உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
ஆஃப்கானிஸ்தானில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் ராணுவ முகாமை தாலிபன்கள் கைப்பற்றியதால் பதற்றம், யேமென் வான் தாக்குதலில் பலியான பள்ளிச் சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு - செளதி கூட்டுப் படையினருக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் கிளர்ச்சியார்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 335 views
-
-
சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிவை அதிபர் அஸ்ஸாத்துக்கு சாதகமாக்கிய ரஷ்ய படையினர், அமெரிக்காவில் தற்கொலை எண்ணத்துடன் வாழும் தெற்காசிய மக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் பலவீனமான கண் பார்வை திறனை மீட்டெடுக்கும் லண்டன் மருத்துவர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 372 views
-
-
ஆஃப்கானிஸ்தானில் உளவுத்துறையினர் பயன்படுத்திய மையம் மீது ஆயுததாரிகள் புதிய தாக்குதல், ஹெச்ஐவி நோயை கண்டறிய நாடு முழுவதும் அறிமுகமான சுயபரிசோதனை கருவிக்கு பிரிட்டன்வாசிகள் வரவேற்பு போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 702 views
-
-
ரஷ்யாவுக்கு ஆதரவாக டொனால்ட் டிரம்ப் பேசியதால் அமெரிக்காவில் சர்ச்சை, பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 310 views
-
-
புதிய பிரதமராகும் இம்ரான் கான் மீது பாகிஸ்தானியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? எகிப்திய மம்மிகளை பதப்படுத்தும், நூற்றாண்டுகால ரகசியத்தை கண்டுபிடித்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 283 views
-
-
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறார்கள், பெற்றோருடன் இணைய அனுமதி, ஊட்டச்சத்தின்மையால் ஏமனில் தினமும் ஒரு குழந்தை பலியாகும் அவலம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 323 views
-
-
இஸ்ரேலை யூத தேசமாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, பாகிஸ்தானில் வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்குரிமை மறுக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 351 views
-
-
ஐ.எஸ். குழு கெடுபிடியால் சமூக ஊடகம் மூலம் ரகசியமாக கல்வி கற்ற சிரியா சிறுமிகள், யுக்ரேனில் காதல் ஜோடிகள் கொண்டாடி வரும் சுரங்க ரயில் பாதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 370 views
-
-
அல் காய்தா, ஐ.எஸ். குழுவை சமாளிக்க முடியாமல் சஹாரா பாலைவன பிராந்தியத்தில் திணறும் ஐ.நா. படையினர், உடல் குறைபாட்டை மீறி நடனத்துறையில் சாதிக்கத் துடிக்கும் நேபாள பெண் கலைஞர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 343 views
-
-
ஒற்றைத் தலைமை ஆளுகையின் கீழ் துருக்கி - எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைய காரணம் என்ன? மொழி உரிமைக்காக போராடுவதால் துன்புறுத்தப்படும் கேமரூன் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 372 views
-
-
அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக ஹார்லி டேவிட்சன் பைக் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு,மியான்மர் ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ரோஹிஞ்சா சிறுமிகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 283 views
-
-
மோசமான வானிலையால் தாய்லாந்து குகையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நிறுத்தம், பாகிஸ்தானில் அடுத்த மாதம் பொதுத்தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள், மரபணுவில் மாற்றம் செய்து புற்றுநோய் கட்டியை அகற்றும் புதிய சிகிச்சை முறை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 410 views
-
-
வன்முறை களத்தில் தேர்தலுக்கு தயாராகும் வேட்பாளர்கள், பல நூறு ஆண்டுகள் பழமையான மீன் புதைபடிமங்களை தேடும் குடும்பம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 288 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதநேய உதவிகளை வான்வழியாக போட வேண்டுமென அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஐநாவிடம் கோரிக்கை; நான்கு ஆண்டுகளுக்கு பின் டாரேயா நகருக்குள் சென்றன உதவி வாகனங்கள். * சிறாரை துஷ்பிரயோகம் செய்வது குறித்த சொந்த கையேட்டை எழுதிய பிரிட்டிஷ் ஆண்; மலேசியாவில் செய்த தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆயுட்தண்டனையை எதிர்நோக்குகிறான். *ஆஸ்திரேலியாவின் மயக்கும் மயில் சிலந்திகள்; அழகாக நடனமிடும், ஆனால் பயம் வேண்டாம், அது கடிக்காது.
-
- 0 replies
- 486 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - முறியும் நிலையிலுள்ள சிரியாவின் போர் நிறுத்தத்தை காப்பாற்ற ஐநா தூதர் ரஷ்யா விரைந்தார். அதேவேளை, ஐஎஸ் அமைப்புக்கு எதிராக மின்னணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. - புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய சாதனை. நோய்க்கான சிகிச்சைக்கும், அதனை தடுக்கவும் சாத்தியமான புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். - யானைத்தந்தங்களின் கையிருப்பு அதிகரித்து வரும் உலகின் ஒரே நாடான ஜப்பானில் சட்டவிரோத தந்த விற்பனை குறித்த பிபிசியின் ஆய்வு.
-
- 0 replies
- 278 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய மக்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கும்படி ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை. ஆனால், ஐரோப்பிய நாடுகளிடம் ஒருமித்த ஒப்புதல் இல்லை. - வடகொரிய பல்கலைக்கழகத்துக்குள் சென்ற பிபிசி செய்திக்குழு, அந்த ரகசிய நாட்டின் கல்வி முறையால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தது. - பிரஞ்சு நவநாகரிக அடையாளமான ''சனல்'' நிறுவனம் கம்யூனிஸ கியூபாவில் தமது நவநாகரிக ஆடை அணிகல நிகழ்வை மேடையேற்றியது.
