ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
கீழ் உள்ளுது ஒரு தனிநபர் பின்வரும் தளத்தில் பதிந்த பின்னுட்டத்தில் காணப்பட்டது. இதனை உறுதி செய்ய முடியவில்லை. இப்படியான அவலங்கள் உண்மையில் நடந்தால் அவை பற்றிய விபரங்கள் ஏதோ ஒரு வழியில் ஊடகங்களை எட்ட வேணும். "I just talked to my nephew in Jaffna. The situation is extremely grim: • Starvation is widespread. People are desperate for food. Children are emaciated and look similar to what we saw during African famine • 14, 15-yr-old children are begging on the street or go from house to house begging for food • There was a horrible event: A gang (SLA + Paramilitary) went to a house and took their motorbike away. After a day or two the mother of the household appr…
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்கள்: "சிலிங்கோ" லலித் கொத்தலாவல தமிழீழ விடுதலைப் புலிகள் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சிறிலங்காவின் பிரபலமான "சிலிங்கோ" கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். துபாய்க்குச் சென்றிருந்த போது "கல்ஃப் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல் விவரம்: ஆழிப்பேரலை ஏற்பட்டிருந்த பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் எமது காப்புறுதி நிறுவனம் பல பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. நாம் அந்த மக்களை கைவிடமாட்டோம் என்று தெரிவித்திருந்தோம். ஒவ்வொரு நகரத்துக்கும் நாங்கள் சென்றோம். வடக்கு கிழக்குக்கும் சென்றோம். தமிழீழ் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு அழைக்கப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் மக்களையும் புலிகளையும் பிரித்துப் பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்து வராது: குல்தீப் நாயர் இலங்கைத் தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரித்துப் பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்துவராது என்று மூத்த இந்திய ஊடகவியலாளர் குல்தீப் நாயர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் நிறைய பெற்றுக் கொடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால் இலங்கைப் பிரச்னை போன்ற மிக முக்கிய பிரச்னைகளில் மாநில அரசால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. மத்திய அமைச்சரவையில் அவர்கள் அங்கம் வகிப்பது ஒரு காரணம். அடுத்து தாங்கள் எடுக்கும் முடிவுகள் இந்த…
-
- 0 replies
- 823 views
-
-
இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா…
-
- 35 replies
- 7.8k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம் 20 நவம்பர், 2006 இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வினைக் காண்பதற்காகக் கூடிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று கொழும்பில் தெரிவித்திதார். இது குறித்து பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்திய பேராசிரியர் திஸ்ஸ விதாரண, " ஜே.வி.பி, ஜே.எச்.யூ, மற்றும் எம்.ஈ.பி எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள்கூட அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமாக இனப் பிரச்சனைக்கான தீர்வினைக்காண ஆதரவு தெரிவிக்க இணங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார். பிரதான எதிர்க்…
-
- 3 replies
- 1.2k views
-
-
Co-Chairs divided? (LeN- Nov. 20, 7.00 p.m.) The diplomatic sources in Colombo have speculated a devision among the co-chairs meeting in Washinton today over present situation in North East. It is said that while America and Japan hold one view, European Union and Norway hold different views. While European Union and Norway insists that both parties should suspend hostilities, American and Japanese hold opposite views. It is said that Japan and America prepare to maintain a neutral stance at the military operations conducted by the government. EU countries such a Germany and U.K. have informed the government through their respective diplomatic channels t…
-
- 9 replies
- 4.1k views
-
-
