ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142739 topics in this forum
-
யாழ் மோதல் சம்பவங்களில் 3 இரணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 9 பேர் வரை காயம் [Tuesday December 26 2006 08:27:33 AM GMT] [யாழ் வாணன்] இலங்கை யாழ் பகுதியில் வீதியோர குண்டு வெடிப்பு சமபவத்தில் 3 இரணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அரசு பாதுகாப்பு செய்தி தெரிவித்துள்தாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை யாழ்பாணத்தில் தானியங்கி கருவி மூலம் வெடிக்கப்பட்ட குண்டிலேயே 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 இராணுவத்தினர் வேறு ஒரு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா இராணுவத்தின் கைக்குண்டு தாக்குதலில் நான்கு பொதுமக்கள் காயம். யாழ்வைத்தியசாலை வீதியில் சதிரா சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின்மீது இன்று 11.45 மணியளவில் சிறீலங்கா அரச படைகள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இக்கடை உரிமையாளருக்கு சிறீலங்கா இராணுவத்தினர் இராணுவ காவலரணுக்கு அண்மையில் அமைந்திருந்த அவரது கடையினை மூடுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 24 அகவையுடைய அழகரட்ணம் கோணேஸ்வரன், 26 அகவையுடைய அழகரட்ணம் முறலீஸ்வரன், 66 அகவையுடைய கந்தசாமி செல்வமலர், 36 அகவையுடைய விக்னேஸ்வரன் nஐயசித்திரா என இனம்காணப்பட்டுள்ளார்கள். www.pathivu.com
-
- 0 replies
- 627 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகள் அதன் உல்லாசப் பயணத்துறையை கடுமையாக பாதித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இடம்பேற்ற ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தை விட போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் இந்த வருடம் சிறிலங்காவின் விடுதிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் (12,000 மில்லியன் ரூபாய்கள்) என கணிக்கப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறை விடுதிகள் சபையை சேர்ந்த கூரே தெரிவிக்கையில், வழமையாக 80 வீதம் பயணிகளை கொண்டிருக்கும் விடுதிகள் தற்போது 20 வீதம் பயணிகளையே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.4 வீதம் குறைவான பயணிகளே …
-
- 1 reply
- 1k views
-
-
கைத்தொலைபேசி இணைப்புக்கள் வழமைக்கு திரும்பினயாழ்குடாநாட்டில் கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் டயலொக் ஜி.எஸ்.எம் கைத்தொலைபேசி இணைப்புக்கள் வேலைசெய்யத் தொடங்கியுள்ளது. இதேவேளை யாழ்குடாநாட்டில் 40 000 மக்கள் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் வைத்திருக்கின்றமை தெரிந்ததே. இவ் இணைப்புக்கள் யாவும் கடந்த ஒகஸ்ட் மாதம் 11ம் திகதி முதல் சிறீலங்கா இராணுவத்தினர் நிறுத்திவைத்தனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 7 replies
- 2k views
-
-
கருணா குழுவினரால் குடும்பப்பெண் சுட்டுக்கொலை. அம்பாறை அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள அக்கரைப்பற்று – 07 இல் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்தவேளை துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் செல்வரெத்தினம் பரமேஸ்வரி (லீலா) (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர் தனது வீட்டிலிருந்த சமயம் நேற்றிரவு 7.20 மணியளவில் உந்துருளியில் வந்த கருணாகுழுவினர் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இராணுவ ஒட்டுப்படையினரான கருணா குழுவினரே இப்படுகொலையை மேற்கொண்டதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை நேற்றிரவு நாவிதன்வெளி 15ம் கொலனி கருணா அலுவலகம் தாக்குதலுக்கு இலக்கா…
-
- 0 replies
- 841 views
-
-
சுனாமி அவலத்தின் உயிர்ச் சிற்பம் - பண்டார வன்னியன் தமிழன் தன்மானப் போராட்டத்தின் மத்தியிலும் அடுத்தவன் அவலத்தை போக்கவும் மதிக்கவும் தவறாதவன் என்பதற்கு ஆனந்தனின் சுனாமி அவலத்தை சித்தரிக்கும் சிலை ஓரு எடுத்துக் காட்டாகும் இது வெறுமனே அவலத்தை மட்டும் எடுத்துக் காட்டவில்லை தமிழன் தனது தன்பத்திலும் அடுத்தவன் துன்பததையும் தன் துன்பமாக ஏற்று நடப்பவன் என்பதையும் இந்த சிற்பம் எடுத்தியம்புகின்றமை பராட்டத்தக்கதாகும். இந்த சிற்பம் சம்பந்தமாக ஓவியர் மாற்கு, ஓவியர் இராசையா, ஓவிய சிற்பி ரமணி, கவிஞர் யாழ் nஐயம், ஓவியர் எஸ்.டி சாமி எனப் பலரும் பல வடிவத்திலும் புகழ்ந்துள்ளாhகள் விமர்சித்துள்ளார்கள். ஓவியர் மாற்கு குறிப்பிடுகின்றார் ஆனந்தன் சிற்பக் கல்லூரிகளின் ஊடாக …
