Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உதவி துணைப்படை வீரர் வீரச்சாவுசிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதலில் தமிழீழ போர் உதவிப்படை வீரர் ஒருவர் வீரச்சாவடைந்தள்ளார். கடந்த சனிக்கிழமை 23ம் திகதி மணலாறில் நிகழ்ந்த மோதலில் வீரவேங்கை இராமச்சந்திரன் ரூபன் எனப்படும் தமிழீழ போர் உதவிப்படை வீரர் வீரச்சாவை அணைத்துக் கொண்டார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 0 replies
    • 930 views
  2. வடமராச்சி பகுதியில் சிறுசிறு மோதல்கள் பருத்தித்துறை சுப்பர்மடப் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் நீராடிக்கொண்டிருந்த படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் இரு படையினர் காயடைந்து பலாலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை வேறு ஒரு சம்பவத்தில் நவிண்டில் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 1 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மேலும் வேறும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. எனினும் அத்தாக்குதல் சுமார் 20 நிமிடநேரம் நீடித்ததாக குடிசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 0 replies
    • 1k views
  3. ஜோசெப் பரராஜசிங்கம் அவர்கள் நினைவு கூரப்பட்டார் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் பட்டிப்பளை பிரதான சந்தியில் புளியந்தீவு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்புமாறன் தலமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரினை முன்மாரிக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் உதயராஜ் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியினை மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் ஏற்றிவைக்க, மாமனிதரின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை மட்டக்களப்பு மாவட்ட தலமைச்செயலக பொறுப்பாளர் ஆதித்தன் அவர்கள் அணிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட …

    • 0 replies
    • 901 views
  4. மந்திகை வைத்தியசாலையில் மீண்டும் எம்.எஸ்.எப் பிரெஞ்சு வைத்தியர் குழுவினர் வடமரரச்சி மந்திகை வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் பிரெஞ்சு நாட்டு வைத்தியர்குழுவினர் தமது சேவையினை ஆரம்பித்துள்ளார்கள். இக்குழுவில் சத்திரசிகிச்சை நிபுணர், மயக்கமருந்து சிகிச்சை நிபுணர், இணைப்பாளர் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது முதல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வைத்திய அதிகாரி தெரிவித்திரந்தார். இதேவேளை இவர்களுக்கு கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கத்தால் ஏற்பட்ட அசாதாரண சம்பவங்கள் காரணமாக இவர்கள் தமது சேவையை இடைநிறுத்தியிருந்தமை தெரிந்ததே. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 0 replies
    • 1.1k views
  5. எறிகணை வீச்சில் தேவாலயம் சேதம் வடமராச்சி கிழக்கில் குடாரப்பு கிறீஸ்தவ தேவாலயம் சிறீலங்கா அரசின் மூர்க்கத்தனமான எறிகணை வீச்சில் இலக்காகி முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று அதிகாலை முதல் வடமராச்சிகிழக்கு மாமுனை, குடாரப்பு, நெல்லியான் ஆகிய பகுதிகளை நோக்கி சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக இவ் எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கிறீஸ்தவர்களின் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பெருமளவு கிறீஸ்தவ மக்கள் பிரார்த்தனையை மேற்கொள்ள தேவாலயங்களுக்கு செல்லும் இக் கொடிய சம்பவம் நிகழ்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. ://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1167073904&archive=&start_from=&ucat=1&

    • 0 replies
    • 956 views
  6. சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் இறுதி ஆவணம் இன்று அரசிடம் கையளிக்கப்பு. சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் இறுதி ஆவணம் இன்று அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. அதாவது, வடகிழக்கு மோதலுக்கு தீர்வு காண்பதற்கு தயாரிக்கப்பட்ட இறுதி யோசனைகள் அடங்கிய ஆவணம் இன்று சர்வகட்சி ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கவுள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் திஸ்ஸவித்தாரண தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபின்னர் அதனை ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்வு ஆவனத்தை தயாரிக்க சர்வ கட்சி நிபுணத்துவக் குழுவின் யோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஜே.வி.பி போன்ற சிறிய கட்சி ஒன்று சர்வகட்சி ஆலோசனைக் குழுவில் இருந்து விலகியதைக் கருத்தில் …

  7. இனவாதிகளுக்கு சீற்றத்தை கொடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணம். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினருக்குமிடையே கடந்த வியாழன், வெள்ளி இரு தினங்களும் இடம்பெற்ற விசேட சந்திப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியுள்ள அதேநேரம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும்போக்கையுடைய சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் பெரும் கிலேசத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டு வரும் மிகமோசமான நெருக்கடி நிலைமைகள் பாரிய நடவடிக்கைகளினால் எதிர்கொள்ளப்படும் மனித அவலங்கள், சமாதான பேச…

