விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
டி20 கிரிக்கெட்: ஒரே ஓவரில் 5 சிக்ஸ்; 35 பந்தில் சதம்; டேவிட் மில்லர் உலக சாதனை வங்காள தேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, மொசேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொசேல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இரு பிரிவுகளிலும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் சம்பியன் கொழும்பு சென். ஜோசப் கல்லூரி நாடு பூராகவும் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தி 5 பேர் கொண்ட “வுட்செல்” (Futsal) கால்ப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுப் பிரிவு மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் வெற்றிபெற்று 2017 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டன. இப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி கைதானத்தில் இடம்பெற்றது. 17 வயதுப் பிரிவு போட்டியின் அரையிறுதிப் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தேசிய சம்பியனான மருதானை ஸாகிரா கல்லூரி அணியைவெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. …
-
- 0 replies
- 404 views
-
-
‘பார்முலா 1’ கார் பந்தயம்: 4-வது முறையாக இங்கிலாந்து வீரர் ஹேமில்டன் சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன், ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மெக்சிகோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார் பந்தயம். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம். 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது போட்டியான மெக்சிகன் கிராண்ட் பிரீ பந்தயம் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ் டேபன் வெற்றி பெற்றார். போட்ஸ்வால் டெரி போடஸ் 2-வது இடத்தையும், கிமிரெய்க்கோன் (பின்லாந்து) 3-வது இடத்…
-
- 0 replies
- 366 views
-
-
124 பந்துகளில் 138 ரன்கள்: அஸ்வினைப் பதம் பார்த்த ஷ்ரேயஸ் ஐயர் பந்தை ஷ்ரேயஸ் ஐயர் லாங் ஆன் திசையில் விளாசும் காட்சி. - படம். | விவேக் பெந்த்ரே. மும்பையில் நடைபெற்ற குரூப் சி, ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்சில் 450 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றதால் 3 புள்ளிகளைப் பெற்றாலும், இந்திய அணியின் முக்கிய வீச்சாளரான அஸ்வினை, மும்பை வளரும் நட்சத்திரம் ஷ்ரேயஸ் ஐயர் பதம் பார்த்த விதம் கிரிக்கெட் பண்டிதர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசிய ஷ்ரேயஸ் ஐயர், 2-வது இன்னிங்சில் 124 பந்…
-
- 0 replies
- 788 views
-
-
ஓகே சொன்ன ஐபிஎல் நிர்வாகம்... சி.எஸ்.கேவுக்கு மீண்டும் திரும்பும் டோணி... விசில் போடு! lசூதாட்ட புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் இருக்கும் போட்டோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோணி மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் அவர் அணியில் இண…
-
- 2 replies
- 2.8k views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணியின் தலைவர் உபுல் தரங்க உட்பட பல மூத்த வீரர்களும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது T20 போட்டிக்கு பாகிஸ்தான் செல்வதற்கு தயக்கம் காட்டிய நிலையில், சகலதுறை வீரர் திசர பெரேரா இலங்கை அணி தலைவராக செயற்படவுள்ளார். பெரேரா உலக பதினொருவர் அணியுடன் T20 தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக கடந்த மாதம் பாகிஸ்தான் பயணித்திருந்தார். இந்த தொடர் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டி…
-
- 6 replies
- 845 views
-
-
இலங்கை அணி பாக்கிஸ்தான் சென்றடைந்தது- குண்டு துளைக்காத பேருந்தில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர். மீண்டும் பாக்கிஸ்தான் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என இலங்கை இருபதிற்கு இருபது அணியின் தலைவர் திசாரபெரேரா தெரிவித்துள்ளார். மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டிகளிற்காக இலங்கை அணியினர் கடும் பாதுகாப்பி;ன் மத்தியில் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து அவர்கள் குண்டுதுளைக்காத பேருந்து மூலம் ஹோட்டலிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.வீதிகளில் நூற்றுக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் லாகூர் ஹோட்டலை சென்றடைந்துள்ளனர். இதேவேளை பாக்கிஸ்தானிற்கு மீண்டும் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக…
-
- 1 reply
- 288 views
-
-
டொட்டென்ஹாமை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி, செல்சி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மன்செஸ்டர் யுனைட்டெட், 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தோனி மார்ஷியல் பெற்றார். இப்போட்டியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் நட்சத்திர முன்கள வீரரான ஹரி கேன் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மன்செஸ்டர் சிற்றி, 3-2 என்ற கோல் கணக்கில், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, லெரோய் சனே,…
-
- 0 replies
- 298 views
-
-
இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துத் தொடர், அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 87 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. இதில், 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றது. ஆனால், இந்தத் தொடர் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்திய அணியைத் தவிர மீதமிருக்கும் 23 நாடுகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பலத்தை நிரூபித்தே இங்கு வந்துள்ளன. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த 17 வயதுக்…
-
- 44 replies
- 4.8k views
-
-
தென்ஆப்ரிக்கா எதிர் பங்களாதேஷ் ஒருநாள் & T20 போட்டி தொடர் செய்திகள் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்... ரஹீம் சாதனை... வங்கதேச அணி சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், வங்கதேச அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் அனைத்து வீரர்களும் கணிசமான ரன் குவிக்க வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மு…
-
- 8 replies
- 855 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …
-
- 1 reply
- 434 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது அநேகமானவர்களின் கருத்தாகும். இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பான ஆராய்வு….. இலங்கை கிரிக்கெட் அணி இவ்வருடத்தில் மாத்திரம் 03 தொடர்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இந்த வருடம் 26 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 12 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. அதிலும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தோல…
-
- 0 replies
- 417 views
-
-
மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் கனவுகளுடன் காத்திருக்கும் தர்ஷிகா திறமைக்கு வறுமை தடையல்ல...
