Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் நாடாளுமன்றத்தை கூட்டமுடியாது: சிறிலங்கா அரசு. சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலமை தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கின்றது, இது முழுக்க அரசியல் நோக்க…

    • 4 replies
    • 1.1k views
  2. கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

  3. புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டுப் போர் [28 - March - 2007] இலங்கையின் சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் முதற்தடவையாக அரசாங்கப்படைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்கள். நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் விமானப்படையின் பிரதான தளத்தின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளியிட்டிருக்கின்ற போதிலும், இப்போது உள்நாட்டுப்போர் புதியதொரு கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வடக்கு, கிழக்கில் முப்படைகளும் …

  4. விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…

    • 2 replies
    • 1.4k views
  5. அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்! சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது, வான்புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடாத்திவிட்டு, பாதுகாப்பாக வன்னிப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்கள். சிறிலங்காவைப் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து, உலகின் சகல ஊடகங்களும் முதன்மைச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஷதமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது| - என்று வெளிநாட்டு ஆய்வாளர்;களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் வாழ்விடங்கள்மீது விமா…

  6. எதிரியிடம் பிடிபடாது ஆகுதியாகிய மூன்று போராளிகள் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:15 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் தம்மை கைது செய்ய முயன்ற போது தற்காப்புத் தாக்குதல் அங்கியை வெடிக்கவைத்து, படைத்தரப்புக்கு இழப்புகளை ஏற்படுத்தி, தங்களையும் ஆகுதியாக்கியுள்ளனர் மூன்று போராளிகள் என்று விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். இம் மாவீரர்களை நினைவு கூர்ந்து யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24.03.07 அன்று யாழ். நாவலர் வீதியால் சென்று கொண்டிருந்த போராளி லெப். அறிவுமகன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவரை இராணுவ…

  7. யாழ் களத்தின் பங்காளர்களே!!! தமிழ் ஈழம் என பிரித்து எழுதுவதை தவிர்த்து தமிழீழம் என்ற சொற்பதத்தை பாவிக்குமாரு விடுதலைப்புலிகள் 2003 காலப்பகுதியிலே அறிவித்து விட்டார்கள். ஆனா நம்மட ஆக்கள் எப்பவுமே திருந்தமாட்டீனம் என இப்பவு "தமிழ் ஈழம்" என்றெ எழுதுகீனம். எப்படா திருந்த போறீங்கள்? பிற்குறிப்பு: விடுதலைப்புலிகளின் எந்த அறிவிப்பையும் பாக்கவும் உதாரணமா தமிழீழ வான்படை; Tamileelam Air Force (TAF) என்று தான் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனை ஆங்கிலத்தில் எழுதும் போதும் கவனிக்கவும். Tamil Eelam அல்ல Tamileelam. இதன் உட்பொருளாக தமிழும் நம் மக்களும் ஒன்று, ஒரு நாடும் அதன் மொழியும்/ மொழிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது, அதை விட நாம் எப்போதும் ஒன்று பட்டவர்கள்…

    • 25 replies
    • 5.6k views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட வான்தாக்குதலானது அரசாங்கத்தின் தவறான தகவல்களையும், உண்மையான கள நிலைமையையும் எடுத்துக்கூறியுள்ளது. எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் பாதுகாப்பிற்கு தான் முழுமையான பொறுப்பை ஏற்பதாக கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் போரில் 95 விகிதங்களை வென்றாகி விட்டது எனவும் கூறியிருந்தார். எனவே அவருக்கு சுயமரியாதை ஏதும் இருப்பின் அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தாக…

    • 1 reply
    • 823 views
  9. வன்னி நிலப்பரப்பு மீது மறைமுக பொருளாதாரத் தடை - தமிழீழ சமாதான செயலகம் வன்னி மீது சிறீலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ சமாதான செயலகம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழீழ சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைத் தீவில் பணி புரிந்து வருகின்ற போதிலும், அந்த நிறுவனங்களுக்குத் தெரியாமல் மறைமுக பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசு ஏற்படுத்தி வருகின்றது. தனியார் வர்த்தகர்கள் வன்னிக்கு உணவுப் பொருட்களைக் எடுத்துச் செல்ல சிறீலங்காப் படையினர் தடை விதித்துள்ளதாக, தமிழீழ சமாதான செயலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படைத் தேவைகளுக்குரிய உணவுப் பொருட்கள் உட்பட மிகக் குறைந்த அளவு பொருட்கள…

    • 0 replies
    • 640 views
  10. விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: இந்திய கடல் எல்லையில் போர் கப்பல் - விமானம் தீவிர கண்காணிப்பு இலங்கையில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் விடுதலைப்புலிகள் முதல் முறையாக விமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை விமானப்படை தளம் கடுமையாக சேதம் அடைந்ததுடன் ராணுவ வீரர்களும் பலியானார்கள். இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து இலங்கை மீள்வதற்குள் விடுதலைப்புலிகள் டிராக்டரில் வெடிகுண்டுகளை நிரப்பிச் சென்று மற்றொரு ராணுவ தளம் மீது தற் கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தடுத்த தாக்குதல்களில் இலங்கை ராணுவம் நிலைகுலைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலால் பயந்துபோன இலங்கை அரசு, இது இந்தியாவுக்கும் ஆபத்து என்று அலறியுள்ளது. விடுதலைப்பு…

