ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142935 topics in this forum
-
இன அழிப்பு மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தில் நேபாள அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது கண்டனத்திற்குரியது என நேபாள தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவற்றின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன அழிப்பு மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தில் நேபாள அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது வருந்ததக்கது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை போரியல் குற்றம் தொடர்பாக விசாரணைகள் …
-
- 3 replies
- 553 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம், சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
விடுதலைப்புலிகளின் இராணுவப் பலத்தை முறியடித்துள்ளதாக இலங்கை அரசு கடந்த மாதம் 18 ஆம் நாள் தெரிவித்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதல் வெளிநாட்டு பயணத்தை பர்மாவுக்கு மேற்கொள்ளவிருக்கிறார். பர்மாவானது மேற்குலகத்தையும், இந்தியாவையும் முற்றாக புறம்தள்ளி சீனாவின் பிடிக்குள் உள்ள நாடு. அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்குலகம் நடவடிக்கைகளை எடுக்க முனைந்த போதெல்லாம் சீனா தனது அதிகாரங்களை பயன்படுத்தி பர்மாவை காப்பாற்றி வந்துள்ளது. சீனாவுடன் இலங்கை நெருங்கிய உறவுகளை வளர்த்து வருகையில் சீனாவின் உற்ற நட்புநாடாக விளங்கும் பர்மாவையும் இலங்கை அணைத்துக் கொள்ள முனைகின்றது.இலங்கைக்கும் பர்மாவுக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நெருக்கங்களுக்கு அப்பால்…
-
- 0 replies
- 576 views
-
-
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெயர்ந்து மன்னார் முசலிப் பகுதி மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ள சிறிலங்கா அரசாங்கம் யாழ். மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்கு மக்களை ஏன் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிறிலங்கா அரசாங்கம் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 29 ஆவது சதுர மைல் பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியமையால், அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து இன்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இப்பிரதேசத்தில் வாழ்ந்த 20 ஆயிரம் மக்கள் இன்று வரை தடுப்புக் கிராமங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் தமது சொந்தக…
-
- 0 replies
- 371 views
-
-
இரண்டு தசாப்தங்களாக கிழக்கு மாகாணக் கரையோரங்களில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூறினார். எனினும், சிறிய படகுகள் தவிர்ந்த ஏனைய மீன்பிடிப் படகுகள் மாத்திரம் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் பகல் நேரங்களில் மாத்திரம் அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிறிய படகுகள் அதிகாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரையே மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படும் எனவும், வெளியிணைப்பு மோட்டார்கள் பொருத்தப்பட்ட சிறிய படகுகள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவும் நீக்கப்பட்டுள்ளது. சிறிய படகுகள் துறைமுகத்தின் ஊடாகப் பயணம் செய்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவது குறித்து அரச…
-
- 0 replies
- 418 views
-
-
இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயற்படும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருக்கின்றார். இலங்கையில் இராணுவ நடவடிக்கை இப்போது முடிவடைந்துவிட்டது. இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களின் அவாக்களை நிறைவேற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதில் ஈடுபாட்டுடன் இருப்பதை இப்போது இந்தியாவால் எவ்விதம் உறுதிப்படுத்த முடியும் என 'அவுட் லுக்' இதழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிருஸ்ணா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இக்கேள்விக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள பதில் வருமாறு: நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் ம…
-
- 0 replies
- 514 views
-
-
சர்வதேச சதியை புரிந்துகொள்வோம் - சுவிசிலிருந்து துருவாசன் - தோல்வியில் இருந்து மீண்டெழுதல், இன்றைய வரலாற்றுக் கடமை இது 'இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி." இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து. இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறாகிறது. அதேவேளை, நடந்து போன துயரமான நிகழ்வுகள் வெறும் வரலாறாக மட்டும் இருந்துவிட முடியாது. அவை, எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் செம்மையான, திருத்தமான செயற்பாடுகளை நோக்கி முன்செல்ல முடியும். வன்னியில் கடந்த மே 19 ஆம் திகதி முடிவுக்கு வந்த போர் தமிழினத்தின் வரலாற்றில் மிக மோசமான வடுவாக மாறிவிட்டது. இதன் தாக்கத்தில் இருந்து - …
-
- 13 replies
- 2.9k views
-
-
ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று புலம்புபவர்கள் இந்த காணொளியை தயவு செய்து பார்க்கவும். அந்த கொலைக்கு பின்னாலே இருக்க கூடிய "வல்லாதிக்க சக்தி" யார் என்பதை நீங்களே உணர்வீர்கள். காணொளி நான்கு பகுதிகளாக உள்ளது... http://www.kuraltvinfo.com/video-truth-1.html
-
- 2 replies
- 4.7k views
-
-