சர்வதேசத்தின் அறிக்கைகள் இனி பயன் தரப்போவதில்லை -சங்கரன் - சிவலிங்கம்- ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. இரு தரப்பும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஜெனீவாவிற்கு சென்ற போது பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனாலும், சர்வதேச சக்திகளின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் சர்வதேச சக்திகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களைக் கொடுத்து ஒரு சில விடயங்களிலாவது இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையின் தொடர்நிலையினை பேண முயல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. குறிப்பாக மனித அவலங்களை குறைக்கும் வகையில் ஏ-9 பாதை திறக்கப்படும், இடம் பெயர்ந்தவர்களின் அவலங்கள் சீர் செய்யப்படு…
-
- 1 reply
- 925 views
-
-
மட்டு., அம்பாறை த.தே.கூவினருக்கு கொலை அச்சுறுத்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இக்கொலை அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ரி.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமநாதர், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கே.பத்மநாதன், சி.சந்திரநேரு ஆகியோர் அனுப்பியுள்ள கடித விவரம்: மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 19 ஆம் நாள் இரவு 8 மணி மற்றும் 8.30 மணியளவில் த…
-
- 0 replies
- 915 views
-
-
இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்திருக்கும் தபால் பொதிகள் திருகோணமலை தபால் நிலையத்தில் பாழடையும் நிலையில் உள்ளன 20 நவம்பர், 2006 இலங்கையின் யாழ் குடா நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் ஏனையப் பகுதிகளிலிருந்து தபால் பொதிகள் மூலம், உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும், இந்தத் தபால் பொதிகள் உரிய காலத்தில், உரியவர்களைச் சென்றுச் சேர இயலாத நிலையில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிகின்றன. தற்போது திருகோணமலை தபால் நிலையத்தில் 3500 க்கும் அதிகான தபால் பொதிகள் தேங்கியுள்ளதாகவும், அவற்றை சரியாக பாதிகாக்க வசதியில்லாத காரணத்தாலும், அங்கு பெய்து வரும் பருவ மழை காரணமாகவும் தபால் பொதிகள் பாழடைந்து வருவதாகவும் செய்திகள் தெரிவி…
-
- 1 reply
- 899 views
-
-
Operation USA என்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனம் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கிலேற்பட்டிருக்கும் மனித அவலத்துக்குச் செவிமடுத்திருக்கின்றது. இந்நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் வழிகளை ஏற்படுத்தித் தருமாறு அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறது. மருத்துவ உதவிப் பொருட்கள், சத்துணவுப் பொருட்கள் மற்றும் நிதி ஆகியவற்றை இது பெற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்கத் தமிழர்கள் இதன் மூலமாகத் தம் உதவிகளை ஈழத்தமிழர்களுக்கு அளிக்கலாம். சுனாமியாலும் போரினாலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இலங்கைக்குச் சர்வதேசங்களிலுமிருந்தும் வந்த சுனாமி நிதியானது சமமில்லாதவகையில் பகிர்ந்தளிக்கப…
-
- 0 replies
- 1.6k views
-
-
அரை நூற்றாண்டுக்கு முன் தன்சானியா அனுபவித்த பட்டினிக் கொடுமை இன்று யாழ்ப்பாணத்தில். ஆபிரிக்க நாடான தன்சானியாவில் 1952 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பட்டினி நிலையும் சுகாதாரப் பிரச்சினையும் இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தைத் தொடர்ந்து மக்களின் போஷாக்கு நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து மக்கள் மிக எளிதில் அபாயகரமான தொற்று நோய்களுக்கிலக்காகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். யாழ். குடாநாட்டின் சுகாதார நிலையம் தற்போதைய சூழல் காரணமாக மிக மோசமான நிலையில் உள்ளது. தென்னாபிரி…
-
- 1 reply
- 850 views
-
-
துரோகக் கும்பல்களே ஊரைவிட்டு கிளம்புங்கள்-தமிழ் மாணவர் ஒன்றியம் குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு துணைபோகும் துரோகக் கும்பல்கள் ஊரைவிட்டு கிளம்புவதே தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரிய உபகாரமாக இருக்கும். ஏன தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எச்சில் எலும்பு எங்களுக்கு வேண்டாம் ! எமது மக்களின் துயர் தோய்ந்த வாழ்வு தொடர்ந்தும் நீடிக்கின்றது. பட்டினியும், அரச பயங்கரவாதமும் தமிழ் மக்களை பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றது. அடுப்படியில் பூனை படுக்க அவலப்பிடியில் மக்கள் துடிதுடிதுடிக்கின்றனர். படைகள் புரியும் கொலைகள் குலை நடுங்க வைக்க வெள்ளைவான்களில் எங்கே போகின்றோம். எதற்காக…
-
- 1 reply
- 1.5k views
-
-
