விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் University of Jaffna - Champions Inter University Football Championship 2017 (Photo Courtesy – MoraSpirit) பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல…
-
- 0 replies
- 424 views
-
-
அத்தபத்துவின் மகிழ்ச்சி என்ன தெரியுமா ? எனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சியென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு தடவை சிறப்பான திறமையை வெளிப்படுத்தினால் எல்லா காலமும் அவ்வாறே இருக்க முடியும் என நினைக்க முடியாது. அனைவரும் கஷ்டமான காலங்களை கடந்ததுதான் ஆக வேண்டும். விராட் கோலியாக இருந்தால் கூட அப்படித்தான். அனால், அதனைக் கடக்க கடினமாக உழைக்க வேண்டும், பயிற்சி பெற வேண்டும். பொறுமையுடன்…
-
- 0 replies
- 505 views
-
-
ஹார்திக் பாண்டியாவுக்கு சங்கா கூறியது என்ன ? இந்தியாவின் ஹார்திக் பாண்டியா மிகவும் சிறப்பான வீரர் என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் ஹார்திக் பாண்டியா, 72 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். …
-
- 0 replies
- 631 views
-
-
தமிழ் குத்துச்சண்டை வீரர் போட்டியின் போது பலி ( காணொளி இணைப்பு ) சிங்கப்பூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த தமிழ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் ஆசியா பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி இடம்பெற்றது. இதில் பிரதீப் சுப்ரமணியன் என்ற தமிழ் வீரர் பங்கேற்றிருந்தார். இவர் பிரபல வீரர் ஸ்டீவன் லிம் என்பவரை எதிர்கொண்டார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதன்போது பலத்த தாக்குதலுக்குள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு செல்லும் போதே அவர் மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்ப…
-
- 0 replies
- 787 views
-
-
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் 17-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் வரும் நவம்பர் 17-ல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இம்முறை பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய இரு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரை இறுதி ஆட்டங்கள் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரம் நடைபெறுகிறது. இதற்கான தேதி மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 615 views
-
-
நேற்று மாத்தறையில் கோலாகலமாக ஆரம்பம் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா நேற்று 22ஆம் திகதி முதல் நாளை 24ஆம் திகதி வரை மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது. கடந்த வருடம் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேச…
-
- 3 replies
- 788 views
-
-
அதிசிறந்த காற்பந்தாட்ட வீரர் தெரிவுக்கு போட்டியிடும் மூவர் உலக காற்பந்தாட்ட சம்மேளனம் , இந்த வருடத்துக்கான அதி சிறந்த காற்பந்தாட்ட வீரரைத் தெரிவு செய்ய மூவரைப் பொறுக்கி இருக்கின்றது . இந்தத் தெரிவு விபரம் , கடந்த வெள்ளியன்று FIFA வினால் இலண்டனிலிருந்து அறிவிக்கப்பட்டது . இந்த மூவர் பெயர்ப் பட்டியலில் 25 வயதான பிரேசில் சுப்பர் ஸ்டார் நெய்மர், 32 வயதான போத்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ , 30 வயதான ஆர்ஜென்டீனிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆகிய மூவரும் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள் . பார்சலோனா கழகத்துக்காக விளையாடிய நெய்மர் , காற்பந்தாட்ட சரித்திரத்தில் சாதனை படைக்கும் 266 மில்லியன் டொலர் தொகைக்கு , பாரிஸ் கழகமொன்றினால் …
-
- 0 replies
- 373 views
-
-
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?! சச்சின் என்றால் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ராகுல் டிராவிட் என்றால் லேட் கட், விராட் கோலி என்றால் கவர் ட்ரைவ், ரோஹித், ரிக்கி பாண்டிங் என்றால் புல் ஷாட்... இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு... ஹெலிகாப்டர் ஷாட். நவீன கிரிக்கெட் உலகில் எல்லோரும் எல்லா ஷாட்களும் ஆடுகின்றனர் எனிலும், குறிப்பிட்ட சில ஷாட்களை அவர்கள் அடித்தால்தான் அழகு. சந்தோஷம். பிரமிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதைப் பிரபலப்படுத்தியது தோனிதான். இன்றும் தோனி களத்தில் இருக்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரேயொரு ஹெலிகாப்டர் ஷாட் அடி…
-
- 0 replies
- 492 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இலங்கையில் விசாரணை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சுமத்தப்பட்ருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர். இது குறித்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல், “கிரிக்கெட்டின் கௌரவத்தைத் தக்க வைத்துக்கொள்வதே இந்தப் பிரிவின் பொறுப்பு. அதற்காக, தேவைகள் ஏற்படின் விசாரணைகளையும் இப்பிரிவு நடத்தும். இலங்கை கிரிக்கெட் அணி குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை ஒரு சிலரிடம் விசாரணைகள் நடத…
-
- 0 replies
- 368 views
-
-
விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை ஆஸ்திரேலிய துணை கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்…
-
- 0 replies
- 1k views
-
-
தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மலாகா மற்றும் வெலன்ஸியா கழகங்களு…
-
- 0 replies
- 373 views
-
-
