விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஆர்ஜென்டீனாவை நடத்துவதை மறுக்கிறார் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியில் பிரதான முடிவுகளை தான் எடுப்பதாகக் கூறுவது தன்னை ஆத்திரமூட்டுவதாக, ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தா அணியினதும் ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவினது முன்கள வீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டியில் மூன்று கோல்களைப் பெற்று, உலக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெறுவதை உறுதிசெய்த மெஸ்ஸி, பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதாகவும் கடந்த காலங்களில், குழாமில் யார் இடம்பெறுவது, இடம்பெறக்கூடாது என்பதில் தாக்கம் செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கருத்துத் தெரிவி…
-
- 1 reply
- 299 views
-
-
வடக்கின் கால்பந்தில் வரலாறு படைத்தது வலைப்பாடு ஜெகா மீட்பர் சுமார் 200 கழக அணிகள் பங்கெடுத்த யாழ், கிளிநொச்சி கழக அணிகளுக்கு இடையிலான மைலோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வலைப்பாடு ஜெகா மீட்பர் அணி ஆனைக்கோட்டை யூனியன் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது. இறுதியாக இடம்பெற்ற மைலோ கிண்ண தொடர்கள் நான்கில் மூன்றுதொடர்களை நாவாந்துறை சென். மேரிஸ் அணியும், கடந்த வருடம் குருநகர்பாடும்மீன் அணியும் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்த நிலையில், இம்முறை ஐந்தாவது முறையாக இத்தொடர் இடம்பெற்றது. இறுதிப் போட்டி …
-
- 0 replies
- 473 views
-
-
9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர் ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ கிண்ண கால்பந்து தொடரின் ஓர் அங்கமாக இந்த வருடம் இடம்பெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரியை பலத்த போராட்டத்தின் பின்னர் வெற்றி கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. அதேவேளை, முன்றாமிடத்தினை கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டி வட மாகாண கால்பந்தில் பெரும் பலம்கொண்ட அணிகளான யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றியரசர் கல…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட்போட்டிகளில் இனிமேல் நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக மட்டுமே(வேறு எதிலும் கவனம் செலுத்தாது) செயற்படுவார் எனஅறியக்கிடைக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸ், முன்னாள் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியில் விளையாடியிருந்த போது ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அணியின் மத்திய வரிசையினைப் பலப்படுத்தும் வீரர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார். எனினும் சங்கா, மஹேல ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணியில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான மெ…
-
- 0 replies
- 293 views
-
-
சம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி ஐந்தாவது முறையாக இடம்பெறும் மைலோ கிண்ண போட்டியில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும், மூன்றாமிடத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றன. இறுதிப் போட்டி பல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்த உத்வேகம் மிகு அணியான மணற்காடு றோமன் க…
-
- 0 replies
- 302 views
-
-
சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும், நிகழ்த்தப்பட்டதுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன் ராஜ், 15 வயதுக்கு உட்ப…
-
- 0 replies
- 595 views
-
-
323 பந்துகளில் 1009 ரன்கள் ஹீரோ பிரணவ் தனவாதேயை நினைவிருக்கிறதா?: ரூ.1 லட்சம் உதவித்தொகையை வேண்டாம் என்று உதறினார் ஆட்டோ ஓட்டுநர் தந்தை 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து உலகச்சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே. - கோப்புப் படம் 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் மும்பைப் பள்ளி மாணவர் 10-ம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிகள் கிரிக்கெட்டில் 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து முதல் முறையாக நான்கு இலக்க ஸ்கோரை எட்டி உலகைத் தன்பக்கம் திரும்ப வைத்தவர்தான், அப்போது 15 வயது நிரம்பியிருந்த மாணவர் பிரணவ் தனவாதே. இந்த இன்னிங்ஸில் 129 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் அடித்து அசத்தினார் பிரணவ் தனவாதே. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான இவர் …
-
- 0 replies
- 255 views
-
-
உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் இறுதிக்கட்ட பலப்பரீட்சை ஆரம்பம் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடும் 32 அணிகளையும் தீர்மானிக்கும் இறுதிக் கட்ட தகுதிகாண் போட்டிகள் இன்று (9) ஆரம்பமாகவுள்ளன. பிரேசில், ஆர்ஜன்டீனா, ஜெர்மனி என பல பலம்மிக்க அணிகளும் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுள்ள நிலையில் உலகெங்கும் மேலும் சில அணிகள் தமது உலகக் கிண்ண வாய்ப்புக்காக இறுதி முயற்சியில் ஈடுபடவுள்ளன. ஆபிரிக்க மண்டலத்தில் இரண்டாவது சுற்றின் கடைசிக் கட்ட குழுநிலைப் போட்டிகள் நாளை (10) தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. ஆபிரிக்காவில் இருந்து நைஜீரியா, எகிப்து அணிகள் ஏற்கனவே …
-
- 0 replies
- 228 views
-
-
