உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானில் தன் பணிகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச்சங்கம்; அதன் வாகனத்தொடரணி மீதான தாக்குதலில் பணியாளர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவு. கடலிலுள்ள உணவுப்பொருட்கள் கரையில் இறக்குவதற்குத் தடை; ஏமெனின் அரச ஆதரவுப்படைகளின் துறைமுகத் தடையால் பட்டினியில் வாடும் பல லட்சம் மக்கள். அழகா? ஆபத்தா?? பிரிட்டன் கடற்கரை நகரை அச்சுறுத்தும் கடற்பறவைகளை சமாளிப்பது எப்படி என்று நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்.
-
- 0 replies
- 477 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், சீன அதிபருடன் முதன்முறையாக தொலைபேசியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தைவானும் சீனாவின் ஒரு அங்கம் என்று வலியுறுத்தும் ''ஒரே சீனம்” என்கிர கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது குறித்த செய்திகள். * யேமனில் டொனால்ட் டிரம்ப் ஆணையிட்ட முதல் இராணுவ நடவடிக்கையின் பின்விளைவுகளை காட்டும் பிரத்யேகக் காணொளி. * கடுமையான குளிர்காலத்துக்கு பேர் போனது மாஸ்கோவின் பெருங்குளிரில் அவதியுறும் வீடில்லாதோரின் அவலம் குறித்த பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 414 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் உலகின் நீளமான, ஆழமான ரயில் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது; பன்னிரண்டு பில்லியன் டாலர் செலவில் பதினேழு ஆண்டுகளில் இது நிர்மாணிக்கப்பட்டது. * கணவர்கள் தம் மனைவிகளை லேசாக அடிக்கலாம் என்று பரிந்துரைத்த பாகிஸ்தானின் இஸ்லாமிய கொள்கைகளுக்கான கவுன்ஸில் சமூக ஊடகங்களில் கடும் தாக்குதலை எதிர்கொள்கிறது. *இந்தோனேசியாவின் புகையிலை உற்பத்தித்துறையில் சிறார் தொழிலாளர்கள் பணிப்புரிவதற்கான ஆதாரங்கள்; பிபிசியின் சிறப்பு புலனாய்வு கண்டுபிடித்தது. ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 616 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * டொனால்ட் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம். தனது வேதனையை ஏளனம் செய்ததாக அமெரிக்க முஸ்லிம் போர்வீரனின் தாய் குற்றச்சாட்டு. * ரியோ ஒலிம்பிக்ஸ்ஸுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் அங்கு நீர் மாசடைந்தது குறித்த அதிர்ச்சி அறிக்கை ஒன்று வந்துள்ளது. ஏற்பாடுகள் சரியில்லை என்றும் குற்றச்சாட்டு. * ஐரோப்பாவின் தெற்கு கரையோர குகைகளில் நியாண்டர்தால் மனித குலம் குறித்த புதிய தகவல்கள்.
-
- 0 replies
- 277 views
-
-
பிபிசி தொலைக்காட்சி செய்திகள் 02/05/2017 பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மரீன் லூபென் தனது எதிரணி வேட்பாளர் பேச்சின் பல பகுதிகளை களவாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த செய்தி; வெனிசுவேலா போராட்டங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் நாட்டுக்கு புதிய தேசிய அவை ஒன்றை உருவாக்கபோவதாக அதிபர் அறிவித்திருப்பது குறித்த தகவல்கள்; உகாண்டாவில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சிறுமிகளை அவர்களின் குடும்பமே தனித்தீவுக்கு அனுப்பி உயிரிழக்கச் செய்யும் கொடுமையிலிருந்து தப்பி உயிர்வாழும் கடைசி பெண்ணின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 509 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சீன செயற்பாட்டாளர்களுக்கு சிறைத்தண்டனை. * ஐரோப்பிய குடியேறிகள் ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக துருக்கி மிரட்டல். ஜெர்மனியுடனான அந்த நாட்டின் உறவு மோசமடைகிறது. * ஆப்ரிக்கா எங்கிலும் ஊட்டச்சத்தின்மைக்கு தீர்வாக மீன் பிஸ்கெட்டுகள்.
-
- 0 replies
- 432 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இருநூறு கோடி பேருக்கு ஸீகா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்திருப்பதாக எச்சரிக்கை; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் கருவிலுள்ள சிசுக்களுக்கு கூடுதல் ஆபத்து. * சிரியாவிலிருந்து தப்ப முயன்ற மூன்று வயது ஆலன் குர்தி கடலில் உயிரிழந்து ஓராண்டு நிறைவு; உலகநாடுகள் அகதிகளுக்கு தம் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென அலனின் தந்தை உருக்கமான வேண்டுகோள். * மூளையை பாதிக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியுமென புதிய நம்பிக்கை; இதற்கான மருந்தின் பரிசோதனை முடிவுகள் உற்சாகமளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு.
-
- 0 replies
- 561 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.
