ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இணைந்த வட, கிழக்கே இந்தியாவின் விருப்பம் - மன்மோகன்சிங் ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவிப்பு; அரசியல் தீர்வுக்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தல் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட்ட அலகாக இருப்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார். அத்துடன், மனித உரிமை துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியிருக்கிறார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று புதன்கிழமை மதியபோசன விருந்துபசாரமளித்த பின் மன்மோகன் சிங் அவருடன் பேச…
-
- 0 replies
- 974 views
-
-
115 சிங்கள மாணவர்கள் வவுனியாவிலிருந்து வெளியேறினர் [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 19:06 ஈழம்] [க.நித்தியா] வவுனியா கல்விக் கழகத்தைச் சேர்ந்த 115 சிங்கள மாணவர்கள், நேற்று புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தங்களைத் தேடி கல்விக் கழகத்துக்கு வந்ததாக தம்மிடம் முறையிட்டனர் என்று கழகத்தின் தலைவர் கே.பேர்னாட் தெரிவித்துள்ளார். தங்கள் உயிருக்கு ஆபத்து என அவர்கள் அச்சப்பட்டதால், நேற்றிரவு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வவுனியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்திடம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். பின்னர் இன்று இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அனைவரும் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்: சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 20:40 ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் மிகவும் மோசமாக நசுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமையை முழுமையாக நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அக்குழு, இக்கோரிக்கையை ஐ.நா மனித உரிமை மன்றம் தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகளும் மனிதாபிமான சட்டங்களும் மிக மோசமாக மீறப்படுவதை நிறுத்துவதிலும் மேலும் சிதைவுறாமல் தடுப்பதிலும் மனித உரிமை மன்றம் ஆ…
-
- 0 replies
- 871 views
-
-
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் உள்ள கலாசார ஒற்றுமைகளை ஆராய நிதி உதவி தேவை [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 20:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடபகுதிக்கும் பண்டைக்காலம் முதல் இருந்து வரும் கலாசார தொடர்புகள் மற்றும் ஒற்றுமைகள் குறித்து வடக்குப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய தமிழகத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சிக் குழு ஒன்று நிதி உதவி கேட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவின் மத்திய அகழ்வாராய்ச்சிப் பிரிவின் முன்னாள் நிர்வாகி பேராசிரியர் டி.சத்தியமூர்த்தி, ஈழத்தில் கலாசாரம், இலக்கியம், எழுத்துரு, நாணயங்கள், கிராமியக் கலைகள் அனைத்திலும் பண்டைய தமிழ் நாட்டின் தாக்கம் உள்ளதென்பதை இலங்கையின் மாந்தைப் பகுதியில் நடைபெற்ற அகழ…
-
- 0 replies
- 766 views
-
-
கொழும்பு ஊடக செய்திக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 16:26 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது உரையைத் தொடர்ந்து கொழும்புக்கு விடுதலைப் புலிகள் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார்கள் என கண்காணிப்புக் குழுவை மேற்கோள் காட்டி வெளிவந்த கொழும்பு ஊடகமொன்றின் செய்திக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனும், இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்களது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில், கொழும்புக்குத் தெரிவிக்க வேண்டிய அனைத்துத் தகவலையும் தெளிவாக விளக்கியுள்ளார் என்று இளந்திரையன் கூறினார். சமாதான உடன்படிக்கையைக் கிழித்தெறியாமலேயே அதற்கு ஈமச்சடங்கை கொழும…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் http://www.petitiononline.com/Tforum00/petition-sign.html? or http://www.tamilsforum.com
-
- 0 replies
- 893 views
-
-
பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டாம் - அனுரா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனூடாக சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது மட்டும் உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சபையில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக சிறி லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர…
-
- 9 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் சிறிலங்கா படையினர் நாளை முதல் முத்த வெளியை அண்டிய பண்ணை பகுதியில் புதிய பேரூந்து நிலையம் செயல்படும் என யாழ் மாவட்ட இராணுவ தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் வட பிராந்திய போக்குவரத்து சபை பேரூந்துகளது தரிப்பிடங்கள் மற்றும் தனியார் பேரூந்து தரிப்பு நிலையங்கள்;; பண்ணை பகுதிகளிலேயே அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறிலங்கா இராணுவ தலைமையகத்தினால் இந்த புதிய ஏற்பாட்டுக்கான காரணங்களை வெளியிப்படவில்லை ஏற்கனவே யாழ் நகரின் ஸ்டேன்லி வீதி மற்றும் பருத்திதுறை வீதி ஆகியன வாகனப் போக்குவரத்திற்க்கு தடை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி - சங்கதி http://www.sankathi.org/news/ind…
