ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும், சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. விசாரணை ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மனித உரிமை மீறல் விசாரணைகளில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் விசேட …
-
- 0 replies
- 559 views
-
-
வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன் ஆறு படையினர் காயமடைற்துள்ளனர். மணலாறு ஜனகபுரப்பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1.15 மணிக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார். ஆண்டான்குளத்தில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர். ஜனகபுரப்பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் 10.15 மணியளவில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். வவுனியா பெரியமடுப் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்ற மோதலில் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தகவலை சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்ட…
-
- 0 replies
- 624 views
-
-
சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் தேவகுமாரின் படுகொலை குறித்து பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் சங்கம் தனது கடுமையான அதிர்ப்த்தியை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, காணாமல் போவது, தாக்கப்படுவது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்பு கோரியுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் தேவகுமாரின் கொலைத்தொடர்பில், எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்ற போதும் சந்தேகத்தின் பேரில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என யாழ்ப்பாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 693 views
-
-
அனைத்துலக நாடுகள் கடைப்பிடித்து வரும் சிறிலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியமானது என்று சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (30.05.08) வெளிவந்த "நிலவரம்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் செயற்குழுவில் மீள் நியமனம் பெற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுள் 101 நாடுகளே சிறிலங்காவின் மீள் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஏனைய 91 நாடுகளும் ஆதரவு தெரிவிக்கத்தவறியதால் சிறிலங்கா தனது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றது. …
-
- 0 replies
- 550 views
-
-
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படைத்தளத்தை அழித்து கடற்புலிகளின் கொமாண்டோக்கள் கைப்பற்றிய கடற்படையினரின் 3 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்பாணம் பருத்தித்துறையில் இனத் தெரியாத ஆயுததாரிகளினால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார. பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் இன்று காலை இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்வம் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 28 அகவையுடைய ஜெயசிங்கன் விக்னேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரண விசாரணைகளை விசாரணை செய்த பருத்தித்துறை மேலதிக நீதியாளர் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மந்திகை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி: பதிவு
-
- 0 replies
- 845 views
-
-
கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக, விரயமாகும் சுமார் 40 பில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் கடுபெத்த, பேலியகொட, நுகேகொட ஆகிய இடங்களில் 3 வாகனத் தரிப்பிடங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் தினசரி சுமார் 175,000 மோட்டார் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் நுழைவதை குறைக்கமுடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, முதலாவது வாகனத் தரிப்பிடம் இரத்மலானை கடுபெத்தவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசரியர் அமால் குமாரகே தலைமையில், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய மதிப்பீட்டையடுத்தே இந்தத்…
-
- 0 replies
- 923 views
-
-
இலங்கையின் நீர்த் தேக்கங்களின் பாதுகாப்பு மற்றும் பழைய நீர்த்தேக்கங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நீர்த் தேக்கங்களின் புனரமைப்புக்காகவும் பரமரிப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதி செலவிடப்படவுள்ளது. அத்துடன் கால நிலை அவதான நிலைய தகவல் தொடர்பாடலில் புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்காக செலவிடப்படவுள்ள முழுத்தொகை 71.66 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். செய்தி: பதிவு
-
- 0 replies
- 711 views
-
-
சார்க் வலய நாடுகளில் எச்.ஐ.வி., எயிட்ஸ் தடுப்பு பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான நல்லெண்ணத் தூதுவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். காத்மண்டுவில் அமைந்துள்ள சார்க் நாடுகளுக்கான செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கான இந்த கௌரவப் பதவியை வகிக்கவுள்ள அவர், எச்.ஐ.வி., எயிட்ஸ் தடுப்பு பிரசார நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட காலப் பகுதியில் சார்க் வலய நாடுகள் அனைத்துக்கும் விஜயம் செய்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வலய நாடுகளில் பொது மக்களைச் சந்திப்பதன் மூலம் எச்.ஐ.வி, எயிட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதே அவருக்குள்ள பணியாகும் என்று அறி…