-
- 1 reply
- 2.7k views
-
-
தென் கிழக்காசிய நாடுகளிடமிருந்து புலிகளுக்கு ஆயுதம் கிடைக்காமல் தடுக்க நடவடிக்கை 4 நாடுகளுடன் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை [Tuesday December 26 2006 08:47:20 AM GMT] [thinakkural.com] தென் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பதற்காக அந்த நாடுகளுடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளது இந்தோனேசியா, கம்போடியா, வியட்நாம் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளுடனேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது. மேற்படி நாடுகளிலிருந்தே புலிகளுக்கு ஆயுதங்கள் வருவதாக புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது. விடுதலைப் ப…
-
- 0 replies
- 756 views
-
-
நீர்கொழும்பு கடற்கரையில் பாரிய தீ; 15மீன்பிடிபடகுகள் முற்றாக எரிந்து நாசம் [Tuesday December 26 2006 07:43:38 AM GMT] [virakesari.lk] நீர்கொழும்பு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகளில் 15 படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நீர்கொழும்பு நகரசபை தீயணைக்கும் பிரிவினர் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் நீர்கொழும்பு மாங்குளி களப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையான நேற்று மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் மீன்ப…
-
- 0 replies
- 763 views
-
-
சுனாமி தாக்கி இரு வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்காலிக குடில்களில் [Tuesday December 26 2006 08:04:51 AM GMT] [virakesari.lk] ஆழிப் பேரலைகள் தாக்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்களிற்கான விசேட ஆராதனைகள் இலங்கையின் பல பகுதிகளில் பரவலாக இடம் பெற்றுள்ளது இலங்கையின் கிழக்கு பகுதியில் சுனாமியால் பாதிக்க்கப்பட்டோர் தற்போது கிழக்கில் தொடரும் வன்முறைகளாலும் தாக்குதல்களாலும் இடம் பெயர வேண்டி இருக்கிறது. விடுதலைபுலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பேச்சாளர் எஸ் புலிதேவன் கிளிநோச்சியில் சுனாமி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற இருப்பதாக தொலைபேசி வாயிலாக…
-
- 0 replies
- 796 views
-
-
மன்னார் கடற்பரப்பில் வைத்து 23 பேர் கடற்படையினரால் கைது வீரகேசரி நாளேடு தலைமன்னார் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த 23 பேரை கைது செய்த கடற்படையினர் நேற்று முன்தினம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த 23 பே ரும் இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் மன்னார் பகுதியை நோக்கி வந்துக்கொண்டிருந்தபோதே கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து அண்மையில் இந்தியாவிற்கு சென்ற அகதிகளில் சிலரே இலங்கையை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன
-
- 0 replies
- 740 views
-
-
நத்தார் கொண்டாட்டத்தின்போது பெண் பலி; 23 பேர் படுகாயம் வீரகேசரி நாளேடு நத்தார் கொண்டாட்டத்தின் போது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற பட்டாசு கொளுத்திய மற்றும் வாகன விபத்து சம்பவங்களில் பெண்ணொருவர் பலியானதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விபத்துச் சேவை பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்து சம்பவங்களின் போது 12 பேரும் பட்டாசு கொளுத்தியதில் ஏற்பட்ட தீ காயங்களுக்கு உள்ளாகியும் 03 பேரும் மது போதையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவங்களில் 08 பேருமாக 23 பேர் படு காயமடைந்துள்ளனர். இதேவ…
-
- 0 replies
- 719 views
-
-
சிறிலங்காவின் இரண்டாவது அனல் மின் நிலையம் அமைக்கும் வேலைகள் இந்த வாரம் திருகோணமலை சம்பூரில் தொடங்கவுள்ளதாக மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29.12.06) இந்தியாவின் தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்துடன் சிறிலங்கா கைச்சாத்திட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 500 மெகா வற் சக்தியுடைய இந்த மின் நிலையத்தை சிறிலங்கா மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல் மின்சக்தி நிறுவனமும் கூட்டாக அமைத்து பராமரிக்க திட்டமிட்டுள்ளன. இரண்டாவது அனல் மின் நிலையத்தை திருகோணமலையில் அமைப்பதற்கே முதலில் திட்டமிடப்பட்டது. எனினும் பின்னர் இது சம்பூருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்…
-
- 0 replies
- 786 views
-
-
