ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
புதிய யாப்புக்கு எதிர்ப்பு- ஆனால் மாற்று அரசியல் அணியை உருவாக்குவதில் இழுபறி புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஏற்பாடுகள் இல்லையென தெரிந்த பின்னரும் கூட புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் ஒரே குரலில் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டாலும் புதிய அரசியல் அணியை உருவாக்குவதில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியவல்லையென ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். குறிப்பாக தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி…
-
- 0 replies
- 234 views
-
-
"பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரிய மரியாதையை வழங்காதபட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும்" "இந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தலைமையிலான மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை ஆரம்பித்த இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்…
-
- 0 replies
- 182 views
-
-
முக்கியமானவர்கள் 3 பேரும் இருக்கும் போதே புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் ; விஜயமுனி சொய்ஷா ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என மூன்று பேரும் இருக்கும்போதே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என நான் நம்புகின்றேன் என நிர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஷா தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி நீர்ப்பாசன பிரிவிற்குட்பட்ட சிவத்தப்பாலம் கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒரு யுத்தம் வருவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இங்குள்ள அனைத்து இன மக்களும் அவர்களின் மதங்களுக்கும் அனைத்து பிரதேசத்தில் வாழும் …
-
- 0 replies
- 249 views
-
-
அரசியலமைப்பின் "ஏகிய ராஜ்ஜிய' என்ற வார்த்தையை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான தேவை அவசியமானதாக காணப்பட்டதாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி. தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி மனப்பாங்கையே கொண்டிருக்கின்றார்கள் எனவும் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையான ஏகிய என்பதை ஆங்கிலத்தில் உள்ளீர்த்துக் கொள்வது நல்லதொரு முன்னேற்றமாக அமைந்ததென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு நிர்ணய சபையின் மத்திம ஸ்தானமாக விளங்கும் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை கொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரும் எம்.ப…
-
- 0 replies
- 331 views
-
-
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் நாளிலிருந்து செப்ரெம்பர் மாதம் 25ஆம் நாள் வரை மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் தடுத்துவைத்திருந்தது. இதில் 70 வரையான இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டனர். இதன்பின்னர் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து யாழ்க் கோட்டையைக் கைப்பற்றியதும் அவர்களை உங்களிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தும் இதுவரை அவர்கள் அனைவரும் காணாமலாக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இக்குடும்பங்களிடம் நிசோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் தமது …
-
- 0 replies
- 307 views
-
-
சின்னம் என்ன என்பதை விட எண்ணமே முக்கியம் கண்டியில் அமைச்சர் மனோ கணேசன் (கண்டி, வத்துகாமம் நிருபர்கள்) விரைவில் பல தேர்தல்களை எதிர்நோக்கி உள்ளவர்கள் தமது சின்னம் எது என்பதை விட, தமது எண்ணம் எது என்பதை முக்கியமானதாக்கிக் கொள்ள வேண்டும் என்று இன நல்லிணக்க கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது- ஒரு குழந்தையை வளர்த்து பெரியவனாக்கி அவன் மூலம் ஒரு தந்தை அடையும் மகிழ்ச்சியை விட நான் இன்று…
-
- 0 replies
- 452 views
-
-
"மஹிந்தவுடன் இடமில்லை" முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா (ஆர்.யசி) நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/24877
-
- 1 reply
- 192 views
-
-
காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை – பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை திணைக்களத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழர்களின் ஆர்வம் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 7000 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதில் பத்து வீதமான தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், …
-
- 0 replies
- 220 views
-
-
குருதி சிந்தித் தக்கவைத்த ஒற்றையாட்சியை புதிய அரசமைப்பின் ஊடாக ஒழிக்க முயற்சி சிங்கள மக்களைக் கிளர்ந்தெழுமாறு வீரவன்ச அறைகூவல் “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தனது மாமாவான ஜே.ஆர்.ஜெயவர்த்தன கையாண்ட வழிமுறையைப் பின்பற்றியே புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு மருமகனான தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். குருதி சிந்தித் தக்கவைத்த ஒற்றையாட்சி நாட்டை அழிக்கவே புதிய அரசமைப்பின் ஊடாக முயற்சிக்கின்றனர். இதற்கெதிராக சிங்கள மக்கள் அணி திரளவேண்டும்” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவர் விமல் வீரவன்ச அறைகூவல் விடுத்தார்.…
-
- 0 replies
- 163 views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்கம்இலங்கைக்கான சாவுப் பொறி கடும்போக்காளர் குணதாஸ அமரசேகர குத்திமுறிவு புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவது இலங்கைக்கான சாவுப்பொறி என்று விமர்சித் துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர, அந்தப் பொறியில் சிக்காமல் இருப்பது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போதைய அரசின் பயணமானது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. நாட்டை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சிக…
-
- 0 replies
- 405 views
-
-
இலண்டனில் இடம்பெற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றிய விளக்கமும் சமகால அரசியல் பற்றிய விளக்கமும்
-
- 0 replies
- 141 views
-
-
யாழ். நீதிமன்றம் செல்வோர் பொலிஸாரால் சோதனை Share யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்குகளுக்கு வருகை தரும் பொது மக்கள் பொலிஸாரால் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் புதன்கிழமை சிறப்புத் தீர்ப்பாயத்தால் வழங்கப்படவுள்ளது. http://newuthayan.com/story/31716.html
-
- 0 replies
- 295 views
-
-
