ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
வாகரையில் சூனியப் பிரதேசம் நிறுவப் புலிகள் சர்வதேச அமைப்புகளிடம் யோசனை முன்வைப்பு [sunday December 17 2006 06:45:48 AM GMT] [uthayan.com] வாகரை ஆஸ்பத்திரி மற்றும் பாட சாலையை அண்டிய பகுதிகளை பாது காப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, அகதி களுக்கான ஐ.நா. தூதரகம், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் பிரதி நிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கோரிக் கையைத் தாம் கொழும் புக்கு எடுத்துச் சென்று அரசாங்கத் தரப்புடன் பேசி பதிலை அறிவிப்பதாக மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாக்குறுதி அளித்தனர். ச…
-
- 0 replies
- 906 views
-
-
இலங்கையையும் சொமாலியா போலவே கருதும் அமெரிக்கா! - பண்டார வன்னியன் Sunday, 17 December 2006 10:58 இலங்கை, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒதுக்கியுள்ளார். இலங்கை, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் ஜனாதிபதி புஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அர…
-
- 2 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளுடன் கண்காணிப்புக்குழு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துராயாடல். தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்றன. நேற்று முன்தினமிரவு விடுதலைப் புலிகளுக்கும் வன்னி மாவட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் தரப்பில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன்…
-
- 0 replies
- 825 views
-
-
இராணுவம் எறிகணைவீச்சு - கதிரவெளியில் 7பொதுமக்கள் பலி. மட்டக்களப்பு கதிரவெளியில் இரண்டு சக்கர உழவு இயந்திரத்தில் பயணம் செய்த 7 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைவீச்சிற்கு இலக்காகி உடல்சிதறி பலியாகியுள்ளனர். இந்தக் கோரச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வாகரை வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எம்.வரதராஜன் தெரிவிக்கையில் இவர்கள் கொல்லப்பட்ட விடயம் சம்பவம் நடைபெற்ற தினத்தின் போது வெளியான போதிலும் அது உறுதிப்படுத்தவில்லை. இச்சடலங்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். www.sankathi.com
-
- 0 replies
- 742 views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 17 டிசெம்பர் 2006, 07:03 ஈழம்) (வவுனியாவிலிருந்து த.சுகுணன்) "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம், தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தான் படித்த விடுதலைத் தத்துவம் அதனூடாக தான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செயலிலும் தான் காண்பதாகவும் அதனால்தான் தலைவரின் பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்து வந்ததாக நடேசன் குறிப்பிட்டார். "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தை நினைவு கூர்ந்து கருத்து வெளியிட்ட …
-
- 0 replies
- 843 views
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழு கலைக்கப்படால் மாத்திரமே அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் தாங்கள் மீண்டும் இணைந்து கொள்ள முடியம் என ஜே.வி.பி அறிவித்துள்ளது கடந்த பொது தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சக்திகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற குழுவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை அமைந்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார் நன்றி : பதிவு
-
- 0 replies
- 797 views
-
-
இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரோவிற்கு பாதுகாப்பு அமைச்சின் துணை செயலளார் பதவி அல்லது அதற்கு இணையான பதவி நிலை ஒன்று வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரான கோட்பாய ராஜபக்ச நீண்டகாலம் இலங்கையில் இல்லாமை மற்றும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நுட்பங்கள் குறித்து போதிய அனுபங்களை பெற்றிராமை ஆகியவற்றால் அவருயைட செயல்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்ட்டுள்ளது இதனை அடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து விசாலாமான அறிவு மற்றும் அனுபவம் கொண்ட ஜானக பெரோரவை வரவழைத்து அவருடைய ஆலோசனைகளை பெறுவதற்கு கோட்டபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 899 views
-
-
சந்திரிக்காவின் ஐக்கிய நாடுகள் கல்வித்துறை ஆலோசகர் பதவி பறிமுதல்? ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான - பண்பாட்டு அமைப்பில் சிறீலங்காவின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட பதவி பறிமுதல் செய்யும் நிலை தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் சந்திரிக்காவை பயணத்தை உடன்நிறுத்தி தலமைச்செயலகம் திரும்புமாறு ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்ச்சீரோ மற்சூரா பணிப்புரை விடுத்துள்ளார் சந்திரிக்கா கடந்த காலத்தில் மேற்கொண்ட பல மனித உரிமைகள் குறித்து பல மட்டங்களில் இருந்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுகுறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 7 replies
- 2.2k views
-
-
மக்களுக்கு விநியோகிப்பதற்காக யாழ்குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிசிவகைகள் பறிமுதல் செய்யப்ட்டு படைமுகாம்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக காங்கேசன் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த அரிசி வகைகள் கூட்டுறவுச் சங்கத்தினருக்கு படையினர் வழங்கியுள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டபின் கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் பலவற்றையே படையினர் இவ்வாறு பறிமுதல் செய்து பதுக்கி வைத்துள்ளனர். நன்றி : பதிவு
