உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தைவானில் நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் இருந்து எட்டுவயதுச் சிறுமி மீட்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபர் இவர். - பிரஞ்சு போர் விமானங்கள் ஐ எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய அரசுக்கு இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரஞ்சு தளபதி ஒருவர். - சிரியாவில் பிள்ளைகளுக்கு போரினால் ஏற்பட்ட மன ரணங்களை ஆற்ற இசை மற்றும் நடனத்தை பயன்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
-
- 0 replies
- 271 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * அமெரிக்காவின் டல்லஸ் நகரில் கறுப்பு இன இளைஞர்களின் கொலையை கண்டித்த அமைதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு. ஆயுதபாணிகளால் ஐந்து போலிஸ்காரர்கள் சுட்டுக்கொலை. * பிரசன்னத்தை பலப்படுத்துகின்றது நேட்டோ. ரஷ்யாவை கட்டுக்குள் வைக்க ஆயிரக்கணக்கான படைகளை கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்புகிறது அது. * கினியில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்ட விரோத மீன்பிடி தொழில்.
-
- 0 replies
- 441 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்டதில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். * இபோலாவில் இருந்து சியரா லியோன் கற்றுக்கொண்ட பாடங்கள். அந்த தொற்று நோய்க்கான உதவிகள் அங்கு சுகாதாரத்துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த தகவல்கள். * கிழக்கு திமோரில் முதலைகள் ஆட்களை கொல்வதால் அவற்றை ஒரு பண்ணையில் அடைத்துள்ளனர். ஆனால், அவை புனிதமானவை என்பதால் அவற்றை அடைத்து வைப்பது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
- 0 replies
- 426 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஹிலரி கிளிண்டனின் ஆதரவு கரைகிறது; டொனால்ட் ட்ரம்ப் நேர்மையானவர் என்னும் கருத்து அதிகரிக்கிறது. புளோரிடா மாநிலம் அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்குமா? * காலைஸ் காட்டு முகாமை மூட முயல்கிறது பிரான்ஸ்; அங்குள்ள அகதிகள் எங்கே போவார்கள்? மோசமான சூழலில் அங்கு வாழ்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? *முஸ்லிம் சிறுமிகளிடம் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் கிரிக்கெட் பயிற்சி; கிழக்கு லண்டன் கிரிக்கெட் பயிற்சியாளரின் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 526 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வேளையில் அனுமதி அற்று போடப்பட்ட கடைகளை அகற்ற முயன்ற போலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல். - ''கொசுவை உண்ணும் மீன்கள்'' ஸீக்கா மற்றும் டெங்கு பரவலை தடுக்க உதவுமா என்பது குறித்த ஒரு பார்வை. - 'கனவு நகரம்'- ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் சவுதியின் பல பில்லியன் டாலர் பெருநகரத் திட்டம்.
-
- 0 replies
- 1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்... - இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரு துப்பாக்கிதாரிகள் நான்கு பேரை கொன்றிருக்கிறார்கள். பதிலடியாக, பாலத்தீனர்களுக்கான ஆயிரக்கணக்கான நுழைவு அனுமதிப் பத்திரங்களை இஸ்ரேல் ரத்துச் செய்துள்ளது. - சிரியாவில் முற்றுகையில் ஒரு வாழ்க்கை. சிரியாவின் ஹொம்ஸ் நகரில் உணவுக்காக அல்லாடும் மக்கள் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல். - இசையின் ஊடாக சமாதானத்துக்கான ஒரு முயற்சி. சிரியாவின் இசைக்கலைஞர்களுடன் உலக பிரபல செல்லோ கலைஞரான யோ யோ மா இணைந்து செய்யும் ஒரு சங்கீத முயற்சி.
