ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
""டெய்லிமிரர்'' ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரைச் சந்தித்த பிரிட்டிஷ் தூதுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு. ஏப்.20 பாதுகாப்புச் செயலாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக் கப்பட்டவர் என்று கூறப் படும் "த டெய்லி மிரர்' பத்திரிகை யின் ஆசிரியரான செல்வி சம்பிக்க லியனாராய்ச்சியை நேரில் சென்று சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்த கொழும் புக்கான பிரிட்டிஷ் தூதுவர், அடுத்த நாளான நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட் டார். இவ்வாறு ஏ.எவ்.பி.செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டிருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ குறுகிய கால முன்னறிவித்தலோடு பிரிட்டிஷ் தூது வர் டொமினிக் சில்கொட்டை, பாதுகாப்பு அதிகம் நிறைந்த தமது அலுவலகத்துக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சனி 21-04-2007 03:07 மணி தமிழீழம் [தாயகன்] நோர்வேத் தூதுவர் - நிமால் சந்திப்பு விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்க அரசாங்கத்துக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் நோர்வேத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், அரசாங்க சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பற்றி நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை கிளிநொச்சி செல்லவிருக்கும் ஹான்ஸ் பிரட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் ச…
-
- 0 replies
- 674 views
-
-
படகு அகதிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; அமெரிக்கா சென்று வாழ்வதற்கு வசதி சிட்னி,ஏப்.19 அகதி அந்தஸ்து கோரும் பொருட்டு ஆஸ்திரேலியா நோக்கிப் படகில் சென்ற வேளை பிடிபட்டு இப்போது பசுபிக் தீவான நவ்றுவில் தங்கவைத்து விசாரிக்கப்படும் 83 இலங்கைத் தமிழர்களும் அமெரிக்காவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்பாராத திருப்பமும் வாய்ப்பும் கிடைத்துள்ளன. வாஷிங்டனில் கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் கைச்சாத்தான "பரஸ்பர உதவி ஒப்பந்தம்' இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகக் கிடைத்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், "நவ்று' தீவில் வைத்து விசாரிக்கப்படும் 83 இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவில் அகதிகளாக ஏற்றுக்குடியமர்த்தப்படுவர். அதே போன…
-
- 23 replies
- 4.3k views
-
-
மகிந்தரின் கிழக்குப் போர் விரைவில் முட்டுச் சந்திக்கு வரும்? [19 - April - 2007] சங்கரன் சிவலிங்கம் (கனடா) தமிழ் மக்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல, சர்வதேச நியமங்கள், விழுமியங்களையும் புறக்கணித்துவிட்டு ஷ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது மிலேச்சத்தனமான யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத்தினால் மட்டக்களப்பின் படுவான்கரை பகுதி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 3 replies
- 2.4k views
-
-
வெள்ளி 20-04-2007 20:12 மணி தமிழீழம் [சிறீதரன்] ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு அலையும் இளைஞர் யுவதிகள் யாழ் மாவட்ட ஈ,பி.டி.பி அலுவலகத்திற்கு யாழ் குடாநாட்டின் இளைஞர் யுவதிகள் அலைந்து திரியும் நிலமை கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் தென்றல் ஒலிபரப்பில் இடம்பெறும் இதயைவீனை நிகழ்ச்சி மூலம் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களின் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த இளைஞர், யுவதிகள் நாளாந்தம் அலைந்து திரியும் நிலமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே குறிப்பிட்ட நியமனங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி கிராம மட்டத்தில் சிலரிடம் ஈ.பி.டி.பியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில ஆதரவாளர்களும் பலஆயிரம் ரூபாக்களை லஞ்சமாகப் பெற்றுள்ள…
-
- 1 reply
- 1.6k views
-
-
வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன். சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால், அதன் விளைவு பார தூரமாக அமையும் என, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும், அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும், தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார். நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மு…
-
- 11 replies
- 2.6k views
-
-
சிறீலங்காவின் இராணுவ நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறுதெரிவு எதுவும் இல்லை - இளந்திரையன். சிறீலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வில் அதிக கவனம் செலுத்தும் போது சமாதான பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியமற்றது என விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் அமெரிக்க செய்தி நிறுவனமான ஒன்றுக்கு விடுத்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பேச்சுக்கள் மூலம் சமாதான ரீதியில் தீர்வை எட்டக்கூடிய நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விலேயே அதிக அக்கறை காட்டி தமது நடவடிக்கைகளைத் தொடர்கின்றது என்றார் இளந்திரையன். சிறீலங்கா அரசாங்கம் யுத்த அணுகுமுறையில் நாட்டமுள்ளபோது உடன…
-
- 0 replies
- 789 views
-
-