இயற்கையின் சீற்றத்தை விட இனவாத சீற்றம் கொடுமையானது: சு.ப.தமிழ்ச்செல்வன் இயற்கையின் சீற்றத்திலும் இனவாதச் சீற்றத்திலும் இருந்து எமது மக்களை பாதுகாப்பதென்பது எமது தேசியத்தின் தலையாய கடமையாகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (26.12.06) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பேரவலத்தில் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் சொத்துக்களையும் இழந்திருந்தனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: மிகப் பெரும் இயற்கைப் பேரவலம் ஒன்றை எமது மக்கள் ச…
-
- 0 replies
- 663 views
-
-
மாலுமிகள் சர்வதேசசெஞ்சிலுவைச்சங்க குழுஊடாக வழியனுப்பப்பட்டனர். தாயகக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்ட கப்பல் மாலுமிகள் 25பேரை விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ.தங்கன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினரிடம் ஒப்படைத்து அவர்களைப் பாதுகாப்பாக வழியனுப்பிவைத்தனர். Photos:- http://www.sankathi.org/news/index.php?opt...27&Itemid=1
-
- 7 replies
- 1.8k views
-
-
இ.போ.ச சாரதி கைது சாரதிகள், நடத்துநர்கள் திடீர் வேலை நிறுத்தம் கடந்த வியாழக்கிழமை இரவு இ.போ.ச.வவுனியா சாலைக்கு (டிப்போ) அருகில் உள்ள படையினரின் காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு வீச்சைத் தொடர்ந்து சாலைக்குள் புகுந்த படையினர் பேரூந்து சாரதி சத்தியமூர்த்தி என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். இவர் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை தமக்கு தெரியப்படுத்துமாறு கோரியே இவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேவேளை சாரதி சத்தியமூர்த்தியின் கைது குறித்து மனித உரிமை அமைப்புகள், மாவட்ட அரசாங்க அதிபர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 915 views
-
-
கண்டி, காலி யில் 7 தமிழ் இளைஞர்கள் கைது வேறுவேறு தேடுதல் சம்பவங்களில் கண்டி, காலி பகுதியில் ஒரு யுவதியுட்பட 7 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 906 views
-
-
உதவி துணைப்படை வீரர் வீரச்சாவுசிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதலில் தமிழீழ போர் உதவிப்படை வீரர் ஒருவர் வீரச்சாவடைந்தள்ளார். கடந்த சனிக்கிழமை 23ம் திகதி மணலாறில் நிகழ்ந்த மோதலில் வீரவேங்கை இராமச்சந்திரன் ரூபன் எனப்படும் தமிழீழ போர் உதவிப்படை வீரர் வீரச்சாவை அணைத்துக் கொண்டார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 925 views
-
-
வடமராச்சி பகுதியில் சிறுசிறு மோதல்கள் பருத்தித்துறை சுப்பர்மடப் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் நீராடிக்கொண்டிருந்த படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் இரு படையினர் காயடைந்து பலாலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை வேறு ஒரு சம்பவத்தில் நவிண்டில் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 1 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மேலும் வேறும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. எனினும் அத்தாக்குதல் சுமார் 20 நிமிடநேரம் நீடித்ததாக குடிசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
ஜோசெப் பரராஜசிங்கம் அவர்கள் நினைவு கூரப்பட்டார் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் பட்டிப்பளை பிரதான சந்தியில் புளியந்தீவு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்புமாறன் தலமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரினை முன்மாரிக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் உதயராஜ் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியினை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் ஏற்றிவைக்க, மாமனிதரின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை மட்டக்களப்பு மாவட்ட தலமைச்செயலக பொறுப்பாளர் ஆதித்தன் அவர்கள் அணிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட …
-
- 0 replies
- 895 views
-
-
மந்திகை வைத்தியசாலையில் மீண்டும் எம்.எஸ்.எப் பிரெஞ்சு வைத்தியர் குழுவினர் வடமரரச்சி மந்திகை வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் பிரெஞ்சு நாட்டு வைத்தியர்குழுவினர் தமது சேவையினை ஆரம்பித்துள்ளார்கள். இக்குழுவில் சத்திரசிகிச்சை நிபுணர், மயக்கமருந்து சிகிச்சை நிபுணர், இணைப்பாளர் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது முதல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வைத்திய அதிகாரி தெரிவித்திரந்தார். இதேவேளை இவர்களுக்கு கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கத்தால் ஏற்பட்ட அசாதாரண சம்பவங்கள் காரணமாக இவர்கள் தமது சேவையை இடைநிறுத்தியிருந்தமை தெரிந்ததே. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
