விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம் கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம் 1996, மார்ச் 13: ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவலைக்குரிய ஓர் இரவு – சில ரசிகர்கள் மைதானத்திற்குள் போத்தல்களை வீசியும் இருக்கைகளுக்கு தீ வைத்தும் போட்டிக்கு இடையூறு செய்தனர். அந்த ரசிகர் கூட்டம் அமைதி கொள்ளாத நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி அளிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியில் வெற்றி பெற 15.5 ஓவர்கள் எஞ்சி இருக்க மேலும் 132 ஓட்டங்களை…
-
- 0 replies
- 393 views
-
-
தென்னாபிரிக்க T-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக்கில் ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற ஐ.பி.எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் பிரபல்யமடையத் தொடங்கியது முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. இந்த பட்டியலில் தற்போது தென்னாபிரிக்காவும் இணைந்துகொள்ளவுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்…
-
- 0 replies
- 327 views
-
-
தீர்க்கமான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை ஆரம்பம் ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான தீர்க்கமான தகுதிகாண் போட்டிகள் நாளை (29) தொடக்கம் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வரும் நவம்பர் 14ஆம் திகதியுடன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் முடிவடையவிருக்கும் நிலையில் இந்தப் போட்டிகள் பெரும்பாலான அணிகளுக்கு முக்கியமானதாக உள்ளன. 2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில் வரும் ஜுன் 14 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 32 தினங்கள் நடைபெறவுள்ளன. எனினும், இந்த போட்டிக்கான 32 அணிகளில் 31 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த 2015, மார்ச் 12ஆம…
-
- 0 replies
- 229 views
-
-
பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர் அக்கழகத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவ்வணியின் முன்களத்தின் வேகம் குறைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்ப பீவீபீ டோர்ட்மண்ட் அணிக்காக விளையாடிய பிரான்ஸ் தேசிய அணியின் முன்கள வீரரான 20 வயதுடைய ஒஸ்மானே டேம்பல்லேவை பார்சிலோனா தம்மோடு இணைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஸ்பெய்ன் ந…
-
- 1 reply
- 364 views
-
-
பந்து வீச்சு ஜாம்பவான்கள் ஸ்டெயின், முரளீதரன் சாதனையுடன் இணைந்தார் சாஹிப் அல்ஹசன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார் அல்ஹசன். வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஹசன் மிராஸ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிப்போருக்கு எதிராக கூச்சலிடுங்கள் : அர்ஜுன இந்திய ரசிகர்கள் போல் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அணிக்கு எதிராக…
-
- 0 replies
- 238 views
-
-
திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் விஜயராஜ் மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்கள் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் . அதற்கான சான்றுகள் பல உள்ளன. மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தி…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்! பார்சிலோனா, இந்தப் பெயரை தெரிந்தோ தெரியாமலோ சமீபத்தில் அதிகமாக கடந்து வந்த்திருப்பீர்கள். ஸ்பெயின் நாட்டின் டாப் இரண்டு கிளப்புகளில் ஒன்றுதான் பார்சிலோனா. புரியும்படி சொன்னால் கால்பந்து உலகின் மேஸ்ட்ரோவும், அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி விளையாடிவரும் கிளப் அணிதான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்த பார்சிலோனா அணி. ஒரு காலத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்ற இந்த அணி சமீபமாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் விலகல், ரியல் மாட்ரிட் அணியிடம் பேக் டூ பேக் தோல்வி, அணி நிர்வாக குழப்பம், வீரர்கள் தேர்வு என சமீபகாலமாக தொடர்ந்து சறுக்கிக் கொண…
-
- 0 replies
- 631 views
-
-
டோனியின் அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி அசத்தல் டுவிட் அனுபவத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது என டோனி தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார் என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 36 வயதாகும் டோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக மற்றும் பணியாற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழும்பி வருகிறது. டோனியின் பினிஷிங் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. பல்வேறு விமர்சனங்க…
-
- 0 replies
- 348 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வேய்ன் ரூனே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லண்டன்: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர், வேய்ன் ரூனே. இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002 - 2004ல் விளையாடினார். பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்…
-
- 1 reply
- 390 views
-
-
போல் நிலை: மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன் பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று முடிவில் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்து ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். பனிச் சறுக்கின்போது காயம் ஏற்பட்டதால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உண்மையான உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இவர் பந்தயத்தில் கலந்து கொண்ட காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதில் ஒன்று போல் நிலையை அடைதல். ஷூமாக்கர…
-
- 0 replies
- 244 views
-
-
மெஸ்சியை வீழ்த்தி, தலைசிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ! ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த வருடத்திற்கான சிறந்த வீரர…
