ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வைகறை, சென்னை 19/09/2009, 13:55 தெளிவான அரசியல் தரிசனம் இன்றி மகிந்த ராஜபக்ச ஆட்சி! சந்திரிகா குமாரதுங்க குற்றச்சாட்டு தெளிவான அரசியல் தரிசனம் இன்றி சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்வதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். கேரளாவில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தெளிவான அரசியல் தரிசனமும், அதன் மீதான பற்றுறுதியும் கொண்ட ஒருவரே சிறந்த தலைவராக விளங்க முடியும் என்றும், எனினும் இவ்வாறான குணாம்சங்களை மகிந்த ராஜபக்ச கொண்டிருக்கவில்லை என்றும், சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். பதிவு
-
- 0 replies
- 579 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் 19/09/2009, 13:14 திருமலை தம்பலகாமத்தில் நேரடி மோதலில் போராளிகள் இருவர் வீரச்சாவு! திருகோணமலை தம்பலகாமத்தில் கடந்த 05-09-2009 அன்று இரவு 8.15 மணிக்கு சிறீலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போது போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர். பதிவு
-
- 1 reply
- 834 views
-
-
கல்முனையில் இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் வீரகேசரி இணையம் 9/19/2009 10:04:25 AM - கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது. குறிப்பிட்ட வியாபாரிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்குச் சமூகமளிக்குமாறும் அறிவி…
-
- 0 replies
- 554 views
-
-
வடக்கு கிழக்கில் ஓர் பரந்து பட்ட ஒருங்கிணைந்த கூட்டமைப்பினை உருவாக்க முஸ்லிம் கட்சிகள் முன்வரவேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இற்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இரா சம்பந்தன். அவர் மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. தற்போதய சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறுபான்மை மக்களிற்கு உள்ள உரிமைகளை பெறுவதற்கு இது இன்றியமையாதது. முன்பு தமிழர் விடுதலை கூட்டணியின் இலட்சினையில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து தேர்தலில் பங்குபற்றியுள்ளன. ஆனால் தற்போது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரே எம்மில் உள்ளார். விடுதலைப்புலிகள் இருக்கும் போது தான் அதன் ஆதரவாளர்கள் எதிராளிகள் என இருபிரிவாக கட்சிகள் இருந்தன. ஆன…
-
- 0 replies
- 1k views
-
-
உலகத் தமிழர்களுக்கே முதல்வர் கருணாநிதி மீது வெறுப்பு : பழ. நெடுமாறன் வீரகேசரி இணையம் 9/19/2009 2:16:31 PM - "இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறினார் தமிழர் தேசீய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன். மதுரையில் இலங்கைத் தமிழர் குறித்து நடந்த சிறப்புக் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே பழ.நெடுமாறன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 6.5 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் ஈழத் தமிழர்கள் பெரிதும் துயருற்று வருகின்றனர். 3.50 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் உணவு, மருந்து, சுகாதார வசதியின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு …
-
- 0 replies
- 455 views
-
-
யுனிசெவ்" அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் ஜேம்ஸ் எல்டெர் தொடர்ந்தும் அங்கு பணிபுரிவதற்கான வாய்ப்பில்லை என்றும் அவர் நாளை மறுதினம் திங்கட்கிழமை (21ஆம் திகதி) நிச்சயமாக இலங்கையிலிருந்து வெளியேற வேண்டிவரும் எனவும் "யுனிசெவ்" அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை அரசு முன்வைத்த குற்றச்சாட்டுகள் "யுனிசெவ்" அமைப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளன என அந்த அமைப்பின் தென்னாசியாவுக்கான தொடர்பாடல் அதிகாரி சரா குரோ தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:ஜேம்ஸ் எல்டெர் ஏன் வெளியேற்றப்படுகிறார் என்பதற்கு இலங்கை அரசு முரணான காரணங்களைத் தெரிவித்துள்ளது. அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தார் என்பது உட்படப…
-
- 0 replies
- 371 views
-
-
போர் முடிவுற் றது என அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங் களிலும் அத்து மீறிக் குடியேற் றங்கள் மேற்கொள் ளப்படுகின்றன. இதனை உடன டியாகத் தடுத்து நிறுத்தக்கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் அனுப் பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டி ருப்பவை வருமாறு: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கெலனியாமடு, கச்சக்கொடி ஆகிய இடங்களில் சுமார் அறுபது சிங்கள மக்களுக்கான வீடுகள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படு கிறது. அத்துடன் வாகரைப் பிரதேச செய லாளர் பிரிவில் தோனிகாட்…
