ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
போர்க் காலத்தில் பெண்கள் இரவு நேரங்களில் கூட சுதந்திரமாக நடமாடிய நிலையில் இப்பொழுது பகலில்கூட சுதந்திரமாக அச்சமின்றி நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். மாகாண மட்டத்திலான பொலிஸ் - பொது மக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “பொலிஸ் சேவை என்பது முன்னைய நிலையில் இருந்து விலகிப்புதிய பரிமாணம் பெற்று அது பொது மக்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு சேவையாக மாற்றப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றமான செயற்பாடு. எமது நாட்டின் பாதுகாப்புப் …
-
- 0 replies
- 433 views
-
-
கிழக்கில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது பதிக்கப்பட்ட மக்கள், தொடர்பிலான நடவடிக்கைகள், கருத்துக்கூறல்கள், பற்றிய நம்பகத்தன்மை பெரிதும் குறைந்து செல்கின்றது. ஏனெனில் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை அமைக்கும் போது அதில் இன ரீதியிலான சமத்துவம் பேணப்படுவதில்லை என சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் இன்று (11) இடம்பெற்ற சபையின் அமர்வில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. “கிழக்கில் இன முரண்பாடுகள் தொடர்பிலாக பிரச்சனைகள் இடம்பெற்ற போதெல்லாம் நாம் முன்னின்று அவற்றை தீர்ப்பதில் பங்குகொண்டோம். இன்று யுத்த அனர்த்தம் தொடர்பிலாக சில உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டச் செயல்பாடுகள் மூலமாக இனவாதத்தை வளர்ப்பத…
-
- 0 replies
- 399 views
-
-
சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் முன்வரவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மத சுதந்திர அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பு நாட்டிலுள்ள சிங்கள மக்களிடையே மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் எதிரான பிரச்சாரங்களையும் பொது பல சேனா முன்னெடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=163366&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 289 views
-
-
பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் (ப.பன்னீர்செல்வம்இ ஆர்.ராம்) வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கொக்குடையான் மாளாப்பு ஆகிய குளங்களையும் ஏனைய சிறு குளங்களையும் இணைத்து பாரிய நிலப்பரப்பில் நீரைத் தேக்குவதன் மூலம் குடி நீர் விவசாய செய்கை கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கான மேய்ச்சல் தரை உருவாக்கம் என்பவற்றுக்குப் போதியளவு நீரைப் பெற முடியும் என்பதுடன் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் முடியும். எனவே இதனை அடிப்படையாகக் கொண்ட பூநகரிக் குளத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நீர்ப…
-
- 0 replies
- 345 views
-
-
வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் மாயம் வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் காணப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, 2006ஆம…
-
- 0 replies
- 297 views
-
-
கடத்தலுக்கும் கடல் பாதுகாப்பு துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா? கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டி இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் சேவை என்பது முன்னைய நிலையில் இருந்து விலகிப்புதிய பரிமாணம் பெற்று அது பொது மக்களுடன் பின்னிப்பிணைந்த ஒரு சேவையாக மாற்றப்பட்டிருப்பது ஒரு…
-
- 0 replies
- 249 views
-
-
வயல் விழா யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் பாற்பண்ணையாளர்களுக்கான வயல் விழா பண்டத்தரிப்பில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, பசுக்களில் பால் சுரப்பைப் போசாக்கான உணவின் மூலம் அதிகரிக்கும் நோக்கில் சீனி இறுங்குப் பயிரைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது. அதிக அளவு சீனியைக் கொண்ட சீனி இறுங்குப்பயிர் முழுவதுமாகவே கால்நடைத்தீவனமாகப் பயன்படவல்லது. இதனை இயந்திரங்களின் உதவியோடு நறுக்கி சீனி சேர்த…
-
- 0 replies
- 482 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதனைத் தொடர்ந்து விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் வேறொரு விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பாதுகாப்பாக சற்று முன்னர் சென்றடைந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறுப்பட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்த…
-
- 0 replies
- 401 views
-
-
