ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார சி.ஐ.டி.யினரால் கைது கோத்தாவின் ஆலோசனைக்கு அமைய சாட்சிகள் மாற்றப்பட்டமை தொடர்பில் விசாரணையில் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த சாட்சிகளை மறைத்தமை, பொய்யான சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் பிற்பகல் 1.00 மணி முதல் சுமார் 10 மணி நேர சிறப…
-
- 0 replies
- 704 views
-
-
பச்சை மிளகாய் செய்கை குடாநாட்டில் அமோக வெற்றி பச்சை மிளகாய் செய்கை குடாநாட்டில் அமோக வெற்றி யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட பச்சை மிளகாய் செய்கை அமோக விளைச்சபை பெற்றுக் கொடுத்துள்ளது. அநேகமான இடங்களில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த சில மாதங்களாக பச்சை மிளகாய்க்கு பற்றாக்குறையும் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது. காலநிலை மற்றும் மழை…
-
- 0 replies
- 245 views
-
-
மேலும் மூன்று சபைகளை குறிவைக்கிறது முன்னணி!! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றிலும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரியுள்ளதால், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான புரிந்துணர்வில் சிக்கல் வரலாம் எனக் கூறப்படுகின்றது. “நாம் வெற்றி பெற்ற சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றுக்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றில் எம்மால் நிர்வாகம் நடத்த முடியும். …
-
- 0 replies
- 239 views
-
-
மேற்குலகுடன் மகிந்த கைகோர்த்தால் மைத்திரியும் றணிலும் தூக்கிவீசப்படுவார்கள்.. மகிந்தவின் செய்ல்களை இனவாதத்தை தூண்டும் செயல்களாக நான் பார்க்கவில்லை.. வாரத்துக்கொரு கேள்வி 13.02.2018 இவ்வாரக் கேள்வி ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இருந்து வந்துள்ளது. அது பின்வருமாறு – கேள்வி–நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அதே வேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்…
-
- 1 reply
- 504 views
-
-
மத்தியஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - எஸ்.நிதர்ஷன் யாழ் இளவாலைப் பகுதியில் உதைபந்தாட்ட மத்தியஸ்தர் மீது நேற்றிரவு (14) வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, எஸ்.ஜெயக்குமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளவாலை விளான் சந்தியூடாக, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி மத்தியஸ்தரை, பின் தொடர்ந்து வந்த ஒரு குழுவினரே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் உதைபந்தாட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடே மத்தியஸ்தர் மீதான தாக்குதலாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் …
-
- 0 replies
- 212 views
-
-
கரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை நிராகரிப்பு கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும்படி முன்மொழியப்பட்ட யோசனையை அவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இதனால், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி, சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது வேறொரு மூத்த தலைவரை பிரதமராக நியமிக்கலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை கூறியிருந்தார். பிரதமர…
-
- 0 replies
- 254 views
-
-
ரணிலை வெளியேற்றுவதில் விடாப்பிடி – நிமாலை பிரதமராக்க முயற்சி உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், சிறிலங்கா அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்தவும், மகிந்த அமரவீரவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாடாளுமன்ற…
-
- 0 replies
- 176 views
-
-
யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட் யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/30600
-
- 6 replies
- 741 views
-
-
முடிவுகள் தாமதமானமைக்கு பொறுப்பேற்கத் தயார் : மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்துள்ளது - மஹிந்த தேசப்பிரிய நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்துள்ளது. கடந்த காலங்களை விடவும் அமைதியாக முறைப்பாடுகள் குற்ற ங்கள் குறைந்த ஒரு தேர்தல் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும் தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏற்பட்டமைக்கு நான் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்கத்தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எம்முடன் இணைந்து பணியாற்ற தமிழ் மொழிமூல அதிகாரிகள் இல்லாமை பாரிய நெருக்கடியெனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இட…
-
- 0 replies
- 96 views
-
-
தனித்து ஆட்சியமைக்க சந்தர்ப்பம் தாருங்கள் : மஹிந்த அமரவீர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் ஆட்சியமைப்பதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என்று ஐ.ம.சு.வின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பில் நேற்றிரவு கேசரியிடம் கருத்து வெ ளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தீர்மானத்திற்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். உள்ளூராட…
-
- 0 replies
- 244 views
-
-
முரண்பாடு தொடர்கிறது தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லும் விடயத்தில் முரண்பாடு நிலவிவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சந்தித்து பேசியதையடுத்து நிலைமை சுமுகமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இருதரப்பினருக்குமிடையில் இன்னும் முறுகல் நிலை நீடித்து வருகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த திங்கட்கிழமை இரவு பிரதமர் ரணில் …
-
- 0 replies
- 126 views
-
-
தனித்த பயணம் என்ற நிலைப்பாட்டில் உறுதி : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்த பயணம் ஒன்றை முன்னெடுக்கும் கொள்கையில் நாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். அடுத்து வரும் 48 மணிநேரத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்வோம். எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் பின்னரே சுதந்திரக் கட்சியின் பிர…
