உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *ஒர்லாண்டோ படுகொலைகளையொட்டி ஒபாமாவுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! எதிர்காலத்தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பதிலும் கருத்து மோதல்!! *உடல் பருமனானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு! பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கொழுப்பும், சர்க்கரையும் உப்பும் அதிகமாகவும் இருப்பதாக எச்சரிக்கை!! *ஆழ்கடலின் அரிய பொக்கிஷத்திற்குள் செல்ல பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு! கடல் மடியில் இறுதித்துயில் கொண்டிருக்கும் Titanicஇன் சகோதரிக் கப்பலின் அரிய காட்சிகள்!! ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 286 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நான்காவது நாளாக நீடிக்கும் சிரிய போர்நிறுத்தம்; அலெப்போவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார். * சட்டவிரோத வர்த்தகத்தால் அருகிவரும் அபூர்வ பறவை இனங்கள்; அவற்றின் அழிவைத்தடுக்கப் போராடும் இந்தோனேஷியா அதிகாரிகள். * உறைபனி ஏரிகளுக்குள் புதையுண்டிருக்கும் ரகசியங்களை பாதுகாக்கப் போராடும் விஞ்ஞானிகள்; ஆல்ப்ஸ்மலை உறைபனி அண்டார்டிகாவுக்கு பயணிப்பது ஏன்?
-
- 0 replies
- 499 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மியன்மாரில் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அறுபத்தொன்பது என்கிறது இராணுவம். பர்மிய தலைவி ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆசியான் கோரிக்கை. * அமெரிக்காவில் விற்கப்படும் ஹெராயின் மெக்ஸிகோவில் எப்படி தயாரிக்கப்படுகிறது? நேரில் சென்று ஆராயும் பிபிசி செய்தியாளரின் பிரத்யேக புலனாய்வுச் செய்தித்தொகுப்பு. * உலகின் அதிவேக மனிதர் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்; அடுத்தது என்ன? பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 479 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. - அகதிகளை துரத்திவிடுவது பலன் தராது என்கிறது ஐநா அகதிகள் அமைப்பு. பெண் குடியேறிகள் நிலவரம் குறித்தும் கவலை. - பத்து ஆண்டுகள் கொடூரத்துக்கு வழி செய்த சீன கலாச்சார புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு. ஆனால், சீன ஊடகங்கள் பெருத்த மௌனம். - ருவண்டாவின் கொரில்லாக்களுக்கு பெரும் மவுசு. வடபகுதி மலைக் கொரில்லாக்களை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
-
- 0 replies
- 570 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து சிரியாவின் மாஞாபி நகரத்தை மீட்க கடும் முயற்சி; கூட்டணிப்படையினரின் முன்னரங்கிலிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். சொவாடோ கிளர்ச்சி நடந்து நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நூற்றுக்கணக்கானோர் பலியான நிறவெறிக்கு எதிரான அந்த போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக வெட்டுக்கிளிகள் பெரும் படையெடுப்பு; காய்கறிகளையெல்லாம் வயலிலேயே அழிக்கும் இவற்றைத் தடுக்க வழி காண்பார்களா விஞ்ஞானிகள்? ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 487 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஜெர்மனியில் புதிய வாழ்வைத் துவங்கியிருக்கும் சிரியாவின் மாற்றுத்திறனாளியின் நம்பிக்கை பயணம்; அலெப்போ நகரிலுள்ள சொந்த வீட்டுக்குத்திரும்பும் கனவு மட்டும் தொடர்ந்தும் நீடிக்கிறது. * இணையத்தில் வெளியான தன் அந்தரங்க படங்களை அகற்றப்போராடிய இத்தாலிய இளம்பெண் தற்கொலை; வளர்ந்துவரும் இந்த உலகளாவிய பிரச்சனையை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவையென வலுக்கும் கோரிக்கை. * தயாராகின்றன மிகத்துல்லியமான முப்பரிமாண வரைபடங்கள்; ஆபத்துக்காலத்தில் மீட்புப்பணிகளுக்கு மிகவும் பயன்படும் என்பது எதிர்பார்ப்பு.
-
- 0 replies
- 505 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ மீதான தாக்குதல் மீண்டும் துவக்கம்; அமெரிக்காவின் அடுத்த அதிபர் சிரியாவின் நண்பராக அமையக்கூடும் என்கிறார் சிரிய அதிபர் அசாத். * உலகின் மிகப்பெரிய அகதி முகாமை மூட கென்யா முடிவு; ஆனால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம். * போலிச் செய்திகளின் பரவலைத் தடுப்பதில் கூகுள் நிறுவனம் தீவிரம்; கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை பிபிசிக்கு பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 320 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தென் சீனக்கடலின் சர்ச்சைக்குரிய தீவில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியதாக தாய்வானும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. - அகதிகளுக்கான பதிவு நிலையங்களை அதிகாரிகள் அமைக்க முயல கிரேக்கத்தின் கொஸ் தீவின்வாசிகள் கோபத்துடன் போராட்டம் நட்த்தியுள்ளனர். தமது வாழ்க்கையும், சுற்றுலா வருமானமும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். - மனநோயை புரிந்து கொள்ள மூளையை ஆராயும் விஞ்ஞானிகள் பற்றிய சில தகவல்கள்.