இந்திய - இலங்கை இடையில் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பாக பேச்சு நடத்த இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஏற்கனவே இந்தியாவுடன் இந்த உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படுகிறது. அதேபோன்று சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=163343&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 209 views
-
-
கடந்த 15 மாதங்களில் 81 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று சனத் நிசாந்த எம்.பி. எழுப்பிய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். நீதிமன்றறை அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு இலக்கான 8 பௌத்த பிக்குகளும் யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டனர். துஸ்பிரயோகங்கள், புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seith…
-
- 0 replies
- 359 views
-
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் வெளியிட்டுவரும், தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவ்வாறு பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் வினா தொடுக்கும் நேரத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைக்கப்படுவதாக கூறப்படும் பாலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ‘அனுமன் பாலம் அமைப்பதற்குரிய தேவை கிடையாது. அவ்வாறு செய்வதாக இருந்தால் அதை வெளிப்படையாகவே செய்வோம். ஆனால், பாலம் அமைப்பதன் ஊடாக பணம் கொள்ளையடிக்கும் தந்திரம் கடந்த ஆட்சியிலேயே பின்பற்றப்ப…
-
- 0 replies
- 289 views
-
-
சீ.எஸ்.என் நிறுவனத்தின் பணம் 157.5 மில்லியன் மத்திய வங்கிக்கு மாற்றம்..! சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட மூலதன நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/10027
-
- 2 replies
- 367 views
-
-
தன் மீதான விமர்சனங்களுக்கு வட மாகாண எதிரக்கட்சி தலைவரின் பதில் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான எனது அனுபவம், ஆற்றல் காரணமாகவே, நான் ஈ.பி.டி.பி கட்சியைச் சார்ந்தவராக இருந்தும், முதலமைச்சர் தன் சார்பாக அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி கோரியிருந்தார் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா கூறியுள்ளார். அவ்வாறான அவரினது கோரிக்கைகளிற்கு நான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேனேயன்றி, அவர் சார்பாக கழியாட்ட விழாக்களிலோ, அல்லது பொது நிகழ்வுகளிலோ நான் பங்கு கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாகவது, முதலமைச்சர் சார்பாக நான் கலந்துரை…
-
- 0 replies
- 361 views
-
-
கூட்டமைப்பினரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும் : பைஸர் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட முன்வர வேண்டும். முஸ்லிம் தலைவர்களின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் நாட்டின் சில பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் அஹமட் முனவ்வரின் “இலங்கை வானொலி முஸ்லிம் சேவை” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/10083
-
- 0 replies
- 243 views
-
-
சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேறியது.! காணாமல்போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம், பாராளுமன்றத்தில் சற்று முன்னர் திருத்தங்களுடன் நிறைவேறியது. இதனை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்றில் குழப்பநிலையேற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/10085
-
- 0 replies
- 277 views
-
-
யாழ்ப்பாணம் அமைதி பூங்காவாக உள்ளது. - யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் குற்ற செயலில் ஈடுபடுபவதற்கு என வெளி மாவட்டங்களில் இருந்து குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் வந்துள்ளதாக, அறிந்துள்ளேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில், 141 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளை தன் வசம் வைத்திருந்தார் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தற்போது அமைதியாக உள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற நீதவ…
-
- 0 replies
- 250 views
-
-
சபை ஒத்திவைக்கப்பட்டது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டி நிலையில், அவையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. - See more at: http://www.tamilmirror.lk/179221/சப-ஒத-த-வ-க-கப-பட-டத-#sthash.C5StGHyo.dpuf
-
- 0 replies
- 205 views
-
-