-
- 0 replies
- 407 views
-
-
இன்றைய (03-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்தான்புல் தாக்குதலாளி அடையாளம் கிடைத்தது என்கின்றன துருக்கி ஊடகங்கள்; அவரைத்தேடும் பணியில் துருக்கி படையினர் தீவிரம்; * வங்கதேசத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க என்ன காரணம்? விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; * ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியில் மீன் இருப்பு குறைவது ஏன்? பாதிக்கப்படும் கென்ய மீனவர்களுக்கு மாற்று வழி என்ன என்பதை ஆராயும் பிபிசியின் பிரத்யேக செய்தி உள்ளிட்ட பல செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 841 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இராக்கில் நூற்றுக்கணக்கான யசிடி பெண்களை கடத்திச் சென்ற ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த ஆதாரங்களை திரட்டும் புலனாய்வாளர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோருவதற்கான முயற்சி குறித்த பிபிசியின் சிறப்பு தகவல். * கடந்த மாத துருக்கிய இராணுவ புரட்சியை அடுத்து பாதிக்கப்பட்ட சில தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது. தாம் அப்பாவிகள் என்கிறார்கள் அவர்கள்! * சூரிய வெப்பம் தகிக்கும் ஒரு நாட்டில் ஐஸ் ஹாக்கி. எதிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக தயாராகும் கென்யா.
-
- 0 replies
- 292 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் பல்லாண்டு போருக்கு முடிவு காண்பதற்கான போர்நிறுத்ததை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரித்தது. அமைதிக்காக போராட ஃபார்க் அமைப்பும், கொலம்பிய அதிபரும் உறுதி. * எத்தியோப்பியாவில் ஐம்பது பேர் கொல்லப்பட்டது குறித்து முரண்பாடு. பாதுகாப்பு படையினர் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்ட, பிரதமரோ ஆர்ப்பாட்டக்காரர்களை குறை கூறுகிறார். * சிலியில் கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற தீவிர முயற்சி. கருக்கலைப்புக்கு அனுமதி அவசியம் என்கிறார் பெண் அதிபர்.
-
- 0 replies
- 375 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * டாக்காவில் வெள்ளியன்று நடந்த இஸ்லாமியவாதிகளின் தாக்குதல் தொடர்பில் வங்கதேசத்தில் இருவர் கைது. * பாக்தாதில் ஞாயிறன்று நடந்த குண்டுத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நூற்று அறுபத்தைந்தாக அதிகரிப்பு. கவலையீனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் இராக்கிய பிரதமர். * கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவை வறட்சி பிடித்து ஆட்டும் நிலையில் ஒட்டக பாலுக்கான வணிக வாய்ப்பு அதிகரிப்பு.
-
- 0 replies
- 429 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இங்கு மத்திய லண்டனில் அமெரிக்க பெண் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பத்தொன்பது வயதான சந்தேக நபர் கடும்போக்காளர் என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. * ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு படகுகள் மூலம் வந்த மேலும் பல அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். * எலிசபெத் மாகாராணியாரின் தொண்ணூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, பல தசாப்தங்களாக அவர் அணிந்த ஆடைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
-
- 0 replies
- 465 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஜிம்பாப்வேயில் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டு, ஏராளமானோர் பட்டினியால் வாட, நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. - சிரியாவின் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்க, அண்டை நாடான லெபனானில் தஞ்சமடைந்த அகதிச் சிறார்கள் பகுதி நேர வேலைகளை செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். - விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சியை எங்கிருந்தபடியும் பார்க்க புதிய தொழில்நுட்பம் வழிவிட, சிறு பிள்ளைகளிடையே டிவி பார்க்கும் பழக்கம் குறைந்துவருகிறது.
-
- 0 replies
- 221 views
-
-
இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில்.. • இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? • விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? • கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
-
- 0 replies
- 226 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மாபெரும் வியாழக் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நாசாவின் ஜுனோ விண்கலம் நுழைந்தது. * மதீனாவில் முஹமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே நடந்த தற்கொலை தாக்குதலை உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். * கோடைகாலத்தில் ரம்ஷான் வருவதால், நோன்பு இருப்பவர்கள் இங்கு பிரிட்டனில் பதினெட்டு மணிநேரம் உண்ணாமல் இருந்தாக வேண்டும். அதனை இங்குள்ள முஸ்லிம் மாணவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு குறிப்பு.
-
- 0 replies
- 606 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவில் பெரும் மனிதநேய அவலம். அங்கு போரால் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் பிபிசியிடம் பேசினார். * தெற்கு சூடானில் ஊட்டச்சத்தின்மையால் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள். கடும் சண்டையால் இருப்பிடங்களை விட்டு ஓடும் பொது மக்கள். * எதிர்ப்பு போராட்டங்கள், ஊக்க மருந்து ஊழல், ஸீக்கா அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் ரியோ ஒலிம்பிக்ஸ் இன்று ஆரம்பிக்கிறது.
-
- 0 replies
- 357 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சி; அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி,, பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * சீனாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கருத்தொற்றுமை சாத்தியமா? மோசமான பொருளாதாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், அகதிகள் பிரச்சனை, வர்த்தக உறவு சிக்கல்கள் தீர்க்கப்படுமா? * பிறக்கும்போதே அகதியாக பிறக்கும் அவலம்; சர்வதேச முகாம்களே வீடுகளாக வாழும் ஆயிரக்கணக்கான சிரியாவின் போர்க்கால குழந்தைகள்.