எறிகணை வீச்சில் தேவாலயம் சேதம் வடமராச்சி கிழக்கில் குடாரப்பு கிறீஸ்தவ தேவாலயம் சிறீலங்கா அரசின் மூர்க்கத்தனமான எறிகணை வீச்சில் இலக்காகி முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று அதிகாலை முதல் வடமராச்சிகிழக்கு மாமுனை, குடாரப்பு, நெல்லியான் ஆகிய பகுதிகளை நோக்கி சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக இவ் எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கிறீஸ்தவர்களின் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பெருமளவு கிறீஸ்தவ மக்கள் பிரார்த்தனையை மேற்கொள்ள தேவாலயங்களுக்கு செல்லும் இக் கொடிய சம்பவம் நிகழ்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. ://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1167073904&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 948 views
-
-
சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் இறுதி ஆவணம் இன்று அரசிடம் கையளிக்கப்பு. சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் இறுதி ஆவணம் இன்று அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. அதாவது, வடகிழக்கு மோதலுக்கு தீர்வு காண்பதற்கு தயாரிக்கப்பட்ட இறுதி யோசனைகள் அடங்கிய ஆவணம் இன்று சர்வகட்சி ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கவுள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் திஸ்ஸவித்தாரண தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபின்னர் அதனை ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்வு ஆவனத்தை தயாரிக்க சர்வ கட்சி நிபுணத்துவக் குழுவின் யோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஜே.வி.பி போன்ற சிறிய கட்சி ஒன்று சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் இருந்து விலகியதைக் கருத்தில் …
-
- 1 reply
- 934 views
-
-
இனவாதிகளுக்கு சீற்றத்தை கொடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணம். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினருக்குமிடையே கடந்த வியாழன், வெள்ளி இரு தினங்களும் இடம்பெற்ற விசேட சந்திப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியுள்ள அதேநேரம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும்போக்கையுடைய சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் பெரும் கிலேசத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டு வரும் மிகமோசமான நெருக்கடி நிலைமைகள் பாரிய நடவடிக்கைகளினால் எதிர்கொள்ளப்படும் மனித அவலங்கள், சமாதான பேச…
-
- 2 replies
- 2.2k views
-
-
பாலாவை அரசியல் பேசாது உடல்நலத்தை கவனிக்குமாறு பிரபாகரன் கேட்டிருந்தார் [25 - December - 2006] [Font Size - A - A - A] * அடேல் பாலசிங்கம் தெரிவிப்பு தனது இறுதிக் காலத்தில் அன்ரன் பாலசிங்கம் தலைவர் பிரபாகரனுடன் தவறாமல் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் அரசியல் பேசும் பிரபாகரன் இனி நீங்கள் அரசியல் பேசக்கூடாது. உங்கள் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென கட்டளையே இட்டிருந்தாரென அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் கூறியதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வு லண்டனில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட திருமாவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னாரில் கைக் குண்டு தாக்குதல் நிஷாந்தி மன்னார் சென் லூசியாஸ் தேவாலயமருகிலுள்ள பொலிஸ் மீது இன்று திங்கள் அதிகாலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு பொலிஸ் வீரர் கொல்லப்பட்டும் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.. மற்றும் மன்னார் வைத்தியசாலை சந்தியில் வீதி சோதனை சவடியில் ஈடுபட்ட பொலிஸ் மற்றும் மீது கைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனினும் இதன் போது எவருக்கும் காயமேற்படவில்லை.. யாழ் கைத்தடி பகுதியில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்டதில் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.தெரிவித்துள்ளது …
-
- 0 replies
- 737 views
-