உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
போருக்கு பிந்தைய கொரியா வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த உச்சி மாநாடு; இரு துருவ தலைமைகள் கைகோர்த்தாலும், நாடுகள் இணைவதற்கு தயங்கும் இளைய தலைமுறை; இந்தியர்கள் பற்றி வியட்நாமியர்களின் கருத்து என்ன? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 393 views
-
-
சிரியாவில் மீண்டும் இரசாயன தாக்குதல நடத்தினால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவை எச்சரித்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, அதிபர் டிரம்பின் பயணத்தடைக்கு ஒரு பகுதி ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த தகவல்கள் மற்றும் பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான எஹ்.எம்.எஸ் குவீன் எலிசபெத் கப்பல் சோதனைக்காக முதல் முறையாக கடல் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 304 views
-
-
அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளும் நம்பிகளும் பணிபுரிய தடைவிதிக்கும் அதிபர் ட்ரம்பின் உத்தரவுவை யாருமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அரசியலில், இது கோபம், குழப்பம் என பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் இராணுவ தளபதியும் குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் மெக்கேய்ன், இராணுவத்தில் பணிபுரியத்தேவையான தகுதிகள் கொண்ட அனைவருமே அதில் இணைந்து பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தடைக்கு அமெரிக்க அரசால் கூறப்படும் காரணங்கள் பொய்யானவை என்று திருநங்கை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-
- 0 replies
- 364 views
-
-
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சிக்கு பிடிஐ ஆயத்தம், கடுமையான பேரழிவை சந்தித்த லாவோஸ் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 521 views
-
-
மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் எலும்புக்கூடுகள், ரக்கா நகருக்கு மீண்டும் திரும்பும் சிரியாவாசிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 435 views
-
-
குர்திஸ்தான் சுதந்திரத்துக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்கு குர்து மக்கள் காத்திருக்கின்றனர், சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் கடந்த வார பூகம்ப தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மெக்ஸிகோ குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 350 views
-
-
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக முன்மொழிந்த ப்ரெட் கெவன்னாவிடம் விசாரணை, லிபியாவில் ஆயுக்குழுவினரிடம் சிக்கி அலைகழிக்கப்படும் ஆஃப்ரிக்க குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 833 views
-
-
கெடலோனியா பிராந்தியத்தில் ஸ்பெய்னின் நேரடி ஆட்சி, இன்று அறிவிக்கப்படுமென பெருகும் எதிர்பார்ப்பு! கெடலான் அரசும் கலைக்கப்படுமா? இராக்-குர்துப்படைகளுக்கு இடையில் முற்றும் மோதல்! சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவான குர்துக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பால் இராக்கில் இன்னொரு உள்நாட்டுப்போர் மூளுமா? ஒருபாலுறவாளர்களை கைது செய்யும் இந்தோனேஷிய காவல்துறை! பாலின ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 444 views
-
-
மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் பலி எதிரொலி - பாதுகாப்பு சட்டங்களை பலப்படுத்த எகிப்து நாடாளுமன்றம் தீவிரம். அமெரிக்க நடிகை மெகன் மார்க்கெலை அடுத்த ஆண்டு திருமணம் செய்கிறார் பிரிட்டிஷ் இளவசர் ஹேரி. அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விற்பனைக்கு வரி - துபை அரசின் திட்டத்தால் தங்க வியாபாரிகள் கவலை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 350 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கருங்கடலில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு. ஆய்வுக்காக மாஸ்கோ எடுத்துச் செல்லப்படுகிறது. * அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் நடைபெற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் நிகழ்வு. ஜப்பானியப் பிரதமர் பங்கேற்று அஞ்சலி. * தீப்பற்றாத மரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்கள் மூலம் உருவாகும் கட்டடம்.
-
- 0 replies
- 325 views
-
-
வடகொரிய தலைவரின் பெய்ஜிங் வருகைக்கு பின்னணியில் மறைந்திருக்கும் சீனாவின் ரகசிய திட்டம், பல்வேறு நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதை எப்படி சமாளிக்கப் போகிறது ரஷ்யா? ஆள் பற்றாக்குறையால் வயோதிக நோயாளிகளுடன் பணியாற்றும் ரோபோக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 347 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; தன் ஆட்சியின் முதல் ஆண்டுக்கான செயற் திட்டங்களை அறிவிப்பார். * அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியருக்காக அவர் வாழ்ந்த பகுதி மக்கள் அஞ்சலி; இது ஒரு வெறுப்புணர்வுக் கொலையா என்பதை ஆராய்கிறது எஃபிஐ. * பார்வை இழந்தவர்களுக்கு உதவும் கைபேசிச் செயலி; உதவி தேவைப்படும் பார்வையற்றவர்களுக்கு 24 மணி நேரமும் உதவக் கூடிய ஆர்வலர்களை உலக அளவில் உடனடியாக இணைத்து சாதனை.
-
- 0 replies
- 271 views
-
-
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 298 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகிழக்கு ஆஸ்திரேலியாவை ராட்சத சூறாவளி ஒன்று தாக்கியதில் , ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்; இதன் பாதிப்பு நீண்டகாலம் நீடிக்கும் என்று எச்சரிக்கை. * புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக ஒபாமா கொண்டுவந்த திட்டத்தை ரத்து செய்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; அமெரிக்க பொருளாதாரத்தை அது பாதிப்பதாக குற்றச்சாட்டு. * ஆப்ரிக்க பிள்ளைகள் தமது அடையாளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் லண்டன் தாய்; இயற்கையான சுருட்டை முடியை நேசிக்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம்.