இன்று தொடங்குகிறது டி20 கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றிக்காக இந்தியா-நியூஸிலாந்து மோதல் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது. இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய அணியைப் பொருத்த வரையில், இதே நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமீபத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆனால், டி20 வரல…
-
- 13 replies
- 1.9k views
-
-
4-4-0-10: ஒரு ரன்னும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 15 வயது ராஜஸ்தான் வீரர்! ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர், ஒரு சாதனை செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் டிஷா கிரிக்கெட் அகாடமி அணி சார்பாக விளையாடிய ஆகாஷ் செளத்ரி 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காமல் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். முதலில் விளையாடிய டிஷா கிரிக்கெட் அகாடமி, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பேர்ல் அகாடமி ஆகாஷ் செளத்ரியின் அட்டகாசமான பந்துவீச்சால் 32 ரன…
-
- 2 replies
- 469 views
-
-
ஓய்வு அறிவித்தார் பிர்லோ ! இத்தாலி சூப்பர்ஸ்டார் ஆன்ட்ரூ பிர்லோ, கால்பந்து விளையாட்டுக்கு விடைகொடுத்துள்ளார். அவருக்கு வயது 38. இத்தாலி மிட்ஃபீல்டர் ஆன்ட்ரூ பிர்லோ, இரண்டு ஆண்டுகளாக நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிவந்தார். முன்னதாக ஏ.சி.மிலன், இன்டர்மிலன், ஜூவான்டஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடியபோது, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றினார். 2006-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் பிர்லோ இடம் பிடித்திருந்தார். பிர்லோ ஃப்ரீகிக் மற்றும் பெனால்டி ஸ்பெஷலிஸ்ட். நடுக்களத்தில் அபாரமாக விளையாடக்கூடியவர். மிக நேர்த்தியான பாஸ்களையும் கோல் வாய்ப்புகளையும் உருவாக்கித்…
-
- 1 reply
- 521 views
-
-
மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், மன்செஸ்டர் யுனைட்டெட்டை, நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி வென்றுள்ளது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியில், சீஸர் அத்பிலிகுவாட்டாவிடமிருந்து பெற்ற பந்தை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர்களின் கவனிப்புகளிலிருந்து விடுபட்டு, கோல் காப்பாளர் டேவிட் டி கியாவைத் தாண்டி, போட்டியின் 55ஆவது நிமிடத்தில் அல்வரோ மொராட்டா பெற்ற கோலின் மூலமாக 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் செல்சி வெற்றிபெற்றது. …
-
- 4 replies
- 671 views
-
-
அடுத்த தலைமுறை டென்னிஸ் இறுதிகள் போட்டியின் குலுக்கலில் அழகிகளின் ஆடைகளுக்குள் வீரர்களின் குழுவுக்குரிய எழுத்துகள்: தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கம் மன்னிப்பு கோருகிறது இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற, தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் அடுத்த தலைமுறையினருக்கான இறுதிப் போட்டியின் (ATP Next Gen Finals) குலுக்கல் வைபவம், பாலுணர்வைத் தூண்டும் வகையில் அமைந்தமை வெட்கக்கேடான செயல் என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் பங்குபற்றும் வீரர்களை குழுநிலைப் படுத்தும் குலுக்கலின்போது குழுக்களை நிர்ணயிக்கும் எழுத்துக்கள் (ஏ மற்றும் பி) மொடல் அழகிகளின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் …
-
- 1 reply
- 330 views
-
-
என்னை ஏன் ஹெட்மாஸ்டர் என்று அழைத்தார்கள் என்பதை சிலர் புரிந்து கொள்வார்கள்: அனில் கும்ப்ளே புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் அனில் கும்ப்ளே, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. - படம். | பிடிஐ. விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு தோன்றி பயிற்சியாளர் பொறுப்பை உதறிய அனில் கும்ப்ளே தனக்கு ஏன் ஹெட்மாஸ்டர் என்ற பெயர் வந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவுடன் உரையாடிய போது அனில் கும்ப்ளே கூறியதாவது: தன்னம்பிக்கை என்பது நாம் வளர்த்துக்கொள்ளும் மதிப்பீடுகளிலிருந்து வருகிறது. நம் பெற்றோர், பாட்டி, தாத்தா ஆகியோரைப் பார்த்து …
-
- 0 replies
- 376 views
-
-
நல்ல சம்பளம் கொடுக்காமல் வெறும் மன்னிப்பு எம்மாத்திரம்: மே.இ.தீவுளின் டேரன் சமி காட்டம் டேரன் சமி. - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். பிற டி20 லீகுகளில் ஆடும் மே.இ.தீவுகள் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் வெறும் மன்னிப்பு மட்டும் வழங்குதல் போதாது என்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணியின் டேரன் சமி தெரிவித்துள்ளார். ஈஎஸ்பின் இணையத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மே.இ.தீவுகள் ஏறக்குறைய இழந்து விட்ட நிலையில் கிரிக்கெட் மே.இ.தீவுகள் வாரியம் தங்கள் அணித்தேர்வு விவகாரங்களில் பணமழை டி2…
-
- 0 replies
- 478 views
-
-
ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையுடன் இணைந்தார் ஸ்டார்க் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறார். மிட்செல் ஸ்டார்க், வார்னர், ஸ்மித் போன்றோர் இடம் பிடித்துள்ள ந…
-
- 1 reply
- 578 views
-
-
ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற விரும்புகிறார் நெய்மர் ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற நெய்மர் விரும்புகிறார். இதனால்தான் பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி.க்கு அவர் மாறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரரான நெய்மர் (ஜூனியர்) திகழ்ந்து வருகிறார். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பேசப்படுகிறார். ஆரம்ப கட்டத்தில் பிரேசில் நாட்டின் கிளப்பில் இருந்து புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்கு மாறினார். மெஸ்சியுடன் இணைந்து பார்சிலோனாவின் நம்பிக்கை வீரரானார். இவரை விட்டுக்கொடுக்க மனம் இல்ல…
-
- 0 replies
- 295 views
-
-
’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் …
-
- 0 replies
- 410 views
-
-
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய 16 வயது இளம் வீராங்கனை மும்பையைச் சேர்ந்த 16 வயதே ஆன இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார். பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரான 19 வயதிற்குபட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அவுரங்காபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- சவுராஷ்டிரா அணிகள் மோதின. மும்பை அணியில் 16 வயதே ஆகும் இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பிடித்திருந்தார். இவர் சவுராஷ்டிரா வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய ஜெமிமா 163 பந்த…
-
- 0 replies
- 511 views
-
-
பார்சிலோனாவிற்காக 600-வது போட்டியில் களமிறங்கும் மெஸ்சி அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டனான மெஸ்சி, புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக 600-வது போட்டியில் களம் இறங்க உள்ளார். அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 13 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை அவர் 599 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றிரவு லா லிகா தொடரில் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் செவியா அணியை எத…
-
- 1 reply
- 566 views
-
-
ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா? இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்து வாழும் பலர் அந்நாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேள்வியுற்றுள்ளோம். கல்வி, வியாபாரம் போன்ற துறைகளில் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த பலர் முன்னேற்றம் கண்டு உலகின் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். அதேபோல அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் சர்வதேச அரங்கில் இலங்கையின் நாமத்தை ஜொலிக்கச் செய்து வருகின்றமையையும் காணமுடிகின்றது. விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, …
-
- 0 replies
- 827 views
-
-
மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் 5ஆவது மைலோ கிண்ண கால்பந்து போட்டிகளின் ஓர் அங்கமாக 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான மோதலின் இறுதி ஆட்டங்களுக்கு புனித பத்திரிசியார், மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புனித ஹென்றியரசர் அணிகள் தெரிவாகியுள்ளன. யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான குறித்த சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு தெரிவுச்சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள் …
-
- 1 reply
- 717 views
-
-
வியக்க வைக்கும் கிராமத்து பாடசாலையின் சாதனை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர். ஒழுங்கான மைதானம் கூட இல்லாமல் தேசிய மட்டத்தில் துணுக்காய் வலயப் பாடசாலையான கோட்டைக்கட்டியகுள அ.த.க பாடசாலை எறிபந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளது. துணுக்காயில் இருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலும் கிளிநொச்சி அக்கராயனில் இருந்து பத்து கிலோமீற்றரிலும் போக்குவரத்துகள் அற்ற கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோட்டைக்கட்டியகுளம் அ.த.க பாடசாலை தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் பெறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை கோட்டைக்கட்டியகுளம் பாடசாலை எறிபந்து அணியினர் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்று ப…
-
- 0 replies
- 541 views
-
-
உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆஃப் ஸ்பின் வீசிய மலிங்கா இலங்கையின் கலக்கல் வேகப்பந்து வீச்சாளர் உள்நாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஃப் ஸ்பின் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 300 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளைக் கடந்த மலிங்கா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் லாகூரில் நடந்த 3-வது டி20 போட்டிக்கு அங்கு செல்ல மறுத்த வீரர்களில் மலிங்காவும் ஒருவர். இதனையடுத்து டி20 தொடர் முழுதிலும் மலிங்கா ஆடமுடியாமல் போனது. இந்நிலையில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஏ-டிவிஷன் நாக் அவுட் போட்டியில்…
-
- 0 replies
- 518 views
-
-
பெண்கள் கிரிக்கெட்: 136 வைடுகள் வீசிய மணிப்பூர், நாகாலந்து அணி வீராங்கனைகள் பிசிசிஐ நடத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூர், நாகாலந்து வீராங்கனைகள் 136 வைடு பந்துகள் வீசினர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வடகிழக்கு- பீகார் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் - நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் …
-
- 0 replies
- 471 views
-