Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோனி உள்ளே, யுவராஜ், ரெய்னா வெளியே..! டி.என்.ஏ, YoYo டெஸ்ட் விளைவு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo' டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் …

  2. 19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: நடப்பு சம்பியன் இந்தியாவுடன் இலங்கையும் ‘அவுட்’ அரை இறுதிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மலே­ஷி­யாவின் கின்­ரா­ரா­விலும் பயொ­மா­ஸிலும் நடை­பெற்­று­வரும் 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்­டி­களில் நடப்பு சம்­பியன் இந்­தி­யாவும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்­கையும் அரை இறுதி வாய்ப்­பு­களை இழந்து ஏமாற்­றத்­துடன் நாடு திரும்­ப­வுள்­ளன. பாகிஸ்தான் மற்றும் பங்­க­ளா­தே­ஷுடன் முற்­றிலும் எதிர்­பா­ராத நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்­தானும், நேபா­ளமும் அரை இறு­தி­க­ளுக்கு முன்­னே­றி­யுள்­ளன. பாகிஸ்­தானும், பங்­க­ளா­தேஷும் ஏற்­க­னவே அரை இறுதி வாய்ப்­பு­களைப் பெற்­று­விட்ட நிலையில் ஆப்­கா­னிஸ்­தானும் …

  3. அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் : சயீத் அஜ்மல் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழ இவரது பந்து வீச்சு முறை மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பிறகு இவரால் முன்பு போல் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, இன்னும் சொல்லப்போனால் விக்கெட்டுகளையே வீழ்த்த முடியாமலே போனது. “நடப்பு தேசிய டி20 தொடருக்குப் பிறகு அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன், என்னை பொறுத்தவரை நான் என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சாதித்ததாகவே கருதுகிறேன…

  4. இணையத்தைக் கலக்கும் இலங்கை பந்துவீச்சாளர்! இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கெவின் கோத்திகோடா, தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார். Photo Credit: Asian Cricket Council கிரிக்கெட் உலகம் வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட பல்வேறு பந்துவீச்சாளர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ். சைனா மேன் முறையில் பந்துவீசிய பால் ஆடம்ஸ், தலையைச் சுற்றி பந்துவீசுவது கிரிக்கெட் உலகில் பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ், தென்னாப்பிரிக்க அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் போட…

  5. இந்தியாவை தோற்கடித்த நேபாளம் அணிக்கு வாழ்த்து கூறிய ராகுல் டிராவிட் முதன்முறையாக இந்தியாவை தோற்கடித்த நேபாள அணிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேபாள அணி சந்தோசம் அடைந்துள்ளது. மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெ…

  6. டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் டைட்டன்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதின. லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருக்கும் மழைக்குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 15 ஓவரில் 135 ரன்க…

  7. உலகக் கிண்ணத்தில் குரோஷியா, சுவிற்ஸர்லாந்து ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன. நேற்று இடம்பெற்ற தத்தமது இரண்டாவது சுற்று தகுதிப் போட்டிகளில் முடிவில், கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுக் கொண்டதன் மூலமே குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றன. தமது முதலாவது சுற்று தகுதிப் போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் கிரேக்கத்தை வென்ற குரோஷியா, நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் கோலெதனையும் பெறாமலும் கிரேக்கம் கோலைப் பெற அனுமதிக்காதும் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்து, மொத்தமாக 4-1 என்ற கோல் ரீதியில் வெற்றிபெற்று …

  8. ஆபிரிக்காவின் கடைசி அணிகளாக மொரோக்கோ, துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு தேர்வு ஐவோரி கோஸ்டை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மொரோக்கோ அணி 2018 FIFA உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதிபெற்றதோடு மற்றொரு வட ஆபிரிக்க நாடான துனீஷியாவும் அடுத்த உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்ல முன்னேற்றம் கண்டது. இதன் மூலம் ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. ஏற்கனவே நைஜீரியா, எகிப்து மற்றும் செனகல் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியுள்ளன. ஐவோரி கோஸ்ட் தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ண போட்டியில் முன்னேறும் நோக்குடனேயே நேற்று (11) மொரோக்கோவை சொந்த மண்ணில் எதிர்கொண்டது. எனினும் கோல் காப்பாளர் சில்…

