ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நேரடிச் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பு இரண்டு மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில இருதரப்பும் ஒருங்கிணைந்து செயற்பட இப்பேச்சுவார்த்தை ஏதுவாக இருக்கும் என்றார். இச்சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் ஐவர் குழு…
-
- 0 replies
- 829 views
-
-
சிறிலங்கா அரசியலில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்த வரையில் எமது இந்திய முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையிட்டோம். இது விடயத்தில் உரிய வழிமுறையில்தான் தலையிடப்பட்டது. தனது நாட்டு வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் தூதுவருக்கும் கடமை உண்டு. இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி சொந்த முடிவின் படியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. முன்னர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமது இந்தியா இல்லத்துக்கு வருகை தந்தது விதிமுறைகளுக்கு அப்பாலானது அல்ல. இத…
-
- 0 replies
- 850 views
-
-
விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியாதென்ற `மாயை'யை சம்பூரில் புலிகளை தோற்கடித்ததன் மூலம் படையினர் முற்று முழுதாக தகர்த்தொழித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச, இந்த வெற்றியை உண்மையான வெற்றியாக நிலைநிறுத்த அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விமல் வீரவன்ச இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை, சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக தோற்கடித்து, அப்பிரதேசத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர். சம்பூரின் முக்கியத்துவத்தின் காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கைய…
-
- 0 replies
- 900 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் வெளிக்கள செயல்பாடுகளுக்கு நீதிசேவைகள் ஆணைக்குழுவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம் பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் செயலபாட்டில் இவர் பொலிசார் மற்றும் கிராம அலுவலாகளுடன் இணைந்து சிறந்த தொரு சேவையை யாழ்ப்பாணத்து மக்களுக்கு இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு செய்துவந்தார். இத்துடன் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்டு வரும் வீதிக்கு வீதியான படுகொலைகளில் அகப்பட்டவர்களின் சடலங்களை உடனுக்குடன் நேர காலம் இன்றி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சடலங்களை யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலையில் ஒப்படைப்பதற்கு வேண்டிய நடவடிக்கையையும் சட்டத்…
-
- 0 replies
- 918 views
-
-
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான் குழுவினரால் 5 வெவ்வேறு சம்பவங்களில் 8 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுகளிலிருந்த 2 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சுசீந்திரராஜா தெரிவித்தார். கொக்குவிலில் துப்பாக்கி முனையில் பெற்றோர்கள் முன்னிலையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மேலும் மானிப்பாயில் துப்பாக்கி முனையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடத்தப்பட்ட இளைஞர்களது பெயர்களை உயிராபத்து அச்சம் காரணமாக ஊடகவியலாளர்களிடம் அப்பெற்றோர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். வடரமாட்சி, கோப்பாய், சு…
-
- 0 replies
- 795 views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது இலங்கையில் யாழ் குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு தங்களது படைகள் முன்னேறியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனது படையினர் முன்னேறி விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண் நிலைகளை கைப்பற்றி இருப்பதாகவும் அது கூறியுள்ளது. அதேவேளை முகமாலை பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த சில தினங்களாகத் தொடரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் 148 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பி…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.தே.கவுடன் சேர்ந்து அமைக்கும் தேசிய அரசில் ஜே.வி.பியையும் உள்வாங்க ஜனாதிபதி விருப்பம் மிலிந்த மொறகொடவிடம் அவரே நேரில் வெளியிட்ட தகவல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றி ணைந்து தேசிய அரசாங்கமொன்று அமையுமானால் அதில் ஜே.வி.பி யின ரையும் உள்வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத் தேசித்திருக்கிறாரென நம்பகரமாக அறியமுடிகிறது. கடந்த வார இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் மிலிந்த மொறகொடவைச் சந் தித்த போது ஜனாதிபதி இவ்வாறான அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கி றாரெனத் தெரியவருகிறது. தேசிய அரசு ஒன்றிற்குள் ஜே.பி.பியினருக்கு இடமளிக்காமல் அவர்களைத் தனியே விட்டால் வெளியில் இருந்து கொண்டு அவர்கள் அரசுக்குத் தொல்லைதரலாம் என்பதால் ஜனாதி பதி இவ்வாறான விரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
