விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
இந்த இலங்கை வீரரைப் போல் ஆட முயற்சிக்கிறேன்: சங்ககாரா சொன்ன நெகிழ்ச்சியான பதில் இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார். அவரது துடுப்பாட்டத்தைக் கண்ட பலரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி போன்று இருப்பதாக கூறி வருகின்றனர். இது குறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில், நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் துடுப்பாட்டத்தை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே பழகிவிட்டது. சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சங்க…
-
- 0 replies
- 464 views
-
-
ஹத்துருசிங்க இலங்கை அணிக்கல்ல, 2019 வரை பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சிவிப்பாளராக தற்போது கடமையாற்றி வருகின்றவருமான சந்திக ஹத்துருசிங்க, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுனராக கடமையாற்றவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இம்மாத இறுதியில் அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள 20 இளம் வீரர்களைக் கொண்ட பங்களாதேஷ் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் தற்போது டாக்காவில் நடைபெற்றுவருகின்றது. இதில், நேற்றுமுன்தினம் நடைபெற்…
-
- 0 replies
- 328 views
-
-
பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு, மெஸ்சி வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார். பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவரை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, சுவாரஸ் மற்றும் நெய்மர் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது. மெஸ்சி மற்றும் சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க நெய்மரின் ஆட்டம் உறுதுணையாக இருக்கும். சிறந்த வீரரான நெய்மரை மற்ற அணி…
-
- 2 replies
- 464 views
-
-
பிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வா ( Anthony Joshua )உடன் நடைபெற்ற போட்டியில் 11ம் சுற்றில் கிளிட்ஸ்கோ தோல்வியைத் தழுவினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீளவும் கிளிட்ஸ்கோவுடன் போட்டியிட முடியும் எனவும் லோஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டியை நடத்த முடியும் எனவும் ஜொஸ்வா நம்பிக்கை வெளியிட்டிருந்தார். …
-
- 0 replies
- 336 views
-
-
சம்பள விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டால்தான் வங்கதேசத் தொடர்: ஆஸி. கேப்டன் ஸ்மித் திட்டவட்டம் ஸ்டீவ் ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சம்பள விவகாரம் முடிவுக்கு வந்தால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவானால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்கிறார் ஸ்மித். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு அவர் கூறும்போது, “நீண்ட நாட்களாக இதைத்தான் கூறிக்கொண்டு வருகிறோம், முத…
-
- 0 replies
- 389 views
-
-
எப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் – ஹூசெய்ன் போல்ட் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாதென உலகின் மிகச் சிறந்த குறூந்தூர ஓட்ட வீரரான ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். இப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் எனவும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்த ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தைகள் 20 வயதை எட்டும் போதும் தான்தான் இப்போதும் உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என அவர்களிடம் பெருமையோடு கூற விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊக்கமருந்து பயன்படுத்துவோ…
-
- 0 replies
- 330 views
-
-
2011 உலகக் கிண்ணச் சர்ச்சை – வாய் திறந்தார் முரளிதரன்!! 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை ஆட்ட நிர்ணயத்தால் அல்ல என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய அணியுடனான அந்த ஆட்டத்தில் தோல்வியடையக் காரணம் இலங்கை அணியால் எடுக்கப்பட்ட தவறான கணக்கீடுகளே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடியிருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாணயச் சுழற்சியின் …
-
- 0 replies
- 442 views
-
-
ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வருகை - இந்தியாவில் களைகட்டும் கிரிக்கெட் சீசன் இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன. இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த…
-
- 0 replies
- 315 views
-
-
பாரீஸில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெறுவதில் பாரீஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த நகரங்களில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் சம்மதம் தெரிவித…
