Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன்! வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. Photo Courtesy: Afghan Cricket Board 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூரில் நடந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. முதலில் பேட் செய்த …

  2. 5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா! கொல்கத்தாவில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதுபோல 5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரிக்குப் பிறகு இதுபோல விளையாடிய 3-வது இந்தியர், புஜாரா. கொல்கத்தா டெஸ்டில் முதல் நாளன்று புஜாரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழையால் 2-வது நாளும் பாதிக்கப்பட்டதால் அந்த நாளின் முடிவில் 47 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா 3-ம் நாளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். …

  3. சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்! கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை எடுத்துள்ளார். 29 வயது கோலி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து மேலும் 350 இன்னிங்ஸ்களை விளையாடி, தற்போது உள்ளதுபோல ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடுகிறபட்சத்தில் சர்வதேச க…

  4. யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதனன்று நடைபெற்ற 15 வயத…

  5. 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…

  6. இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி ட…

  7. ஒருநாள் போட்டியில் 7 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில்…

  8. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த ஐந்…

  9. இலங்கையில் அடுத்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா, வங்காள தேசம் பங்கேற்பு இலங்கையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்காள தேசம் பங்கேற்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த அந்நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தியா, வங்காள தேசம் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 2018 மார்ச் மாதம் 8-ந்தேதி …

  10. முதல் 46 பந்துகளுக்கு ரன் கொடுக்காத சுரங்கா லக்மல்: சாதனை விவரங்கள்! இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் ஒரு சாதனை புரிந்துள்ளார். * நேற்று ஒரு ரன்னும் கொடுக்காமல் பந்துவீசிய 30 வயது சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார். 2001க்குப் பிறகு தொடர்ந்து 7 ஓவர்கள் மெயிடனாக வீசி, 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்த ஒரே வீரர் - லக்மல் என்கிற பெரு…

  11. ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு Chennai: சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா? தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன? தோனி இல்லனா டீமே இல்ல... தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற க…

  12. பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97500

  13. உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை. ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக்…

  14. உலக கோப்பை கால்பந்து: டென்மார்க் அணி தகுதி உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி, அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. டுப்ளின் நகரில் நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க் 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக தகுதி பெற்றது. இன்னும் 2 அணிகள் மட் டுமே தகுதி பெற வேண்டும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- ஹோண்டுராஸ், பெரு- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. …

  15. சென்னை சுப்பர் கிங்ஸின் 3 வீரர்கள் விவரம் ‘ரிலீஸ்’ ஐ.பி.எல். தொடரில் முக்கிய அணி­க­ளில் ஒன்­றான சென்னை சுப்­பர் கிங்ஸ், அடுத்த வரு­டம் தக்­க­வைக்­க­வுள்ள மூன்று வீரர்­க­ளின் விவ­ரம் வெளி­யா­னது. இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்­டுச் சபை­யால் நடத்­தப்­ப­டும் ஐ.பி.எல். தொடர் மிக­வும் பிர­ப­ல­மா­னது. கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற தொட­ரின் போது முறை­ கே­டு­க­ளில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­வித்து சென்னை மற்­றும் ராஜஸ்­தான் அணி­க­ளுக்கு இரண்டு வரு­டங்­கள் தடை விதிக்­கப்­பட்­டது. இந்­தத் தடை இந்த வரு­டத்­து­டன் முடி­வ­டைந்­துள்­ளது. அடுத்த வரு­டம் இந்த இரண்டு அணி­க­ளும் மீண்­டும் கள­மி­றங்­கு­கின்­றன. இதை­ய­டுத்து ஒவ்­வொரு அ…

  16. தோனி உள்ளே, யுவராஜ், ரெய்னா வெளியே..! டி.என்.ஏ, YoYo டெஸ்ட் விளைவு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo' டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் …

  17. 19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: நடப்பு சம்பியன் இந்தியாவுடன் இலங்கையும் ‘அவுட்’ அரை இறுதிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மலே­ஷி­யாவின் கின்­ரா­ரா­விலும் பயொ­மா­ஸிலும் நடை­பெற்­று­வரும் 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்­டி­களில் நடப்பு சம்­பியன் இந்­தி­யாவும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்­கையும் அரை இறுதி வாய்ப்­பு­களை இழந்து ஏமாற்­றத்­துடன் நாடு திரும்­ப­வுள்­ளன. பாகிஸ்தான் மற்றும் பங்­க­ளா­தே­ஷுடன் முற்­றிலும் எதிர்­பா­ராத நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்­தானும், நேபா­ளமும் அரை இறு­தி­க­ளுக்கு முன்­னே­றி­யுள்­ளன. பாகிஸ்­தானும், பங்­க­ளா­தேஷும் ஏற்­க­னவே அரை இறுதி வாய்ப்­பு­களைப் பெற்­று­விட்ட நிலையில் ஆப்­கா­னிஸ்­தானும் …