-
- 0 replies
- 278 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தோல்வியில் முடிந்த துருக்கி ஆட்சிக்கு எதிரான இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள் தொடர்கின்றன; எட்டாயிரம் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம், நூற்றுக்கணக்கானாவர்கள் கைது. * பிரான்ஸின் நீஸ் நகரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடெங்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி; அஞ்சலி செலுத்த வந்த பிரதமருக்கு எதிராக வெளிப்பட்டது அரசு மீதான அதிருப்தி * பிரிட்டிஷ் பள்ளிகளில் பரவலாகும் சீனக்கணித கற்பித்தல் நடைமுறை; எதிர்பாக்கும் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 284 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மெக்ஸிகோவில் இருந்து வரும் குடியேறிகளை தடுக்க மதில் எழுப்ப வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் கருத்து கிறிஸ்தவத்துக்கு பொருந்தாதது என்று போப்பாண்டவர் கடுமையான கண்டனம். - இணையத்தின் மூலம் விமானங்களை கடத்தலாமா என்று ஆராயப்பட்ட சிங்கப்பூர் விமானக் கண்காட்சி. - வெனிசுவேலா நாட்டு அரசாங்கம் பெட்ரோல் விலையை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அதனை எதிர்க்கவில்லை.
-
- 0 replies
- 323 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனிய ரயில் ஒன்றில் ஆப்கான் அகதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார். பதின்ம வயது தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டது. * கடந்த பதினாறு வருடங்களில் எயிட்ஸ் குறித்த மிகப்பெரிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் தொடருகின்றது. அதேவேளை, தனது குடும்பத்தில் பெரும்பாலானோரை எயிட்ஸ்க்கு பலிகொடுத்து, தானும் எயிட்ஸ் நோயோடு வாழும் ஒரு இளைஞனை சந்தித்தோம். * மனிதனின் எதிர்கால உளவுக் கண்கள். மின்னணு மயமான வண்டுகள் மனிதனின் உயிரைக் காக்க தூர இருந்தே இயக்கப்படுகின்றன.
-
- 0 replies
- 272 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நியூ யார்க் குண்டு வெடிப்பு தொடர்பில் 28 வயது இளைஞரைத் தேடும் அமெரிக்க காவல்துறை; ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர் என்றும் அறிவிப்பு. * ரஷ்யத் தேர்தலில் அதிபருக்கு அமோக வெற்றி; விளாடிமிர் புடினின் கட்சி தேர்தலில் வென்றாலும் பதிவான வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி. * வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான சிங்கங்கள்; தென் ஆப்ரிக்க அரசு இதை தடுக்கவேண்டும் என்று உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை.
-
- 0 replies
- 421 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அதிபர் எர்தொவான் பாதுகாப்பு கவுன்ஸிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். * பிரிட்டனில் இயங்கும் ஷரியா நீதிமன்றம் ஒன்றுக்குள் செல்ல பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெண்கள் தம்முடைய கணவரிடம் இருந்து மணமுறிவு கோருகிறார்கள். * பிரேஸிலில் வாட்ஸப் செயலிக்கு என்ன நடந்தது? தகவல்களை தரமறுத்த அந்த தகவல் தொடர்பு செயலிக்கு ஒரு நீதிபதி தற்காலிக தடை விதித்துவிட்டார்.
-
- 0 replies
- 380 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவுக்கு சென்ற ஐநா உதவிவாகனங்கள் மீதான வான்தாக்குதலுக்கு எதிராக சர்வதேச கண்டனம் வலுக்கிறது; தாங்கள் தாக்கவில்லையென சிரிய இராணுவம் மறுக்கிறது. * அகதிகளை அரவணைக்க சிறந்த வழி எது? அகதிகளுக்கான ஐநா மாநாடு நடக்கும் சூழலில் கேனடாவின் உள்ளூர்குழுக்களின் முயற்சி குறித்த பிபிசியின் நேரடித்தகவல்கள். * முதுமையால் வேலை கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு புதியதொரு தீர்வு; முதிய கலைஞர்களுக்கான நடனக்குழுவை துவங்கி வழிகாட்டுகிறார் பிரிட்டன் கலைஞர்.
-
- 0 replies
- 342 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் உள்நாட்டு போர் திரும்பிவிட்டதன் அறிகுறியா இது. ஜுபாவில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். * பழமைவாத யூதர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஒருபாலுறவுக்காரர்கள் மீண்டும் ஜெரூசலத்தில் ஊர்வலம். * நல்ல எதிர்காலத்துக்காக இசைக்கும் சிறுமிகள். காபூல் தெருக்களில் தமது இசை வல்லமையை வளர்க்க முயல்கிறார்கள்.