கவுன்டி கிரிக்கெட்டில் 2017-ல் மட்டும் 8 சதங்கள் விளாசி சங்ககரா அசத்தல் இலங்கை அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சங்ககரா 2017-ல் மட்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் 8 சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சங்ககரா. 39 வயதாகும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொழும்பில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் 2017-ம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று அறிவித்தார். அதன்படி இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் இவ்வருடத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார். விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.4…
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரமோதய விக்கிரமசிங்கவின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அணி வீரர்கள் கடிதம் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர். இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார். போட்டிக்கு முன்ன…
-
- 0 replies
- 304 views
-
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. துபாய்: ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா…
-
- 0 replies
- 994 views
-
-
சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது. டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆ…
-
- 5 replies
- 686 views
-
-
‘நடுவர்’ குமார் தர்மசேனவின் புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் குமார் தர்மசேன, நடுவராகப் பணிபுரிவதில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நூற்றைம்பதில் நடுவராகப் பணிபுரிந்த நடுவர்களின் குழுவில் குமார் தர்மசேனவும் இணைந்துள்ளார். 2010 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 46 டெஸ்ட் போட்டிகளிலும், 2009 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 82 போட்டிகளிலும், 22 இ-20 போட்டிகளிலும் குமார் தர்மசேன நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அசோக டி சில்வாவே 150 போட்டிகளில் பணியாற்றிய முதல் நடுவராவார். இதுவரை அதிக போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சாதனையை…
-
- 0 replies
- 933 views
-
-
இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்த இங்கிலாந்து 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும். இந்த நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது உறுதியற்றதாக இருந்தது. எனினும், நேற்று இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்து தரவரிசையில் பின்தள்ளப்பட்டதால், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ…
-
- 2 replies
- 420 views
-
-
மெத்தியூஸை துரத்தும் உபாதை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24694
-
- 0 replies
- 296 views
-
-
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நான்காவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம் ஆகும். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. என்றாலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது. …
-
- 2 replies
- 636 views
-
-
பெனால்டி கோல் அடிப்பதில் நெய்மர் - கவானி இடையே ‘ஈகோ’ போர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர் மற்றும் கவானி இடையே பெனால்டி கோல் அடிப்பதில் ஈகோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். இதற்காக பார்சிலோனாவிற்கு 220 மில்லியன் யூரோவை டிரான்ஸ்பர் பீஸாக வழங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். அதிக தொகை கொடுத்து வாங்கியதால் பி.எஸ்.ஜி. அணியின் முன்னணி வீரராக நெய்மர் திகழ்கிறார். அதேவேளையில் அந்த அணிக்காக 2013-ல் இருந…
-
- 0 replies
- 491 views
-
-
தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive ‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’ ‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிரு…
-
- 0 replies
- 727 views
-
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள்: கிறிஸ் கெய்லின் தனித்துவ சாதனை கெய்ல். - கோப்புப் படம்.| ஜி.பி.சம்பத் குமார் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை புரிந்துள்ள மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்த முதல் வீரரானார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் சனிக்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் 21 ரன்களில் வீழ்த்தியது மே.இ.தீவுகள். அதில் கெய்ல் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார், இதில் 3 நான்குகள், 4 ஆறுகள் அடங்கும். அப்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்துச் சாதனை புரிந்த முதல் வீரர் ஆ…
-
- 0 replies
- 442 views
-
-
இறுதித் தருண வெற்றிகளால் லாலிகா தொடரில் முன்னேறியுள்ள கழகங்கள் Source - Getty Images ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் இம்மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இவ்வாரம் நடைபெற்ற அதிகமான போட்டிகளில் பங்குபற்றிய அணிகள் போட்டியின் இறுதித் தருவாயிலேயே தமது வெற்றியை உறுதி செய்ததை காணக்கூடியதாக இருந்தது. நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தமது ஆதரவாளர்களுக்கு சிறந்த விளையாட்டை காட்டத் தவறவில்லை. இவ்வாரம் 16 ஆம் திகதி நான்கு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் ஓர…
-
- 0 replies
- 338 views
-
-
சிங்கப்பூர் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் பார்முலா1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பார்முலா1 கார்பந்தயத்தில் ரெய்க்கோனன் (வலது), வெட்டல் ஆகியோரின் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சி சிங்கப்பூர்: பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா ஓடுதளத்தில் நேற்று மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்தது. இதில் 308.828 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்…
-
- 0 replies
- 425 views
-