-
- 0 replies
- 345 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கிய விமானப்படையால் ரஷ்ய ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் தடவையாக சந்திக்கிறார்கள். இராஜதந்திர உறவுகள் மேம்படுமா? * உங்கள் கலாச்சாரம் மற்றும் குடும்ப மானத்துக்கு எதிரான போராட்டம். ஆண்களின் குற்றக்குழுவால் வழி தவறிய பிரிட்டனில் உள்ள ஆசிய முஸ்லிம் பெண் ஏனையவர்களுக்கு உதவ முயல்கிறார். * தன்சானியாவில் சர்க்கரைக்கான தட்டுப்பாடும், விலை மற்றும் வரி அதிகரிப்பும் வணிகங்களின் இலாபத்தை பாதிக்கின்றதாம்.
-
- 0 replies
- 409 views
-
-
-
- 0 replies
- 525 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஹிலரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப். * பெரு வர்த்தகர், கோடீஸ்வரர் தற்போது அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபர்; இந்த இடத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் எப்படி வந்தார்? ஆராய்கிறது பிபிசி * டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும்?
-
- 0 replies
- 288 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் புதிய திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் நியூஹம்ஷ்யர் மாநிலத்தில் வெற்றி. - பதின்மவயது கர்ப்பத்தை தவிர்க்க கன்னிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தால் தென்னாப்பிரிக்காவில் பெரும் சர்ச்சை. - உறவுகளை இணைக்கும் நவீன தொழில்நுட்பம்- வயதான பெற்றோருக்கு சீன கார்டூன் கலைஞரின் வழிகாட்டி உதவி.
-
- 0 replies
- 290 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஹிலாரி கிண்டனை தடுக்க ‘’துப்பாக்கி ஆதரவாளர்கள்’’ அதனை பயன்படுத்தும் தமது உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக டொனால்ட் ட்ரம்ப் விமர்சிக்கப்படுகிறார். * நைஜீரியாவில் காணிகளுக்கான பிரச்சினை. விவசாயிகளுக்கும், மாடு மேய்ப்போருக்குமான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலி. * பிரிட்டனின் உயரமான மலைகளின் உயிரினங்களை தேடி ஒரு பயணம். அவை கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்.
-
- 0 replies
- 432 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *ஏட்டிக்கு போட்டியான கசப்பு வார்த்தைகள்; ஆனால் யாருக்கும் இறுதி வெற்றியில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் பிரதான பேசுபொருளானது பாலியல் தவறுகள். * ஏமெனில் துக்கவீட்டின் மீது சவுதி அரேபியாவின் விமான தாக்குதலில் நூற்றி நாற்பது பேர் பலியானதற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள். ஏமெனிய மக்கள் ஆர்பாட்டம்; அமெரிக்காவின் வன்மையான கண்டனம். * ஐவரி கோஸ்டில் கோகோ விவசாயத்தால் அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி; ஆனால் மழைக்காடுகளை அழித்து கோகோ பயிரிடுவது சரியானதா? ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 270 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் மீண்டும் சண்டை வெடித்தது; உலகின் இளம் தேசத்தின் வலுவற்ற சமாதானம் தாக்குப்பிடிக்குமா? * அமெரிக்காவில் அதிகரிக்கும் போராட்டங்கள்; இரண்டு கருப்பினத்தவர் மற்றும் ஐந்து காவலர் கொலைகளால் உருவான இனமோதல் அதிகரிப்பு. * ஜப்பான் தேர்தலில் ஷின்சோ அபேவின் ஆளும் கூட்டணி அமோக வெற்றி; அமெரிக்க நிர்பந்தத்தால் சேர்க்கப்பட்ட சமாதான சட்டப்பிரிவு அரசியல் சட்டத்திலிருந்து அகற்றப்படுமா?