பணத்தால் வெல்வதை விட தோற்றுப் போவது மேல் : வைகோ on 14-06-2009 17:59 Published in : செய்திகள், தமிழகம் ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் மதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவ வீரர்களால் தோற்கடிக்கப்படவில்லை. இந்திய அரசின் துரோகத்தால், தோற்கடிக்கப் பட்டுள்ளனர். அது தான் உண்மை. இந்திய அரசு, சிங்கள அரசோடு சதி செய்து, யுத்தம் நடத்தியது. விடுதலை புலிகளுக்கு எந்த …
-
- 0 replies
- 920 views
-
-
பெனடிக் பற்றிக் ஒரு சிறிலங்கா புலனாய்வு உத்தியோகத்தர் இவர் மிகவும் தேர்ச்சி பெற்ற அதிகாரியாவர்.இப்போ தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி கனடாவில் செயல்படுகிறார்,இவரைபோல பலர் மாணவர்களாகவும் சாதாரண மக்களைபோலவும் வர்த்தகர்களாகவும் முதற்கட்டமாக கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடிவரவு விதிகளுக்கு அமைய விசா பெற்று வந்துள்ளனர்.இவர்களின் முதல் நோக்கம் எம்மை சிறு சிறு குழுக்களாக சிதற வைப்பதேயாகும்.இவர்கள் வெளி நாடுகளில் உள்ள அரச புலனாய்வாளர்களுடன் தாராளமாக நடந்துகொள்கிறார்கள்,ஆகவே மிகவும் அவதானம்
-
- 9 replies
- 2.7k views
-
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் முகாம்களில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியிருக்கும் மாணவர்களில் ஆயிரத்து 454 பேர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக, கல்வி அமைச்சினதும், முகாம்களினதும் கல்விச் செயற்பாட்டு இணைப்பாளரான கல்வியமைச்சின் முதுநிலை ஆலோசகர் தணிகாசலம்பிள்ளை தெரிவித்தார். இந்த நிலையில், இந்த மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் கொப்பிகள் ஆகியவற்றை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், இந்த மாணவர்களுக்கான கற்கைநெறிகள் முன்னெடுக்கப்படவிர…
-
- 1 reply
- 597 views
-
-
2006 நவம்பர் மாதம் புலிகளால் கைது செய்யப்பட்ட 7 இலங்கைக் கடற்படையினரில் சமிந்த குமார ஹெவாஜ் என்பவரும் ஒருவர். வன்னியில் இறுதிக்கட்ட சண்டைவரை இந்த 7 பேருக்கும் ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்த புலிகள், கடந்த மே 17 இல் அவர்களை விடுவித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர் பி.பி.சி இன் சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ளார். போர்க்கைதிகள் அனைவரும் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போதும், இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களால் அவை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததாகக் கூறும் சமிந்த குமார, இறுதி நேரத்தில் துப்பாக்கி ரவைகள் சில தமது பதுங்கு குழிக்குள் விழுந்ததாகவும் கூறியுள்ளார். புலிகளால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் அனைவரையும் சர்வதேச செஞ்சிலு…
-
- 1 reply
- 2.8k views
-
-
செம்மலை, வழுதி, தயாமோகன், பத்மனாதன் அண்ணார்…என இன்னும்சில பெயர்கள் ஈழ விடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார். தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். பன்னாட்டு பேச்சாளர் பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை உலகத்தமிழர்கள் உருவாக்க வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும் விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர் இயக்கத்தை சேர்ந்தவர்க…
-
- 0 replies
- 2k views
-
-
14/06/2009, 11:46 [செய்தியாளர் தாயகன்] பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் தமிழ் மக்களை ஓரம்கட்டுகின்றன பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் தமிழ் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும், ஓரங்கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, பணம் சம்பாதிக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், அவர்களின் பிரச்சினைகளை முறையாக அணுகாது தவிர்த்து வருகின்றன. சிறீலங்கா அரசின் போர்க்குற்றம் பற்றியும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அடிக்கடி அறிக்கை வெளியிடும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன, தமிழர்களின் பிரச்சினையை முறையாக அணுகத் தவறி வருகின்றன. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் தமது கூட்டங…
-
- 1 reply
- 772 views
-
-
14/06/2009, 11:33 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] மலேசியர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு? கொழும்பில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட மலேசியர்கள் இருவருக்கும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என, சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வெள்ளவத்தை 37வது ஒழுங்கையிலுள்ள விடுதியில் கடந்த மூன்று மாதங்கள் தங்கியிருந்த இவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களது அறையை சோதனை செய்துள்ளனர். இதன்போது பரப்புரைக்குப் பயன்படுத்தப்படக்கூடிய விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாக, காவல்துறையினர் கூறுகின்ற போதிலும், உண்மை நிலையினைக் கண்டறிய முடியவில்லை. pathivu
-
- 1 reply
- 1k views
-
-
பிரித்தானியாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கை மாணவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த அச்சல டடல்லகே என்ற இளம் மாணவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கெலி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக இவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 22 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. சிறைத்தண்டனை முடிவடைந்ததன் பின்னர் குறித்த இலங்கை மாணவர் நாடு கடத்தப்படுவர் என பிரித்தானிய நீதவான் அறிவித்துள்ளார். கெலி பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக அசல ஒப்புக் கொண்டுள்ளார். அதிக மதுபோதையில் இருந்த காரணத்தினால் அசல இந்தக் குற்றச…