-
- 0 replies
- 155 views
-
-
ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றினை நாளை விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை ஊடக பிரதானிகளை சந்திக்கவுள்ள நிலையில் இவ் அறிவிப்பினை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பினனர் அரசாங்கத்தில் பல நெருக்கடி நிலைமைகள் எழுந்துள்ளன. தேசிய அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகள் என்பவற்றின் மத்தியில் நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக பிரதானிகளை சந்திக்கின்றார…
-
- 0 replies
- 138 views
-
-
உள்ளுராட்சித் தேர்தல் தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அசைக்கமுடியாது என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வாராந்த கேள்விபதில் அறிக்கையில் இந்த வார கேள்விக்கான பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு- கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை த…
-
- 0 replies
- 227 views
-
-
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு, தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
- 0 replies
- 158 views
-
-
புதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்:அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்றன. இந்நிலையில் ஆட்சிமாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்ச…
-
- 0 replies
- 186 views
-
-
அரசியல் குழப்பம் நீடிக்கக்கூடாது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன பெரும் வெற்றிபெற்றதையடுத்து அரசியலில் பெரும் குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து முன்னெடுத்து வரும் தேசிய அரசாங்கம் நீடிக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பின்னடைவைக் கண்டதையடுத்து இரு கட்சிகளுக்குள்ளும் நெருக்கடி நிலை முற்றியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்தும் 2 வருட காலத்துக்கு ஆட்சி…
-
- 0 replies
- 390 views
-
-
ஐ.தே.க. ஆட்சியமைத்தால் தமிழர்களுக்குப் பாதிப்பே!! ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்குமா என்பது தொடர்பில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது தொடர்பான நகர்வுகளும், வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. கொழும்பு அரசியல் நிலவரம் உச்சக்கட்டப் பரபரப்பில் உள்ளது. அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் பலவும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என்பது தொடர்பாகவே அமைந்துள்ளன. அது சாத்தியமானால், அதாவது ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்குமானால் நிச்சயம் அது தமிழர்களுக்கு மிகப்பெரும் சிக்கலைக் கொடுக்கும். தத்தம…
-
- 0 replies
- 407 views
-
-
தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா? நாட்டில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மகிந்தவின் மீள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் நடைபெற்ற அரச தலைவர் பதவிக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக போட்டியிட்டு குறித்த தேர்தலில் தோல்வியடைந்தார். சிறிலங்கா சுதந்திரக்கட்…
-
- 0 replies
- 278 views
-
-
முதலமைச்சரும் கஜேந்திரகுமாரும் விசேட சந்திப்பு! தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று 8.30 மணியளவில் விசேட சந்திப்பு ஒன்று நடை பெற்றுள்ளது. முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, "கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க இயலாமல் இருந்தது. இந்நிலையில் நல்லெண்ண சந்திப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. மேலும் முதலமைச்சர் தேர்தல் காலங்களில் நல்ல அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். …
-
- 1 reply
- 414 views
-
-
காற்று மாறி அடிக்கிறதா? MRடன் இணைந்த தொண்டா MY3யின் முடிவுக்கு கட்டுப்படுவதாக இணக்கம்:- இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் ஆதரவு தெரிவிப்பதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். http://globaltamilnews.net/2018/66858/
-
- 0 replies
- 212 views
-
-
‘பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!’ நல்லாட்சி அரசு ஸ்திரத்தன்மை குறைந்திருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் காட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தினர் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். http://www…
-
- 0 replies
- 309 views
-
-
காணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களை கண்டுப…
-
- 0 replies
- 288 views
-
-
தீர்வு கிட்டும்வரை அரசுடன் இணையமாட்டோம்- சுமந்திரன் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்வரை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தில் பெரும் குழப்பநிலை நிலவிவருகின்ற நிலையில், கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமா என்ற ஊடகங்களின் விமர்சனம் குறித்து ஆதவனுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இருப்பினும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்போக்கான முறையில் நடவடிக்கை எடுக்கும் அரச தரப்பிற்கு, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தாம் ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். …
-
- 3 replies
- 491 views
-
-
கிராண்ட்பாஸில் கட்டடம் தகர்ந்தது; மூவர் பலி கிராண்ட்பாஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று சற்று முன்னர் திடீரென இடிந்து விழுந்ததில் மூவர் பலியாகினர். ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிகப் பழைமையான இந்த நிறுவனத்தின் வளாகத்தினுள்ளே பல கட்டடத் தொகுதிகள் இயங்கி வருகின்றன. தயாரிப்பு, பொதிசெய் உட்படப் பல்வேறு பணிகள் இங்கு நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று (14) பிற்பகல் சுமார் மூன்றரை மணியளவில் கட்டடங்களில் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததாகச் சொல்…
-
- 1 reply
- 691 views
-