-
- 1 reply
- 952 views
-
-
தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை தீர்த்துக்கட்டுகிறது அரசு! - எஸ்.துரைரட்ணசிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயாராகவிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு சிங்கள அரசு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருமலை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: பல்குழல் பீரங்கிகள், ஷெல்கள், மோட்டார்கள், விமானத்தாக்குதல்கள் மூலம் தமிழ்மக்களும் அவர்களது இருப்பிடங்களும் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இன்று நடப்பது என்ன? ஆட்கடத்தல், காணாமற்போதல், …
-
- 0 replies
- 596 views
-
-
பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த! மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம் இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார். ""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் …
-
- 14 replies
- 2.8k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக் கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கைச் சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்ப டிக்கை முறிவடையும் நிலை ஏற்பட்டுள் ளதாக ஐ.தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரி யல்ல தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச்செல்ல ஐ.தே.கவுடன் இணங்காமை, ஐ.தே.க. உறுப்பினர்களைப் பழிவாங் கும் நோக்குடன் அரசு செயற்படுகின் றமை ஆகிய காரணங்களினால் அரசுக் கும் ஐ.தே.கவிற்கும் இடையில் கைச்சாத் திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்குச் சென்றிருக்கிறது. திஸ்ஸ விதாரணவினால் முன்வைக்…
-
- 0 replies
- 978 views
-
-
சிறிலங்காப் படையினரின் கெடுபிடிக்கும் இழுத்தடிப்புக்கும் மத்தியில் வாகரைக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 29 ழேஎநஅடிநச 2006 12:04 மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தொடர்ந்து சிறிலங்காப் படையினர். அனுமதி மறுத்ததனால் அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவிலும் மருத்துவப் பிரச்சனைகளாலும் நாளாந்தம் பேரவலத்தைச் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், தமிழீழ நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன அரச அதிபரிடமும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, ஐ.நா குழு (ரு N) ஆகியவற்றுக்கு மக்களின் நிலையை தொடர்ந்து எடு…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. ஐப்பான், நியூசிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர். தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைக…
-
- 10 replies
- 2.3k views
-
-
வடக்கு - கிழக்கு ஒரே அலகு இந்தியாவின் விருப்பம் இதுவே! பேச்சு மூலம் மோதலுக்கு முடிவுகட்டுமாறு மஹிந்தவிடம் மன்மோகன் சிங் வற்புறுத்தல். இலங்கையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து, உக்கிப்போய் வெறும் தாளாகிக் கிடக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமது மாவீரர் தின உரையில் பகிரங்கமாக அறிவித்திருப்பதில் அந்த உடன்படிக்கை முற்றாக கைவிடப்பட்டுவிட்டது என்று புலி களின் தலைவர் அர்த்தப்படுத்துகின்றாரா? இதனை உறுதிப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றது கொழும்பு அரசு. தலைவர் பிரபாகரனின் அறிவிப்பின் அடிப்படையில், புலிகளின் இயக்கம் யுத்த நிறுத்த உடன் பாட்டிலிருந்து விலகிவிட்டது என்று கொள்ளலாமா என்பதைப் புலிகளிடமே நேரடியாகக் கேட்ட றிந்து தெரிவிக்கும…
-
- 0 replies
- 959 views
-
-
யாழில் தாக்கிய வைரஸ் நோய் சிக்குன்குனியா. அண்மைக்காலமாக யாழ்பாணத்தில் பெருமளவிலான மக்களை தாக்கிய வைரஸ் நோயானது சிக்குன்குனியா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வைரஸ் காய்சலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து கொழும்பில் உள்ள இலங்கை மருத்துவ ஆராச்சி கழகத்திற்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்நோயின் தாக்கத்திற்கு எண்ணாயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்நோய் தாக்கியுள்ளமை அறியவந்துள்ளது. www.pathivu.com
-
- 0 replies
- 905 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தை மூடியது சிறிலங்கா அரசு: இந்திய ஊடகம் தமிழ் மக்களின் கல்விப் பாதையை சிறிலங்கா அரசு மூடிவிட்டது. நாளுக்கு நாள் இலங்கை நிலை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று இந்திய தொலைக்காட்சியான என்டிரிவி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்புக் தளம் என சிறிலங்கா அரசினால் முத்திரை குத்தப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்று வந்த என்டிரிவி தொலைக்காட்சி நிறுவனம் அங்குள்ள நிலைமை குறித்து சோகமான கட்டுரையை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் ஓகஸ்ட் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டு விட்டது. ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி, மக்களுக்கான கல்விப் பாதையை அடைத்து விட்டார்கள். கிளிநோச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இ…
