ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
கிழக்கில் நடந்த மோதல்களை அடுத்து இடம்பெயர்ந்து திருகோணமலை இடைத்தங்கல் முகாமில் தங்கி இருந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 501 views
-
-
முன்னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு வழங்குவதற்கென வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் புனர்வாழ்வு நிலையங்கள் கிழக்கு மாகாணத்துக்கு மாற்றப்பட உள்ளனஎன்று தெரியவருகிறது. இதற்காக கிழக்கு மாகாணத்தில் சுமார் 20 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் தெரியவருகிறது. நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவை மேற்கோள் காட்டி மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன. கிழக்கில் அமைக்கப்பட இருக்கும் இப்புனர்வாழ்வு முகாம்களுக்கு அருகில் வயல்கள், தோட்டங்கள், தொழில்நுட்ப பயிற்சி நிலையங்கள் ஆகியனவும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://www.parantan.com/
-
- 0 replies
- 780 views
-
-
300 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசிச் சனிக்கிழமையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து சமயச் சான்றோர்கள் கூறியவை வருமாறு தீபாவளி என்றாலே ஐப்பசி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் தீபாவளி வருகிறது. இதிலும் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் வரும் தீபாவளி மிகவும் அபூர்வமானது. இந்த வருடம் இப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி (5வது) சனிக்கிழமை யில் அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகை வருகிறது. அபூர்வமான தீபாவளித் திருநாள், 300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் தான் அமைந்துள்ளது என்பது பஞ்சாங்கக் குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது என்றனர். http://…
-
- 17 replies
- 2.4k views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பாக பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை நாளை வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் சந்தித்துப் பேச இருக்கிறார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
வவுனியா முகாம் தாக்குதல் போன்று இனிமேல் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்கிறோம்: பசில் வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பஸில் ராஜபக்ஷ எம்.பி. யை சந்தித்து முறையிட்ட போது, அவர் இப்படியான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று எம்மிடம் கூறினார். இது தொடர்பாக தெரியவருவதாவது:- வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்திய…
-
- 0 replies
- 703 views
-
-
ஈழத்தமிழினம் அழியும் நிலையில் உலகத்தமிழ் மாநாடு அவசியமா…? – சேவ் தமிழ்ஸ் கூகிள் குழு ஈழத்தமிழினம் முள்வேலிக்குள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் உலகத்தமிழ் மாநாடு அவசியமா என்று நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் செல்லத்துரை, செயலர் எம்.சாமி ஐயா அவர்களிடம் உங்களின் விளக்கத்தினை கேளுங்கள். மின்னஞ்சலின் மாதிரி வடிவம்: மதிப்பிற்குரிய நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் செல்லத்துரை, செயலர் எம்.சாமி ஐயா அவர்களே, கோவை தமிழ் மாநாடு அவசியமா ? ரோம் பற்றி எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தி கொண்டிருந்தானம்….. அதை இன்று கண் கூடாக காண்கிறோம்…… லட்ச கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொண்ணுட்டு…. இங்கே தமிழ் மாநாடு நடத்த வேண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சிலாபம் மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஜோசப் அந்தோனி றொட்றிக்கோ என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து இரண்டு கோடி ரூபா வரையில் இவர் மோசடி செய்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலருடனும் தொடர்புகளை வைத்திருந்த இவர், புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் தற்கொலை அங்கி ஒன்று கண்டுபி…
-
- 0 replies
- 563 views
-
-
தமிழீழ மக்களது ஆணையினை அடகு வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது 11 செப்ரம்பருக்குப் பின்னரான ‘பயங்கரவாதம்’ குறித்த அமெரிக்கக் கோட்பாடு தமிழீழ மக்களின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. விடுதலைப் புலிகள்மீது பல்வேறு அழுத்தங்களையும், தடைகளையும் ஏற்படுத்தி, சிறிலங்கா அரசின் யுத்தகள வெற்றிக்குத் துணை நின்றதால், தமிழீழ மக்களுக்கு இருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கவசமும் தகர்த்து எறியப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் இறையாண்மை பற்றிய கவலையுடன், விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு முண்டு கொடுத்த அத்தனை சக்திகளும் தொடரும் சிங்கள இனவெறிப் பழிவாங்கல் நடவடிக்கைகளினால் விரக்தி அடைந்துள்ளன. சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இறுதிவரை துணைநின்ற இந்தியா, தற்போது வெளிவந்து கொ…
-
- 0 replies
- 597 views
-
-
