விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
‘எனக்கும் குடும்பம் இருக்கிறது’ - நிறவெறி வசைக்கு ஆளான இம்ரான் தாஹிர் YouTube தெ.ஆ. வீரர் இம்ரான் தாஹிர். - படம். | கெட்டி இமேஜஸ். இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் மீது முகம் தெரியாத பார்வையாளர் ஒருவர் நிறவெறி வசையை எய்தியது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறியதாவது: இம்ரான் தாஹிர் சொல்லாலும் நிறத்தாலும் வசைமொழியை எதிர்கொண்டுள்ளார். பார்வையாளர் ஒருவர் இச்செய்கையை செய்துள்ளார். இதனை மைதான பாதுகாப்பு அதிகாரியிடம் தாஹிர் புகார் கூற, அவரை…
-
- 0 replies
- 394 views
-
-
கிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை போல, வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. ஷார்ஜாவில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற…
-
- 2 replies
- 487 views
-
-
ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது அ-அ+ ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறந்த தல…
-
- 0 replies
- 306 views
-
-
100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்?- சில சுவாரஸ்ய தகவல்கள் இந்திய வீரர் ஷிகர் தவான்: (கோப்புப்படம்) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சர்வதேச அளவில் 9-வது வீரராகவும் பட்டியலில் அவர் இடம் பெற்றார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டி இந்திய வீரர் ஷிகார் தவானுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அபாரமாக ஆடி…
-
- 0 replies
- 260 views
-
-
பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி- அர்செனல் தோல்வி பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. அர்செனல் தோல்வியடைந்தது. #PremierLeague #MCI #TOT பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் அர்செனல் - டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி 1-0 என அர்…
-
- 2 replies
- 341 views
-
-
முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசிய நோ-பால் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கீட்டதால், அந்த அணியின் வெற்றிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர…
-
- 0 replies
- 417 views
-
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் சந்தேகம் Image Courtesy- PTV 2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று (9) இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) நிர்வாக கூட்டத்தினை அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறவிருக்கும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பாரிய விளையாட்டுத் தொடர் ஒன்று நடைபெறும் போது அத்தொடருக்காக விஷேட வரிவிலக்கு வழங்கப்படும். இப்படியான சலுகை ஒன்றை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்த்திருந்தது. எனினும், இதுவரையில் அப்படியான ஒரு வர…
-
- 0 replies
- 219 views
-
-
அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத் அ-அ+ வங்காள தேசத்திற்கு எதிரான டாக்கா டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார் ஹெராத். #BANvSL வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.…
-
- 1 reply
- 200 views
-
-
டீம்ல நாலு ஃபாஸ்ட் பெளலர் இருந்தாபோதும்... எந்த டீமுக்கும் தண்ணி காட்டலாம் ! "ஆம், அந்தப் பந்தை இன்னும் 20, 30 முறை எதிர்கொண்டாலும் நான் அவுட்தான் ஆவேன். பெளலரைப் பாராட்டிவிட்டு, இந்த விஷயத்தை விட்டு நகருங்கள்..." - ஜேம்ஸ் வின்ஸ் வார்த்தைகளில் குற்றவுணர்வு. அவரால் கம்பீரமாக பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அந்த பந்தைப் பற்றி அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தது ரொம்பவுமே எரிச்சலூட்டியது. ஏனெனில், அவர் அவுட்டான விதம் அப்படி. சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில், மிச்செல் ஸ்டார்க் வீசிய அந்த மாயப்பந்தில், ஆஃப் ஸ்டம்ப் சரிந்து விழ, பெய்ல்கள் மின்னிக்கொண்டே பறக்க, ஆட்டமிழந்தார் வின்ஸ். கேட்ச், எல்.பி.டபிள்யூ, ரன் அவுட் என வேறு எப்படி அவுட் ஆகியிருந்த…
-
- 0 replies
- 490 views
-
-
இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி... சென்னையின் மறக்க முடியாத நாள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பாலி உம்ரிகர் - படஉதவி: கெட்டி இமேஜஸ் சென்னை இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் வெற்றியை இன்றுதான் பெற்றது. அதுவும் இந்த வெற்றி சென்னை மைதானத்தில் கிடைத்தது மிகச்சிறப்பாகும். கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்த இந்திய அணி தனது முதல் வெற்றியை ருசிக்க ஏறக்குறைய 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. முதல் டெஸ்ட் வெற்றி பெற்று இந்திய அணி இன்றுடன் 66-வது ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 1952-ம் ஆண்டு பி…