-
- 0 replies
- 990 views
-
-
பொதுமக்களை கொலை செய்யும் ஒரு நாட்டிற்கு தமது அரசாங்கம் எந்த விதமான வெடிமருந்துகளையும் வழங்காது என இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் சிறீலங்கா கடற்படைக்கு முகவரியிடப்பட்ட வெடிபொருட்கள் சிலவற்றை இந்திய காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர் சிறீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த வெடிமருந்துகளை அனுப்பி வைத்திருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது நன்றி : பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை வவுனியா வேப்பங்குளப் பகுதியில் மாலை 8.30 மணியளவில் இரு வாகனத்தில் அவரது கடைக்கு சென்ற இனம்தெரியாத ஆயுததாரிகள் வர்த்தகர் ஒருவரை அவரது கடைக்கு முன்பாக சிங்களத்தில் கூப்பிட்டபின் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் 59 அகவையுடைய அம்பிகைபாகர் மாணிக்கவாசகர் என இனம்காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/
-
- 0 replies
- 880 views
-
-
கிழக்கில் அவலமும் கோரமும் தொடர்கிறது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழக்கிறோம் [saturday December 16 2006 06:32:49 PM GMT] [virakesari.lk] கிழக்கில் தொடரும் அவலமும் அழிவும் கோரமான முறையில் கடந்த ஏப்ரல் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் ஆரம்பமானது. அப்போது ஆரம்பமான அலைச்சலும் அவலமும் கோரமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான எமது உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் இழந்துள்ள÷õம். இந்தப் பயங்கரவாதத்துக்கு முடிவு வராதா என்றுதான் பலரும் ஏங்கித்தவிக்கின்றனர். இவ்வாறு வாகரையில் இருந்து கடல் வழியாக வாழைச்சேனைக்கு தப்பிவர முயன்று கடலுடன் சங்கமமான தமிழ் உடன்பிறப்புக்கள் நிலைமை பற்றி கருத்து வெளியிட்ட மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த அரச ஊழியர…
-
- 0 replies
- 940 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும், தேசத்தின் குரல் என்று தமிழீழ தேசியத்தலைவரால் கொளரவப்படுத்தப்பட்டுள்ள கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் திறப்பும் அஞ்சலிக்கூட்டமும் கோயம்புத்தூர் பெரியார் படிப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்திரளான மக்கள் இங்கு திரண்டு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இந்த இரங்கல் நிகழ்வில், கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்தை பெரியார் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அஞ்சலிக் கூட்;டம் நிகழ்ந்தது. தலைமை இரங்கலுரையினை கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து இங்கு, கோவை ஞானி …
-
- 0 replies
- 1.4k views
-
-
மறைந்த மதியுரைஞர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் உள்ள 58 தமிழ் அரசியல் கைதிகளே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வுகளை, தொடர்ந்து மூன்று தினங்கள் நடத்தவுள்ளதாகக் கைதிகள் தெரிவித்துள்ளனர். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உடல் அடக்கம் செய்யப்படுவரை மூன்றுவேளையும் ஆகாரம் எதுவும் அருந்தாமல் தாம் அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் http://www.sankathi.org/news/index.php?opt...63&Itemid=1
-
- 0 replies
- 843 views
-
-
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் மக்கள் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளன. இன்று பிற்பகல் 5.00 மணிக்கு கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மக்கள் வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நாளை பரந்தன் பிரதான சந்தியில் இருந்து விசுவமடுப் பிரதேசத்திற்கு இவ் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி தருமபுரம். வட்டக்கச்சி, ஊடாக எடுத்துவரப்பட்டு கிளிநொச்சி. முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு மக்களின் வணக்கத்திற்காக எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை எடுத்துச் செல்லப்படவுள்ளது. இன்றைய தினம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கண்ணீர் மல்க மக்கள் மலர்வணக்கம் செலுத்தியுள்ளனர…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ் ஒதுக்கியுள்ளார். சிறிலங்கா, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் அரச தலைவர் புஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அரசு சார்ந்த, அரசு சாராத நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து அவர்களுக்கு உதவப் பயன்படுத்தலாம்…
-
- 0 replies
- 910 views
-
-
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியல் தூணாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்திற்கு கண்ணீர் வணக்க நிகழ்வு நோர்வேயில் நடைபெற்றது. இந்நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை நடைபெற்றது. நோர்வே வாழ் தமிழீழ உறவுகள் பல நூற்றுக்கணக்கானோர் கனத்த நெஞ்சங்களோடு "தேசத்தின் குரலுக்கு" தமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். நோர்வே பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் ஹன்சன் பெளயர், 1998 ஆம் ஆண்டு மதியுரைஞருக்கு நோர்வேயில் சிறுநீரக மாற்றீட்டுக்குரிய சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர…
-
- 2 replies
- 1.1k views
-
-