தேவை நிரந்தர திறப்பு!! --------------------- தற்காலிகமாக சாலையைத் திறக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு புலிகள் எதிர்ப்பு!! ------------------------------------------------------------------------ இலங்கையின் வடக்குப் பகுதிக்குச் செல்லும் ஏ9 நெடுஞ் சாலையை அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரே முறை திறந்துவிடப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் அத்தகைய தற்காலிக திறப்பு தங்களுக்குத் தேவையில்லை என்றும் நிரந்தரமாக நெடுஞ்சாலை திறந்துவிடப்பட வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கையின் வட பகுதியை தென் பகுதியுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை ஏ9 கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி முதல் மூடப் பட்டதால் வட பகுதியில் வாழும் பெரும்பா…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் இன்று காலை கிபீர் குண்டு வீசியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் இதுவரை கிடைக்கவில்லை. http://www.alertnet.org/thenews/newsdesk/COL218364.htm
-
- 2 replies
- 1.4k views
-
-
உணவுக்குச் சென்றவர்க்கு மருந்து கொடுத்த இராணுவம். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நிலை கொண்டுள்ள 513 வது படைப்பிரிவைச் சேர்ந்த இரணுவத்தினர் நாளாந்தம் வழங்கி வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கச் சென்ற பொது மக்களுக்கு இராணுவத்தினர் நோய்க்கான மருந்து கொடுத்துள்ளார்கள் சுன்னாகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறவென பல நூற்றுக்கணக்கான மக்கள் ஊரடங்குச் சட்டம் நீக்க முன்னரே காவல் இருந்துள்ளார்கள். நேற்று முன் தினம் பகல் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இராணுவத்தினர் ஒரு மருத்துவ முகாமை நடத்தினார்கள் குறிப்பிட்ட மருத்துவ முகாமுக்கு மக்கள் செல்லாது விட்டமையால் வழமை போன்று வீடியோ மற்றும் கமராக்குளுடன் தெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
'சிங்களக் ஹிட்லர்" ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போர்!
-
- 0 replies
- 1k views
-
-
மாவீரர் எழுச்சிவாரத்தை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்போம்-யாழ் மாணவர் ஒன்றியம். குடாநாட்டில் வாழும் தமிழ் மக்கள், தமிழ் மாணவர்கள் அனைவரும் மாவீரர் எழுச்சி வாரத்தின் உணர்வு பூர்வமாக ஆயத்தமாகின்றனர். படைகளின் கெடுபிடிகள் எல்லாம் தவிடு பொடியாகி எம் வீரக் குழந்தைகளுக்கு நாளை முதல் எமது வீர வணக்கங்களை தெரிவிப்போம். என மாணவர் ஒன்றியம் அறிக்கைஒன்றை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்து தமிழ் மக்கள் நெஞ்சில் நீக்கமாற நிறைந்திருக்கும் மாவீரத் தெய்வங்களை நினைவு கூரும் மாவீரர் எழுச்சி வாரம் நாளை ஆரம்பமாகின்றது. அடிமை விலங்குகளோடு வாழ்ந்த தமிழ் சாதியின் கொடிய துயரினை போக்க களம் புகுந்தவர்கள் இம் மாவீரர…
-
- 0 replies
- 895 views
-
-
சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹாக்கர விலகியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள அவர் ஒரு மாதம் காலம் முன்பாகவே தனது விலகல் கடிதத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள அவர் நாளை புதன்கிழமை சிறிலங்காவுக்கு திரும்ப உள்ளார். இதனிடையே தற்போது வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக உள்ள கீதா டி சில்வா புதிய வெளிவிவகார செயலாளராக அல்லது பதில் வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=29845
-
- 0 replies
- 920 views
-
-
ஸ்கொட்லன்ட் பொலிஸ் வியாழனன்று வருகிறது வீரகேசரி வாரவெளியீடு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஸ்கொட்லான்ட் பொலிஸ் குழு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார், இரகசிய பொலிஸார், புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் நவீன தொழில்நுட்பரீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஸ்கொட்லான்ட் பொலிஸார் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளனர். ஒரு மனிதனுக்கு சாவிலே தான் நிம்மதி என்பார்கள் ஆனால் புதைக்கப்பட்ட திருகோணமலை …
-
- 7 replies
- 1.7k views
-
-
மகிந்தவின் நடவடிக்கை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையே - சு.ப. தமிழ்ச்செல்வன். தமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கம்: செயற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க தலைநகர் வோசிங்ரனில் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெறும் நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியாகத்தான் ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறப்பதாகக் கூறியுள்ளது. இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: ஏ-9 பாதையை மீளத் திறப்பது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ அல்லது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமோ எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை. …