-
- 0 replies
- 621 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ‘’தவறான உளவுத் தகவல், மோசமான திட்டமிடல், அமைதிக்கான வழி தவறவிடப்பட்டது’’ என இராக் போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த கடுமையாக கண்டிக்கும் தீர்ப்பு. * பஸ்ராவிலும் பிரிட்டனிலும் குடும்பங்களை சோகத்தால் இணைத்த இராக் போர். அதில் ஒன்று பிரிட்டிஷ் சிப்பாயின் குடும்பம், அடுத்தது பிரிட்டிஷ் படையால் கொல்லப்பட்டவர் குடும்பம். * தமது பாரம்பர்யத்தையும் மொழியையும் காக்க போராடும் தென்னாப்பிரிக்காவின் கொய்சான் பழங்குடியின் கதை.
-
- 0 replies
- 408 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபர் குறித்த கருத்துக்காக வருந்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார் ரொட்ரிகோ துதர்த்தே; எல்லா சந்திப்புகளும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்கிறார் அதிபர் ஒபாமா. * மூளைக்குள் நுழையும் நகரங்களின் வாகன மாசு; மூளையைத்தாக்கும் அல்சைமர் நோய்க்கான காரணியாக இது அமையலாம் என்கிறது புதிய ஆய்வு. * வைரங்களின் வாழ்வும் நிரந்தரமல்ல; தன் வைரச்சுரங்க வருமானத்தைக் காக்கப்போராடும் போட்ஸ்வானாவின் கதை.
-
- 0 replies
- 445 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மேத்யூ சூறாவளியின் அழிவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஹைட்டி மக்கள்; அதன் அடுத்தகட்ட பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா மற்றும் பஹாமாஸ் பகுதிகள். * வங்கதேசத்தில் அதிகரித்துவரும் இஸ்லாமியவாத வன்முறை அச்சத்தை அந்நாடு எப்படி எதிர்கொள்கிறது? இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிக்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இதற்கு பதிலளிக்குமா? * நூற்று பதினைந்து வயது வரை நிறைவாழ்வு வாழ ஆசையா? நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்கள் உடலும் உறுப்புகளும் ஒத்துழைக்காது என்கிறது புதிய ஆய்வின் முடிவுகள்.
-
- 0 replies
- 355 views
-
-
இன்றைய செய்தியறிக்கையில், * சிரியாவில் போர்க்குற்றத்துக்கான ஆதாரம்; கொலைக்களமாக அறியப்படும் இராணுவச் சிறையில் பதின்மூவாயிரம் பேர் ரகசியமாக கொல்லப்பட்டதாக அம்னஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு. * அமெரிக்காவின் ஒரு இருண்ட பக்கம்; பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்பட்ட சிறுமிகளை மீட்கும் லாஸ் ஏஞ்செலீஸ் காவல்துறையின் நடவடிக்கை குறித்த பிபிசியின் பிரத்யேகச் செய்தி. * கனவை நிஜமாக்கிய இந்தோனேசிய மாணவர்கள்; சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத காரை வடிவமைத்தவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.
-
- 0 replies
- 364 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அமெரிக்க போலிஸ். இரண்டு நாட்களுக்குள் இரண்டு கறுப்பு இன ஆண்கள் சுட்டுக்கொலை. * போர் தொடுப்பது என்ற பிரிட்டனின் கண்டிக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட அழிவுகள் இராக்கில் இன்னமும் தொடர்கின்றன. இராக் அவலங்கள் குறித்த பிபிசியின் மற்றுமொரு சிறப்புத் காணொளி. * ‘’பெண்கள் மோசமாக நடக்கிறார்களா?’’ - பழமைவாத பாகிஸ்தானில், வளரும் ஒரு பெண் பிரபலம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார்.
-
- 0 replies
- 420 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மேத்யூ சூறாவளியால் புளோரிடா தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்க, ஹெய்ட்டியின் சிறிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. * குடியேறிகளுக்கு எதிராக ஐரோப்பாவில் எழுகிறது இன்னொரு வேலி; ரஷ்யாவுடனான நார்வே உறவுகளை இது பாதிக்கலாமென பரவலான அச்சம். * அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பு; நம்பகமான நிபுணர்களையே நாடும்படி பிரிட்டன் மருத்துவர் சங்கம் கோரிக்கை.
-
- 0 replies
- 455 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - போர் முற்றுகையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் அகப்பட்டுள்ள மக்களின் அவதிகளை காண்பிக்கும் புதிய படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. - கலாச்சார இடைவெளிகளை களையும் முயற்சியாக மேற்குலக மனித உறவுகள் குறித்து நோர்வேயில் ஆண் குடியேறிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. - ஆளில்லா விமானங்கள்தான் எதிர்காலம் என்கிறார்கள். ஆனால், ட்ரோன்களுக்கு வரும் ஒழுங்குவிதிகள் அவற்றின் வளர்ச்சியை பாதிக்குமா? என்பது குறித்த ஒரு பார்வை.
-
- 0 replies
- 388 views
-