-
- 0 replies
- 215 views
-
-
டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், இதனால் இளம் வீரர்கள் T-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை தடுக்க முடியும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார். டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த உலகின் 5ஆவது வீரராக வலம்வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் முதல்தரப் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.…
-
- 0 replies
- 329 views
-
-
இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு Tamil இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரையடுத்து பல அதிர்ச்சியான முடிவுகளையும் சந்திக்க நேரிட்டது. இதில் அவ்வணியின் வெற்றிக்காக அரும் பணியாற்றி வந்த தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் திடீர் பதவி விலகலானது அவ்வணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது. எனினும், 2018ஆம் ஆண்டில் அவ்வணி பங்கேற்ற முதல் தொடராக இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அ…
-
- 28 replies
- 1.8k views
-
-
159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு 3-வது ஓருநாள் போட்டியில் 34-வது சதம் எடுத்த விராட் கோலி. - படம். | கெட்டி இமேஜஸ் கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தி…
-
- 4 replies
- 745 views
-
-
ஹர்பஜன் சிங் கொண்டாடிய 'சின்னாளப்பட்டி ரசிகன்' ஹர்பஜன்சிங் , சரவணன்: கோப்பு படம் - படஉதவி: சரவணன் ட்விட்டர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங்குக்கு மிகவும் பிடித்தவராக, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் உள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோதிய டெஸ்ட் போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் ஹாட்ரிக் விக்கெட் வீழத்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்தப் போட்டிக்குப் பின் ஹர்பஜனின் பந்துவீச்சில் வசீகரிக…
-
- 0 replies
- 361 views
-
-
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து உலகக் கோப்பை தொடரில் ரிஸ்ட்ஸ் ஸ்பின்னர்கள் பெரிய காரணிகளாக இருப்பார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. தனது 34-வது சதத்தை அடித்த கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் விளாசினார். கடினமான இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி …
-
- 0 replies
- 245 views
-
-
மாலிங்க ஓய்வு பற்றி சூசகம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்கவின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் மனநிறைவு பெற்றிருப்பதாக தனது ஓய்வு பற்றி மாலிங்க சூசகமாக குறிப்பிட்டுள்ளார். மாலிங்க கடந்த ஒரு தசாப்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 157 போட்டிகளில் 110இல் மாலிங்க ஆடி அந்த அணிக்கு கௌரவத்தை சேர்த்துள்ளார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாலிங்க வியாழக்கிழமை (08) நியமிக்கப்பட்டார். “கிரிக்கெட் ஆடியது போதும் என்ற மனநிலை…
-
- 0 replies
- 356 views
-
-
'சேப்பாக்கம் வரவேற்பை மிஸ் பண்ணப்போறேன்' -அஸ்வின் வேதனை இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பிறகு, ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கவுள்ளதை அடுத்து சென்னை ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். தோனி, ரெய்னா, ஜடேஜாவை RTM கார்டு சென்னை அணி தக்கவைக்க ஏலத்தின் மூலம் அஸ்வினை பஞ்சாப் வாங்கியது. அஸ்வின் இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அணிக்காகக் களமிறங்காதது வருத்தம் அளிக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 10 வருடங்களாக சென்னை அணிக்கு விளையாடிய நிலையில் தற்போது விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. ஏலம் என்பது எதிர்பாராதது. நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் பௌலிங் செய்யும்ப…
-
- 0 replies
- 344 views
-
-
விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை அ-அ+ இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். #Dhoni #MSDhoni #MSD400 #Dhoni400 #MSD நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் பந்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் மெர்க்ராமை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் (295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த…