-
- 0 replies
- 1.7k views
-
-
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவினதும், மனித உரிமை கண்காணிப்பகத்தினதும் உயரிய விருதினை பெற்றுள்ள சுனிலா அபேயசேகர அம்மையார், சிறிலங்காவின் மனித உரிமைகள் பாதுகாப்பாளராகவும், 'INFORM' எனும் அமைப்பின் பிரதான இயக்குனராகவும் செயற்பட்டு வருபவர். அத்துடன், சிங்கள இனத்தவர்களாளும், தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நபர். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் 300,000 மக்களை இவ் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தப்படுவதையும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமைகளை மீறும் வன்முறைகள் பற்றியும், தமது நேரடி அனுபவங்கள் மூலம் உலகெங்கும் எடுத்துரைக்கிறது இவருடைய 'INFORM'அமைப்பு. 'Real News' இன் சார்பாக ஷார்மினி பீரிஸ் அம்மையாரின் தொகுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மைக்கால போர் அனர்த்ததினால் பெற்றோரையும் உறவுகளையும் இழந்து சொல்லொணா துயரத்தில் வாடுகிறார்கள் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்.கடந்த 6 மாத கலத்துக்கு மேலாக அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள்,உடன்பிறப்புகள் உயிரோடு உள்ளார்களா?இல்லையா? என தெரியாமல் மன உளச்சலோடு நிம்மதியாக கல்வியை தொடர முடியாமல் பெரிதும் துன்பப்பட்டார்கள்.எந்தவிதமா
-
- 0 replies
- 551 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 14, ஜூன் 2009 (14:10 IST) இலங்கை அவலம்:பட்டினியால் 30 பேர் பலி: 3 லட்சம் பேர் தவிப்பு கொழும்பை தலைமையிடமாக கொண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதன் நிர்வாக இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ’’இலங்கையின் வடக்கில் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 40 முகாம்களில் தமிழர்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக உள்ளனர். இந்த முகாம்களில் உள்ளவர்களில் 30 பேர் பட்டினி யாலும் ஊட்டச்சத்து குறைவாலும் இறந்துள்ளனர். இதை வவுனியா மாவட்ட கலெக்டரே அதிகாரபூர்…
-
- 0 replies
- 561 views
-
-
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 11 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை திட்டமிட்டு மறைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மண்டபத்தில் கூட்டத்தினை நடத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 11 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட அனைத்துலக பொது நம்பிக்கைக்கான அமைப்பு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை திட்டமிட்டு மறைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மண்டபத்தில் கூட்டத்தினை நடத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
14/06/2009, 02:50 மணி தமிழீழம் ] சிறிலங்காவில் 50,000 இராணுவர்கள் புதிதாகச் சேர்க்கப்படவுள்ளார்கள் விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசு தான் வெற்றி பெற்றுவிட்டது என்று கூறியிருந்த போதும், சிறிலங்கா பாதுகாப்பு, கடல் மற்றும் வான் படைகள், தொடர்ந்து புது ஆட்களைச் சேர்க்கும் என்றும், விரைவில் 50,000 இராணுவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக இராணுவத்தைச் சேர்த்தல் ஆனது ஏற்கனவே நாடெங்கிலும் நடந்து கொண்டுள்ளதென்று, அரசு தற்காப்பு பேச்சாளர், அமைச்சர், கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது படைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், தற்போது கைப்பற்றிய இடங்களில் அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு இறுக்கமான பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்வத…
-
- 3 replies
- 663 views
-
-
14/06/2009, 11:37 மணி தமிழீழம் [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] மகிந்தவின் 18 பயணங்கள் - 20 கோடி 93 இலட்சம் செலவு சிறீங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட 18 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 20 கோடி 93 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 14 நாடுகளுக்கான 18 பயணங்களுக்கு இவ்வளவு நிதி செலவாகி இருப்பதாக, அரசின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றில் தெரிவித்தார். இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டபோது மகிந்தவுடன் மொத்தம் 711 பேர் உடன் பயணித்திருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, யப்பான், கியூபா, அமெரிக்கா, பிரித்தானியா, மாலைதீவு, இத்தாலி, சுவிற்சர்லாந்து, பர்படோர்ஸ், ஜோர்தான், குவைத், …
-
- 0 replies
- 382 views
-
-
நான்கு நாட்களுக்குள் இரண்டு பிரதான ஆயுதக் களஞ்சியங்கள் அழிந்து போனது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவங்கள் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மயிலிட்டி மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள படையினரின் ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் தொடர்பாக படைத்தரப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளது. நான்கு நாட்களுக்குள் இரு பிரதான ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட அழிவுகளினால் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்கள் அழிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இது விபத்தா அல்லது சதி நடவடிக்கையினால் ஏற்பட்டதா என்ற விசாரணைகளை படைத்தரப்பு தொடங்கியுள்ளது. …
-
- 9 replies
- 1.4k views
-