உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * இராக்கிய இராணுவத்தின் இன்னொரு பெரும் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது; ஐஎஸ் அமைப்பிடமிருந்து பலூஜா நகரை மீட்பதற்கு. முன்னரங்கிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள். *மூடப்போவதாக ஒபாமா சொன்ன குவாந்தநாமோ பே சிறை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னும் மூடப்படவில்லை; மாறாக மேம்படுத்தப்படுகிறது. ஏனிந்த நிலை? சிறைவளாகத்துக்குள் சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி ஆய்வு. *ஆழ்கடல் அதிசயங்களை ஆராயும் அபூர்வ வாய்ப்பு. கடலின் பல்லாயிரம் மீட்டர் ஆழம் சென்று ஆராயும் சீனாவின் புதிய முயற்சிக்குப் பின்னிருப்பது கடல் ஆய்வா? இராணுவ விஸ்தரிப்பா?
-
- 0 replies
- 368 views
-
-
இன்றைய (6/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * லண்டன் தாக்குதலை நடத்திய மூன்றாவது நபரின் அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை; இருபத்தி இரண்டு வயதான யூசுஃப் சக்பா மொரொக்கோ இத்தாலியன் என்று அறிவிப்பு. * ஐ எஸ் அமைப்பிடமிருந்து மராவி நகரை மீட்க பிலிப்பைன்ஸ் இராணுவம் தீவிர முயற்சி; மோதலில் சிக்கிய பொதுமக்களின் அவலம் குறித்து பிபிசியின் நேரடி படப்பிடிப்பு. * இரண்டு நாட்களில் பிரிட்டிஷ் தேர்தல்; இதில் முக்கிய பிரச்சனையான குடியேற்றம் குறித்த விரிவான அலசல்.
-
- 0 replies
- 315 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * அமெரிக்கா தலைமையிலான படைகள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை அவர்களின் பலம் மிக்க இடங்களில் இருந்து அகற்றிவரும் நிலையில், ஐரோப்பா திரும்பும் வெளிநாட்டு போராளிகள் சிலரை சந்தித்தது பிபிசி, * ஒரு காலத்தில் மரண தண்டனையாக பார்க்கப்பட்ட எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது மற்றவர்களின் ஆயுட்காலத்துக்கு நிகராக வாழ முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள், * கோடிகள் புரளும் மீன்வர்த்தகம் மோசமான நெருக்கடியில்; அதிகரித்த மீன்பிடியால் அருகிவரும் ஹில்சா மீன்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 280 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை மாற்ற வேண்டாம் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். *உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் சீனா தனது சுயேச்சை வேட்பாளர்களை எப்படி மௌனமாக்குகிறது என்பது குறித்த பிபிசியின் தகவல். *காகிதம் மற்றும் கண்ணாடி மறுசுழற்சிக்கு உள்ளாவதை போலவே பிரிட்டனில் தொலைக்காட்சி பெட்டிகளும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.
-
- 0 replies
- 306 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பிரான்ஸிலுள்ள சர்ச்சைக்குரிய அகதி முகாமான ஜங்கள் முகாமின் முடிவின் துவக்கம் ஆரம்பம்; நூற்றுக்கணக்கானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம். * இறுதியில் கிடைத்த விடுதலை; சொமாலிய கடற்கொள்ளையர் பிடியில் நான்காண்டுகள் இருந்த ஆசிய கடலோடிகள் எலிகளை உண்டு உயிர் வாழ்ந்த அவலம்; அவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள். * பல்கலைக்கழக படிப்புக்கு மத்தியில் சுயதொழில் தொடங்கும் மாணவர்கள்; குப்பையை எருவாக்கி செல்வத்தை பெருக்கும் தான்சானிய இளம் தலைமுறையினரின் கதை.
-
- 0 replies
- 235 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கிய அரச படைகள் மொசூல் நகரின் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக அறிவிப்பு; "சரணடை அல்லது செத்துமடி" - ஐ எஸ் போராளிகளுக்கு இராக்கிய பிரதமரின் இறுதி எச்சரிக்கை. * இணையத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படும் வங்கதேசப் பெண்ணின் கதை; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி பதினைந்து ஆண்டுகளின் பின்னும் தொடரும் கொடுமை. * உலகின் முழுமையான முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்து எண்பது ஆண்டுகள் ஆகின்றன; அந்த முதல் ஒளிபரப்பு எப்படி நடந்தது?