-
- 0 replies
- 480 views
-
-
மாத்தறை ராஜபக்ச நிதியம் மற்றும் மாத்தறை ராஜபக்ச பரம்பரை என்ற இரண்டு அமைப்புக்களின் தலைவராக செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை வேட்பாளர் அநுர குணரத்ன என்பவர் சாதிவாதத்தைத் தூண்டி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான அநுர குணரத்ன, திக்வெல்ல, அக்மன்ன, வெலிகம, தெனியாய தொகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிலரை அழைத்து கடந்த புதன்கிழமை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்போது கட்சி பேதங்களை பின்தள்ளி சாதிவாதத்தை முன்னெடுத்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது குறித்து அநுர குணரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். மாத்தறை அரசியலிலிருந்து ஷதுராவ என்ற சாதியினரை விரட்டியடிக்கும் தேர்தலாக இந்தச் சந்தர்ப்பத…
-
- 0 replies
- 576 views
-
-
இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரதிநிதி வோல்டர் கெலின் எதிர்வரும் புதன்கிழமை (23.09.09) சிறிலங்காவிற்கு செல்லவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
யாழ் களத்தில் எழுத்தப்படும் விமர்சனங்கள் , குறைகள் எல்லாம் உரியவர்கள் பார்த்து திருந்துகிறார்களா? அல்லது ஆக்க பூர்வமான பதில் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் வைக்கிறார்களா? யாழ் கள நிர்வாகத்திற்கு விமர்சிக்கப்படவர்கள் எதிர்த்து அல்லது தங்கள் சார்பாக பதில்கள் ஏது தருகிறார்களா? ஒரு மீளாய்வு தேவை அறிய விரும்புகிறோம். அல்லது நாலு பேர் வந்து சும்மா எழுதி விட்டு போகிறோமா? பலன்கள் இருக்கின்றனவா? எழுதப்படும் விமர்ச்னங்கள் வாய்வழியாக மக்களிடம் செல்கிறதா? அறிகிறார்களா? நன்றி
-
- 0 replies
- 647 views
-
-
இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர் ராஜ் ராஜரத்னம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியிருப்பது குறித்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாகவும், இதனை வெளியிடாதிருக்க பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே இந்தக் கப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கப்பப் பணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோரினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்போது மிலிந்த மொரகொடவும், பாதுகா…
-
- 1 reply
- 1k views
-
-
வைகறை, சென்னை 18/09/2009, 16:43 பாக்குநீரிணையில் சிறீலங்கா கடற்படையினரால் 21 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! பாக்குநீரிணையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தொரு தமிழக கடற்தொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு பாக்குநீரிணையில் அறுநூறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பீரங்கிக் கலங்களில் சூழ்ந்து கொண்ட சிறீலங்கா கடற்படையினர், மீன்பிடிப் படகுகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துக் கடற்தொழிலாளர்களை கடுமையாகத் தாக்கியதோடு, ஐந்து படகுகளையும் அதிலிருந்த இருபத்தொரு கடற்தொழிலாளர்களையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இதன்பொழுது அவசரமாக கரை திரும்ப முற்பட்ட ஏனைய மீன்பிடிப் படகுகள் …
-
- 4 replies
- 570 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 6 ஆயிரம் பேர் கடந்த வாரத்தில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இவர்களில் 580 பேர் மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர்களும் உடனடியாகவே வேறு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
வன்னியில் அரச கட்டுப்பாட்டு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கடந்த மே மாதம் சிறிலங்கா அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 415 views
-
-
சிங்களப் படையினரால் தமிழர்கள் விசாரணைகள் ஏதுமின்றி, மரண தண்டனைப் பாணியில் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலியை வெளியிட்டதற்காக 'சனல் - 4' நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனையில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
