Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு பரிந்துரை. உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இரு சபை நாடாளுமன்றம், சிறுபான்மை இனங்களில் இருந்து இரு துணை அரச தலைவர்கள் ஆகியவை அக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில. குழு தனது 37 பக்க ஆய்வறிக்கையை இன்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளது. வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நான்கு வழிகளை இவ்வறிக்கை ஆராய்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பதிலாக, தனித்தனியான சுயாட்சி உரிமை பெற்ற இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மாகாணமாக, வடக்கு - கிழக்கு மாகாணம் எ…

    • 4 replies
    • 1.4k views
  2. ஈழப் பிரச்சனை மத்திய அரசுக்குப் புரிகிறதா? - சோலை சிங்கள இனவாதம் நரவேட்டை ஆடுவதற்கு, ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்பதனை முதல்வர் கலைஞர் ஐக்கிய முன்னணித் தலைவி சோனியா காந்தியிடம் பக்குவமாக எடுத்துக்கூறி வந்திருக்கிறார். தமிழ் மக்களின் உணர்வை எங்கே எடுத்துக் கூறினால் பரிகாரம் கிடைக்குமோ, அங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். சோனியாவிடம் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் அவ்வளவு விரிவாக அவர் விவாதித்ததாகத் தெரியவில்லை! முல்லைத்தீவு செஞ்சோலை குழந்தைகள் காப்பகம் மீது சிங்கள விமானங்கள் குண்டுகள் போட்டன. பச்சிளம் குழந்தைகள் பலியாகின. சட்டமன்றத்தில் அதற்குக் கலைஞர் கண்டனம் தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது பற்றிச் சிந்திக்கவேண்டிய ந…

  3. (புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 18:22 ஈழம்) (தெ.சந்திரநாதன்) பயங்கரவாத தடைச் சட்டம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்யவில்லை. பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த விடுதலைப் புலிகளுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அவர்களை மீண்டும் வரச்செய்யுமாறு நோர்வேயிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த கிளி நொச்சி செல்வதற்கு இலங்கைக்கான நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஹன்சன் பௌயருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி செல்வதாக இருந்த அவரது பயணத்தை இடைக்காலமாகத் தள்ளி வைக்…

  4. விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கோரி இரு புத்த பிக்குகள் சாவும் வரை உண்ணாவிரதம். விடுதலைப் புலிகளைச் தடைசெய்யக் கோரியும், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி இரு பெளத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தங்காலையில் அமைந்துள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு வாசஸ்தலத்திற்குச் சென்ற இரு பெளத்த பிக்குகளும் மனு ஒன்றைக் கையளித்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளை தடை செய்ததையும் பங்கரவாதச் தடைச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்ததை எழுத்து மூலம் சிறீலங்கா அரசாங்கம் அறிவிக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படு…

    • 7 replies
    • 1.5k views
  5. விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்? சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைச…

    • 11 replies
    • 1.9k views
  6. துணை இராணுவக்குழுவின் குற்றச்சாட்டை முன்னாள் இயக்குநர் மறுத்தார் [புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 19:17 ஈழம்] [கொழும்பு நிருபர்] நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 6 அடி தொலைக்காட்சியை வழங்கினார் என்று துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த கருணாவின் குற்றச்சாட்டை சிறிலங்கா விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான முன்னாள் இயக்குநர் காமினி அபயரட்ன மறுத்துள்ளார். கொழும்பு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தொலைக்காட்சி கொடுக்கப்பட்டது காமினி அபயரத்னவுக்குத் தெரிவும் என்று கருணா தெரிவித்திருந்தார். இத்தகைய சம்பவம் நடக்கவில்லை என்று கூறிய காமினி, விடுதலைப் புலிகளின் பாதுகாப்பான பய…

    • 0 replies
    • 956 views
  7. (புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 17:49 ஈழம்) (பூ.சிவமலர்) சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற அமைச்சரவையின் முடிவை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று புதன்கிழமை அறிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம்இ தற்காலிக நடவடிக்கையாக 1979 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்டது. 1982 ஆம் ஆண்டில் நிரந்தரமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கையெழுத்தான போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் நீக்கப்பட்ட இந்தச் சட்டம் இப்போது மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மிகவும் புறம்பான இந…

  8. Started by கந்தப்பு,

    பொறுப்பு! இலங்கையில் மறுபடியும் அறிவிக்கப்படாத போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்திருப்பது தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. விதவிதமான எதிர்ப்புகள். டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது ஒரு கட்சி. அங்கேயே உண்ணாவிரதம் இருந்திருக்கிறது இன்னொரு கட்சி. இங்கும் உண்ணாவிரதம் முதல் கறுப்புக்கொடி ஏற்றுவது வரை நடந்திருக்கின்றன. ராஜபக்சே கலந்துகொண்ட மாநாட்டினை தமிழக மேயர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ‘தனி ஈழம்தான் தீர்வு’ என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள நிலையில், இந்திய அரசிடமிருந்து எதையோ எதிர்பார்க்கும் நோக்கம் இலங்கை அதிபரின் வருகைக்குப் பின்னிருக்கலாம். இலங்…