விடுதலைப் புலிகள், இலங்கைக்குள் தோற்கடிக்கப் பட்டிருந்தாலும் சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த அமைப்பினராகவே காணப்படுகின்றனர். சர்வதேச மட்டத்தில் மிகவும் பலமாகச் செயற்பட்டுவரும் புலிகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச சகத்தைத் திசைதிருப்பி வருகின்றனர் என்று சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல். பீஸ் தெவித்தார். அமெக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யுத்தக்குற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னணியிலும் விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களது சர்வதேச தியிலான பலமே இதற்குக் காரணமாகும். எனவே, இந்தச் சவாலுக்கு முகம்கொடுக்க நாம் தயாராகவேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை பாரதுரமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். கொழும்பில் அமைந்த…
-
- 0 replies
- 788 views
-
-
தனது அன்னியச் செலவாணி இருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து சிறிலங்கா அரசு கடன் பெறுவதற்கு அனைத்துலக நாணய நிதியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு எப்போதும் இல்லாத வகையில் 4 பில்லியன் டொலர்களை எட்டி உள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி இந்த மாதம் அறிவித்திருந்தது. நான்கு மாதங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்குப் போதுமான தொகை இது எனவும் வங்கி தெரிவித்திருந்தது. திறைசேரி முறிகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியதன் மூலமும் டொலருக்கு நிகரான கடன் பத்திரங்களை அரசு விற்பனை செய்ததன் மூலமும் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்ததாக மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதன் மூலம் 1.2 பில்லியன் ரூபா அர…
-
- 3 replies
- 698 views
-
-
முகாமில் இலங்கைப் படையினருடன் மக்கள் மோதல் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வவுனியா பூந்தோட்டத்தில், கல்வியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள முகாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இலங்கைப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் இருந்த நபர் ஒருவரைக் கடத்திச் சென்று படையினர் சுட்டுக்கொன்றதாகக் குற்றம்சாட்டி. பொதுமக்கள் படையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர் எனத் தகவல்கள் கூறுகின்றன. படையினரின் நடவடிக்கைகளுக்கு முகாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அங்கு மோதல் நிலை ஏற்பட்ட…
-
- 0 replies
- 665 views
-
-
மட்டு. நகரசபைக்கு அருகே புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு மட்டக்களப்பு மாநகரசபைக்கு அருகே மாநகரசபை காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று 23-09-2009 காலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மீட்டெடுத்தனர். நகரசபை தொழிலாளிகள் இக்க்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இந்த வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதில் 8 கிளைமோர் குண்டுகளும், மோட்டார் குண்டுகள் 31ம் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவித்தது. இக்குண்டுகள் புதைக்கப்பட்டிருந்தது பற்றி மாகாண தென்பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலகவின் பணிப்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன http://www.meenagam.org/?p=11338
-
- 0 replies
- 551 views
-
-
சேரமான் 23/09/2009, 22:50 தடுப்புமுகாம் மக்களை விடுவிக்காமல் மகிந்த அரசு பிடிவாதமாக உள்ளது. நெதர்லாந்து தெரிவிப்பு இன்று (23.09.2009) புதன்மதியம் 2மணியிலிருந்து 4மணிவரை நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக, சிறீலங்கா அரசால் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை உடன்விடுவிப்பதற்கு உதவுமாறுகோரி கவனயீப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சகத்தில் சிறீலங்காவிற்குப் பொறுப்பான நெதர்லோப் அம்மையாரைச் சந்தித்து நெதர்லாந்தின் பலஇடங்களிலும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகளை இவ்அம்மையாரிடம் ஒப்படைத்து, முகாம்மக்களை விடுவிக்கஉதவுமாறு உரையாடினர். இதன்ப…
-
- 0 replies
- 507 views
-
-
வைகறை, சென்னை 23/09/2009, 13:18 வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்! ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்! "ஈழத்தமிழர் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்கவேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையை வரவேற்கிறேன். ஆனால் அதில் தேவையற்ற வகையில் விடுதலைப் புலிகளைக் குறை கூறியுள்ளார்." என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:- "தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களைக் கொலை செய்து வருகிற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என்றைக்கு மாறியதோ அன்றிலிருந்து அந்த இயக்கத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன் என்று ஜெ…
-
- 0 replies
- 911 views
-
-
வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தது. இந்நிலை தொடர்வதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்வாணி ஞானகுமாருக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய வீட்டார் அனைவரையும் பாதுகாப்புத் தரப்பினர் கைதுசெய்துள்ளதாக வன்னிக்குருவியிற்கு இணையத்தளத்திற்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக தமிழ்வாணி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை உடனடியாக நிறுத்தியுள்ளார். தனக்க ஏற்பட்டுள்ள அதிகமான மன அழுத்தம் காரணமாக ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக தமிழ்வாணி தெரிவித்துள…
-
- 2 replies
- 2k views
-
-