  8. பாலாவை அரசியல் பேசாது உடல்நலத்தை கவனிக்குமாறு பிரபாகரன் கேட்டிருந்தார் [25 - December - 2006] [Font Size - A - A - A] * அடேல் பாலசிங்கம் தெரிவிப்பு தனது இறுதிக் காலத்தில் அன்ரன் பாலசிங்கம் தலைவர் பிரபாகரனுடன் தவறாமல் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் அரசியல் பேசும் பிரபாகரன் இனி நீங்கள் அரசியல் பேசக்கூடாது. உங்கள் உடல்நலம் பற்றி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென கட்டளையே இட்டிருந்தாரென அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் கூறியதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வு லண்டனில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட திருமாவ…

    • 0 replies
    • 1.3k views
  9. மன்னாரில் கைக் குண்டு தாக்குதல் நிஷாந்தி மன்னார் சென் லூசியாஸ் தேவாலயமருகிலுள்ள பொலிஸ் மீது இன்று திங்கள் அதிகாலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு பொலிஸ் வீரர் கொல்லப்பட்டும் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.. மற்றும் மன்னார் வைத்தியசாலை சந்தியில் வீதி சோதனை சவடியில் ஈடுபட்ட பொலிஸ் மற்றும் மீது கைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனினும் இதன் போது எவருக்கும் காயமேற்படவில்லை.. யாழ் கைத்தடி பகுதியில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்டதில் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.தெரிவித்துள்ளது …

  10. சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் இருவர் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை புதிதாக அமுலுக்கு வந்துள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்க சார்புப் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் இருவர் இரகசியப் பொலிஸாரால் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்தவாரம் பாதுகாப்பு தொடர்பான ஒரு விடயம் தொடர்பாக சண்டே ஒப்சேவரின் இணை ஆசிரியர் லயனல் யோதசிங்க மற்றும் செய்தி ஆசிரியர் ரங்கா ஜயசூரிய ஆகிய இருவரும் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் சிலுமின பத்திரிகையாளர் பிரசன்ன பொன்சேகாவும் அதேவிடயமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகக் தெரியவருகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள் ஊட…

  11. அரசியல் தீர்வுக்கான எதிர்கால முயற்சிகளை குழப்புவதற்கு வியூகங்கள் [24 - December - 2006] [Font Size - A - A - A] அதிகாரப் பகிர்வு மூலம் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை காணப்போவதாக கூறிவரும் அரசாங்கம், அதற்கு முற்றிலும் முரண்பாடான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் இந்த தன்னிச்சையான முடிவுகளால் சமாதானத் தீர்வு முயற்சி என்பது கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலையையே தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியான நிருவாகச் செய…

  12. பிரதமர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை: ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னை, டிச.24-: இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை மெமோரியல்ஹாலில் நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் பேரவை மாநில தலைவர் ஏ.நாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ்பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ…

  13. கறுத்தபாலம் இராணுவ காவலரண்கள்மீது விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் வீரகேசரி நாளேடு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி கறுத்தபாலம் இராணுவக் காவலரண்கள் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் படைத் தரப்பினர்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை. செங்கலடி பதுளை வீதியின் கறுத்தபாலம் இராணுவ காவலரண்களில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பøடயினரை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் பின்னர் படையினரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இலக்குவைத…

  14. படுகொலைகள்,ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம் [sunday December 24 2006 09:43:58 PM GMT] [virakesari.lk] படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கையில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த அவதானத்தைச் செலுத்தியுள்ளது. என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆணையாளர் பெனிற்றா பெஃரேரோ தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிறஸில்ஸ் நகரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; மனித உரிமைகள் பாரியளவில் மீறப்படுவது, இலங்கையில் நிலவி வரும் பிரச்சினையின் பிரதிபலிப்…

  15. [TamilNet, Saturday, 16 December 2006, 05:41 GMT] S. Raveenthranath, the Vice Chancellor of the Eastern University of Sri Lanka (EUSL), who was forced to resign his post recently following threats from paramilitary Karuna Group that abducted a Deen of the EUSL demanding the resignation of the Vice Chancellor, was reported missing since 01:15 p.m. Friday, Dehiwale Police in Colombo said. The VC was reported missing in High Security area in the Bauddhaloka mawatta. Mr. Raveendranath, who was working at University Grants Commission (UGC) where he had submitted his resignation, was on his way to attend a meeting at Vidya Mawatta near Bauddhaloka mawatta when he w…

  16. யாழ் மற்றும் மன்னாரில் படையினர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு. யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்று மாலை 5.00மணியளவில் குளித்துக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இனம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மன்னாரில் காவலரண் மீது தாக்குதல். இன்று காலை மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பினர் செய்தி வெளியிட்டுள்ளனர். www.sankathi.com

  17. விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது. அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன. படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி வ…