-
- 0 replies
- 357 views
-
-
20 ஆண்டுகள் ஆடிய பெரிய ‘தலைகள்’ சாதிக்காததை கோலி தலைமையில் சாதிக்கிறோம்: ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் சாஸ்திரி. - படம்.| ஏ.பி. பழைய அணியில் மிகப்பெரிய பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் ஆடிய இந்திய அணியினால் இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை, கோலி தலைமையிலான இந்த அணியே இதனைச் சாதித்துள்ளது என்று ரவி சாஸ்திரி பட்டவர்த்தனமாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: இந்த இந்திய அணியில் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் 2 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர். இப்போது இவர்கள் அனுபவம் பெற்றவர்கள். இதற்கு முந்தைய இந்திய அணியும், மிகப…
-
- 0 replies
- 384 views
-
-
தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது ஆப்கானிஸ்தான்! ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இரு அணிகளும் தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடும் முனைப்பில் இருக்க, முதல் அணியாகத் தனது தொடரை அறிவித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட…
-
- 0 replies
- 329 views
-
-
மகளிர் யுரோ கால்பந்து: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி; 43 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிருக்கான யுரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்றில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோல் அடிக்கிறார் டென்மார்க் வீராங்கனை நதியா நதிம். - படம்: ஏஎப்பி நெதர்லாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான யுரோ கால்பந்து தொடரின் அரை இறுதிக்கு டென்மார்க், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் 9-வது முறையாக பட்டம் வெல்லும…
-
- 0 replies
- 342 views
-
-
ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா! நட்பு ரீதியிலான போட்டிதான் என்றாலும், அந்த ஆட்டத்தை உலகமே பார்த்தது. ஸ்பெயின் நாட்டின் பெருந்தலைகளான பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மல்லுக்கட்டிய ‛எல் கிளாசிகோ’ என்றால் சும்மாவா? அமெரிக்காவின் மியாமி நகரில் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை் போட்டியில் இரு அணிகளும் களம்கண்டன. ஃப்ரெண்ட்லி மேட்ச் என்றாலும் உக்கிரத்துக்குப் பஞ்சமில்லை. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்தது. தன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ரொனால்டோ மட்டுமே அவுட்..…
-
- 0 replies
- 263 views
-
-
3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் 3-வது போட்டி கடந்த 27-ந்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ்…
-
- 0 replies
- 264 views
-
-
ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல் தனது காரில் காணப்பட்ட பிரச்சினைகள், இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது வைரியான, மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநர் லூயிஸ் ஹமில்டனின் தாக்குதலொன்றுக்கு மத்தியிலும் பதற்றம் நிறைந்த ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸை, ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வென்றார். வெட்டலுக்குப் பின்னால், பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்ற அவரின் சக ஃபெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் மிக வேகமாகச் செல்லக் கூடியதாக இருந்தபோதும், ஹமில்டனை முந்த விடாமல் செய்வதற்கான தடையாக ஃபெராரி அணியால் பயன்படுத்தப்பட்டிருந்தார். குறித்த பந்தயத்…
-
- 0 replies
- 315 views
-
-
டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும்: எம்.எஸ்.கே. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும் என்று தேர்வாளர் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அடுத்து விளையாடக்கூடிய பெரிய தொடர் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான். இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போதில் இருந்தே உருவாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் தொடர்வார்களா? இல்லையா? என்பதுதான் மில…
-
- 0 replies
- 228 views
-
-
ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் உலக சாதனை உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் சாதனை படைத்துள்ளார். புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்து வந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் நேற்று முன்தினம் இரவில் 50 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு பிரிவு ஆகிய பந்தயங்களில் அடுத்தடுத்து பங்கேற்று மூன்றிலும் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். இரண்டு மண…