11 கிலோ கஞ்சாவுடன் வடமராட்சி இளைஞர் கைது Share பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே 11 கிலோ கஞ்சாவுடன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பிரியந்தவின் வழிகாட்டுதலில் பருத்தித்துறைப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/31700.html
-
- 0 replies
- 165 views
-
-
வடக்கு அமைச்சரவை விவகாரம் தமிழரசுவின் கூட்டத்தில் நிசப்தம் Share வடக்கு மாகாண சபையில் அமைச்சுப் பொறுப்புக்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பதில்லை என்று அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்படவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் அம்பாறையில் நேற்றுக் கூடியது. இந்தக் கூட்டத் தி்ல், வடக்கு மாகாண சபை அமைச்சுப் பதவி ஏற்பதில்லை என்ற விவகாரம் ஆராயப்படும் என்ற…
-
- 0 replies
- 341 views
-
-
வடக்கு - கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு மேலாக மேல் சபை என்ற ஒரு சபையும் உருவாக்குவதற்கான பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. இதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50 இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் தேசிய நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபையின் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர…
-
- 0 replies
- 218 views
-
-
தமிழ் மக்களின் பயணத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது இடைக்கால அறிக்கை குறித்து வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசனம் (நமது நிருபர்) புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரம் பகிரப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்துள்ளது. ஒற்றையாட்சி முறைமையினை தக்கவைக்கும் பொருட்டு வார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது. ஏகியரட்ட என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டமை அறிக்கையை தயாரித்தோரின் கபடத்தனத்தை வெ ளிக்காட்டுகின்றது என்று வடமாக…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கை வந்தடைந்தார் மைத்திரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 8.45 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 72 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றியதுடன் பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்களை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடியிருந்தார். அத்துடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் …
-
- 0 replies
- 237 views
-
-
அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்பு வழக்கு விசாரணை இடமாற்றம்: வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து வழக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிராகத் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களது வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றிலேயே இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் 4 ஆண்டுகளாகத் தொடரும் வழக்கை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்ற வேண்டாம் எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்புப் போராட்டம் கடந்த மாதம் நடத்தியிருந்தனர். இருப்பினும் அந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதி…
-
- 0 replies
- 413 views
-
-
மாநாயக்க பீடங்கள் எச்சரிக்கை.! புதிய அரசியல் அமைப்பு மூலமாக தீர்வு உண்டாகும் என கூறிய போதிலும் அதிகார பரவலாக்கல் பாரிய சிக்கல்களை உருவாக்கும். இதனால் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சர் வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்று மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும், கூறுவது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளன. ஏமாற்று வேலைகளை நிறுத்த வேண்டும் எனவும் இந்தப் பீடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் மல்வத்து, அஸ்கிரிய மாநாயக தேரர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பு குற…
-
- 0 replies
- 316 views
-
-
வவுனியாவில் இனந்தெரியாத குழுக்களின் அட்டகாசம் வவுனியா, குருமன்காடு, வைரவப்புளியங்குளம் புகையிரத வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, குட்சைட் வீதி, தோனிக்கல் போன்ற வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடக்கம் இனந்தெரியாத இளைஞர் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இளைஞர் குழு வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடமிருந்து நகைகள், பணம் என்பவற்றை அபகரிக்க முயன்றுள்ளனர் எனவும் இதன் போது காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸிற்கு மூன்றுக்கும் ம…
-
- 0 replies
- 323 views
-
-
யாழ் -கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு:ஒருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaffna-Kodigamam-area-of-…
-
- 0 replies
- 630 views
-
-
‘தமிழ்,முஸ்லிம் மக்கள் அஞ்சத் தேவையில்லை’ “அண்மையில் மேற்கொள்ளப்பட்ட, மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பில், சனிக்கிழமை (23) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்ப தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தொடர்ந்து கருத்துரைக்கையில், …
-
- 0 replies
- 260 views
-
-
சி.ஐ.டியில் அமைச்சர் ரிஷாட் முறைப்பாடு மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சி-ஐ-டியில்-அமைச்சர்-ரிஷாட்-முறைப்பாடு/175-204425
-
- 0 replies
- 126 views
-
-
கதிர்காமர் கொலை வழக்கு:குறுக்குக் கேள்விகளால் நெஞ்சுவலிக்கிறது முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின், படுகொலை வழக்கில், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியினால் கேட்கப்படும் கேள்விகளால் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக, உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைதொடர்பில், சட்டமா அதிபரினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதல…
-
- 0 replies
- 220 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல: பிரசாத் விளக்கம் காணாமல் போனோர் அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமே என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும், இதுகுறித்து சர்வதேசம் என்ன கூறுகின்றது என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்கபடவுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் பாராட்டுகின்றன, இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் …
-
- 0 replies
- 204 views
-