-
- 0 replies
- 447 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மோதல் தொடரும் சிரியாவின் நகரனா அலெப்போவில், உதவிகள் செல்வதற்காக மூன்று மணிநேரம் மாத்திரம் மோதல் நிறுத்தம். * அகதிகள் போல பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதால், ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து ஜெர்மனியில் இராணுவமும் உள்நாட்டில் ரோந்தில் ஈடுபடவுள்ளது. * வீடியோ விளையாட்டுக்களுக்காக புதிய நகரங்களை நிர்மாணித்தல். மாய உலகை நிர்மாணிப்பதில் பிரிட்டிஷ் நிறுவனத்தின் சாதனை.
-
- 0 replies
- 460 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * தனது அதிநவீன ஸ்மார்ட்போனின் தயாரிப்பை முற்றாக நிறுத்தியது சாம்சங் நிறுவனம்; Samsung Galaxy Note 7 வெடித்து எரிந்த செய்திகளைத் தொடர்ந்து வந்தது இந்த தடாலடி முடிவு. * முந்நூற்றி ஐம்பது கோடி டாலர் செலவில் கட்டப்படும் மிகப்பெரிய பாலம்; உக்ரைனில் இருந்து இணைத்துக்கொண்ட கிரைமியாவுக்கான 19 கிலோமீட்டர் நீள பாலம் கட்டும் ரஷ்யா. * தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கை; இம்யூனோதெரபி என்னும் புதிய மருத்துவ சிகிச்சையின் பலன்கள் பலமடங்கு அதிகம் என்கின்றன ஆய்வின் முடிவுகள்.
-
- 0 replies
- 510 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில், அவரது ஆட்சியின் முக்கிய செயற்திட்டங்கள் என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி. * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவாசிகளின் உணவு கையிருப்பு வேகமாக கரைவதாக ஐநா அச்சம்; இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை. * தைவானின் விண்வெளிக்கனவு விரிவடைகிறது; மலிவுவிலையில் செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் தைவான் தீவிரம்.
-
- 0 replies
- 383 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு திட்டத்தை உலக வல்லரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், அது ஐ எஸ்ஸுக்கு பொருந்தாது. - இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து தப்பிய சிறுவர்கள், ஐ எஸ் தம்மை எப்படி மூளைச்சலவை செய்தது என்று பிபிசியுடன் பேசினார்கள். - பேரண்டம் குறித்த புதிய பார்வையைத் தரும் விஞ்ஞான கண்டுபிடிப்பு. ஈர்ப்பு விசை அலை உறுதி செய்யப்பட்டது.
-
- 0 replies
- 418 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பல ஆண்டுகள் நீடித்த சர்ச்சைக்குப்பின் தென்சீனக்கடலில் சீனா உரிமை கோருவதை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது; ஆனால், அந்த தீர்ப்பை சீனா ஏற்கனவே நிராகரித்துவிட்டது. * பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்கத் தயாராகும் தெரேஸா மே; டேவிட் கேமரன் இடம் இருந்து பொறுப்புகளை ஏற்கவிருக்கும் இவரது பின்னணி என்ன? * மூடப்படும் அமெரிக்க தொழிற்சாலையை கையேற்கப்போவதாக வெனிசுவேலா மிரட்டல்; அத்தியாவசிய உணவுப்பொருட்களின்றித் தவிக்கும் பொதுமக்கள் கொலம்பியாவுக்குள் ஆயிரக்கணக்கில் படையெடுப்பு.
-
- 0 replies
- 437 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * தனது கலிபோர்னிய பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன்; நிமோனியா பாதித்திருப்பதாக மருத்துவர் அறிவிப்பு. * கண் அறுவை சிகிச்சைக்கு ரோபோட்டை பயன்படுத்திய ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள்; கண் அறுவை சிகிச்சையில் உலகின் முதலாவது ரோபோட் தொழில்நுட்ப புரட்சியை நேரில் படம் பிடித்தது பிபிசி. * மட்டக்களப்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்; போரால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கு புதிய தொடக்கமா?