  9. ரசிகரை உதைத்த கால்பந்து வீரர்...8 மாதங்கள் கால்பந்தை உதைக்கத் தடை! #FootballNothingWithoutFans கால்பந்து - ரசிகர்களுக்கான விளையாட்டு. பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்குக் கொடுக்கும் மரியாதையை இங்கு ரசிகர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். ரசிகர்களை நோக்கி நடுவிரல் காட்டிவிட்டு ஒரு வீரர் சாதாரணமாக தப்பித்துவிட முடியாது. கால்பந்து மைதானத்துக்குள் முக்கியமானது பெர்ஃபாமன்ஸ் அல்ல, மரியாதை. அந்த விளையாட்டுக்கு, ஆடும் அணிக்கு, தன் அணியை இயக்கும் அந்த ஆதரவாளர்களுக்கு ஒரு வீரன் மரியாதை செலுத்தியே ஆகவேண்டும். இல்லையேல், அவன் எப்பேர்ப்பட்ட சாதனையாளனாக இருந்தாலும் கால்பந்து அரங்கிலிருந்து காணாமல் போய்விடுவான். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம், ரசிகர் ஒருவரை உதைத்து, சஸ்பெண்ட்…

  10. துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கினார் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர இருக்கிறார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், டோனி வெளிநாட்டில் தொடங்க உள்ளார். இந்திய அணியின்…

  11. கால்பந்து, கிரிக்கெட் இரண்டிலும் கலக்கும் லே‛டி’ வில்லியர்ஸ்... எல்லிஸ் பெர்ரி! கிரிக்கெட் விளையாடுவது ஈஸி. கால்பந்து விளையாடுவது கஷ்டம். இதை, இந்திய கிரிக்கெட் அணியினர் பங்கேற்ற செலிபிரிட்டி கிளாசிகோ கால்பந்துப் போட்டியை உன்னிப்பாக கவனித்திருந்தாலே தெரியும். கால்பந்தில் 90 நிமிடமும் கால்கள் பம்பரமாக சுழல வேண்டும். ப்ரபொஷனல் பிளேயர்களுக்கே எக்ஸ்ட்ரா டைமில் மூச்சு வாங்கும். வியர்த்து ஊத்தும். தலை சுற்றும். சின்ன வயதில் இருந்தே உடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவரால் மட்டுமே, இந்த இரண்டு விளையாட்டிலும் ஜொலிக்க முடியும், எல்லிஸ் பெர்ரியைப் போல... இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்…

  12. டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையாக வெளியிட்ட ஐ.சி.சி. டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையான வெளியிட்ட ஐ.சி.சி., அந்நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்காக சமூக இணையத் தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை அதிக அளவில பயன்படுத்தி வருகின்றனர். இதில் பேஸ்புக்கில் எவ்வளவு எழுத்துக்களையும் பதிவு செய்யலாம். டுவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால் நா…

  13. தோனிக்கும் தனக்குமான உறவு குறித்து கவுதம் கம்பீர் பகிர்வு கவுதம் கம்பீர், தோனி. - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். முன்னாள் இந்திய கேப்டன் தோனி கேப்டன்சியில் ஆடிய நாட்களை கவுதம் கம்பீர் மகிழ்ச்சியான காலக்கட்டம் என்று வர்ணித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கம்பீர் தனக்கும் தோனிக்குமான உறவு குறித்து கூறியதாவது: எங்கு அவருக்கு பெருமையைச் சேர்க்க வேண்டுமோ அதைச் சேர்ப்பதுதான் நியாயம். பலர் அவரது கேப்டன்சியை விமர்சித்துள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை பலர் செய்ததில்லை. குறிப்பாக அணி தோல்வியடையும் போது அவர் அதனைக் கையாண்ட வி…

  14. ஸ்வீடனிடம் தோல்வி எதிரொலி: உலகக்கோப்பைக் கால்பந்துக்கு இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி இத்தாலியை வீழ்த்திய ஸ்வீடன் அணி கொண்டாடும் காட்சி. - படம். | கெட்டி இமேஜஸ். உலக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டத்தில் ஸ்வீடனிடம் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து 1958-க்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்த பிளே ஆஃப் போட்டியில் ஸ்வீடன் பதிலி வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார், ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவ முடியவில்லை. இதனையடுத்து சான்சிரோவில் அடு…

  15. காலக் கடிகாரம் அடிக்கத் தொடங்கி விட்டதா? மகேந்திர சிங் தோனி - PTI இ ரண்டு உலகக் கோப்பை, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக இரு முறை கோப்பை மற்றும் 4 முறை 2-வது இடம் பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனியின் மீதுதான் தற்போது விமர்சன கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு வீரராகவும், கிரிக்கெட் புரவலராகவும் நம்பிக்கைக்கு புகழ் பெற்றவராகவும் விளங்கிய விவிஎஸ் லக்ஷ்மணிடம் இருந்துதான் அந்த விமர்சனம் பாய்கிறது. அதிலும் ஜாம்பவனாக திகழும் ஒருவரை ஓய்வு பெறவேண்டும், இளம் வீரருக்கு வழிவிட வேண்டும் என சாதாரணமாக கருத்தை அள்ளித் தெளிக்…