தமிழர்களின் நலன்களை காக்க இந்தியா, இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும் அமெரிக்க தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் எலிசபெத் பிட்ஸ்சிம்மொன்ஸ் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் எலிசபெத் பிட்ஸ்சிம்மொன்ஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் புனர்வாழ்வு பணிகளை அவர்களுக்கு கிடைக்கும்படி இலங்கை அரசிடம் இந்தியாதான் வலியுறுத்த வேண்டும். இந்தியா இலங்கை இடையே நல்லுறவு நிலவி வரும் நிலையில், இந்திய அரசு இப்பிரச்சினையில் தனது பங்கை மேலும் அதிகரித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். தமிழர்களின் நலன்களை காக்க இந்தியா, இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். …
-
- 0 replies
- 480 views
-
-
கான் என்ற பெயருடைய பிரபலங்களைக் கூட நாட்டிற்குள் பிரவேசிக்க சில மேற்குலக நாடுகள் அனுமதிப்பதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்ற வேண்டுமென கடும் அழுத்தம் கொடுத்து வரும் பல நாடுகள், இனவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 20,000 பயங்கரவாத சந்தேக நபர்கள் கலந்திருக்கும் முகாம்களை உடனடியாக விடுவிக்கக் கோருவது என்ன விதத்தில் நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வயம்ப அபினந்தன பாராட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது சர்வாதிகார கட்டளைகளை பிறப்பிக்கும் மேற்குலக நாடுகள், இலங்கை மக்கள் கடந்த மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தின் பிடியி…
-
- 0 replies
- 684 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணங்களையும், தடுப்புக்காவல் சம்பவங்களையும் உரிய முறையில் கையாளாதமை குறித்து பரவலான விமர்சனத்துக்குள்ளான செயலாளர் நாயகம் பான் கீ னின் ஐக்கிய நாடுகள் சபை நிர்வாகம் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக எழக்கூடிய விமர்சனங்களை தவிர்க்கும் முயற்சியில் தகவல்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்துவதுடன் கேள்விகள் கேட்கப்படுவதையும் மட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை ஊடகங்களுடன் பான் கீ மூன் வியாழக்கிழமை கேள்வி பதில் எதுவுமின்றி நடத்திய மாநாட்டில் இலங்கை விவகாரங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை வாசிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து பானின் பேச்சாளர…
-
- 0 replies
- 584 views
-
-
வன்னியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும்படி சிறிலங்காவை வலியுறுத்தி வருகின்ற மேற்குலக நாடுகள் சில மக்களின் இன அடையாளங்களை வைத்து அவர்களிடம் வேறுபாடு காட்டி வருகின்றன. கான் என்ற பெயர் இருந்தால் புகழ்பெற்ற நடிகர்களைக் கூட அவர்கள் விட்டு வைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முன் எப்போதையும் விட இப்போது அரசியல், பண்பாட்டு மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் என சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 440 views
-
-
சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் இணைந்து பரந்த கூட்டணியாகச் செயற்பட வருமாறு முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 429 views
-
-
நாட்டின் இறைமையும் மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட்டால் சிறிலங்கா எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திகளின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது என அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
சொந்த நிர்வாகம், வங்கிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவு என தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு ஒன்றிற்கான கட்டமைப்புக்களைக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனிநாடு ஒன்றைப் புலிகள் விரைவில் அறிவிப்பதற்கான முனைப்பில் இருந்தபோது அவர்களைத் தாம் அழித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 519 views
-
-
நடந்து முடிந்த இரத்தக் களரியான போரின்போது சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கொழும்பில் சிங்கள மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மேல்மாகாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவித்திருக்கும் படைத் தலைமையகம், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் சிறிலங்கா தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவி்த்திருக்கின்றது. தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க நினைவான அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் நாள் தொடக்கம் 7 ஆம் நாள் வரையில் நடைபெறவிருக்கும் கண்காட்சி மற்றும் 17 ஆம் நாள் தொடக்கம் 23 ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் தரைப்படையினரின் சாகச ம…
-
- 0 replies
- 710 views
-