக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.

  25. இன்றைய (27/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மறக்கப்பட்ட உயிர்காக்கும் மருந்தொன்று ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் புத்துயிர் பெறுகிறது; இதனால் பேறுகால மரணங்களை குறைக்குமென மருத்துவர்கள் நம்பிக்கை. * வடதுருவத்தில் நேட்டோ மற்றும் ரஷ்ய இராணுவ குவிப்பு இன்னொரு பனிப்போரின் தொடக்கமா? ரஷ்யாவின் ஆர்க்டிக் படைப்பிரிவு குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * ஐம்பது வயதுக்கு பிறகும் நடனம் ஆடலாம்; அது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.