-
- 0 replies
- 354 views
-
-
இன்றைய (28/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மறக்கப்பட்ட உயிர்காக்கும் மருந்தொன்று ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் புத்துயிர் பெறுகிறது; இதனால் பேறுகால மரணங்களை குறைக்குமென மருத்துவர்கள் நம்பிக்கை. * வடதுருவத்தில் நேட்டோ மற்றும் ரஷ்ய இராணுவ குவிப்பு இன்னொரு பனிப்போரின் தொடக்கமா? ரஷ்யாவின் ஆர்க்டிக் படைப்பிரிவு குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * ஐம்பது வயதுக்கு பிறகும் நடனம் ஆடலாம்; அது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.
-
- 0 replies
- 259 views
-
-
டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு தேதியை மீண்டும் இறுதிப்படுத்த அதிகாரிகள் முயற்சி,மனிதர்களுடன் பழகும்போது மகிழ்ச்சியாக உணரும் டால்பின்கள் - விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வியப்பூட்டும் தகவல்கள்,அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கும் எல் சால்வொடோர் இயக்கத்தில் இருந்து தப்பி மத போதகராக மாறிய முன்னாள் இயக்கத் தலைவர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 368 views
-
-
வெனிசுவேலா நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கைக்குண்டு தாக்குதல் நடத்தியது குறித்த செய்தி, உலகெங்கும் மீண்டும் அதிரவைத்த இணைய வழி தாக்குதல் மற்றும் அதனை தடுப்பதற்கான செயலி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் மற்றும் ஊசியால் குத்தி வலி ஏற்படுத்தி தடுப்பு மருந்து போடுவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நோய் தடுப்பு முறை குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 229 views
-
-
பதவி விலகினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்! கறுப்புப்பண குற்றச்சாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவால் பரபரப்பானது பாகிஸ்தான் அரசியல்! ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் ஆபத்து! எச்சரிக்கும் புதிய ஆய்வின் முடிவுகள்! மற்றும் அல்பினோக்களுக்கு எதிரான மனநிலையை கால்பந்து மைதானம் மூலம் மாற்ற முயற்சி! தோலின் நிறமாற்றத்தால் ஆபத்தை எதிர்கொள்பவர்களின் ஏக்கம் தீருமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்காவின் ஹியூஸ்டனில் பெருவெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் ; சரக்கு ரயில்களில் கீழே மறைந்து வரும் குடியேறிகளை தடுக்க, அவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை ஆஸ்திரியா அதிகரித்துள்ளது மற்றும் எகிப்தில் பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவரின் கதை ஆகியவை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 333 views
-
-
காலராவுடன் போராடும் யேமென், மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும் பாலியல் வன்கொடுமை சட்டங்கள், பிரிட்டன்வாசிகளை கவர்ந்த சாகச பூச்சிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 432 views
-
-
பர்மாவின் ரக்கைன் மாநிலத்திற்கான ஐநாவின் பயணத்திட்டத்தை பர்மிய அரசாங்கம் திடீரென ரத்துச் செய்துள்ளது குறித்த செய்திகள் மற்றும் ஐஎஸ் அமைப்பின் தலைநகராக கருத்தப்பட்ட ரக்கா நகரம் தற்போது அரபு மற்றும் குர்து போராளிகளால் கைப்பற்றப்படவுள்ள நிலையில் அங்கிருந்து வரும் பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 252 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவில் அலெப்போ நகரின் முக்கிய மாவட்டத்தை பிடித்துவிட்டதாக அரச ஆதரவு படைகள் கூறுகின்றன! இதனால், அங்குள்ள கிளர்ச்சிப்படைகளின் பகுதிகள் இரு பிரிவாக பிரிந்துவிடும்! * துருக்கியில் ஆட்சி கவிழ்பு சதி முறியடிக்கப்பட்ட பிறகு துன்புறுத்தல்கள் இடம்பெற்ற குற்றச்சாட்டை ஐ நா விசாரிக்கவுள்ளது!இது குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்! * காசா பகுதியில் சைக்கிளில் வேலைக்கு போவதற்கு இருக்கும் தடையை மீறியப் பெண்ணொருவர் தனது அனுபவம் குறித்து பிபிசியிடம் பேசினார்!
-
- 0 replies
- 251 views
-
-
மியான்மர் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சியை சந்தித்தார் போப் ஃப்ரான்ஸிஸ் - துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை ரோஹிஞ்சாக்கள் என அழைப்பதைத் தவிர்த்தார் டமாஸ்கஸ் அருகே அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலி - உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஜெனீவாவில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது ஐ.நா. தற்கொலை குண்டு தாக்குதலுக்காக மட்டும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்படும் என்ற எண்ணத்தை மாற்ற, மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியை கட்டிக் கொண்டு இராக் முழுவதும் பயணிக்கும் இளைஞர்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 219 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடத்தப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள். போரின் கொடூரங்கள் இனி கூடாது என்கிறார் ஜப்பானியப் பிரதமர். * பிரிட்டனிலும் தேர்தல் முறைகேடுகள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் மீதும் பெரும் குற்றச்சாட்டு. * வெளியே தெரியா பொக்கிஷங்கள் இவை. சீனா மக்களின் வன விலங்குகளை ஆராதிக்கும் படங்கள் பற்றிய சில தகவல்கள்.
-
- 0 replies
- 226 views
-
-
தாலிபன் தாக்குதலுக்கு ஆளானதால் பிரிட்டனில் தங்கியிருந்த பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மலாலா பாகிஸ்தான் திரும்பினார் - ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் வந்தவருக்கு பிரதமர் இல்லத்தில் வரவேற்பு எகிப்து அதிபராக இரண்டாவது முறையாக அப்தெல் ஃபடா அல் சீஸி வெற்றி பெற்றதாக அரசு ஊடகம் அறிவிப்பு - தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டு ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் வசிக்கும் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ராஜ வம்சாவளி குடும்பத்தினர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 181 views
-