-
- 1 reply
- 849 views
-
-
துணை இராணுவக் குழுவினருக்கு உதவுவதை உடன் நிறுத்த வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு [செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 19:29 ஈழம்] [க.நித்தியா] சிறார்களையும் இளைஞர்களையும் கடத்துவதற்கு துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கு உதவுவதை சிறிலங்காப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹியுமன் றைட் வோட்ச் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கடத்தப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு படையினர் உதவ வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சிறார்களைக் கடத்துவதில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர். சில சமயங்களில் கருணா குழுவுடன் நே…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகிறது. துண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல `ஏ-9′ பாதையை திறந்து விடும்படி புலிகள் விடுத்த கோரிக்கையையும் இலங்கை ராணுவம் ஏற்கவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலமாக `ஏ-9′ பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர். `ஏ-9′ பாதையை மூடியிருப்பது போர் நிறு…
-
- 18 replies
- 5.6k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தம்மிடம் தெளிவுபடுத்தியிருப்பதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இன்று தெரிவித்திருக்கின்றனர். பி.பி.சி. தமிழோசையுடனான பிரத்தியேக பேட்டியின்போது கருத்து வெளியிட்ட இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோவினூர் ஓமர்ஸன், நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் இதனைத் தம்மிடம் தெரிவித்ததாக இன்று கூறினார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதி கூறிய தமிழ்செல்வன் புலிகளின் இந்த உறுதிப்பாட…
-
- 0 replies
- 785 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டிருந்த பொலிஸார் மீது விசாரணை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸார் தொடர்பாக பொலிஸ் தலைமையக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை இப்பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியொருவரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையக உயர் பொலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிவிட்டனரா? நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி?தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டனரா என்பது தொடர்பாக அறிய தருமாறு இலங்கை அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென தாம் தீர்க்கமாக முடிவுசெய்திருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய திட்டம் தேவையில்லை: நோர்வே சமாதான முயற்சிகளில் பயன் எதுவும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கும் வேளையில், இலங்கையின் சமாதான முயற்சி தொடர்பாக நோர்வே புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கப்போவதாகவும் இருதரப்பினருக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்மின் பேச்சாளர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் சிறிலங்கா அரசு நோர்வேக்கு எழுதிய கடிதத்தில், சமாதான முயற்சிகளில் பயனெதுவும் இல்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பு அறிவித்த பின…
-
- 1 reply
- 952 views
-
-
பொதுமக்கள் மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடத்த முடியாது: இணைத்தலைமை நாடுகள் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தும் தாக்குதல்களை சிறிலங்கா அரசு நடத்த முடியாது என்று இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் தரப்பு மக்களைக் கவசமாகப் பயன்படுத்தினாலும் சிறிலங்கா அரசு மக்கள்மீது தாக்குதலை நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இணைத் தலைமை நாடுகள் சார்பில் ஜெர்மன் தூதுவர் ஜர்கன் விரீத் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சிறிலங்கா மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவ…
-
- 0 replies
- 713 views
-
-
சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகல் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி [Wednesday November 29 2006 11:05:36 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பிணை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின் பிடிய்ல் இருந்த் சுதந்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்போம் - சிறிலங்கா அரசாங்கம். ஆயுத பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் அலன் றொக் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டமையினால் இனிமேல் இத்தகையவர்கள் சிறி லங்கா வரும் முன்னர் அவர்கள் குறித்து புலனாய்வுத்தகவல்களை பெறவுள்ளோம். இதன் பின்னரே நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இ…
-
- 1 reply
- 1.2k views
-