பதிவில் இருந்து........... '''தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை''' தெகிவளையில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை கொழும்பு, தெகிவளையில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர், சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் நேற்று முன் தினம் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். தெகிவளை சுபத்திராராம வீதியில் தொலைத் தொடர்பு நிலைய மொன்றை நடத்தி வந்த வட பகுதியைச் சேர்ந்த எம்.சூரியகுமார் (வயது 26) என்ற தமிழ் வர்த்தகரே கடத்திச் ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ் மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரனின் வெளிக்கள செயற்பாடுகளுக்கு நீதிசேவைகள் ஆணைக்குழுவினால் தடை யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம் பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் செயலபாட்டில் இவர் பொலிஸார் மற்றும் கிராம அலுவலர்களுடன் இணைந்து சிறந்த தொரு சேவையை யாழ் மக்களுக்கு இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு செய்து வந்த யாழ் மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரனின் வெளிக்கள செயல்பாடுகளுக்கு நீதிசேவைகள் ஆனைக்குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இத்துடன் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாதவர்கள் மேற் கொண்டு வரும் வீதிக்கு வீதியான படு கொலைகளில் அகப்பட்டவாகளின் சடலங்களை உடனுக்குடன் நேர காலம் இன்றி குறிப்பி;ட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகம் இலங்கை நீதிமன்றதால் தங்களது வைப்பக கணக்குகள் முடக்கபட்டதை எதிர்த்து உயர்ந்திமன்றத்தில் ஆட்சேபனை மனு கொடுக்கவுள்ளதாக அதன் ஆலோசகர் அர்ஜ~ன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். தங்களது சட்ட ஆலோசகர்கள் இதுபற்றி விவாதித்து வருவதாகவும் மிகவிரைவில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் "Asian Tribune" க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். Lanka: Tamil Rehabilitation Organisation to appeal High Court ruling Mon, 2006-09-11 04:33 By Munza Mushtaq - Reporting from Colombo for Asian Tribune Colombo, 11 September, (Asiantribune.com): The Tamil Rehabilitation Organisation (TRO) is seriously considering to appeal the recent Colombo High C…
-
- 0 replies
- 1.3k views
-
-
80 தமிழ் இளைஞர்களை காணவில்லை [திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:17 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 80 தமிழ் இளைஞர்களைக் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் துரைராஜா சுரேந்திரராஜா கூறியதாவது: கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 67 பேரை காணவில்லை என்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 30 வயதுக்கும் குறைந்த 50 பேரின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போனோரில் 25 இளைஞர்களை வீடுகளிலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியே சென்றிருந்தபோதும் சிறிலங்கா இராணுவம் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளோர் தெரிவ்த்துள்ளனர். இவர்களில் சிலர் அட…
-
- 0 replies
- 861 views
-
-
வடபோர் முனையில் நேற்றிரவு உக்கிரமோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கின் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்களப் படைகளிற்கும் இடையே உக்கிரமோதல்கள் நடைபெற்றுள்ளதாக கிளிநொச்சியில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இரவு 7.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மோதல்கள் நள்ளிரவு வரை தொடர்ந்ததாக தமிழ்நெட் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பாசையூர் கொழும்புத்துறை மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய கரையோரப் பகுதிகளிலிருக்கும் சிங்களப் படைகளின் நிலைகள் மீது விடுதலைப் புலிகளால் ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் இராணுவ நிலைகள் மீதும் அதனையண்டிய பகுதிகள் …
-
- 0 replies
- 1.7k views
-
-
[திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:11 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச எல்லைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்றது. வாழைச்சேனை பிரதேச எல்லையோரப் பகுதியான கஜூவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி முதல் ஒரு மணிநேரத்துக்கு மேல் இருதரப்பினரிடையே எறிகணைத் தாக்குதல் நடந்தது. இருதரப்பு சேத விவரங்கள் வெளியாகவில்லை. இம்மோதலையடுத்து அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் அப்பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. http://www.eelampage.com/?cn=28742
-
- 0 replies
- 945 views
-
-
[திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:17 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் 80 தமிழ் இளைஞர்களைக் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் அலுவலக ஒருங்கிணைப்பாளர் துரைராஜா சுரேந்திரராஜா கூறியதாவது: கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 67 பேரை காணவில்லை என்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 30 வயதுக்கும் குறைந்த 50 பேரின் இருப்பிடம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போனோரில் 25 இளைஞர்களை வீடுகளிலிருந்தும் வீடுகளிலிருந்து வெளியே சென்றிருந்தபோதும் சிறிலங்கா இராணுவம் கைது செய்ததாக முறைப்பாடு செய்துள்ளோர் தெரிவ்த்துள்ளனர். இவர்களில் சிலர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிர…
-
- 1 reply
- 916 views
-
-
நடைபெற்றுவரும் மோதலில் 33 இராணுவத்தினர்பலி 132 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் நேற்று ஞாயிறு மாலை முதல் கிளாலி, முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளிற்க்கும், ஸ்ரீலங்கா இராணுவத்திற்க்கும் இடையே மோதல் நடைபெற்றது. முகமாலை பகுதியில் இன்றும் மோதல் தொடரர்வதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. சனிக்கிழமை முதல் முகமாலையில் நடைபெற்றுவரும் மோதலில் 33 இராணுவவீரர்கள் பலியானதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர். ஏறக்குறைய 115 விடுதலைப்புலிகள் பலியாகி இருக்கலாம் என்றும் தொடர்ந்தும ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுவதால் இரு தரப்பின் சேத விபரம் சரியாகத் தெரியவில்லையென ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. இதேவேளை பாசையூர், கொழும்புத்துறை, …