    • 1 reply
    • 1k views
  11. "கடந்த வாரம் வரை இருதரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்தப் போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர்." நேற்று செவ்வாய்க்கிழமை 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு பிரபல படைத்துறை ஆய்வாளரும், சண்டே ரைம்சின் பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். செவ்வியின் முழு விபரம் வருமாறு: கேள்வி: விடுதலைப் புலிகள் தமது வான் படையின் பலத்தை தற்போது நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கட்டுநாயக்க வான்படைத் தளம் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பத…

    • 0 replies
    • 672 views
  12. கடந்த ஓராண்டுகளாக சுவிஸ் தேசத்தில் போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், கிரடிட்காட் மோசடி போன்றவற்றிற்காக சிறைத்தண்டனயை குடு முஸ்தப்பா அனுபவித்து வந்தவேளை, குடு முஸ்தப்பாவை பணிப்பாளராகக் கொண்ட துரோக வானொலியை, தன் பிடியில் கொண்டு வர பெரும் முயற்சி செய்து வந்த உண்டியல்தேவனுக்கும், குடு முஸ்தப்பாவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக நெருப்புக்கு தெரிய வருகிறது. இது தொடர்பாக எமக்கு கிடைத்த உறுதியான தவகல்களின்படி .... இவ்வழக்கை பயன்படுத்தி குடு முஸ்தப்பா குடும்பத்தை பிரித்தானியாவில் கம்பியெண்ண வைக்க உண்டியல்தேவன் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம். பிரித்தானிய சட்ட முறைக்குள் "இங்குள்ள உள்ளூராட்சி சபைகளில் வேலையின்மை, வீட்டுவசதி போன்றவற்றிற்காக உதவிப்பணம் பெற…

  13. கட்டுநாயக்கா தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் நாத்தாண்டிய பகுதியில் பறந்து சென்ற மர்ம வானூர்தி கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் நாத்தாண்டிய பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வானூர்தியை பார்த்தது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். நாத்தாண்டிய கலிகமுல்ல பகுதியிலேயே வயல் வெளியூடாகச் சென்று கொண்டிருந்த சிலர் மர்ம வானூர்தியை கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியூடாக மிகத் தாழ்வாக கறுப்பு நிறத்திலான பொருளொன்று சென்றதை தாங்கள் கண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் உழவு இயந்திரமொன்றின் இரைச்சல் போன்று சத்தம் கேட்டதாகவும் பார்த்தபோது, தங்களைத் தாண்டி வானூர்தி ஒன்று தாழ்வாகப் பறந்து செ…

    • 0 replies
    • 825 views
  14. லண்டனில் பிரபல இலவச தினசரி பத்திரிகையான லண்டன் லைட் (london lite) தனது 26/03/2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் லண்டன் சிட்டி (london city) க்குள்ளே இலவசமாக விநயோகிக்கப்படும் இப்பத்திரிகை பல ஆயிரக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம். மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர். வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!! செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது

    • 17 replies
    • 5.6k views
  15. கடத்தப்பட்டவர்களை மீட்டு தருமாறு கோரி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகம். காணாமற் போனோரை தேடியறியும் குழு ஏற்பாடு அண்மைக்காலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி இன்று 28ஆம் திகதி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. காணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் காலை10 மணியிலிருந்து 3 மணிவரை கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதுகுறித்து காணாமற் போனோரை தேடியறியும் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடத்தல் சம்பந்தமாக 433 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா கூறியுள்ளார். இந்த அதிர்ச்சிதரும் தகவலினால் க…

    • 0 replies
    • 712 views
  16. அகதி முகாம்களிலுள்ளோரை புகைப்படம் பிடிக்கும் அதிரடிப்படையினர். மட்டக்களப்பில் அகதி முகாம்களுக்குச் செல்லும் விசேட அதிரடிப்படையினர் அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாக புகைப்படமெடுத்து வருவதால் அவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தங்க இடமின்றி அகதிகள் தினமும் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருக்கையில் படையினரின் பெரும் கெடுபிடிகளால் அகதிகள் மேலும் மேலும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். களுவாஞ்சிக்குடி, எரிவில், கடற்கரை வீதிமுகாம், ஒந்தாச்சிமடம் காளியம்மன்கோயில் அருகிலுள்ள முகாம்களுக்குச் சென்ற அதிரடிப்படையினரே அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாகப் பிரித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அத்துடன், சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடைபெறும் போது, முகாம்களிலுள்ளவர்களை அடையாளம் காண்…