சகாப்தம் படைத்த பாலா ` தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற் றிற்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாக ரன் மீதும் தமது அன்புரிமைச் செல்வாக்கைத் செலுத்தக் கூடிய ராஜகுருவாக விளங்கிய அன்டன் பாலசிங்கம் சாவை அணைத்துக் கொண்டு விட்டார். ""சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும்'' என்று தாம் முன்னர் உரைத்தபடி சாவை வரவேற்று அதனுள் சாந்தி அடைந்திருக்கின்றார் சாவின் தத்துவம் புரிந்த தத்துவாசிரியர். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியிலும், அதன் இன்றைய விரிவாக்கத்திலும் மதியுரைஞர் பாலாவுக்கு நிரந்தரமான இடம் உள்ளது என்ப…
-
- 0 replies
- 968 views
-
-
இலங்கை சமாதான முயற்சிகளுக்கு பாலாவின் மறைவு ஒரு பின்னடைவு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார் சொல்ஹெய்ம் [saturday December 16 2006 06:12:39 AM GMT] [uthayan.com] இலங்கை சமாதான முயற்சிகளில் புலிகளின் மதியுரை ஞர் அன்டன் பாலசிங்கம் கோபுரமாக உயர்ந்து நின்றவர். எனவே, அவரின் மறைவு சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு. இவ்வாறு பெரும் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார் நோர்வே வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நோர்வே அனு சரணைத் தரப்பின் பொறுப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம். இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு ஒஸ்லோவில் இருந்தபடி அளித்த பேட்டியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 818 views
-
-
[TamilNet, Saturday, 16 December 2006, 05:41 GMT] S. Raveenthranath, the Vice Chancellor of the Eastern University of Sri Lanka (EUSL), who was forced to resign his post recently following threats from paramilitary Karuna Group that abducted a Deen of the EUSL demanding the resignation of the Vice Chancellor, was reported missing since 01:15 p.m. Friday, Dehiwale Police in Colombo said. The VC was reported missing in High Security area in the Bauddhaloka mawatta. Mr. Raveendranath, who was working at University Grants Commission (UGC) where he had submitted his resignation, was on his way to attend a meeting at Vidya Mawatta near Bauddhaloka mawatta when he w…
-
- 13 replies
- 2.7k views
-
-
COLOMBO ; A senior British diplomat was summoned by Sri Lankan police after he photographed a presidential motorcade with his mobile phone, the British High Commission said yesterday, terming it an "innocent mistake". The incident comes in the wake of a raft of new laws imposed to crack down on Tamil Tiger rebels and their supporters as the island’s two-decade civil war entered a new, violent phase. Photographing security posts and government buildings is prohibited in the capital, Colombo, where green sandbag turrets bristle with assault rifles and ministerial motorcades whip through town with heavily armed guards. "We can confirm that a British diploma…
-
- 3 replies
- 1.6k views
-
-
Colombo, 16 December, (Asiantribune.com): Six Sri Lankan Air Force personnel are now undergoing a training program at Chandigarh in India, in preparation for the country’s latest purchase of MiG 27 jet fighter planes for its small air force. Indian newspapers have reported that the SLAF personnel are currently attending an electrical first line course for MiG 27 flip wings ground attack planes the country purchased from Ukraine recently. The group who started their course last October 14 would finish by January 5 2007 the reports said. When the program is over under the agreements with the Indian government, a third batch is expected to start training at the I…
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமச்சின் இணையத்தில் இந்தப்படத்தை பார்த்தேன்.யாழ் மக்களின் பரிதாபநிலையை இப்படி போட்டு அவமானப்பாடுத்துகிறார்கள் எப்போ இவர்களுக்கு விடிவு
-
- 4 replies
- 1.4k views
-
-
….இலங்கையில் பொதுமக்களில் கணிசமான் தொகையினர் போதிய அரசியல அறிவு கொண்டவர்களல்லர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்நாட்டின் கடுங்கோட்பாட்டு அரசியல் வாதிகள், சராசரி அரசியல் அறிவைத் தானும் கொண்டிராத அந்த அப்பாவிப் பொதுமக்களது உணர்வுகளைத் திiசை திருப்பி “:நாட்டுப் பற்று” என்ற ஒரு துரும்பைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மறைந்துவிடப் பிராயத்தனப் படுகின்றனர்;…. ….உலகத்துப் பொலிஸ்காரன் எனத் தம்பட்டமடித்து ஈராக் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க வல்லரசு இன்று ஈராக்கில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு நிலைகாரணமாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் அவதியற நேர்ந்துள்ளமை, எமது நாட்டின் இன்றைய ஆடசியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது….. …
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை, டிச. 16: இலங்கைக்கு லாரி மூலம் வெடிபொருள் சப்ளை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதிய கடித விவரம்: இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்காக வெடிபொருள்களுடன் சென்ற லாரியை போலீஸôர் பிடித்துள்ளது குறித்து டிச.9-ம் தேதியன்று தில்லியில் நேரில் சந்தித்தபோது குறிப்பிட்டிருந்தீர்கள். இது தொடர்பாக டிச. 11-ம் தேதியிட்ட உங்களது விரிவான கடிதமும் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, வெடிபொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் மூலம் அந்த வெடி பொருள்கள் இலங்கை கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த வெடிபொருள்கள் கடலை ஆழ…
-
- 1 reply
- 1k views
-