-
- 0 replies
- 196 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * போரால் பாதிக்கப்படும் பிஞ்சுகள்; யெமெனில் பட்டினிக்கு பலியாகும் குழந்தைகள்; பதினைந்துலட்ச குழந்தைகள் உணவின்றி பரிதவிப்பு; பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * அரைமணிக்கு ஒரு புதிய காற்றாலை மின்கோபுரம் கட்டி சீனா சாதனை; ஆனால் நிலக்கரி சார்பிலிருந்து மீள சீனாவால் முடியுமா?
-
- 0 replies
- 253 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி நோயை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 411 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த கோரிக்கையால் சர்ச்சை பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் 170 நாடுகள் கையெழுத்து; காலநிலைமாற்ற பாதிப்பால் வற்றிப்போன ஆப்ரிக்க சாட் ஏரியை நம்பியிருந்தவர்களின் இன்றைய நிலை எதிர்காலத்தின் முகம்; முதல்முறையாக அமெரிக்க டாலர் நோட்டுகளில் முன்னால் அடிமையாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணியின் படம் இடம்பெறுவது குறித்த செய்தி ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 238 views
-
-
-
- 0 replies
- 286 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * வலதுசாரி தீவிரவாதியால் நோர்வே நாட்டவர் பலர் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாவது வருடம். கொலை நடந்த யுடோயா தீவுக்கு பிபிசி சென்றது. * பாகிஸ்தானில் இணைய தாரகையாக கலக்கிய சர்ச்சைக்குரிய குவாந்தீல் பலோச்சின் பெற்றோர் அவரை கொலை செய்த தமது மகனுக்கு தண்டனை வேண்டும் என்கிறார்கள். * ஆப்பிரிக்காவின் தொடர்பற்ற பகுதிகளுக்கு ஃபேஸ்புக்கின் சூரிய சக்தி ஆளில்லா விமானம் இணைய சேவையை கொண்டுவருகின்றது.
-
- 0 replies
- 615 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்காவின் ஷார்லட் நகரில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வன்முறை; கறுருப்பின ஆணை காவல்துறை கொன்றதாக ஏற்பட்ட பதற்றத்தால் அவசர நிலை பிரகடனம். * இராக்கில் இருந்து ஐ எஸ் அமைப்பை அகற்றும் போரில் பங்கேற்கும் பிரிட்டிஷ் ஆயுததாரிகள்; மோசூல் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் பிரத்யேக தகவல்கள். * ஹாலிவுட் திரைப்படமாகிறது உகாண்டா சதுரங்க சாம்பியனின் கதை; உலக அளவில் அரங்கேறும் ஏழைப்பெண்ணின் சாதனை.
-
- 0 replies
- 371 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஒர்லாண்டோ தாக்குதலை அடுத்து துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதற்கான வாக்களிப்பு கோரி அமெரிக்க காங்கிரஸில் போராட்டம். - லிபியாவில் ஐ எஸ்ஸிடம் இருந்து நகரை மீட்க அரசாங்க படைகள் கடுமையாக போராடுகின்றன. ஆனாலும், படையினருக்கு கடும் இழப்பும் ஏற்படுகின்றது. - அருகிவரும் ஒரு தவளை இனத்தை பாதுகாப்பதற்கான முயற்சி. பாதுகாப்பான இடத்தில் வைத்து அவற்றை காப்பாற்ற முயலும் ஆய்வாளர்கள்.
-
- 0 replies
- 337 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * திருமண வைபவ தற்கொலை தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டதை அடுத்து, வடக்கு சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மீது துருக்கி பதில் தாக்குதல் நடத்துகிறது. * போதனை இடங்களையும் மத போதகர்களையும் சோதிப்பதற்கான உரிமை. மசூதிகள் செயற்படுவதை கண்காணிப்பதற்கான பிரான்ஸின் திட்டம். * அல்சைமர்ஸ்
-
- 0 replies
- 433 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போ நகரை முழுமையாய் கைப்பற்ற சிரிய இராணுவம் தீவிர தாக்குதல்; சமாதானத்துகான சாத்தியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு. * உலக அரங்கில் துருக்கியின் தூதர்களாக பார்க்கப்பட்ட கூலென் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுவதேன்? பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்திகள். * பட்டன் பேட்டரிகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து; அதை விழுங்கும் குழந்தைகளின் தொண்டை எரிந்து கருகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 489 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்ற முக்கிய முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது. நாட்டின் பிரதமர் டேவிட் கமெரன் ஒக்டோபரில் பதவி விலகுகிறார். - ஐரோப்பிய தலைவர்கள் வரும் வாரங்களில் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டெர்லிங் பவுண்ட் வீழ்ச்சி கண்டது. ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி. - கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு குறித்து ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.
-
- 0 replies
- 453 views
-