  18. அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் : சயீத் அஜ்மல் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழ இவரது பந்து வீச்சு முறை மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பிறகு இவரால் முன்பு போல் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, இன்னும் சொல்லப்போனால் விக்கெட்டுகளையே வீழ்த்த முடியாமலே போனது. “நடப்பு தேசிய டி20 தொடருக்குப் பிறகு அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன், என்னை பொறுத்தவரை நான் என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சாதித்ததாகவே கருதுகிறேன…

  19. இணையத்தைக் கலக்கும் இலங்கை பந்துவீச்சாளர்! இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கெவின் கோத்திகோடா, தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார். Photo Credit: Asian Cricket Council கிரிக்கெட் உலகம் வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட பல்வேறு பந்துவீச்சாளர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ். சைனா மேன் முறையில் பந்துவீசிய பால் ஆடம்ஸ், தலையைச் சுற்றி பந்துவீசுவது கிரிக்கெட் உலகில் பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ், தென்னாப்பிரிக்க அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் போட…

  20. இந்தியாவை தோற்கடித்த நேபாளம் அணிக்கு வாழ்த்து கூறிய ராகுல் டிராவிட் முதன்முறையாக இந்தியாவை தோற்கடித்த நேபாள அணிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேபாள அணி சந்தோசம் அடைந்துள்ளது. மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெ…

  21. டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் டைட்டன்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதின. லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருக்கும் மழைக்குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 15 ஓவரில் 135 ரன்க…

  22. உலகக் கிண்ணத்தில் குரோஷியா, சுவிற்ஸர்லாந்து ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன. நேற்று இடம்பெற்ற தத்தமது இரண்டாவது சுற்று தகுதிப் போட்டிகளில் முடிவில், கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுக் கொண்டதன் மூலமே குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றன. தமது முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் கிரேக்கத்தை வென்ற குரோஷியா, நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் கோலெதனையும் பெறாமலும் கிரேக்கம் கோலைப் பெற அனுமதிக்காதும் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்து, மொத்தமாக 4-1 என்ற கோல் ரீதியில் வெற்றிபெற்று …

  23. ஆபிரிக்காவின் கடைசி அணிகளாக மொரோக்கோ, துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு தேர்வு ஐவோரி கோஸ்டை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மொரோக்கோ அணி 2018 FIFA உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதிபெற்றதோடு மற்றொரு வட ஆபிரிக்க நாடான துனீஷியாவும் அடுத்த உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்ல முன்னேற்றம் கண்டது. இதன் மூலம் ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. ஏற்கனவே நைஜீரியா, எகிப்து மற்றும் செனகல் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியுள்ளன. ஐவோரி கோஸ்ட் தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ண போட்டியில் முன்னேறும் நோக்குடனேயே நேற்று (11) மொரோக்கோவை சொந்த மண்ணில் எதிர்கொண்டது. எனினும் கோல் காப்பாளர் சில்…

  24. ரசிகரை உதைத்த கால்பந்து வீரர்...8 மாதங்கள் கால்பந்தை உதைக்கத் தடை! #FootballNothingWithoutFans கால்பந்து - ரசிகர்களுக்கான விளையாட்டு. பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்குக் கொடுக்கும் மரியாதையை இங்கு ரசிகர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். ரசிகர்களை நோக்கி நடுவிரல் காட்டிவிட்டு ஒரு வீரர் சாதாரணமாக தப்பித்துவிட முடியாது. கால்பந்து மைதானத்துக்குள் முக்கியமானது பெர்ஃபாமன்ஸ் அல்ல, மரியாதை. அந்த விளையாட்டுக்கு, ஆடும் அணிக்கு, தன் அணியை இயக்கும் அந்த ஆதரவாளர்களுக்கு ஒரு வீரன் மரியாதை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையேல், அவன் எப்பேர்ப்பட்ட சாதனையாளனாக இருந்தாலும் கால்பந்து அரங்கிலிருந்து காணாமல் போய்விடுவான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம், ரசிகர் ஒருவரை உதைத்து, சஸ்பெண்ட்…

  25. துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கினார் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர இருக்கிறார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், டோனி வெளிநாட்டில் தொடங்க உள்ளார். இந்திய அணியின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.