-
- 0 replies
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஐந்து நாட்களே உள்ளநிலையில் முக்கிய மோதல் களமான ஃப்ளோரிடா மாநிலத்தின் கறுப்பினத்தவரின் வாக்கைக் கவர இரு வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருப்பது குறித்த செய்தி. * போரில் பலியானவர்களை நினைவு கூறும் தினத்தில் பாப்பி அணிய இங்கிலாந்து கால்பந்து வீரர்க்ளுக்கு உலக கால்பந்து அமைப்பு தடை; பெரும் கோபத்தில் பிரிட்டிஷ் பிரதமர். * ஆப்பிரிக்கா எங்கும் மருத்துவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு; இதற்குத் தீர்வு காணுமா நமீபியாவின் புதிய மருத்துவ கல்லூரி?
-
- 0 replies
- 547 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * தன் மீதான புதிய பாலியல் புகார்களை மறுக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; குடியரசுக்கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் மீது மிஷெல் ஒபாமா கடும் தாக்குதல். * வங்கதேச எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுவதாக அதிகரிக்கும் புகார்கள்கா; காணாமல் போகும் எதிர்கட்சிக்காரர்கள் என்ன ஆகிறார்கள்? புலனாய்கிறது பிபிசி. * சிம்பன்ஸிகளுக்கு சிம்பன்சிகளாக இருப்பதற்கான பயிற்சி; இங்கிலாந்து மிருககாட்சி சாலையில் வித்தியாசமானதொரு முயற்சி; பிபிசியின் பிரத்யேக காட்சிகள்.
-
- 0 replies
- 456 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நியூசிலாந்தை இரண்டாவது சக்தி மிக்க பூகம்பம் தாக்கிய நிலையில் கடற்கரை நகரான கைகோராவில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ கடற்படை விநியோகங்களை அனுப்புகிறது. *புதிதாக தேர்வான அதிபர் ட்ரம்ப் உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஆரம்பித்துள்ளார் . முஸ்லிம்கள் மற்றும் லத்தினோ அமெரிக்கர்கள் மீதான துன்புறுத்தல்களை நிறுத்துமாறும் அவர் கோரியுள்ளார். * ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேறிய முதல் அரங்கு எப்படியிருக்கும்? கிழக்கு லண்டனில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம் ஒன்று புதிய சான்றுகளை தருகின்றது.
-
- 0 replies
- 361 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் எண்பத்து நான்குபேர் பலியான சோகம்; பிரான்ஸ் நெடுக துக்கம் அனுஷ்டிப்பு. * தாங்கள் சுட்டுக்கொன்ற தாக்குதலாளியின் அடையாளத்தை காவல்துறை வெளியிட்டது; உள்ளூரில் வசித்த முப்பத்தியோரு வயதான துனிஷிய வம்சாவளி பிரெஞ்சு பிரஜை என்று அறிவிப்பு; ஆனால் மத்திய புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்குள் வரவில்லை. * மண்ணுக்குள் மூடப்பட்டிருந்த மூவாயிரம் ஆண்டு ரகசியங்கள் வெளிப்பட்டுள்ளன; இங்கிலாந்தின் கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது வெண்கலக்கால குடியிருப்பு.
-
- 0 replies
- 379 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதற்கான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், நிலைமையை சீராக்க டமாஸ்கஸுக்கு ஐநாவின் சிறப்பு தூதர் சென்றுள்ளார். - தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் தமது பிராந்திய மாநாட்டுக்காக முதல் தடவையாக கலிபோர்னியாவில் கூடுகின்றனர். ''தென் சீனக் கடல் முரண்பாடுகள்'' அங்கு முக்கிய விவாதப் பொருளாகலாம். - நேற்று இரவு நடந்த கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மலாவி நாட்டின் சிறைக் கைதிகளின் இசைக்குழு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
-
- 0 replies
- 327 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொசூல் மீதான தாக்குதல் துவங்கியது; அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரிலிருந்து ஐஎஸ் அமைப்பை துரத்துவதற்கான மாபெரும் நடவடிக்கை. * மியான்மரின் வடக்கே ரக்கைன் மாநிலத்தில் மீண்டும் வன்முறை; தீவிரவாதிகளே காரணமென அரசாங்கம் குற்றஞ்சாட்ட, ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுகிறார்கள். * விண்வெளிக்கு பறந்த சீன வீரர்கள்; விண்ணிலுள்ள அந்நாட்டின் விண்ணாய்வுக் கூடத்தில் அடுத்த ஒரு மாதம் தங்கி ஆய்வு செய்வது அவர்களின் நோக்கம்.