-
- 0 replies
- 716 views
-
-
கவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்! #VikatanExclusive Chennai: "இந்திய அணியை 20 ஆண்டுகாலம் சுமந்திருந்தார். இது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய தருணம்" - 2011 உலகக்கோப்பையை வென்றதும், சச்சினைத் தன் தோள்களில் மைதானம் முழுதும் சுமந்து சென்ற விராட் கோலி கூறிய வார்த்தைகள். லிட்டில் மாஸ்டரை அன்று சுமந்த தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது. டி-20யில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 2, டெஸ்டில் ஆறாம் இடம்... அனைத்து ஃபார்மட்களிலும் டாப் 10-ல் இருக்கும் மூன்று வீரர்களுள் முதன்மையானவர் விராட். போட்டிகளின்போது இவரோடு சேர்ந்தே களம் காண்கின்றன சாதனைகள். இந்த வாரமும் தன் சாதனைப் …
-
- 0 replies
- 527 views
-
-
கிரிக்கெட் வீரர்களை காவிமயமாக்கிய உத்திரபிரதேச யோகி அரசு இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கு காவி துண்டு அணிவித்து, யோகி ஆதித்யநாத் அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டீ20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கொரு முறை வெற்றி பெற்றதால் தொடர் சம நிலையில் உள்ளது. இதனால் 3 வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2 ஒரு நாள் தொடர் முடிந்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கான்பூர் மைதானத்துக்கு வந்தடைந்தது. அங்கு வந்த வீரர்கள் தீபாவளி முடிந்து வந்ததால், அவர்க…
-
- 0 replies
- 434 views
-
-
கோப்பை வெல்ல 10 பாயின்ட் தியரி..! கோலி படைக்கு வாழ்த்துகள் #IndVsNz கிரிக்கெட்டை நன்கு கவனித்து வரும் கடைக்கோடி ரசிகன் முதல், கிரிக்கெட்டையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிபுணர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி, "தற்போதுள்ள அணியை வைத்து, 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை, கோலி தலைமையிலான இந்திய அணியால் வென்றுவிட முடியுமா?" இரண்டு வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின், அரையிறுதியில், தொடரை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று, நாடு திரும்பியது தோனி தலைமையிலான இந்திய அணி . அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் (முத்தரப்பு தொடர்) இந்தியா, ஃபைனலுக்குத் தகுதி பெறவில்லை. நல்ல ஓப்பனர்கள், அனுபவ மிடில் ஆர்டர் பே…
-
- 0 replies
- 469 views
-
-
டுபாயில் பெண்ணுடன் முறையற்ற வகையில் உரையாடியாடியது யார் ? இலங்கை கிரிக்கெட் விளக்கம் இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகித்துள்ளது. டுபாயைச் சேர்ந்த முனாஷா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி இல்லையெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 361 views
-
-
சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள் 33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட பகுதியைச் சேர்ந்த பாடசாலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக ஆரம்ப காலத்தில் பங்கேற்கவில்லை. எனினும், கடந்த 10 வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பாடசாலைகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்று வெற்றிகளைப் பதிவுசெய்து வருவதுடன், தேசிய மட்டத்தில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 158 புள்ளிகளைப் பெற்ற வடக்கு மாகாணம், தேசிய மெய்வல்லுனர் அரங்கில் முன்னிலை வகிக்கின்ற வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை பின்தள்ளி 6ஆவது இட…
-
- 0 replies
- 687 views
-
-
`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?' - ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் வெற்றிக்கான ரகசியம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணத்தைப் பற்றி புவ்னேஷ்வர் குமார், `அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது என் இயல்பு. அதை நான் எப்போதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் பயிற்சி ச…
-
- 0 replies
- 786 views
-
-
எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திக…
-
- 0 replies
- 405 views
-
-
‘பயிற்சிக்கு போல்ட் வரலாம்’ ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹன்ஸ் ஜோச்சிம் வட்ஸ்கேயின் கருத்துப்படி, உலகின் வேகமான மனிதனான உசைன் போல்டை, தமது கழகத்தின் பயிற்சிக்கு வரவேற்க பொரிசியா டொட்டமுண்ட் தயாரகவுள்ளது. எப்போதாவது பயிற்சிக்காக போல்ட் இணைந்து கொள்ளலாம் என பொரிசியா டொட்டமுண்ட் கடந்தாண்டு நவம்பரில் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போதும் அந்த வாய்ப்பை மீண்டும் போல்டுக்கு பொரிசியா டொட்டமுண்ட் தற்போது அளித்திருக்கின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சிக்கு-போல்ட்-வரலாம்/44-206034
-
- 0 replies
- 447 views
-
-
திருட்டு வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர் முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர். 65 வயதாகும் இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995-ம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று அறிவித்…
-
- 1 reply
- 790 views
-
-
பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்…
-
- 1 reply
- 977 views
-
-
பார்முலா-1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். ஆஸ்டின்: பார்முலா-1 கார் பந்தயத்தின் 17-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி ஆஸ்டினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 2-வது இடம் பிடித்தார். இன்னும் 3 சுற்று பந்தயங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தி…
-
- 1 reply
- 471 views
-
-
இதுவரை நீங்கள் பார்த்திராத `அற்புதமான' பெனால்டி கோல் (காணொளி) மிகவும் வியத்தகு முறையில் பெனால்டி கோல் அடித்த பாங்காக் விளையாட்டு கிளப், 20-19 என்ற கோல்கணக்கில் சாட்ரி ஆங்தொங் அணியை வென்றுள்ளது. மிகவும் அதிசயிக்கத்தக்க இந்த கோல் அடிக்கும் காணொளி, நீங்கள் ரசிக்க. http://www.bbc.com/tamil
-
- 0 replies
- 625 views
-