-
- 0 replies
- 514 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது? ஆட்கடத்தல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் ஒன்றான ரொமேனியாவிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * ஹைதியில் காலரா தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் அவலம்; மேத்யூ சூறாவளியால் காலரா மேலும் பரவலாமென அதிகரிக்கும் அச்சம். * இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தை அறிவித்த செய்தியாளருக்கு நூற்றி ஐந்தாவது பிறந்ததினம்; ஆச்சர்யமான ஒரு பிறந்ததின செய்தி ஒன்று அவருக்கு காத்திருந்தது.
-
- 0 replies
- 404 views
-
-
பிரிட்டனில், கான்சர்வேட்டிவ் கட்சியும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியும் நிலைத்த, நீடித்த அரசாங்கத்தை எவ்வாறு அமைக்கப்போகின்றன என்பது குறித்த பிபிசியின் சிறப்புப் பார்வை. ரஷ்யாவில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சி தலைவர் அலக்ஸே நெவால்னிக்கு முப்பது நாட்கள் சிறைத்தண்டனை. நெதர்லாந்தின் கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான நாஜிக்களின் பதுங்கு குழிகளும், சுரங்கங்களும் எப்படி வந்தன என்பது பற்றிய குறிப்புகள்.
-
- 0 replies
- 252 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமலுக்கு வந்தது சிரிய போர்நிறுத்தம்; ஆனால் ஏற்கனவே நடந்திருக்கும் அழிவின் அளவென்ன? அதிகபட்ச தாக்குதலுக்குள்ளான அலெப்போ நகரிலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்திகள். * திபெத் ஆறுகளின் வெள்ள அளவு குறித்து, சீனா ரகசியம் காப்பதாக நேபாளம் புகார்; இந்தியா, வங்கதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாமென கூடுதல் கவலைகள். * ஒன்று போல் தோன்றும்—ஆனால் இவை வெவ்வேறானவை; ஒட்டகச் சிவங்கிகள் ஓரினமல்ல—நான்கு வெவ்வேறு இனங்கள் என்கிறது ஆய்வின் முடிவு
-
- 0 replies
- 361 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * உலகின் மிக நீண்டகால முடியாட்சியின் அரசராக பதவி வகித்த தாய்லாந்து மன்னர் எண்பத்தியெட்டாம் வயதில் காலமானார். * இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்டவர்கள் வடக்கு சிரியாவிலுள்ள ரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்கும் ஓட்டுனரில்லா ட்ராக்டர்கள்; விவசாயத்தின் எதிர்காலம் இதுதானா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 395 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஓர்லேண்டோவின் ஒமர் மதீன் நாற்பத்தி ஒன்பது பேரை சுட்டுக்கொல்லும் அளவுக்கு கொடூரமான கோபத்தின் பின்னிருந்த காரணம் என்ன? இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒருபாலுறவாளர்களுக்கான ஓர்லேண்டோ இரவு விடுதிக்கு பல முறை சென்றது ஏன்? பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா என்று ஆராய்கிறது உலக சுகாதார நிறுவனம்; சிகா வைரஸ் பரவல் அச்சத்தால் இந்த மறுபரிசீலனை. ஆஸ்திரேலியாவில் நீடிக்கும் நவீன அடிமைத்தனம்; பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு சம்பளமின்றி வேலைவாங்கப்பட்ட கிழக்கு ஆப்ரிக்கப்பெண்மணியின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 290 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தன் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மே; ஐரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை கையாள வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்தென்ன? * ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை கடுமையாக நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறது ஹங்கேரி; ஆனால் ஹங்கேரிக்குள் நுழைவதற்காக செர்பியாவில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. * மீண்டும் செயற்படத்துவங்கியது தஜிகிஸ்தானின் உலகப்புகழ் பெற்ற அதி உயர தொலைநோக்கி; உள்நாட்டுப்போரால் முடங்கிய விண்ணாய்வு மீண்டும் மேம்படும் என்கிறார்கள் விண் ஆய்வாளர்கள்.
-
- 0 replies
- 406 views
-