-
- 0 replies
- 755 views
-
-
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் ஆராய்வதற்காக சிறீலங்காவின் பாதுகாப்பு படையினரின் உயர்மட்டக் குழுவினர் கிழக்கு மாகாணத்திற்குப் பயணித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேற்று கிழக்கி மாகாணத்திற்கு பயணம் செய்துள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு முறுகல் நிலையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைவரங்களை அவதானிப்பதற்காகவே கோத்தபாயவின் பயணம் அமைந்திருந்திருந்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களது பயணத்தின் போது கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு தொடர்பில் அதிரடிப…
-
- 0 replies
- 750 views
-
-
சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலி ரோம் நகருக்குப் பயணம் செய்கின்றார். ரோமில் நடைபெறும் உலக உணவு மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது. எதிர்வரும் யூன் 2ம் நாள் தொடக்கம் 3ம் நாள் வரை நடைபெறவிறவிருக்கும் உலக உணவு மாநாட்டில் மகிந்த ராஜபக்ச சிறப்புரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் சிறீலங்காவின் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறீசேன மற்றும் கால்நடை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஆகியோரும் பணயம் செய்கின்றனர். செய்தி: பதிவு
-
- 0 replies
- 668 views
-
-
யாழ்ப்பணம் கல்லுண்டாய் வெளியில் நேற்று முன்தினம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்ட "சக்தி' ஊடகவியலாளர் ப.தேவகுமாரின் பூதவுடல் நேற்றுமாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை கடமை முடிந்து வீடு திரும்புகையில் கல்லுண்டாய் வெளியில் வைத்து இவரும் இவரது நண்பரான மகேந்திரன் வரதன் என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட தேவாவின் உடல் பிரேத பரிசோதனைகளின் பின் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதையடுத்து, வட்டுக்கோட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க தமது இறுதியஞ்சலிகளைச் செலுத்தினர். இறுதியஞ்சலிகள…
-
- 0 replies
- 833 views
-
-
கடத்தப்பட்ட கொழும்பு விவேகானந்தா கல்லூரி மாணவனான ரவீந்திர குமார் சுபஷிராவன் (7வயது) நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். இம்மாணவனை நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அவர் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்புக்கு முன்னால் வைத்து கடத்திச் சென்றவர்கள் விடுவித்துள்ளனர். ஆட்டோ வாகனத்தில் இவர் கொண்டுவந்து விடப்பட்டதாக அச்சிறுவன் தெரிவித்ததாக அவரது தாயார் கூறினார். கடத்தலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வீடு ஒன்றிலேயே கடத்தியவர்கள் தடுத்து வைத்ததுடன், உணவும் அளித்ததாக தனது மகன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய, பொலிஸ் அதிக…
-
- 0 replies
- 662 views
-
-
யாழ். குடாநாட்டில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரும் அவரது நண்பரும் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பமானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "சக்தி' தொலைக்காட்சியின் யாழ்ப்பாணப் பிரதேச செய்தியாளர் ப. தேவகுமாரன் மற்றும் அவரின் நண்பரும் கணினி தொழில் நுட்பவியலாளருமான ம. வரதன் ஆகிய இருவரும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரமாக செயற்படும் குடாநாட்டு ஊடகவியலாளர்களை இனங்கண்டு அழித்தொழிக்கும் அராஜக அடக்குமுறையின் இன்னுமோர் நடவடிக்கையே இ…
-
- 0 replies
- 665 views
-
-
2009ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதனால் தேர்தலுக்கு தயாரான நிலையில் இருக்குமாறும் அவர் செயற்குழு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், அதன் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது. மாகாண சபைகளில் பதவி காலம் 2009ஆம் ஆண்டு முடிவடைவதுடன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2010ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில் வெற்றிடமாக உள்ள கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கான பதவிக்குரியவர்களை நியமிக்குமாறும் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால ச…
-
- 0 replies
- 627 views
-
-
ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைக் கலாசாரத்தையும் நாட்டு மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அடிப்படை உரிமைமீறல்களையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களைக்காப்பாற்ற முடியும். இதற்காக ஐக்கிய தேசியக்கட்சி தனது உயிரையும் பணயம் வைத்து போராடத் துணிந்து விட்டது. மலிந்து கிடக்கும் ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரப் போவதாகவும் அவர் கூறினார். பிரட்ரிக் ஹியூமன் என்ற நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக ஜேர்மனி சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ந…
-
- 0 replies
- 631 views
-
-
வன்னியில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வில் படையினரால் ஜானகபரத்தின் வடக்கேயுள்ள விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத பரிமாற்று தளமான முன்னாகம் படைத்தளம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி நாளேடு
-
- 0 replies
- 944 views
-
-