  16. ஈடன் கார்டனில் கபிலுடன் விளம்பர ஷூட்: பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்ட தோனி ஈடன் கார்டன்ஸில் கபில்தேவ், தோனி. - படம். | பிடிஐ. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மீதான ஆர்வத்தை காட்டும் விதமாக தோனி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்டார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கபில்தேவுடன் விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட தோனி பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் பேசினார். பிட்ச் தயாரிப்பை தோனி பாராட்டியதாக முகர்ஜி பிற்பாடு தெரிவித்தார். ஷூட்டிங் தேவைகளுக்காக தோனியும் கபில…

  17. தோனியை மட்டும் தாக்குவதில் நியாயமில்லை: விமர்சகர்களுக்கு கோலி பதிலடி கோப்புப் படம் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து வந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிலடி தந்துள்ளார். தான் உட்பட மற்ற பேட்ஸ்மென்கள் சரியாக விளையாடாமல் போனால் கூட எல்லாரும் வசதியாக ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 2வது டி20 போட்டியில் தோனியின் மந்தமான பேட்டிங்கே அணியின் தோல்விக்கு காரணம் எனப் பலர் விமர்சித்த…

  18. மைக்கேல் ஷூமாக்கர் உடல்நிலையில் மருத்துவ அதிசயம் நிகழும்: குடும்பத்தினர் நம்பிக்கை கோமாவில் உள்ள பார்முலா 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் உடல்நிலையில் மருத்துவ அதிசயம் நிகழ்ந்து, விரைவில் குணமடைவார் என அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பெர்லின்: ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். 2012-ல் கார் பந்தயத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த ஷூமாக்கர், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறையில் மோத…

  19. சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா? பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் ThePapare.com க்கு தெரியவருகிறது. இலங்கை அண…

  20. ஆர்ஜென்டீனாவை நடத்துவதை மறுக்கிறார் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியில் பிரதான முடிவுகளை தான் எடுப்பதாகக் கூறுவது தன்னை ஆத்திரமூட்டுவதாக, ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தா அணியினதும் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினது முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று, உலக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெறுவதை உறுதிசெய்த மெஸ்ஸி, பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதாகவும் கடந்த காலங்களில், குழாமில் யார் இடம்பெறுவது, இடம்பெறக்கூடாது என்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கருத்துத் தெரிவி…

  21. வடக்கின் கால்பந்தில் வரலாறு படைத்தது வலைப்பாடு ஜெகா மீட்பர் சுமார் 200 கழக அணிகள் பங்கெடுத்த யாழ், கிளிநொச்சி கழக அணிகளுக்கு இடையிலான மைலோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வலைப்பாடு ஜெகா மீட்பர் அணி ஆனைக்கோட்டை யூனியன் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது. இறுதியாக இடம்பெற்ற மைலோ கிண்ண தொடர்கள் நான்கில் மூன்றுதொடர்களை நாவாந்துறை சென். மேரிஸ் அணியும், கடந்த வருடம் குருநகர்பாடும்மீன் அணியும் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்த நிலையில், இம்முறை ஐந்தாவது முறையாக இத்தொடர் இடம்பெற்றது. இறுதிப் போட்டி …

  22. 9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர் ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ கிண்ண கால்பந்து தொடரின் ஓர் அங்கமாக இந்த வருடம் இடம்பெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரியை பலத்த போராட்டத்தின் பின்னர் வெற்றி கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. அதேவேளை, முன்றாமிடத்தினை கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டி வட மாகாண கால்பந்தில் பெரும் பலம்கொண்ட அணிகளான யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றியரசர் கல…

  23. இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட்போட்டிகளில் இனிமேல் நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக மட்டுமே(வேறு எதிலும் கவனம் செலுத்தாது) செயற்படுவார் எனஅறியக்கிடைக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸ், முன்னாள் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியில் விளையாடியிருந்த போது ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அணியின் மத்திய வரிசையினைப் பலப்படுத்தும் வீரர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார். எனினும் சங்கா, மஹேல ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணியில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான மெ…

  24. சம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி ஐந்தாவது முறையாக இடம்பெறும் மைலோ கிண்ண போட்டியில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும், மூன்றாமிடத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றன. இறுதிப் போட்டி பல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்த உத்வேகம் மிகு அணியான மணற்காடு றோமன் க…

  25. சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும், நிகழ்த்தப்பட்டதுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன் ராஜ், 15 வயதுக்கு உட்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.