ஜனாதிபதி வந்தால் மட்டும் நேரம் காட்டும் மணிக்கூடு (காணொளி இணைப்பு) (சசி) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான மணிக்கூட்டு கோபுரமானது ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் எவராவது மட்டக்களப்பிற்கு வந்தால் மட்டுமே இயங்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மணிக்கூட்டு கோபுரத்தை அண்மித்த பகுதியில் பிரதேச செயலகம் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகம், மாநகரசபை ,பேருந்து நிலையம் என இன்னும் பல அரச திணைக்களங்கள் அமைந்துள்ளன . குறித்த மணிக்கூண்டு கோபுரத்திலுள்ள மணிக்கூடு வேலை செய்யாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை அவதானிக்க வில்லையாவென கேள்வியெழுப்பும் பொதுமக்கள், அதனை திருத்தியமைக்க மாநகர சபைக்கு நேரம்…
-
- 0 replies
- 294 views
-
-
யாழ்.போதனாவில் தாதியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை! யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான தடையுத்தரவை மேலும் நீடித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், குறித்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு வழிவகுத்த தாதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண்தாதி ஒருவரை ஒழுக்காற்று நடவடிக்கையாக, வைத்தியசாலை பணிப்பாளர் மற்றுமொரு பிரிவுக்கு உள்ளக இடமாற்றம் செய்திருந்தார். இதற்கு எதிராக கடந்த ஜுலை மாதம் 8ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) நீத…
-
- 0 replies
- 328 views
-
-
வடக்கு மீள்குடியேற்ற செயலணி: கூட்டமைப்பின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபையில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து கருத்துக்களை வெளியிட்டார். அந்த செயலணிக்குள் அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அண்மைக்…
-
- 3 replies
- 493 views
-
-
இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேயே அமைக்கவேண்டுமென்பதை வலியுறுத்தி இன்று முதல் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (வயது 73) என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த தகவலை பாராளுமன்றத்தில் நேற்று நிதி முகாமைத்துவம் (பொறுப்பு)(திருத்தச்) சட்டமுலத்தின் இராண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் வெ ளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்திற்கான பொருளாதார மத…
-
- 3 replies
- 353 views
-
-
2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் தாம் இராணுவத்தினரிடம் சரணடைந்தபோது தம்மை றம்பைக்குள தடுப்பு முகாமில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் 3 மாதங்கள் கழித்து தம்மை நெளுக்குளம் தடுப்பு முகாமுக்கு மாற்றி அங்கே தமக்கு கட்டாயப்படுத்தி தடுப்பூசி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்தார்… அவரது நேரடி வாக்குமூலம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://thuliyam.com/?p=37208
-
- 0 replies
- 269 views
-
-
சுமந்திரன் முன்னிலையில் மகிந்தவை விசாரணைக்கு அழைக்கவேண்டும்-என்கிறார் பிரதமர் அரச கணக்குகளில் இருந்து மறைத்து வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”நாடு தற்போது 9.5 மில்லியன் கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது. இதுகுறித்து ஆராய்வதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் மூவரடங்க…
-
- 0 replies
- 221 views
-
-
றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாடு சார்பாக விளையாடிய ஈழத் தமிழரான துளசி தர்மலிங்கம் மொங்கோலிய வீரரிடம் தோல்வியடைந்தார். ஜேர்மனியில் வசிக்கும் ஈழத் தமிழரான துளசி தர்மலிங்கம், இம்முறை கட்டார் நாடு அணியின் சார்ப்பாக கலந்துகொண்டார். கடந்தவாரம் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரீன வீரரை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். நேற்று (புதன்கிழமை) அவர் 64 கிலோ எடை ஆண்கள் இலகு வெல்டர் பிரிவின் 32 ஆவது சுற்று ஆட்டத்தில், மொங்கோலிய வீரர், சின்சோரிக் பாட்டார்சுக்குடன் மோதினார். மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற போட்டியில் மூன்று சுற்றுக்களிலும் மொங்கோலிய வீரரே வெற்றிபெற…
-
- 0 replies
- 226 views
-
-
யுத்தம் வெற்றியடைந்தாலும் கடந்த காலங்களில் சமாதானம் தோல்வியடைந்துள்ளதாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது சமாதானத்தை அடைவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற நாட்டில் இலகுவாக சமாதானத்தை உருவாக்க முடியாது எனவும், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி சமாதானத்தை அடையமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். http://thuliyam.com/?p=37331
-
- 0 replies
- 166 views
-