  18. அம்பாறையில் விசேட அதிரடிப்படையினர் ஊடுருவி தாக்கும் முயற்சி முறியடிப்பு. அம்பாறை தாண்டியடி மற்றும் காஞ்சிரங்குடா சிறீலங்கா இராணுவ முகாமிலிருந்து விசேட அதிரடிப்படையின் ஒருகுழுவினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியான காஞசிகுடிச்சாறு பகுதியை நோக்கி நேற்று காலை 10.30 மணியளவில் 2 கிலொமீற்றர் தூரம் முன்னகர்ந்த போது விடுதலைப்புலிகளின் காவல் பணியினை மேற்கொள்ளும் அணியினர் எதிர்கொண்டு தாக்கியதில் அவர்கள் தமது நிலைகளுக்கு தப்பிசென்றுள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை விடுதலைப்புலிகள் இவர்கள் மீது மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் 3 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  19. சர்வதேச நிதி முகாமைத்துவ அமைப்பு கொழும்பு அலுவலகத்தை மூடுகிறது. சர்வதேச நிதி முகாமைத்துவ அமைப்பான ஐ.எம்.எஃப் தனது கொழும்பு பிரதிநிதியின் அலுவலகத்தை மூடிவிட முடிவு எடுத்துள்ளது. தற்போதுள்ள அதன் மூத்த பிரதிநிதியான லூயிஸ் வல்டிவிசோவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் முடிவடைவதுடன் இந்த அமைப்பு தனது அலுவலகத்தை மூடப்போவதாக கூறியுள்ளது. இந்த முடிவானது சிறிலங்காவிற்கும் ஐ.எம்.எஃப்பிற்கும் இடையில் ஒரு நீண்ட இடைவெளியை ஏற்படுத்தக்கூடியது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எம்.எஃப்பின் உயரதிகாரியான லூயிஸ் வல்டிவிசோ தகவல் தருகையில் நீண்டகாலமாக இந்த அமைப்பு சிறிலங்காவில் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது போனது தான் அதை மூடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக …

  20. விடுதலைப் புலிகள் மீது சர்வதேச நாடுகளின் நடவடிக்கை தேவை:- சிறிலங்கா. தமிழீழ விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட ஜோர்தானிய சரக்குக் கப்பலின் மாலுமிகள் தொடர்பாக சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் பிராந்திய பாதுகாப்பின் உண்மைத்தன்மையை அறியும் அமைப்பிடம் சிறிலங்கா அரசு முறையிட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் டி.பி.கே.தசாநாயக்க தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட கப்பலினதும் அதன் மாலுமிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச அழுத்தங்கள் விடுதலைப் புலிகளின் மீது போடப்பட வேண்டும். விடுதலைப் புலிகளால் கப்பல் கைப்பற்றப்பட்டது சர்வதேச கடல் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் செயல். விடுதலைப் புலிகள் கப்பலை தாக்குதல் நடவடிக்கைக்க…

  21. வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது ஞாயிற்றுக்கிழமை 24 டிசெம்பர் 2006 (யோகராஜன்) தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி.நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்ற…

  22. சிறிலங்கா இராணுவத்தில் ஏற்படப் போகும் பாரிய மாற்றங்கள். சிறிலங்காவின் இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அண்மையில் வழங்கப்பட்ட ஒரு வருட பதவி நீடிப்பு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் இந்த பதவி நீடிப்பு அவருக்கு அடுத்த நிலையில் இராணுவத் தளபதியாகும் கனவுடன் இருந்த மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சியை ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. பணியில் இருந்து ஓய்வெடுப்பதற்கு ஏதுவாக நந்தா மல்லவராச்சி தற்போது விடுமுறையில் இருக்கின்றார். மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி மாவிலாறு இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்தியதுடன் ஆறு மாதங்கள் கிழக்கிலேயே தங்கியிருந்து பணி புரிந…

  23. மட்டக்களப்பு கரடியனாற்றுப்பகுதியை நோக்கிய இராணுவ தாக்குதல் முயற்சி முறியடிப்பு கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துணைஆயுதக் கூலிக்குழுக்களுடன் சேர்ந்து சிறீலங்கா இராணுவத்தினர் மட்டக்களப்பு கறுப்பு பாலப் பகுதி, செங்கலடி இராணுவமுகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் கரடியனாறு பகுதிநோக்கி மேற்கொண்ட இராணுவதாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலால் இப்பகுதியில் இருவீடுகள், வீட்டுத்தோட்டம், வயல்கள் என்பன சேதமடைந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.pathivu.com/index.php?suba…

    • 0 replies
    • 1.1k views
  24. மீண்டும் சிக்கலில் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 17:47 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள்…

    • 0 replies
    • 1.2k views
  25. விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான FARHA III என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.