-
- 0 replies
- 289 views
-
-
சுவிஸில் இன்று தொடங்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிஸின் St.Moritz நகரில் உள்ள பனிமலைப் பகுதியில், உலகின் முதல் ஐஸ் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது. மொத்தமாக இரண்டு போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் முன்னாள் ஜாம்பவான்கள், இன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களில், சோயப் அக்தர், லசித் மலிங்கா, மைக்கேல் ஹஸ்ஸி, வீரேந்தர் சேவாக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். Traveloyster.com-யின் உரிமையாளர் மற்றும் இயக்குநருமான அபாய் ஜெய்புரியா, வீரர்களின் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாட்டின் பங்குதாரராக உள்ளார். http://news.lankasri.com/cri…
-
- 3 replies
- 417 views
-
-
கபில்ராஜ் சகலதுறைகளிலும் அசத்த சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு இலகு வெற்றி சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறுகின்ற 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் டிவிஷன் – II பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியொன்றில் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி தெல்லிப்பளை மஹாஜன கல்லூரிய்யை 287 ஓட்டங்களால் தோற்கடித்து அதிரடி வெற்றியொன்றை பதிவு செய்திருக்கின்றது. நேற்று (6) மஹாஜன கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி கனகரத்தினம் கபில்ராஜ் அரைச்சதம…
-
- 0 replies
- 308 views
-
-
51 வயதிலும் அதே ஸ்விங்: ஷோயப் மாலிக்கை 2 ரன்களில் வீழ்த்திய வாசிம் அக்ரம் ஷோயப் மாலிக்கை வீழ்த்திய மகிழ்ச்சியில் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகியிருக்கும். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட அவர் தன் வயதையும் முறியடித்து 51 வயதில் தன் பழைய ஸ்வின் பவுலிங்கை வெளிப்படுத்தி தற்போது ஆடிவரும் ஷோயப் மாலிக்கை எட்ஜ் செய்ய வைத்தது, ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான முல்டான் சுல்தான் அணிக்காக காட்சிப் போட்டி ஒன்றில் ஆடினார். அப்போது பந்து வீசிய வாசிம் அக்ரம் தன் 51 வயதையும் பொருட்படுத்தாம…
-
- 1 reply
- 425 views
-
-
முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் செய்திகள் 0 மெல்போர்ன்: முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடர், அடுத்த மாதம் (பிப். 3–21) ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியிருப்பதால், ‘ரெகுலர்’ கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு, விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர், அணியை வழிநடத்த உள்ளார். ச…
-
- 3 replies
- 390 views
-
-
இருபதுக்கு - 20 அணிக்கு சந்திமல் தலைவர் ; இலங்கை குழாம் அறிவிப்பு பங்களாதேஷ் அணிக்கெதிரான இரபதுக்கு - 20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணிக்கு எதிராக 2 இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதியும் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. …
-
- 0 replies
- 183 views
-
-
ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction 2018 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்டது. 8 அணிகளில் விளையாட 187 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 628.70 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. சில அணிகள் முழு பலத்துடன் கம்பீரமாக களமிறங்கவுள்ளன. சில அணிகளுக்கு ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் பலவீனமாக இருக்கிறது. ஏலத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு எண்ணிலடங்கா கேள்விகள். ``ஏன் அந்த பிளேயருக்கு இத்தனை கோடி", ``அவரை ஏன் யாரும் வாங்கலை", ``காச செலவு பண்ணாத்தான் என்ன, அத வச்சு என்ன பண்ணப் போறாங்க", "அவனை ஏன் வாங்குனாங்க" என சோஷியல் மீடியாவில் புலம்பித் தள்ளினார்கள் கிரிக்கெட் வெறியர்கள். …
-
- 4 replies
- 1k views
-
-
'எங்களுக்கு எதிராக கோலியால் சதம் அடிக்க முடியுமா?'- பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் கோப்புபடம்: விராத் கோலி, மிக்கி ஆர்தர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்து இருக்கலாம், ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் விடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனும், கேப்டனுமான விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, தனது 33-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க…
-
- 0 replies
- 526 views
-