ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
En tamilsk mann bosatt på Vestlandet skal være en av de mektigste lederne i den militante fløyen av LTTE-geriljaen på Sri Lanka, skriver Aftenposten. Tamilen har bodd i Norge siden 2005. Flere kilder peker ut mannen som en sannsynlig arvtaker etter LTTE-lederen Velupillai Prabhakaran, som ble drept i mai, skriver avisen. USA, EU og India er blant dem som ser på LTTE som en terroristorganisasjon. http://www2.nrk.no/teksttv/index.asp?chann...=0&page=106 நோர்வோக்கு 2005 ஆம் ஆண்டில் வந்து மேற்கு பகுதியில் வசிக்கும் ஒருவர் புலிகளின் புதிய தலைவர…
-
- 14 replies
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் நாயகம் செல்வராஜா பத்மநாதனைக்கைதுசெய்துகொண்டுவருவதில் அனைத்துலகச் சட்டங்களை மீறும் வகையில்அரசாங்கம் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சிறிலங்காவின் ஊடகத்துறைஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன, மிகவும் வேண்டப்படும் ஒரு சந்தேக நபரைக் கைது செய்வதற்குஅனைத்துலகத்தின் ஒத்துழைப்பை தாம் பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-
-
சர்வதேச நாணய நிதியக் கடன்களின் மூலம் நாடு இலங்கை மேலும் கடனாளியாக மாறியுள்ளதென தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த கடனின் அளவு 5 ஆயிரத்து 600 பில்லியனாக அமையப் பெறும் எனக் குறிப்பிடப்படுகிறது. கோப் கொடுக்கல் வாங்கல்களில் 150 பில்லியன் ரூபா பணமும், ஹெட்ஜிங் கொடுக்கல் வாங்கல்களின் போது 8 பில்லியன் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தினுள் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைத் தடுத்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திருக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டிருக்காது. தற்போது நாணய நிதியத்திடம் வாங்கியுள்ள நிதியினை அளிப்பதற்கு வரி வீதத்தை அதிகரிப்பதாக அளிக்கப்பட…
-
- 0 replies
- 682 views
-
-
விடுதலைப் புலிகளின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமது ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பத்மநாதன, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் ஹேட்டலில் விடுதலைப்புலிகளின் உயர் அதிகாரி ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவரது கைத்தொலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்ததாக பரவலாக செய்திகள் வெளியாகின. அவர் தொலைபேசியல் பேசிக்கொண்டே வெளியே வந்த போது அங்கு காத்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி முன…
-
- 0 replies
- 863 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலமாகவோ அல்லது குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதன் மூலமாகவோ புலிகளை முற்று முழுதாக அழித்து விட்டதாக கருதப்பட முடியாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடும், சில வேளைகளில் குண்டுகள் வெடிக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்கள் பீதியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு அரிய உண்மைகள் கிடைக்கப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 1.2k views
-
-
கேபி கைது: நாடுகள் இணைந்து நடத்திய ஆள் கடத்தல் இது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும். இலங்கையில் தமிழர்…
-
- 0 replies
- 846 views
-
-
செல்வராசா பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டாரா ? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மலேசியப் பிரதமர் இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, இதுகுறித்த விவரங்கள் என்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். வழக்கம் போல கேபி கைது செய்யப்பட்ட தகவலிலும் தமிழ் மக்கள் குழப்பமடைய வேண்டும் என்ற வகையில் இலங்கை அரசு இடத்தை நாட்டை மாற்றிக் கூறி வருவதோடு புதிய தகவல்களையும் கசிய விடுவதாக கூறப்படுகிறது. கோலாலம்பூரில் வைத்தே கேபி கடத்திக் கைது செய்யப்பட்டதாக புலிகள் கூறுகிறார்கள். அதே நேரம் இலங்கை தாய்லாந்தில் என்கிறது தாய்லாந்து பிதமரோ கேபி தாய்லாந்தில் கைது செய்யப்பட வில்லை என்கிறார். இதனால் மலேஷிய அரசு இது தொடர்பாக பல் வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் நிலையி…
-
- 0 replies
- 593 views
-
-
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பிரபல சவற்காரமான சன்லைட்டில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சன்லைட் சவற்காரமானது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காயெண்ணை மற்றும்பாம் எண்ணை என்பவற்றில் தயாரிக்கப்படுகின்றது.இதில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அமிலமான distilled fatty acid (DFAD) இத்தேங்காயெண்ணையில் கலந்து இவ்சவற்காரம் தயாரிக்கப்படுவதால் இக்கேடு ஏற்பட்டுள்ளது ஆகவே மக்கள் கவனமெடுக்கவும். http://paranthan.com/index.php?option=com_...9&Itemid=53
-
- 0 replies
- 833 views
-
-
வவுனியா நகர சபைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர சபையின் பிதாவாக எஸ்.என்.ஜி.நாதனை நியமித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 281 views
-
-
வவுனியா நகர சபைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபையின் தலைவராக எஸ்.என்.ஜி.நாதனை நியமித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
விசேட மருத்துவ சிகிச்சையொன்றுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) மாலை அவசரமாக சிங்கப்ப+ர் சென்றதாக அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காரணங்களுக்காக ஜனாதிபதியின் நோயைக் குறிப்பிட முடியாதெனவும், அவரது பாதுகாப்பைக் கருதி அவர் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையின் பெயரைக் கூறமுடியாதெனவும் அலரிமாளிகையின் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது. செப்டம்பர் 17ம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு கிரக நிலை சரியின்மை மற்றும் நோய்வாய்ப் படக்கூடிய வாய்ப்பிருப்பதாக இலங்கை மற்றும் இந்திய சோதிடர்கள் அநேகர் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், ஜனாதிபதி மிகவும் கலக்கமடைந்திருந்ததுடன், மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளத
-
- 2 replies
- 1.7k views
-
-