    • 0 replies
    • 738 views
  17. மட்டக்களப்பு கொடுவாமடுப் பகுதி நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு மட்டக்களப்பு கொடுவாமடுப் பகுதியோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ் முன்னேற்ற முயற்சியில் சிறீலங்காப் படையினரும் துணை ஆயுதக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். சிறீலங்கா படையினருக்கு ஆதரவாக எறிகணைச் சூட்டாதரவும் டாக்கி மற்றும் துருப்புக் காவி சகிதம் சிறீலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படையினரின் முன்னேற்றத்தை அடுத்து போராளிகள் படையினரை வழிமறித்து முறியடிப்புச் சமரை நடத்தி படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து படையினரும் துணை இராணுவக் குழுவினரும் அங்கிருந்து தப்பி யே…

  18. சிறீலங்கா இராணுவத்தால் விசாரணையின் பின் இளைஞர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அரசடிச் சந்தியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா படையினரால் விசாரணை செய்தபின் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர் 23 அகவையுடைய லக்மனன் நிசாந்தன் வர்த்தகர் எனவும் நல்லூர் நோக்கி இவரது ஹயஸ் வானில் செல்லும் போது செவ்வாய்கிழமை 11 மணியளவில் சோதனைச் சாவடியில் சிறீலங்கா படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் உள்ளுர் மக்களின் கருத்துப்படி அவரது வாகனம் இனம் தெரியாத வேறு ஒருவரால் 11.30 மணியளவில் ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. உறவினர்களுக்கு இவரை விசாரணையின் பின் விட…

    • 0 replies
    • 634 views
  19. இளம் யுவதிகளிடம் சேட்டை புரியும் படையினர். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:11 மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளிடமும் பாடசாலை செல்லும் மாணவிகளிடமும் இப்பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபடும் படையினர் பாலியல் ரீதியான சேட்டைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மாணவிகளின் புத்தகங்களையும், கைப்பைகளையும் சோதனையிடும் படையினர் பாலியல்ரீதியான சேட்டைகளில் ஈடுபடுவதாகவும், உடற்சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறி மறைவான பகுதகளுக்கு வருமாறு அழைப்பதாகவும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும் பெண்களிடம் சேட்டைகளில் ஈடுபடுவதுடன் உடற்சோதனைகளையும் சிறிலங்காப் படையினர் அநாகரிகமான முறையில் ஈடுபட்டுவருவதாக இப்ப…

  20. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அரச பகுதியும் ஒரு நாட்டில் இணைந்து இருக்க வாய்ப்பில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 22:06 ஈழம்ஸ ஜது.சங்கீத்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்படவிருப்பவரு

    • 5 replies
    • 1.7k views
  21. மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு வாரம்: யு.என்.எச்.சி.ஆர் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:06 ஈழம்] [காவலூர் சங்கீதன்] மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களில், இதுவரை குடியுரிமை தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது எதுவித குடியுரிமையும் இல்லாது வாழும் மலையக மக்கள், உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மனிதஉரிமை அமைப்பின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் சிறப்பு விவரண நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருக்கிறது. இதன்படி, தொடரும் ஐந்து நாட்களுக்கு, சிறிலங்காவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களிலும் இது தொடர்பான மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் வழங்க, யு.என்.எச்.சி.ஆர். ஒழுங்குகளை…

  22. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொடுவாமடுவுக்குள் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் இணைந்து கவச வாகனங்கள் சகிதம் ஊடுருவ எடுத்த முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். செங்கலடிப்பாலம் இராணுவ முகாமில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இம் முன்னகர்வினை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டனர். முன்னகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்திய போது, இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆயுதங்களை கைவிட்டு பின்வாங்கி ஓடினர். ரி-56 ரக துப்பாக்கிகள் - 0…

  23. விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். எங்கை பேசலாம்? விமானத்தில் பேசலாமா?

    • 6 replies
    • 1.8k views
  24. [Wednesday March 28 2007 10:52:42 AM GMT] [யாழ் வாணன்] பிரிட்டன் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தல் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை காண்பதற்கு பிரிட்டன், இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரதூரமானது. சமாதான செயல்முறையை ஆரம்பிப்பதிலும…

  25. ஜ குமுதம் ஸ - ஜ ஆயச 24இ 2007 05:00 புஆவு ஸ இந்த முறை ஒரு முடிவோடுதான் சிலோன் நேவிக்காரர்கள் சுட்டிருக்கிறார்கள்’’ திகிலில் உறைந்து போய்க் கிடக்கும் பாம்பன்இ மண்டபம் மீனவர்கள் பேசிக் கொள்வது இப்படித்தான். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகுஇ துணிந்து மீன் பிடிக்கப் போக மனமின்றிஇ படகுகளைச் சீர் செய்தபடியும்இ வலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டுமிருந்தனர்இ அந்தப் பகுதி மீனவர்கள். தாக்குதலில் பலியான கிறிஸ்டோபர் என்ற மீனவரோடு படகில் சென்ற தாசன் என்ற மீனவர்இ குண்டு காயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். ‘‘செவ்வாய்க்கிழமை காலையில கிளம்பறோம். நாலு நாளு தங்கி பாடு பார்க்கலாம்னு திட்டத்தோட போனோம். வியாழக்கிழமையன்றைக்குக் சாயங்காலம் ஒரு அஞ்சரை மணியிருக்கும்இ வல்ல…

    • 4 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.