-
- 0 replies
- 533 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - பெற்றோர் இன்றி தனியாக ஐரோப்பா வந்த அகதி சிறார்களை பிரிட்டன் ஏற்கும் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். அப்படியான சிறார்கள் பலர் வாழும் கலே முகாமில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். - வங்கதேசத்தில் வலைப்பதிவர்கள், கல்விமான்கள் மற்றும் ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச கவலைகள் அதிகரிக்கின்றன. - நீர் நாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனை. மீன் தின்னும் இந்த இனத்தால் இங்கிலாந்தில் தீரா தலைவலி.
-
- 0 replies
- 243 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - சுமார் நாற்பது வருடத்தில் முதல் தடவையாக நடக்கும் வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு ஆரம்பித்துள்ளது. - சிரியாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் டசின் கணக்கானோர் பலி. புதிதாக ஆரம்பித்துள்ள மோதல்களுக்கு மத்தியில் இதனை ஒரு போர்க்குற்றமாக கருதமுடியும். - விண்ணுக்குச் செல்லவிருக்கும் வல்கைரி ரோபோட். மண்ணிலும் கூட மனிதர்கள் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை செய்ய வல்லது இது.
-
- 0 replies
- 343 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தகுதியை பெறுவதற்கான வாய்ப்பை ஹிலாரி கிளிண்டன் மேலும் நெருங்கியுள்ளார். - குழந்தை பெறாவிட்டால் பெண்கள் முழுமையடைய மாட்டார்கள் என்கிறார் துருக்கிய அதிபர். பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தை இந்த கருத்து தூண்டியுள்ளது. - பெரும் குடியேறிகள் வருகை ஜெர்மனியில் கிரிக்கட் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. நாடெங்கும் டசின் கணக்கான புதிய அணிகள் தோன்றுகின்றன.
-
- 0 replies
- 633 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * எல்லைக்காவலை தீவிரமாக்குகிறது துனிஷியா; இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆபத்தைத் தடுப்பதில் தீவிரம். * மட்டுப்படுகிறது கேனடாவின் காட்டுத்தீ; குளிர்ச்சியான பருவநிலையால் தீயைக்கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை. * பசியாற்றும் பஞ்சாபிகள்; லண்டனில் அதிகரித்துவரும் வீடற்றவர்களின் வயிற்றுப்பசியை போக்கும் சீக்கியர்கள் குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 309 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பிரான்ஸில் இன்று (10-06-2016) துவங்கும் யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளை ஒட்டி ஒட்டுமொத்த நாடும் அதிகபட்ச உஷார் நிலையில்; ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். நிர்பந்தத்தால் இரானை விட்டு வெளியேறிய ஒருபாலுறவு முல்லா; ஒருபாலுறவாளர்களுக்கு திருமணம் செய்து வைத்ததால் வெளிநாட்டில் அகதியாக இருக்கும் இரானிய மதத்தலைவரை சந்தித்தது பிபிசி. பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாளின் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் இன்று துவங்கின; அரசிக்கு எப்படி ஆண்டுக்கு இரண்டு பிறந்த நாட்கள்? ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 341 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளார்; * சவுதியின் மதப்போலிசாரால் கடிக்கப்பட்ட பெண்; நன்னடத்தையை கண்காணிக்க அமைக்கப்பட்ட மதப்போலிஸாரின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன; * உலகில் உள்ள தாவர வகைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு; நான்கு லட்சம் தாவர இனங்களில் ஐந்தில் ஒன்று அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 387 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சீன அதிகாரிகள் மரியாதை இல்லாமல் நடப்பவர்கள்'' என்கிற பிரிட்டிஷ் அரசியின் கருத்தை ஒளிபரப்பிய போது சீனாவில் பிபிசி தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது! * அடையாளம் இடப்படாத நூற்றுக்கணக்கான அகதிகளின் கல்லறைகள்; ஐரோப்பாவுக்கான பயணம் அவர்களுக்கு கைகூடவில்லை என்பதன் அடையாளம் இவை! * ஆழக்கடலின் மடியில் அழகான பொக்கிஷம்; நேரடியாக படம்பிடித்து ஒளிபரப்பிய நீர்மூழ்கி ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 274 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஊழலுக்கு எதிரான லண்டன் ஒன்றுகூடல்; பிரிட்டிஷ் அரசின் மாநாட்டில் குழுமும் உலகத்தலைவர்கள், நிதிமேலாளர்கள், ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள். * இராக்கின் ஃபலுஜா நகரில் பட்டினிச் சாவுகள்; முற்றுகையில் இருக்கும் நகருக்குள் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேகத் தகவல்கள். * வடகொரியாவில் முதலில் அணிவகுப்பு, பிறகு அரசியல் இறுதியில் பாப் இசை; பெண்கள் பாப் குழுவின் இசையுடன் முடிவுக்கு வரும் வடகொரிய அரசியல் மாநாடு ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 349 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் ஒன்றினைந்தது உலகம்; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா நெடுகவும் உலக அளவிலும் மலரஞ்சலிகளும் மவுன பிரார்த்தனைகளும் தொடர்கின்றன. அமெரிக்க இரவு விடுதிக்கு சென்ற துப்பாக்கிதாரி ஒமர் மடீன் அங்கே 49 பேரை சுட்டுக்கொன்றது ஏன்? தொடரும் காவல்துறையின் தீவிர புலனாய்வு. பாகிஸ்தானில் தனது அண்டை வீட்டுக் கிறிஸ்தவருக்காக தேவாலயம் கட்டும் முஸ்லிம்; சமாதானத்தை முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 295 views
-