இலங்கை இராணுவத்தினர் இதுவரை பயன்படுத்தாதக துப்பாக்கி ஒன்றை திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வெள்ளை இரும்பினால் வடிவமைக்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை மூதூர்வாசி ஒருவரிடம் இருந்து கைப்பற்றியதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துருப்பிடிக்காத இந்த துப்பாக்கி மூலம் குண்டுகளையும் எறிய முடியும் எனவும் இதனை போன்ற துப்பாக்கியை இலங்கை இராணுவத்தினர் இதுவரை பயன்படுத்தியதில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த துப்பாக்கி வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில்; கைதுசெய்யப்பட்ட நபர் மத்திய கிழக்கில் தொழில்புரிநதவர் எனவும்,…
-
- 1 reply
- 6.2k views
-
-
வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்ய சபிக்கப்பட்வர்களாவர் - இது ஜேர்மனிய சிந்தனையாளர் ஜோஜ் சத்நயணாவின் வார்த்தை. சமீப காலமாக சிங்களத்தின் இறுமாப்பு நிறைந்த வார்த்தைகளை கேட்க நேரும் போதெல்லாம் நான் இந்த வரிகளை நினைத்துக்கொள்வதுண்டு. உலக மேலாதிக்க அரசியல் வரலாற்றில் இந்த வரிகள் யாருக்கெல்லாம் பொருந்திப் போகும் என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் ஒடுக்குமுறைகளின் ஏகபோகவாதிகளாக எப்போதுமே இருக்க முடியும் என நம்புவோருக்கெல்லாம் இந்த வரிகள் பொருந்தும். சிங்களத்தின் நவீன அரசியல் வரலாறு என்பதே தமிழர்களை அடக்கி ஆண்டதன் வரலாறுதான். ஓவ்வொரு கால கட்டத்திலும் தெற்கின் ஆட்சியைக் கைப்பற்றும் சிங்கள ஆளும் வர்க்கம் அந்த ஒடுக்குமுறை வரலாற்றைத் தொடர…
-
- 2 replies
- 770 views
-
-
கட்சிக் கிளைகளைப் புனரமைக்க ஜே.வி.பி. தலைவர் ஐரோப்பா பயணம் Friday, 30 May 2008 ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஐரோப்பாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை பயணமானார். ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளராகவும், நாடாளுமன்றக்குழுவின் தலைவராகவும் இருந்த விமல் வீரவன்சவின் வெளியேற்றத்தின் பின்னர் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கட்சியின் சர்வதேசக் கிளைகளுக்கு விளக்குவதும் அவற்றை மீள ஒழுங்கமைப்பதும்தான் அவருடைய விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடன், டென்மார்க், ஜேர்மனி மற்றும் பிரத்தானியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சோமவன்ச அமரசிங்க, அந்த நாடுகளிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைகளை புனரமைப்புச் செய்யும் நடவட…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதும் அதற்கு ஆட்சி அதிகாரப் பொறுப்பில் யார் பின்னணி என்பதும் இப்போது அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது. பாதுகாப்புப் படைத் தரப்பில் இடம்பெறும் தில்லுமுல்லுகள் மற்றும் குளறுபடிகளை அம்பலப்படுத்திய "த நேஷன்' வார இதழின் பிரதி ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு நையப்புடைக்கப்பட்டிருக்கின
-
- 0 replies
- 555 views
-
-
மந்திகையில், கரவெட்டி இளைஞன் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 5/30/2008 8:40:46 AM - யாழ் பருத்தித்துறையில் மந்திகை வைத்தியசாலை அருகில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்று காலை 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் கரவெட்டி இராசகிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியாகிய ஜெயசிங்கன் விக்னேஸ்வரன் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்திய பருத்தித்துறை மாவட்ட மேலதிக நீதவான் எம்.எக்ஸ்.அலெக்ஸ்ராஜாவின் உத்தரவுக்கமைய சடலம் மந்திகை வை;தியசாலையில் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவபினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை பொலிசார் தெரிவித…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழீழ போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு இந்திய அரசால் தான் தீர்வு காண முடியும். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மன்னார்ப் பகுதியில் எண்ணெய்க் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதி அளிப்பதால் இந்தியக் கடற்பகுதியின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் உறுப்பினா சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ராமேஸ்வரம், தனுஷ்கோடி அசிச்சல் முனைக் கடற்கரைப் பகுதிக்குச் சென்று அகதிகள் வந்திறங்கும் மணல் திட்டுப் பகுதிகளைப் பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தர். மேலும், அவர் அங்கு கூறியதாவது இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத்தினரின் கொலை வெறித்தாக்குதல்களை இலங்கை அரசு ஊக்குவிக்கின்றது. இனப்பிரச்சினை…
-
- 0 replies
- 770 views
-
-
வெடி மருந்துகளுடன் பௌத்த பிக்கு ஒருவர் இன்று (மே29) கைதுசெய்யப்பட்டுள்ளார். தென் மாகாணத்திற்கான அதிவேக பாதை அமைக்கப்பட்டு வரும், பிரதேசம் ஒன்றில் உள்ள விகாரையில் இருந்து இந்த வெடிப் மருந்துகள் மீட்க்கப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்தேகம திலக உதாகம என்ற பகுதியில் உள்ள விகாரையில் இருந்து 43 கிலோ கிராம் டயமையிட் மற்றும் 233 கிலோ கிராம் ஆமோனியம் ஜதரட்டு மற்றும் 22 கிலோ கிராம் கல்வெடிகள் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 991 views
-
-
எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த யூதர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க "புல்மஸ் நடவடிக்கை"யைப் போன்று கடற்புலிகளின் சிங்களத்தின் "சிறுத்தீவு" தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-