    • 5 replies
    • 2.1k views
  9. விடுதலைப் புலிகளை ஒடுக்க அரசு உறுதி "தரகர்கள்' விடயத்திலும் தீர்க்கமான முடிவு. நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு விடுதலைப் புலி களைப் பூண்டோடு அழிக்கவும், சமா தானத் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட் டும் சார்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தரகர்கள் விடயத்தில் தீர்க்கமான நடவடிக் கைகளை எடுக்கவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச் சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக் கீட்டு விவாதத்தில் பேசும்போது இவ் வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது கூறிய தாவது: ""அரசு பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கிப் பயங்கரவாதிகள…

    • 2 replies
    • 1.5k views
  10. சர்வதேசத்திடம் நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்க முடியாது: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க. சர்வதேசத்திடம் நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது அவர் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை மீணடும் தடைசெய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசத்தின் உதவியைப் பெற்று உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துவோர் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தி வ…

  11. இலங்கையில் புலிகளைத் தடை செய்வது குறித்து சர்வதேச சமூகம் கவலை. தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தல் ஆகிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யோசனைகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் மற்றும் இந்தியா நோர்வே ஆகியன ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன விடுதலைப்புலிகளை தடை செய்வது குறித்தும் பயங்கரவாத தடைச்சட்டடை அமுல்படுத்தவது குறித்தும் முக்கிய தீர்மானங்கள் இன்று அற…

    • 2 replies
    • 928 views
  12. ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் நிச்சயம் வெற்றிபெறும் - விஜய காந்த். ஈழத்தில் எங்கள் தமிழ் உறவுகள் தமது சொந்த மண்ணுக்காக ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப்போராடுகின்றனர். அவர்கள் போராட்டம் தற்போது தாமதமாக இருப்பது போன்று தோன்றினாலும் விரைவில் அவர்கள் தமது இலட்சியங்களை அடைந்தே தீர்வார்கள். அதில் எந்த தடைகளும் இருக்கப்போவதில்லை என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரும் நடிகருமான திரு.விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டே போகின்றதே என ஊடக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே விஜயகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ச…

  13. (புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006) (யோகராஜன்) சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், நாளை சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள். எனினும் தடை வராது எண்று அரச முக்கியஸ்தர் நிதர்சனத்திற்கு தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை …

  14. (புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006) (ஜனனி) யாழ்குடா நாட்டில் சிறுவர்கள் பெரும் பட்டினி அவலத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், அவர்களை இவ் அவலத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவசர அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அதனது அறிக்கையில் யாழ்குடாநாட்டில் சிறுவர்கள் உட்பட ஆறு இலட்சம் மக்களை சிறீலங்கா அரசாங்கம் பட்டினிபோட்டு வதைப்பதை தடுத்துநிறுத்தாது உலக மனிதநேய அமைப்புகள் அமைதிகாப்தாக குற்றம் சுமத்தியுள்ளது. மேலெழுந்தவாரியாக தமிழீழ விடுதலைப்பலிகளை, சிறுவர்களை படையில் சேர்ப்பது என குற்றம் சுமத்தும் இவ் அமைப்புகள் தற்போது சிறீலங்கா அரசாங்கம் சிறுவர்கள் உட்பட மக்களை பட்டினி போட்டு வதைக்கும் போது அமைதிகாப்ப…

  15. அன்ரன் பாலசிங்கம் எரிக் சொல்ஹெய்ம் லண்டனில் சந்திப்பு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை, நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனில் உள்ள மதியுரைஞரின் வாசத்தலத்திற்கு, நேற்று நேரில் சென்ற நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்கள், மதியுரைஞரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். இதன்போது மதியுரைஞரின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும், பிரசன்னமாகியிருந்தார். தற்போது தமிழீழ தாயகத்தில் நிலவும் நெருக்கடியான மனிதநேயப் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமாதான முயற்சிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறி…

  16. இந்திய இராணுவத்தை தோற்கடித்த விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா இராணுவம் பொருட்டல்ல: வினோதராதலிங்கம். இந்திய இராணுவத்தையே தோற்கடித்த விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா இராணுவம் ஒன்றும் பொருட்டல்ல. எனவே, விடுதலைப் புலிகளை தடை செய்து இந்நாட்டையும் மக்களையும் படுபாதாளத்திற்குள் தள்ளிவிடாதீர்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளதாவது: பேச்சுவார்த்தை காலத்தில் தமிழ் மக்களுக்கு எவ்விதமான விமோசனமும் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளை விட தமிழ்மக்…