-
- 0 replies
- 744 views
-
-
சம்பூரை இராணுவத்தினர் மீட்ட வெற்றியை `கேக்' வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி சம்பூரை இராணுவத்தினர் கைப்பற்றிய வெற்றியை மகிந்த ராஜபக்ஷ கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றின் பாதுகாப்பு விவகார ஆய்வாளரின் கட்டுரையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஹில்டன் ஹோட்டலில் இருந்து 4 கிலோ எடையுள்ள கேக்கை ஜனாதிபதி வாங்கியுள்ளார். எனினும் அந்தக் கேக்கை சாதாரணமாக பரிமாற அவர் அனுமதிக்கவில்லை. இக் கேக்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை அழைத்து வெட்டச் சொல்லியுள்ளார். அதன்பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவையும் அவரைத் தொடர்ந்து விமானப்படைத் தளபத…
-
- 8 replies
- 3.1k views
-
-
வடமுனையில் புலிகளிற்கும்,படையினரிற்கும
-
- 1 reply
- 1.5k views
-
-
படைகளின் மனித உரிமை மீறல்கள் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் முன்! இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 754 views
-
-
தந்திரப் போரில் மாட்டிக்கொண்ட நோர்வே -சி.இதயச்சந்திரன்- இன்னுமொரு 'யாழ்ப்பாண இடப்பெயர்வு" மூதூரில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக மூதூர் கிழக்குக் கிராம தமிழ் மக்கள் கூட்டமாக வெளியேறியுள்ளனர். அவர்களின் வாழ்வாதார நிலைகள் அரச தாக்குதல்களினால் சிதறலாக்கப்பட்டுள்ளன. இறுதிப் போரொன்று ஆரம்பித்தால் தமது இராணுவத் தாக்குதல்கள் இவ்வாறே அமையுமென சிறிலங்கா அரசு உணர்த்தியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் யுத்த நிறுத்த ஒப்பந்த எல்லைகளுக்கு அப்பாலும், கண்காணிப்புக்குழுவின் நேர்முக வர்ணனைகளைக் கடந்தும், மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகக் கூறும் புள்ளி விபரச் சேகரிப்பாளர்களின் புலம்பல்களைத் தாண்டியும் வேறொரு நிலைக்குள் வந்துவிட்டார்கள். விடுதலைப் புலிகளும், சிறில…
-
- 2 replies
- 1.6k views
-
-
யுத்த நிலைமை பற்றி இந்தியாவுக்கு விளக்க ஜாதிக ஹெல உறுமயவின் குழு புதுடில்லிக்கு! நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரச படையினருக்கும், தமிழீழ விடு தலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்று வருகின்ற தாக்குதல் நடவடிக்கைகள் என் பன பற்றி இந்திய அரசுக்கு விளக்கிக் கூறு வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் குழு வொன்று மிக விரைவில் இந்தியா செல்லத் தீர்மானித்துள்ளது. அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான வண. எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகை யில், ""தமிழீழ விடுதலைப் புலிகள் தொட…
-
- 0 replies
- 786 views
-
-
படைகளின் மனித உரிமை மீறல்கள் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் முன்! இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை பரவலாக்க தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் மிகவும் நம்பிக்கையுடன் யுத்தத்தை மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிதி சட்டத்திட்டங்கள், கேள்வி பத்திர நடைமுறை, கணக்காய்வு சட்டங்கள் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி கடன்களை பெற்று யுத்தத்திற்காக அதிகளவான பணத்தை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் http://eelampress.com/index.php?subaction=...t_from=&ucat=2&
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு - வாழைச்சேனை கறுவாக்கேணியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.55 மணியளவில் நடைபெற்றது. கறுவாக்கேணி வித்தியாலயம் அருகே சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது இவ்விரு இளைஞர்களும் தாக்குதல் நடத்திய போது இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களிடமிருந்து மூன்று கைக்குண்டுகளையும், இரண்டு கைத்துப்பாக்கிகளையும், இரண்டு சயனைட் வில்லைகளையும் கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் 26 வயது மதிக்கத…
-
- 1 reply
- 1k views
-
-
லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலை லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் தற்கொலை செய்துள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் ஜெயக்குமார் சுப்பிரமணியம் என்று கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர், சட்டச்சிக்கல்கள் காரணமாகவும் தேவையான ஆவணங்கள் இன்மையாலும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாமல் குடிவரவு-குடியகல்வு திணைக்கள அ…
-
- 10 replies
- 2.4k views
-
-
Heavy fighting rages in Muhamalai, Kilali [TamilNet, September 10, 2006 19:01 GMT] Heavy artillery shelling and fighting between the Sri Lankan forces and the Liberation Tigers erupted in Kilali and Muhamalai Forward Defence Line (FDL) of the Northern Front from 7:30 p.m. Sunday, sources in Kilinochchi said. Artillery shelling and gunfire were continuing Sunday midnight. The SLA had suffered heavy casualties Saturday when it launched a fresh offensive towards Liberation Tigers of Tamil Eelam (LTTE) FDL. Meanwhile, Sri Lankan Police in Kodikamam Sunday said they had seven bodies of Tamil youths, five males and two females, killed in in the clashes in Thenm…
-
- 3 replies
- 1.9k views
-