தமிழ் மக்களுக்கெதிரான மனிதவுரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள் - பாப்பரசரிடம் கஜேந்திரன் வேண்டுகோள். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்களென யாழ்.மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் பாப்பரசர் 16ம் பெனடிக்ற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கடிதத்தின் முழுவடிவம் வருமாறு: செல்வராஜா.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ தேர்தல் மாவட்டம் 17.04.2007 ஆதிவணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் அவர்கட்கு ஐயா இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை…
-
- 2 replies
- 984 views
-
-
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயக் குருக்களின் வீட்டில் கொள்ளை பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதம குருக்களின் வீட்டில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்படி குருக்களின் வீட்டிற்குள் புதன்கிழமை இரவுவேளை நுழைந்த 4 நபர்களே இத்துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளனர். வீட்டு பிரதான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம், சங்கிலிகள், காப்புகள், அட்டியல், மோதிரங்கள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குருக்களின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
செம்மணி புதைகுழி வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாம் செம்மணி புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாமென்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் இராணுவத் தளபதியால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செம்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு , கிழக்கில் நடத்த வேண்டாமென்றும் கோரி 19 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்ததுடன் அப்படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்துக்கு மாற்றுமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். செம்மணியில் புதைகுழிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக தொடர…
-
- 3 replies
- 1.8k views
-
-
வன்னி மீது தொடர்ந்து விமானத் தாக்குதல் வன்னியில் கடந்த சிலதினங்களாக இரவு-பகலாக குண்டு வீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. நேற்றுக் காலை வன்னியில் மூன்று இடங்களில் இரு விமானங்கள் அடுத்தடுத்து கடும் தாக்குதலை நடத்தியுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரு விமானங்கள் ஆறிற்கும் மேற்பட்ட தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. இதனைத் தொடர்ந்து முகமாலைக்கு கிழக்கே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் ஆட்லறி நிலைகள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இங்கும் பல தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் பின் காலை 10.45 மணிய…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை அகதிகள் முகாம் மீது தாக்குதல் இருவர் காயம், வீடுகள் பொருட்கள் சேதம் தர்மபுரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் புகுந்த சிலர் தாக்குதல் நடத்தியதில் தாயும் மகனும் காயமடைந்ததுடன் பொருட்களும் வீடுகளும் சேதமாக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ளது தும்பல அள்ளி அணைக்கட்டு. இங்கு கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது. 184 குடும்பங்களைச் சேர்ந்த 694 பேர் இங்கு வசித்து வருகிறார்கள். இவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜாமணிக்கும் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்,ஆத்திரம் அடைந்த அந்தப் பகுத…
-
- 0 replies
- 1k views
-
-
சாய்ந்தமருதில் நேற்றிரவு துவக்கு சூடு இரு இளைஞர்கள் பலி; மூவர் படுகாயம் சாய்ந்தமருது, அல்- ஜலால் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 8.30 மணியளவில் கமநல மத்திய நிலையத்துக்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு கூடி நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் நிலைமை ஆபத்தாக இருந்…
-
- 0 replies
- 845 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான `பதில்' `இராஜதந்திரிகளை வெளியேற்றுவது அல்ல' [20 - April - 2007] -அருளாநந்தம் அருண்- இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான நம்பகரமான பதில் இராஜதந்திரிகளை வெளியேற்றுவது அல்ல என்று சுட்டிக்காட்டும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, நம்பிக்கையூட்டும் விதத்தில் குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் இடம்பெற்று வருவதாக பொய்ப்பிரசாரங்களில் சில இராஜதந்திரிகள் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு, உண்மைக்கு மாறான பிரசாரங்கள் மூலம் நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இரா…
-
- 0 replies
- 595 views
-
-
வவுனியாவில் ஆயுதக்குழு அட்டகாசம் பத்து வீடுகளில் தொடர் கொள்ளை! வந்து வீதியை மூடிவிட்டு விடிய விடிய தங்கி நின்று சூறை வவுனியா, ஏப்ரல் 20 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளைக் கும் பல் ஒன்று, அடுத்தடுத்து உள்ள பத்து வீடு களில் புகுந்து அங்கிருந்தவர்களை துப் பாக்கி முனையில் மிரட்டிப் பயமுறுத்தி விட்டு, சுமார் இரண்டு கோடி ரூபா பெறு மதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றைச் சூறையாடிச் சென்றிருக் கிறது. நள்ளிரவு நேரம் முகத்தை மூடி மறைத் துக்கொண்டு வந்த கொள்ளையர்கள் வீடுகள் அமைந்துள்ள வீதியை மூடிவைத்துக் கொண்டு விடிய விடிய அங்கே தரித்து நின்று சூறையாடியிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் (புதன்) நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் …