-
- 0 replies
- 592 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் மொசூல் நகரை மீளக்கைப்பற்றுவதற்கான மாபெரும் சண்டை ஆரம்பம்; மோதல் களத்தில் இராக்கிய படைகளுடன் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேக செய்திகள். * கடற்கொள்ளைக்கு எதிரான ஒரு போராட்டம்; ஆப்பிரிக்க மேற்குக்கரை எதிர்கொள்ளும் ஆபத்தை தவிர்க்க உருவாகிறது புதியதொரு சாசனம். * பேருரு மனிதர்கள் வாழும் பூமிக்கு அழைத்துச் செல்கிறது பிபிசி: அயர்லாந்தின் புராணக்கதைகளில் உண்மை இருப்பதாக சொல்கிறது மரபணு ஆய்வு.
-
- 0 replies
- 431 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மொசூலை மீட்பதற்கான இராக்கிய இராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ளது; ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பி ஓட விழைவதால் உருவாகும் மனித நேய நெருக்கடி குறித்து தொண்டு அமைப்புக்கள் எச்சரிக்கை. * செவ்வாய் கிரகம் உங்களை வரவேற்கிறது; ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்கலம் சில மணி நேரத்தில் அங்கு தரையிறங்கவுள்ளது. * ஒரு பெரும் சுகாதார பிரச்சினைக்கு எளைமையான தீர்வு; ஆப்பிரிக்காவின் வைட்டமின் ஏ குறைபாட்டு பிரச்சினைக்கு தீர்வாகும் சர்க்கரைவெள்ளிக் கிழங்கு.
-
- 0 replies
- 592 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கசப்பில் முடிந்த இறுதி விவாதம்; அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முறைகேடாக இருக்கும் என்று கூறிய ட்ரம்ப், தேர்தலில் தோற்றால் அவற்றை ஏற்பாரா, இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய மறுத்திருப்பது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. * மொசூலை கைப்பற்றுவதற்கான தமது தாக்குதலை தீவிரப்படுத்தும் இராக்கிய படைகள்; தினமும் தாக்குதலை எதிர்கொள்ளும் ஒரு படைப்பிரிவுடன் செல்லும் பிபிசி குழுவின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்குள் வேண்டாத விருந்தாளிகளா? சீனாவுக்குள் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாக கூறப்படுவது குறித்து ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 391 views
-
-
-
- 0 replies
- 315 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில், காவல்துறை பயிற்சிக்கல்லூரி மீதான தாக்குதலில் குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டனர். * மோசமாக முற்றும் இயற்கை வளங்களுக்கான மோதல்; முன்னாள் பங்காளிகள் இந்நாள் பகையாளிகளாக மாறும் மத்திய ஆசிய நாடுகள். * தவறை சரிப்படுத்தும் ஐக்கிய ராஜ்ஜியம்; வரலாற்று ரீதியில் ஒருபாலுறவாளர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்க முடிவு.
-
- 0 replies
- 460 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பிரான்ஸ் தேவாயலத்துக்குள் மதகுரு ஒருவர் படுகொலை; நார்மாண்டியில் தேவாலய பூஜைக்குள் புகுந்த இரண்டு ஆயுததாரிகள் பணயக்கைதிகளை பிடித்து வைத்த விபரீதம். * ஜப்பான் மாற்றுத்திறனாளிகளின் மையத்திலிருந்த பத்தொன்பது பேர் கத்தியால் குத்திக்கொலை; மையத்தின் முன்னாள் பணியாளர் கைது. * சூரிய ஒளி மின்சார விமானத்தின் முதலாவது உலக சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்தது; பதினாறு மாதங்களின் முடிவில், பயணத்தைத் துவக்கிய அபுதாபியிலேயே பயணத்தை முடித்து சாதனை.
