Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 51 பந்துகளில் 126 ரன்கள், 14 சிக்ஸ், 6 பவுண்டரி: கிறிஸ் கெய்ல் மேஜிக் கிறிஸ் கெய்ல். - படம். | கெட்டி இமேஜஸ். வங்கதேச பிரீமியர் லீக், டாக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், குல்னா டைட்டன்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார். இதனால் ரங்பூர் ரைடர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 15.2 ஓவர்களில் இலக்கை ஊதித்தள்ளியது. முதலில் பேட் செய்த குல்னா 6 விக், இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரங்பூர் அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மஷ்ரபே மோர்டசா 4 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். இந்தச் சதம் பங்களாதேஷ் பிரீமியர் லீ…

  2. பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடினார் லிவீஸ் ஹாமில்டன் பிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. பாரிஸ்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தா…

  3. பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…

  4. மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…

  5. இம்மாத இறுதியிலிருந்து ஹத்துருசிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் பொறுப்பை சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இம்­மாத இறு­தியில் ஏற்­றுக்­கொள்வார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ரா­க­வி­ருந்த கிரஹம் போர்ட், சம்­பியன்ஸ் கிண்ணத் தொட­ருடன் இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து நிரந்­தர தலைமைப் பயிற்­சி­யாளர் இல்­லாமல் இலங்கை அணி தொடர்­களில் பங்­கேற்று வரு­கி­றது. இந்­நி­லையில் பங்­க­ளாதேஷ் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை இலங்கை அணு­கி­யது. தற்­போது ஹத்­து­ரு­சிங்­கவும் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் இம்­மாத இறு­தியில் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.…

  6. 2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ஒவ்­வொரு தொட­ருக்கும் ஒவ்­வொரு அணித் தலை­வரை நிய­மிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் திட்­டத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார். அத்­தோடு எதிர்­வரும் 2019ஆம் ஆண்­டு­வரை திஸர பெரே­ராவே தலை­வ­ராக நீடிப்பார் என்றும் அவர் தலை­மை­யி­லான உலகக் கிண்ண அணியை உரு­வாக்­க­வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி தற்­போது கடும் பின்­ன­டைவை சந்­தித்து வரு­கி­றது. அடுத்­த­டுத்த பல தோல்­வி­களால் அணி ஆட்டம் கண்­டுள்­ளது. இந்­நி­லையில் இலங்கை அணியின் மூன்­று­வகை கிரிக்கெட் …

  7. ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ! உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். Photo Credit: Twitter/Cristiano கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை முந்தி சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கிறார் ரொனால்டோ. இதன்மூலம், அதிக முறை (5)…

  8. பொரிசியா டொட்டமுண்டை வென்றது றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார். இங்கிலாந்து…

  9. இளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Photo Credit: ICC அயர்லாந்து- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் சுழல் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஃப்கா…

  10. `விராட் கோலி வேற லெவல்’ - சங்ககரா சொல்லும் ரகசியம்! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககரா மனம் திறந்துள்ளார். டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 287 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், நடப்பு 2017-ம் ஆண்டில் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் சேர்த்து விராட் கோலி சேர்த்த ரன்கள் 2,818 ஆனது. இந்த வகையில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சங்ககாரா 2,868 ரன்கள் (2014) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,833 (2005) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய ஒருநாள் மற்று…

  11. ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK Chennai: 'தி பாய்ஸ் ஆர் பேக்' பி.ஜி.எம்தான் இப்போது வைரல். சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜியை அதிகரித்துள்ளது. நேற்று கூடிய ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதனால் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சி அணிந்து, சேப்பாக்கத்தில் வலம் வருவது உறுதியாகிவிட்டது. வேறு யாரையெல்லாம் சென்னை தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும். மற்ற அணிகள் யாரையெல்லாம் தக்கவைத்துக்கொள்வார்கள்? #IPL2018 Player retention-யைப் பொறுத்தவரை…

  12. அடுத்தாண்டு ஒலிம்பிக்கிலும் ரஷ்யா இல்லை தென்கொரியாவின் பியொங்சங்கில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்குபற்றுவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தாம் குற்றமில்லாதவர்கள் என நிரூபிக்கும் ரஷ்ய தடகள வீரர்கள் சுயாதீனக் கொடியொன்றின் கீழ் பியொங்சங்கில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறித்த தடகள வீரர்கள் ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்றவாறு பங்குபற்றமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவால் 2014ஆம் ஆண்டு சோச்சியில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பின்போது அரச ஆதர…

  13. பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம்! பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் பைபஸ் பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது திட்டத்தினை முன்வைத்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை புதிய பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் டாக்காவுக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் நேற்று (06) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதேவேளை புதிய பயிற்றுவிப்பாளர…

  14. பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது பெயார்ண் மியூனிச் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பெயார்ண் மியூனிச், பார்சிலோனா, ஜுவென்டஸ், மன்செஸ்டர் யுனைட்டெட், றோமா ஆகிய அணிகள் வென்றதோடு, செல்சி, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ இரண்டு கோல்களையும் றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே …

  15. தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…

  16. விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 05 இலங்கை அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை படைத்த விராத் கோஹ்லி, இலங்கை ஒரு நாள் அணியின் 22ஆவது தலைவராக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் 2018 பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் குழு நிலை அணிகளின் விபரங்கள் உள்ளிட்டவை இந்தவார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கவுள்ளது.

  17. இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார். லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்த…

  18. இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்தநிலையில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்று சமநிலையில் முடிய, இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வியை சந்தித…

  19. டெல்லியில் இனிமேல் போட்டி நடத்துகையில் காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும்: பி.சி.சி.ஐ இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித…

  20. 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை 2018 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பல கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 டி20 மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இதனையடுத்து இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் மே…

  21. இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாண வீரர் நெப்தலி ஜொய்சன் 2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்டதாக அமையவுள்ளதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது. இதில் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் 17 வீரர்களும…

  22. டி20 கிரிக்கெட்: விராட் கோலிக்கு ஓய்வு; தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விளையாடி வந்த விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையி…

  23. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10-ந்தேதி 17-ந்தேதி வரையும், டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி உடன் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. அதன்பின் இந்திய அணி 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. 30-ந்தேதி ம…

  24. எலி, முள்ளம்பன்றி, கார்.. விநோத காரணங்களுக்காக தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்! இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று மதியம் களத்தில் அதிக மாசு இருப்பதாகக் கூறி இலங்கை வீரர்கள் முகமுடி அணிந்து ஆடினர். லக்மல் உள்ளிட்ட சில இலங்கை வீரர்கள் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறி டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். இதனால், அவ்வப்போது ஆட்டம் தடைபட்டது. இதேபோல கிரிக்கெட் வரலாற்றில் பல விநோத காரணங்களுக்காக ஆட்டம் தடைபட்டிருக்கிறது. அதன் விவரம்... * 1957 ஜூலை: இங்கிலாந்தில் நடந்த கவுன்டி கிரிக்கெட் போட்டியின் இடையே முள்ளம்பன்றி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்…

  25. தோற்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் இப்பருவகால லீக் 1 தொடரில் முதற்தடவையாக தோற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது. ஸ்ராஸ்பேர்க் சார்பாக நுனோ டா கொஸ்டா, ஸ்டெபனி பஹொஹென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றிருந்தார். ஆர்சனலை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து கால்பந்தாட்டக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.