-
- 0 replies
- 296 views
-
-
தொடங்குமுன் சாதனை படைக்கப்போகும் உலக சம்பியன்ஷிப் தொடர் லண்டனில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலக சம்பியன்ஷிப் தொடர், அதிக டிக்கெட்டுக்களை விற்பனை செய்ததில் சாதனை படைக்கவுள்ளது. லண்டன் நகரில் உலக சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீர,- வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்த தொடருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.…
-
- 0 replies
- 230 views
-
-
நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைவார்: டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை நெய்மர் பி.எஸ்.ஜி. அணியில் இணைவார் என்று முன்னாள் பார்சிலோனா வீரரும், தற்போதைய பிஎஸ்ஜி வீரரும் ஆன டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர். இவர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. பார்சிலோனா அணி தற்போது ப்ரீசீசனில் விளையாடுவதற்காக சீனா சென்றுள்ளது. பார்சிலோனா அணியுடன் நெய்மர் செல்லவில்லை. இது பிஎஸ்ஜி அணியில் இணைவார் என்ற செய்திக்…
-
- 0 replies
- 554 views
-
-
758 கோடி ரூபாய் கொடுத்து கிரிஸ்மானை வாங்க தயாராகும் பார்சிலோனா நெய்மர் அணியை விட்டு விலகுவதாக கூறி வருவதால் கிரிஸ்மானை 758 கோடி ரூபாய் கொடுத்து வாங்க பார்சிலோனா விரும்புகிறது. கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக பிரேசில் நாட்டின் நெய்மர் திகழ்ந்து வருகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேற விரும்புகிறார். கடந்த ஆண்டும் இதுபோன்று வெளியேறுவதாக கூறினார். இறுதியில் பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது பிரான்ஸ் நாட்டின் ம…
-
- 0 replies
- 353 views
-
-
2001 கொல்கத்தா டெஸ்டிற்குப் பிறகு பாலோ-ஆன் கொடுக்க தயங்கும் கேப்டன்கள் கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன்கள் பாலோ-ஆன் கொடுக்க மறுக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த நிலையில் ஆல்அவுட் ஆனால் பாலோ-ஆன் என்று அழைக்கப்படும். அப்போது முதலில் பேட்டிங் செய்த அணி பாலோ-ஆ…
-
- 0 replies
- 250 views
-
-
சமரியை அழைக்கும் இங்கிலாந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்தபத்துவை தங்கள் அணியில் இணைந்து விளையாடுமாறு இங்கிலாந்தின் முன்னணி அணியான யோக் ஷையர் அணி அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள முதல்தர கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கவே சமரிக்கு மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 178 ஓட்டங்களை விளாசினார். சமரியின் இந்த துடுப்பாட்டம் அனைவ…
-
- 0 replies
- 375 views
-
-
வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் மேல் மாகாண வடக்கு அணியிடம், கிழக்கு மாகாணம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டிகளில் மேலும் மூன்று ஆட்டங்கள் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாயி ன. இதில் வட மத்திய மாகாணத்தை எதிர்கொண்ட வட மாகாண அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. வட மேல் மாகாணத்திற்கு எதிரான போட்டியில் மேல் மாகாண மத்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் மாகாணத்துடனான போட்டியில் ஊவா மாகாணம் நிதானமாக ஆடி தனது மு…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட்டைக் குட்டிச்சுவராக்கியது வக்கார் யூனிஸ்: கம்ரன் அக்மல் கடும் சாடல் கம்ரன் அக்மல், வக்கார் யூனிஸ் - படம் | ஏ.பி. வக்கார் யூனிஸ் ஒரு பயிற்சியாளராக தோல்வி அடைந்தவர், அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் குட்டிச்சுவராகிவிட்டது என்று விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் கடுமையாகச் சாடினார். ஜியோ சூப்பர் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம், பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார். சில வீரர்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்தது.…
-
- 0 replies
- 640 views
-
-
தன் பந்துவீச்சில் கடுமையாகக் காயப்படுத்த விரும்பிய வீரர் யார்? ஷோயப் அக்தர் ருசிகரம் அக்தர். - கோப்புப் படம். | வி.வி.கிருஷ்ணன். ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் உச்ச பந்து வீச்சுக் காலக்கட்டத்தில் பலவீரர்களை தன் அதிவேக பந்துகளில் காயப்படுத்தியுள்ளார். ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் ஸ்லேட்டர், பாண்டிங், டேமியன் மார்டின், கங்குலி, கயீஃப், லஷ்மண் உட்பட பல வீரர்களை தன் பந்து வீச்சில் காயமடையச் செய்துள்ளார் ஷோயப் அக்தர். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது பற்றிக் கூறும்போது, சுமார் 19 பேட்ஸ்மென்களை காயப்படு…
-
- 0 replies
- 272 views
-