செய்தியாளர் தாயகன் 12/08/2009, 03:15 இடம்பெயர்ந்தவர் நலன் பற்றி கூறும் அருகதை றொபேட் ஒ பிளேக்கிற்கு இல்லை – கெஹெலிய வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் சிறீலங்கா அரசினால் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நலன்கள் பற்றி கருத்துக்உகூறும் அருகதை தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவிற்காக அமெரிக்காவின் உதவிச் செயலர் றொபேட் ஒ பிளேக்கிற்கு இல்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் நிலை பற்றி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஓ பிளேக், வரும் ஆண்டு நடைபெறவுள்ள சிறீலங்காவின் அதிபர் தேர்தல்வரைக்கும் சிறீலங்கா அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்காது விடின்…
-
- 0 replies
- 476 views
-
-
புதன்கிழமை, 12, ஆகஸ்ட் 2009 (12:13 IST) இலங்கை: வெடிகுண்டுகளுடன் இரண்டு பேர் கைது இலங்கை தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் சுற்றித் திரிந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மன்னார் மாவட்டம் உப்புகுளம் பகுதியில் வெடிகுண்டுகளுடன் ஒரு வேன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேனில் 20 குண்டுகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 5 கிலோ எடைகொண்டவை. தாக்குதல் நடந்தால் இவை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடந்த இந்த வேன் தயார்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு…
-
- 0 replies
- 486 views
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் இருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் பிரித்தெடுக்கப்படும் வரை முகாம்களில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் சட்டமா அதிபர் இது தொடர்பில் உயர் நீதி மன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் அரசாங்க அதிகாரிகள் முகாம்களில் உள்ள மக்கள் மத்தியில் இருந்து புலிகளை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னரே மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சட்டமா அதிபர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாற்று கொள்கைகளுக்கான நிலையம் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களி…
-
- 3 replies
- 705 views
-
-
இலங்கையில் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருமணம் செய்யக் கூடிய வயதெல்லையை குறைப்பதற்கு தேவையான சட்டப் பின்னணியை அரசாங்கம் உருவாக்க உள்ளது. தற்போது இலங்கையில் காணப்படும் திருமண சட்டத்தின் அடிப்படையில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களே திருமணம் செய்து கொள்ள முடியும். எனினும், 16 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சட்ட மூலம் மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 16 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் தங்களது பெற்றோரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது உள்ள சட்டத்தின் பிரகாரம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூர்யவை அந்நாட்டுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் கேதி லுக்மன் அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 06/08/2009, 04:24 ஐரோப்பா செல்லவுள்ள கருணா, பிரித்தானியாவுக்கும் செல்ல முடியுமாம் துணைப்படைக் குழுவின் தலைவரும், அந்தஸ்து அற்ற அமைச்சருமான கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன், விரைவில் ஐரோப்பாற்விற்குப் பயணம் மேற்கொண்டு துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களையும், அரசு ஆதரவு ஒட்டுக் குழுக்களையும் சந்திக்கவுள்ளார். பிரித்தானியாவில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அந்த நாட்டிற்கும் செல்ல முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் என்ற அடிப்படையில் செல்ல முடியும் என்றே தான் கருதுவதாக முரளீதரன் பதிலளித்துள்ளார். இதேவேளை, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைத்துத் தமிழ் - முஸ்லீம் கட்சிகளையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் திடீரென முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் வெளியிடுவதற்கு செய்திகள் இன்றி சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் திணறி வருகின்றன என்று 'இன்ரர் பிறஸ் சேவை' எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், கடலோரப் பகுதிகளில் இடம்பெயரக்கூடிய தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடலோரப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 288 views
-
-
சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்தில் உள்ள படைத்துறை நிலையங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசும் காவல்துறையினரும் மிக உச்ச அளவில் இரகசியம் பேணியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 282 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதிக்குள் இந்தியா - சிறிலங்கா இடையே கைச்சாத்திடப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 286 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை நேற்றைய நாள் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, அது ஆதாரம் அற்றது எனவும் தவறான தகவல்களைக் கொண்டது எனவும் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 291 views
-
-
சிறிலங்கா அரசு அண்மையில் நடத்திய உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வாக்களிக்கச் செல்லாமல் தவிர்த்ததன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசை வடபகுதி மக்கள் நிராகரித்துள்ளனர் என்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 480 views
-
-
இலங்கையின் வடபகுதி தமிழர்கள் சார்பில் பேசுவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக்குக்கு என்ன உரிமை இருக்கிறது என சிறிலங்கா கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளரும், புதிய தலைவருமான குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்காக இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவின் நான்கு அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரிப்பதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே அவர்களது கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளைச் …
-
- 0 replies
- 671 views
-