விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை? ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) இந்தியாவுடன் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை ஒருநாள் அணிக்கு உபுல் தரங்கவுக்கு பதிலாக புதிய அணித் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற மூன்று தொடர்களில் வைட் வொஷூம் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை அணி இந்த வருடம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மாத்தி…
-
- 0 replies
- 312 views
-
-
தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என கோலி கூறியுள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வ…
-
- 1 reply
- 449 views
-
-
ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்திய யுவான்டஸ் கோல்கீப்பர் பஃபன் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன இத்தாலியின் முன்னாள் வீரர் பஃபன் ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிக…
-
- 0 replies
- 426 views
-
-
கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மகத்தான சில சம்பவங்கள், ஏனைய உள்ளூர் போட்டிகளின் முடிவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் அடுத்த முக்கிய விடயங்கள் குறித்த ஒரு ஆழமான பார்வை விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 01
-
- 1 reply
- 299 views
-
-
இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்! இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின்…
-
- 1 reply
- 583 views
-
-
ஒரு காலோடு கால்பந்தில் அசத்தி உலகை தன்பக்கம் ஈர்த்துள்ள ஹீ courtsey - AFP ஒரு காலினை மாத்திரம் கொண்ட சீன நாட்டு கால்பந்து வீரர் ஒருவர் விளையாடும் காணொளி (Video) ஒன்று சீன ரசிகர்களுக்கு மத்தியிலான சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது. ஹீ யியி (He Yiyi) என்ற பெயரினைக் கொண்ட 21 வயதாகும் மாற்றுத் திறனாளி கால்பந்து வீரரான இவர், புற்று நோயின் காரணமாக சிறு வயதில் தனது இடது காலினை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருந்தார். தற்போது ஊன்று கோல் மூலம் கால்பந்துப் போட்டிகளில் விளையாடிவரும் ஹீ, “ சிறகுகளை இழந்த தேவதை (Angel with Broken Wings) “, “ ஒற்றைக் காலுடனான கால…
-
- 0 replies
- 376 views
-
-
றியல் மட்ரிட், சிற்றி வென்றன ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொ…
-
- 0 replies
- 513 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றுள்ளது. பரிஸ் ஸா ஜெர்மைன், 4-1 என்ற கோல் கணக்கில், நன்டீஸை வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்கலையும் ஏஞ்சல் டி மரியா, ஸ்கேவியர் பஸ்டோரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 35 புள்ளிகளைப் பெற்றுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ளது. பரிஸ் ஸா ஜெர்மனை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள மொனாக்கோ இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. …
-
- 0 replies
- 305 views
-
-
ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று பேட்டிங் செய்த சமாரா சில்வா - வைரலாகும் வீடியோ இலங்கை வீரர் சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை எதிர்கொள்ள முயன்று அவுட் ஆன வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் எம்.ஏ.எஸ். யுனிசலா மற்றும் டீஜே லங்கா ஆகிய இரு அணிகள் மோதின. அப்போது பேட்டிங் செய்த சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை அடிக்க முயன்றார். வேகமாக வந்த பந்தை ஸ்டம்பிற்கு வெளியே சென்று அடிக்க வெண்டும். அதே போல் சில்வாவும் பந்தை அடிப்பதற்காக வெளியே சென்றார். பந்து வீசப்பட்டது. வேகமாக வந்த பந்தை சில்வா முன்ன…
-
- 0 replies
- 673 views
-
-
‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்!’’ - விஜய் சங்கர் #VikatanExclusive #INDvSL ‘‘கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கர் எண்டில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த மாதிரியான சூழலில் யார் பெளலராக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ ‘‘வேர்ல்டுலயே யார் பெஸ்ட் பெளலரோ, அவர்தான் வேணும். அவரோட பந்துல சிக்ஸ் அடிச்சி வின் பண்ணணும். அந்த பெளலர் பந்தை அடிச்சாத்தான், எனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்’’ என்றார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர். அந்த நம்பிக்கைதான் அவர் 18 மாத காயத்திலிருந்து மீண்டு வரக் காரணம்; இன்று முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம். இலங்கைக்…
-
- 0 replies
- 598 views
-
-
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன்! வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. Photo Courtesy: Afghan Cricket Board 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூரில் நடந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. முதலில் பேட் செய்த …
-
- 1 reply
- 406 views
-
-
5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா! கொல்கத்தாவில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதுபோல 5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரிக்குப் பிறகு இதுபோல விளையாடிய 3-வது இந்தியர், புஜாரா. கொல்கத்தா டெஸ்டில் முதல் நாளன்று புஜாரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழையால் 2-வது நாளும் பாதிக்கப்பட்டதால் அந்த நாளின் முடிவில் 47 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா 3-ம் நாளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். …
-
- 0 replies
- 421 views
-
-
சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்! கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை எடுத்துள்ளார். 29 வயது கோலி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து மேலும் 350 இன்னிங்ஸ்களை விளையாடி, தற்போது உள்ளதுபோல ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடுகிறபட்சத்தில் சர்வதேச க…
-
- 0 replies
- 441 views
-
-
யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதனன்று நடைபெற்ற 15 வயத…
-
- 8 replies
- 1.9k views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 441 views
-
-
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி ட…
-
- 0 replies
- 404 views
-
-
ஒருநாள் போட்டியில் 7 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில்…
-
- 0 replies
- 421 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த ஐந்…
-
- 0 replies
- 186 views
-
-
இலங்கையில் அடுத்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா, வங்காள தேசம் பங்கேற்பு இலங்கையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்காள தேசம் பங்கேற்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த அந்நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தியா, வங்காள தேசம் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 2018 மார்ச் மாதம் 8-ந்தேதி …
-
- 0 replies
- 369 views
-
-
முதல் 46 பந்துகளுக்கு ரன் கொடுக்காத சுரங்கா லக்மல்: சாதனை விவரங்கள்! இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் ஒரு சாதனை புரிந்துள்ளார். * நேற்று ஒரு ரன்னும் கொடுக்காமல் பந்துவீசிய 30 வயது சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார். 2001க்குப் பிறகு தொடர்ந்து 7 ஓவர்கள் மெயிடனாக வீசி, 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்த ஒரே வீரர் - லக்மல் என்கிற பெரு…
-
- 0 replies
- 302 views
-
-
ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு Chennai: சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா? தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன? தோனி இல்லனா டீமே இல்ல... தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற க…
-
- 0 replies
- 519 views
-
-
பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97500
-
- 0 replies
- 336 views
-
-
உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை. ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக்…
-
- 4 replies
- 863 views
-
-
உலக கோப்பை கால்பந்து: டென்மார்க் அணி தகுதி உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க் அணி, அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. டுப்ளின் நகரில் நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க் 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது முறையாக தகுதி பெற்றது. இன்னும் 2 அணிகள் மட் டுமே தகுதி பெற வேண்டும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- ஹோண்டுராஸ், பெரு- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. …
-
- 1 reply
- 504 views
-
-
சென்னை சுப்பர் கிங்ஸின் 3 வீரர்கள் விவரம் ‘ரிலீஸ்’ ஐ.பி.எல். தொடரில் முக்கிய அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ், அடுத்த வருடம் தக்கவைக்கவுள்ள மூன்று வீரர்களின் விவரம் வெளியானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது முறை கேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை இந்த வருடத்துடன் முடிவடைந்துள்ளது. அடுத்த வருடம் இந்த இரண்டு அணிகளும் மீண்டும் களமிறங்குகின்றன. இதையடுத்து ஒவ்வொரு அ…
-
- 0 replies
- 385 views
-