-
- 3 replies
- 599 views
-
-
பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017/18ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் முதலே சூடு பிடித்துள்ளதை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. புதுமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ள கழகங்கள் தொடக்கம் முதல் சவால் விடுப்பதை புள்ளிப் பட்டியல் காட்டுகின்றது. மொத்தம் 20 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. ஆதரவாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இப்பருவகாலத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இத்தாலி நாட்டின் ஒய்வு பெற்ற…
-
- 0 replies
- 353 views
-
-
ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ் சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார். ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். …
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். சிறப்பு நேர்காணல் – பாகம் 01 தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். http://www.thepapare.com
-
- 0 replies
- 429 views
-
-
”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது. இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட…
-
- 2 replies
- 1k views
-
-
கேள்விக்குறியாகும் இலங்கைக் கிரிக்கெட் விமல் சந்திரன் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் இந்தியா அணி, மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் இலங்கையணிக்கு வெள்ளையடிப்புச் செய்து தொடரை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி இலங்கையில் வைத்துப் பெற்ற மோசமான தோல்வியாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணியுடன் 2002/03 கிரிக்கெட் பருவகாலத்தில் இலங்கை அணி, 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் தோல்விகளை இந்த தொடரில் சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா தொடரின் தோல்விகள் மிக மோசமாக அமையவில்லை.…
-
- 3 replies
- 573 views
-
-
பாகிஸ்தான் - வேர்ல்ட் வெலன் அணிகள் மோதும் டி-20 போட்டிகள் அறிவிப்பு! #PAKvsWXI 2009-ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகமும், தங்களது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, 'இனியாவது எங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளை…
-
- 0 replies
- 376 views
-
-
ஸ்டம்பிங்: குமார சங்ககராவின் உலக சாதனையை சமன் செய்தார் டோனி பல்லேகலேயில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை தொடக்க வீரர் குணதிலகாவை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் உலக சாதனையை சமன் செய்துள்ளார் டோனி. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் மகேந்திர சிங் டோனி. தனது சிறப்பான விக்கெட் கீப்பிங் பணியால் உலகளவில் பெயர் பெற்றவர். குறிப்பாக ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் செய்வதில் மிக வல்லவர். தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் முடிவில் டோனி 298 போட்டிகளில் 98 பேரை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கியதன் ம…
-
- 0 replies
- 386 views
-
-
கெய்ல் அதிரடியை பின்னுக்குத் தள்ளிய மெக்கல்லம்-பிராவோ காட்டடி: கரிபியன் கிரிக்கெட்டில் ருசிகரம் ஷாட் ஆடும் மெக்கல்லம். - படம். | கெட்டி இமேஜஸ். பாசட்டெரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் செயிண்ட் கிட்ஸ் அணியின் கிறிஸ் கெய்லின் அதிரடியை எதிரணியான டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் மெக்கல்லம், டேரன் பிராவோ ஆகியோர் முறியடிக்கும் விதத்தில் காட்டடி தர்பாரில் ஈடுபட்டனர். முதலில் பேட் செய்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர…
-
- 0 replies
- 336 views
-
-
மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மாலிங்க பற்றி பேசியிருந்த போத்தாஸ், இந்த வருடம் அவரின் பந்து வீச்சு மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த 9 பிடியெடுப்புக்கள்த வறவிடப்பட்டிருந்ததையும், அவர் ஒரு நாள் அணிக்கு நீண்ட கால ஓய்வின் பின்னர் திரும்பி 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்த…
-
- 0 replies
- 327 views
-
-
கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்! தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், கேப்டனாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடைய தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன் என்பதை தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பினஸ் டிராபி தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மோசமான பின்னடைவைச் சந்தித்தது. தவிர, டி வில்…
-
- 0 replies
- 325 views
-
-
ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம் இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை. கடினமாக ஆடிய இந்திய அணி…
-
- 0 replies
- 348 views
-
-
42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியான அதில், அஃப்ரிடியின் சதத்தின் உதவியால், ஹாம்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பி…
-
- 0 replies
- 347 views
-
-
நிறவெறி கருத்து: மன்னிப்பு கேட்ட பாய்காட் மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு எதிராக நிறவெறி கருத்தை தெரிவித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பாய்காட். சமீபத்தில் எட்ஜ்பாஸ்டனில் பகலிரவு போட்டியின் போது கேள்வி பதில் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதன்போது விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கர்ட்லி ஆம்பரோஸ் ஆகியோர் சர் பட்டம் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பாய்காட், மேற்கிந்தியதீவுகள் வீரர்களுக்கு இது பளபளப்பான கலர் காகிதங்களை சொரிவது போன்றாகும், எனக்கு இருமுறை மறுக்கப்பட்டது, ஒருவேளை நான் என் முகத்தை கறுப்பாக்கிக் கொண்டிருந்தால் கிடைத்திருக்கலாம் என தெரிவித்தார். …
-
- 0 replies
- 352 views
-