சட்டத்திற்கு புறம்பான முறையில் இலங்கையில் அடைத்து வைத்திருக்கும் 260,000 மக்களையும் உடன் விடுதலை செய்யவேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் இலங்கை அரசினை நிர்பந்திக்க வேண்டும் எனவும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் கூட்ட தொடரில் பங்கு பற்றுவதற்காகவும், ஜி20 கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காகவும் நியூயோகில் கூடியுள்ள உலகத்தலைவர்கள் மத்தியிலேயே இந்த அழைப்பு மனித உரிமை கண்காணிப்பகத்தால் விடுக்கப்பட்டுள்ளது. மக்களை பூட்டி வைத்திருக்கும் முகாம்கள் பாதுகாப்பற்றவை, தொடர்புகொள்ள முடியாமல் இரகசியமாக காணப்படுகின்றது. நாள் தோறும் காணாமல் போவதும் கைதும் இடம்பெறுகின்றது. முன் நாள் போராளிகள் காணாமல் போதல் மற்றும் கைது செய்யப…
-
- 1 reply
- 659 views
-
-
வணக்கம் உறவுகளே, தயவுசெய்து இப்பிரதிகளை கீழே தரப்பட்ட முகவரிகளிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் உங்களைக்கேட்டுக்கொள்கின்றே
-
- 1 reply
- 744 views
-
-
மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் ஜனாதிபதியைக் கொலை செய்து, அரசாங்கத்தின்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக குற்றஞ்சுமத்தி ரணில் விக்ரமசிங்கவயும், மங்கள சமரவீரவையும் கைதுசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கத்தின் மிகவும் நம்பகரமான தகவலொன்று தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டமைப்பு கையெழுத்திடுவதற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. தமது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மேலதிக தகவல்களை வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சரொருவர் மேலும் தகவல் தருகையில், ரணில், மங்கள ஆகியோரைக் கைதுசெய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான சூழ…
-
- 1 reply
- 971 views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போதும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரோஹித போகல்லாகம -எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் சந்திப்பு நியூயோர்க்கில் நடக்கும் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் வடக்கு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,80,000 தமிழ் மக்களை முகாம்களிலிருந்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சர் ரோகிதவுடன் ஆலோசித்துள்ளார். போர் நடைபெற்ற பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரோஹ…
-
- 0 replies
- 681 views
-
-
நாராயண மந்திரமும் தமிழினத்தின் அரசியல் நலனும் – சி.இதயச்சந்திரன் சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற சொற்பதங்களெல்லாம் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் கட்டமைப்பினுள் இலகுவாகப் பாவிக்கப்படும் விடயங்கள். அதனையே பூர்வீக தேசிய இனமொன்றின் மீது போர்த்தி அழகு பார்க்கலாம் அல்லது அதனை ஒடுக்குவதற்கு பயன்படுத்தலாம். சிறுபான்மை தேசிய இனமென்பதற்குப் பதிலாக ‘சிறுபான்மை மக்கள்’ என்கிற குறுகிய வட்டத்திற்குள் இதனை அடக்கிக் கொள்ளலாம். இதனையே ஒடுக்கும் பெரும் தேசிய இனங்களும், அதற்கு முண்டு கொடுக்கும் நாடுகளும் ஏற்றுக்கொண்டு, தமது நலனிற்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஓர் இனமாகவும் தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுப்பார்கள். சுதந்திரத்தைப் பெற்று…
-
- 0 replies
- 805 views
-
-
நளினி-ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ் புதன்கிழமை, செப்டம்பர் 23, 2009, 9:26 [iST] வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் ஆலோசனை கமிட்டியை கூட்டுவதாக தமிழக அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கான ஆலோசனை கமிட்டியை முறையாகக் கூட்டி நளினியின் கோரிக்கையை பரிசீ…
-
- 0 replies
- 784 views
-
-
செல்வன், வவுனியா 23/09/2009, 00:01 வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் யுவதி ஒருவர் சயனைட் அருந்தி உயிர்நீப்பு! வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் சிறீலங்கா படைகளின் முற்றுகையில் சிக்கிய யுவதி ஒருவர் சயனைட் அருந்தி சாவை அணைத்துக் கொண்டுள்ளார். உக்கிளாங்குளம் கூமாங்குளம் வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் அங்கிருந்த பெண் ஒருவரைக் கைது செய்த பொழுது, சயனைட் அவர் உயிர்நீத்துள்ளார். இதனிடையே குறிப்பிட்ட யுவதி தங்கியிருந்த வீட்டை அண்டியுள்ள கண்டல் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். pathivu
-
- 1 reply
- 876 views
-
-
- இலங்கையில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதர கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. கூட்டுப் போராட்டம் நடத்த வேண்டி யிருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தமிழர்கள் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒ…
-
- 0 replies
- 564 views
-
-
கனடாவில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' வார ஏடு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு 733 பேர்ச்மவுண் வீதி, ஸ்காபறோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (25.09.09) பிற்பகல் 5:30 நிமிடமளவில் நடைபெறவுள்ளது. மங்கள விளக்கேற்றலுடன் தொடங்கும் நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்புரை என்பவற்றையடுத்து சட்டவாளர் பாபரா ஜக்மன் மற்றும் பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரால் வார ஏடு வெளியிடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆய்வுரை, கருத்துரை என்பனவும் இடம்பெறும். நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வார ஏட்டின் ஆசிரியர் குழு சார்பாக ச.றெஜி அழைப்பு விடுத்திருக்கின்றார். தொலைபேசி இலக்கம்: (01) 416 826 8661 …
-
- 0 replies
- 591 views
-