  17. தமிழீழ பிரகடனம் பற்றிய இரகசியப்பேச்சுக்கள் லண்டனில் மூடியறைக்குள் நடப்பதாக நிதர்சனம் தெரிவிக்கிறது இதன் பின்னணியில் அரசு நிபந்தனையற்ற பேச்சுக்குச் செல்லலாம்

    • 14 replies
    • 5.7k views
  18. கொழும்பில் இன்று வெளியான செய்திகளின் படி சிறீலங்கா அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) மீள நடைமுறைப்படும் என்றும் புதிய அவசரகால விதிமுறைகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்க முழுமையான தடைவிதிக்கப்படும் என்று அறியமுடிகிறது. அதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடைக்கான உடனடி சாத்தியம் குறைவு என்று ஒரு கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இவ்அவசரகால சட்டத்தின் கீழான புதிய ஏற்பாடுகள் சட்டமா அதிபரால் வரையப்பட்டு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட யாரும் பயங்கரவாத இயக்கத்துடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நேரடி தொடர்புகளை தடைசெய்யும் இவ் ஏற்பாடு விடுதலைப் புலிகளுடன் சாதாரண தொடர்பாடல்…

  19. இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று தனது பிரஜைகளை அவுஸ்திரெலியா அரசாங்கம் கேட்டுள்ளது. Avoid Sri Lanka, Australia warns citizens Australia has warned its nationals against making non-essential visits to Sri Lanka because of an increase in violence on a Travel Advice which was issued recently and current on 01st Dec 2006. It further alerted its nationals by, "The Government of Sri Lanka and the LTTE have engaged in significant battles in Muhamalai and in the general vicinity of Trincomalee. Military strikes have also occurred in the Batticaloa, Ampara, Mannar, Mulaitivu, and Killinochchi districts. Travellers have inadvertently been caught up in these ac…

  20. வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு: 35 படையினர் பலி- 75 பேர் படுகாயம்- 4 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக, வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர். இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. திருகோணமடு,…

  21. தம்முடன் இணைந்து கடற்தொழிலாளர்கள் காவற்கடமையில் ஈ.டுபட வேண்டும். - படையினர் பணிப்பு. ................................................................................ ............................. யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர்களை தம்முடன் இணைந்து இரவு நேரக் கடலோரக் காவற்கடமையில் ஈடுபட வேண்டுமென சிறிலங்காப கடற்படையினர். கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் நேற்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு கடற்தொழிலாளர்கள் மறுப்புத்தெரிவித்துள்ளனர். இதே வேளை யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா படையினரின் உயர் பாதுகாப்புவலயங்கள் மேலும் விரிவாக்கப்படுமே அன்றி ஒருபோதும் அகற்றப்படமாட்டாது என்றும் மாவட்ட சிறிலங்காப் படைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிட…

    • 6 replies
    • 2k views
  22. சனி 02-12-2006 01:38 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப்புலிகளை தடைசெய்ய சிறீலங்கா அரசு நடவடிக்கை இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதுஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தடை செய்யுமாறு கோரும் பிரேணை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமா, சமாதான செயல பதில் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்ச ஆகியோர் மீதான தற்கொலை தாக்குதல் மற்றும் கெப்பிடிகொலாவ கிளைமோர் த…

    • 29 replies
    • 7.1k views
  23. விடுதலைப் புலிகளை தடைசெய்யக்கூடாது:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை விடுத்து சமாதான பேச்சுவார்த்தையை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கேட்டுள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகளை தடைசெய்வதன் காரணமாக யுத்தம் ஒன்று தூண்டப்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வடக்குகிழக்கில் தமிழர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு ஆட்பட்டுள்ளார்கள். இதற்கு தீர்வு ஒன்றை காணுவதற்கு சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியமானதாகும். இந்தநிலையில் சிறு…

  24. மாதத்தில் குறைந்தது 50 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் [செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 18:30 ஈழம்] [பூ.சிவமலர்] யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று யாழ். மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் செய்யும் முறைப்பாட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் கொலையும் ஆட்கடத்தலும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. அண்மையில் 30-க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என அடைக்கலம் தேடி தங்ளிடம் வந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது http://www.eelampage.com/?cn=30047

    • 2 replies
    • 1.3k views
  25. புலிகளின் தலைவர்களுக்காக வாகனம் கடத்திய வைத்திய கலாநிதி [05 - December - 2006] [Font Size - A - A - A]சிங்கள இனத்தவரான வைத்தியக் கலாநிதி ஒருவரையும் மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜா-எல பிரதேசத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். புலிகள் இயக்கத்துக்கு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களை வழங்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் ஒருவரிடம் விசேட புலனாய்வு விசாரணைக் குழுவினர் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் போது அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.