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரவணக்கம் - பண்டார வன்னியன் Thursday, 19 April 2007 11:01 முல்லை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தின் போது அனைத்துலத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் வீரச்சாவடைந்துள்ளார். இவருக்கு சங்கதி தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தினக்குரல்
-
- 16 replies
- 2.7k views
-
-
இலண்டனின் முக்கிய நகரங்களிலான சுழற்சி முறைக் கவனயீர்ப்புப் போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராலே இலண்டனிலுள்ள ஒவ்வொரு நகரசபைகளின் சூழலிலேயும் சுழற்சிமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழன் மாலையிலும் 16:30 மணி தொடக்கம் 19:30 மணி வரையும் இது நடைபெறும். முதலாவது நாளான 19.04.2007 வியாழன் மாலை இலண்டனின் வடமேற்பகுதியில் அமைந்துள்ள உவட்பேட்டின் (Watford) பிரதான சாலையிலே இது நடைபெற்றது. இந்தப் பகுதியிலே ஈழத்தவர் மிகக் குறைவாகவே வாழ்கின்றோம். இருந்தும் ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என நூறுவரையினர் வருகை தந்து இதிலே கலந்து கொண்டமை பாராட்டத்தக்கதே. எமது மண்ணிலே நடைபெறும் அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்…
-
- 1 reply
- 792 views
-
-
தமிழர்களின் அவலக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை சர்வதேசம் தனது அலட்சியப் போக்கை நீடிக்காது, தமிழர்களின் அவலக் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும். அவ்வாறின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும். இவ்வாறு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் இளம் சந்ததியினர் பெரும் எண்ணிக்கையில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். ஆனால், அத்தகைய அநீதிகள் வெளி உலகத்திற்குத் தெரியாதவாறு அரசினால் திட்டமிட்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்…
-
- 0 replies
- 723 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவை இன்று சந்திக்கும் போது குடாநாட்டில் கொலையுண்டோர், காணாமற்போனோர் குறித்து உடனடி விசாரணை நடத்த வலியுறுத்துங்கள் யாழ்.நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு பாப்பாண்டவரிடம் கோரிக்கை *"போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்தல் * சர்வதேச கண்காணிப்புடன் ஏ9 பாதையை திறத்தல் ஆகிய இரண்டையும் இடித்துரையுங்கள்' கொழும்பு,ஏப்.20 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்கு, மனித உரிமைகளுக்கு இப்போது உத்தரவாதம் இல்லை. அவை எப்போதோ தொலைந்துவிட்டன. அதனால், அங்கு இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல் ஆகி யன குறித்து, உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு, உங்களை சந்திக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்துங்கள். யாழ்.மாவட்ட நீதிக்கும் சமாதான…
-
- 0 replies
- 743 views
-
-
வெளிநாட்டு விமானமோட்டிகளே கட்டுநாயக்க தாக்குதலை நடத்தினர் [18 - April - 2007] ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை இரகசிய புலனாய்வுப் பிரிவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 20 replies
- 5.6k views
-
-
ஜனாதிபதிக்கு வத்திக்கான் அழுத்தம் கொடுத்தால் விஜயத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிட வேண்டும் [19 - April - 2007] -ஹெல உறுமய கூறுகிறது; `இது தேவனின் இராச்சியம் அல்ல' என்கிறது - ப. பன்னீர்செல்வம் - இலங்கை அரசாங்கம் பாப்பரசரின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இலங்கை தேவனின் இராச்சியம் அல்ல, பௌத்த இராச்சியமே என்று தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய, விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிறுவனங்களின் கடிதங்களை பார்த்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுமானால் வத்திக்கானுக்கான விஜயத்தை ரத்து செய்துவிட்டு ஜனாதிபதி நாடு திரும்ப வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு இலங்கையில் மனித உரிமை…
-
- 5 replies
- 1.7k views
-
-
அரசாங்கத்தின் எச்சரிக்கை குறித்து தீவிர பரிசீலனையில் தூதரகங்கள் இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் நேற்று தீவிர பரிசீலனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவோர் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் நாடுகள், சமாதான மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அதிகளவு நிதிவழங்கும் நாடுகள…
-
- 2 replies
- 1k views
-
-
கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார். கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்…
-
- 6 replies
- 2.3k views
-
-
கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (26.04.07) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: வழக்கானது பொத்துவில் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் நிலைமைகள் நீதிமன்றத்ததின் தீர்ப்பிலேயே தங்கியிருக்கின்றன. கருணா குழுவினர் தங்கியிருந்த பழைய கட்டடம் ஒன்றை பொத்துவில் பிரதேச சபையினர் இடிக்க முற்பட்டதனைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் உருவாகியிருக்கின்றன. பிரதேச சபை பணியாளர்களை ஆயுதம் தாங்கிய கருணா குழுவின…
-
- 0 replies
- 768 views
-
-
அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி [19 - April - 2007] ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க …
-
- 11 replies
- 2.7k views
-