-
- 1 reply
- 793 views
-
-
ஐ.நா தூதுவர் அலன் ரொக்கின் குற்றச்சாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம். சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதி அலன் ரொக் இலங்கையில் சிறுவர் படைகளில் பலவந்தமாக இராணுவத்தினரால் சேர்க்கப்படுகிறார்கள் என வெளியிட்டிருந்த அறிக்கையினை கண்டித்து இன்று திங்கள் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பௌத்தமத குருக்களும் ஜேவிபி பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இது தான் முதல் முறை பாதுகாப்பு படையினர் மீது சிறுவர்களை கருணா அணியுடன் இணைந்து பலவந்த்மாக் படையில் இணைக்கின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை என ஜேவிபியின் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இவ் ஆர்…
-
- 1 reply
- 822 views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் அடிமனதில் உறவாடும் பல ஆத்மார்த்தமான வினாக்களையும், ஐயங்களையும் துப்பாக்கி முனைகளும் குண்டுகளும், காக்கிச் சட்டைகளும் காற்றில் வராது தடுத்து வருவது பல ஆண்டுகாலமாக நிகழ்கின்ற ஒன்று. இன்று யாழ்ப்பாண குடாநாட்டில் 1,85,619 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 6,35,300 மக்கள் தொகையினராவர். இவர்கள் அனைவரையும் பிற சிறிலங்காப் பகுதிகளுடனும் குறிப்பாக ஏனைய தமிழ்ப் பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய தரைவழி, ஏ-9 எனப் பிரபலம் பெற்ற யாழ். - கண்டி நெடுஞ்சாலையாகும். இது யாழ். டீயளவலையn சந்தியில் ஆரம்பித்து கண்டிவரை நீள்கின்றது. இதில் யாழ்ப்பாணம் தொடக்கம் முகமாலை முன்னரங்க இராணுவ மையம் வரையான பகுதிகள் இராணுவத்தினதும், அடுத்து முகமாலை சூனியப் பிரதேசம் தாண்டி ஒமந்தை…
-
- 33 replies
- 7.4k views
-
-
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபைக்குரிய (ர்ழரளந ழக சுநிசநளநவெயவiஎநள) தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் குடியரசுக்கட்சி (சுநிரடிடiஉ) பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (னுநஅழஉசயவ) பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளமையால், நாட்டின் சட்டவியல் அதிகாரங்களையும் தம் கைவசப்படுத்தியுள்ளது. ஈராக்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை அமெரிக்கப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாததன் எதிரொலியாகத்தான், இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் என்ற உயர் பதவியை வகித்த டொனால்ட் ரம்ஸ்வெஸ்ட் (னுழயெடன சுரஅளகநடன) என்பவரை அப்பதவியில் இருந்து புஷ் விலகச் செய்துள்ளார். வேற்று நாடொன…
-
- 0 replies
- 855 views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சபதவியேற்று ஒருவருட காலப் பகுதியில் சிறிலங்காப் படையினராலும் துணை இராணுவக்குழுவினராலும் 1154பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறிலங்கா ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடத்தை பூர்த்தி செய்துள்ள இதுவரையான காலப் பகுதியில் 1154பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 210,000பேர் தமது சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 484பேர் காணமல் போயுள்ளனர். பொதுமக்களின் பெறுமதி மதிப்பிட முடியாத கோடிக் கணக்கான சொத்துக்கள் சிறிலங்கா அரச படைகளினால் அழிக்கப்பட்டுள்ளனர் இக்காலப் பகுதிக்கு வணக்கத் தலங்கள் மருத்துவ மனைகள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச பதிவியேற்ற ஒரு வருடத்தில் நடந்தேறிய சம்பவங்களை தமிழீழ வ…
-
- 0 replies
- 659 views
-
-
யாழ்ப்பாண மனித அவலம் குறித்து சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நேரில் சென்று பார்வையிட உள்ளனர். அவுஸ்திரேலிய தூதுவர் கிரேக் பிரெஞ்ச், சுவிஸ் தூதுவர் ருத் பிளிண்ட், இங்கிலாந்து பிரதி தூதுவர் லெஸ்லி கிரெய்க் மற்றும் ஐரோப்பிய ஆணைய மனிதாபிமான உதவிகளுக்கான அமைப்பு, சுவிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு, சுவிஸ் அபிவிருத்திக்கான அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட உள்ளனர். யாழ். ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் அடிகளார், யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழில் உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான யு.என்.எச்.சி.ஆ…
-
- 0 replies
- 797 views
-