-
- 0 replies
- 401 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மொசூல் நகருக்குள் முற்றுகைக்குள் சிக்கிய ஐ எஸ் அமைப்பு; புறநகர் பகுதிக்கு முன்னேறியுள்ள இராக்கிய படைகளோடு பயணிக்கும் பிபிசியின் நேரடிச்செய்தித் தொகுப்பு. * பிரிட்டிஷ் பேரங்காடிகளுக்கான ஆடை தயாரிப்பில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்படும் சிரிய நாட்டு அகதிச் சிறார்கள் குறித்த பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்தி. * இவர்கள் வழக்கமான உயிர்காப்ப்பாளர்கள் அல்ல; கடலில் தத்தளிப்பவர்களைக் காக்கும் பணிக்குத் தயாராகும் நியூபவுண்ட்லாண்ட் நாய்கள்.
-
- 0 replies
- 553 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ் அமைப்பு உருவாக்கிய சுரங்க பதுங்கு குழிகள். *அமெரிக்கத் தேர்தலில் ஆசிய வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்த காணொளி. *மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விக்டோரியா ஏரி அதே மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 206 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இயற்கை பாதுகாப்புக்கு ஒரு வெற்றி; அன்டார்ட்டிக்காவில், உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரின சரணாலயத்துக்கு உடன்பாடு. * சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது; ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட குழந்தையை பெற நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அபராதம் நீடிக்கிறது. * உலகின் மிகப் பிரபலமான பிக் பென் மணிக்கூண்டை பழுதுபார்க்கும் நேரம் வந்துவிட்டது; லண்டனின் இந்த அடையாளம் மராமத்து பணிகளுக்காக ஒலிக்காது ஓயும்.
-
- 0 replies
- 387 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * FBI சட்டத்தை மீறி செயற்பட்டதா? ஹிலரி தொடர்பான மின்னஞ்சல் புகாரை மீண்டும் விசாரிப்பதாக FBI அறிவித்திருப்பது சட்டமீறல் என ஜனநாயக கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு. * இத்தாலியை தாக்கிய கடுமையான பூகம்பத்தை அடுத்து ஆபத்தான பின்னதிர்வுகள் தொடர்கின்றன; பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு கோரிக்கை. * தென்கொரிய அதிபர் சம்பந்தப்பட்ட அரசியல் ஊழலின் மையத்தில் இருக்கும் ஒரு பெண், தனது செய்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
-
- 0 replies
- 463 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா போரில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களுக்கு உதவுவதற்கான கொடையாளிகளின் மாநாடு லண்டனில் நடக்கிறது. - சிரியா மற்றும் இராக்கிலிருந்து தப்பித்த ஐ எஸ் தளபதிகள் தம் நாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர் லிபியாவின் உளவுத்துறை உயரதிகாரிகள். - நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கும் தஞ்சம்கோரிகளுக்கு அடைக்கலம் வழங்கப்போவதாக ஆஸ்திரேலிய திருச்சபைகள் கூறியுள்ளன.
-
- 0 replies
- 307 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுமோதலில் சென்ற ஆண்டு பதினோராயிரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக ஐநா அறிவிப்பு; அதில் மூன்றில் ஒருபகுதியினர் குழந்தைகள் என்றும் கவலை. தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் பிரான்ஸின் தேசியவாத கட்சித்தலைவி மெரின் லுபென்; அவருக்கும் இம்மானுவல் மக்ரானுக்குமான ஆதரவு அதிகரிப்பதாக காட்டுகின்றன கருத்துக்கணிப்புகள். அரியணையில் அறுபத்தி ஐந்து ஆண்டுகள்; உலகில் நீண்டநாள் முடியாட்சி செய்யும் சாதனை படைத்தார் பிரிட்டிஷ் பேரரசி இரண்டாம் எலிசபெத்.
-
- 0 replies
- 492 views
-
-
*ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டார்; அதிபர் பூட்டினுக்கு எதிராக அடுத்த தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகலாம். *இரான் - இராக் எல்லையில் உயிர்வாழ கடத்தலில் ஈடுபடுவோரின் சோகக்கதை; உறைபனிக்கிடையில் உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்து பிழைப்பவர்கள் குறித்த நேரடி படப்பிடிப்பு. *அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நமது பெரும்பாலான வேலைகளை ரோபோக்கள் பறித்துவிடலாம் என்கிறார்கள் லண்டன் தொழில்நுட்ப நிபுணர்கள்; இது மனிதர்களுக்கு கவலை தரும் விஷயமா?
-
- 0 replies
- 269 views
-