விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019; மே.இ. தீவுகளின் வாய்ப்பு ஊசலாடுகிறது இங்கிலாந்தில் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் உலக சம்பியனும் முன்னாள் ஜாம்பவான்களுமான மேற்கிந்தியத் தீவுகள் பங்குபற்றுமா என்பது தொடர்ந்தும் சந்தேகமாகவே இருந்துவருகின்றது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த தரவரிசைப்படுத்தல் இந்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் நாடுகளுக்கான தரிவரிசையில் செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முதல் எட்டு இடங்களில் உள்ள நாடுகளே 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெறும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஒரு…
-
- 0 replies
- 410 views
-
-
ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து வருடாந்திர முடிவில் வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. வருடந்தோறும் மே 1-ந்தேதி வருடாந்திர தரவரிசையை ஐ.சி.சி. வெளியிடப்படும். அதன்படி டி20 கிரிக்கெட் அணிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்…
-
- 0 replies
- 274 views
-
-
மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட் மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆலோசகராக என்னை நியமித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஐ.சி.சி. நிகழ்வொன்றுக்கு நான் ஆலோசகராக இருப்பதென்பது விசேடமானது. இலங்கையில் மிகவும் பெறுமதியான பயிற்சியாளர்கள் அணியொன்று…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு Tamil இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்திருந்த சாருஜன் சன்முகனாதன் அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் பேசப்படவில்லை. எனினும், அவர் அன்று காண்பித்த அதே திறமையையும், சிறப்பாட்டங்களையும் இன்றும் காண்பித்து வருகின்றார். இதன் காரணமாக அவர் குறித்த ஒரு தேடலை ThePapare.com மேற்கொண்டது. கடந்த 2011…
-
- 0 replies
- 560 views
-
-
வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? Tamil வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும் யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், தாம் கடந்து வந்த கடந்த கால வெற்றிகளை எதிர் காலத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் முன்னணி அணிகளில் ஒன்றாக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது. …
-
- 0 replies
- 500 views
-
-
தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம். அதை,மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடுவார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக்காரர் மறுபடியும் வந்து ஆடலாம். அப்படி ஆடவில்லையென்றால், மேட்ச்சின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும். 1877ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தையான,வியக்கத்தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சில பல ஆச்சரியத்தக்க விஷயங்கள…
-
- 1 reply
- 637 views
-
-
முரளிதான் காரணம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஷித் கான், அந்த விருதினை தனது சகோதரருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். அதேவேளை தன்னுடைய திறமையான பந்துவீச்சுக்கு காரணம் முத்தையா முரளிதரன் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொஹாலியில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற போட்டியில்பஞ்சாப் –ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் இதில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 207 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 208 ஓட்டங்களை சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ரஷித் கான், புவனேஸ்வர் குமார் ஆகி…
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க வருகிறார் அலன் டொனால்ட் இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவித்தலை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரையே அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு ஆலோசகராக செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 வயதாகும் அலன் டொனால்ட் தென்னாபிரிக்க அணியில் 1992ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட…
-
- 0 replies
- 372 views
-
-
தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை பாண்டிங்கை ஸ்டம்ப்டு செய்யும் தோனி. | 2011 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நடந்தது. | கோப்புப் படம்.| கே.பாக்யபிரகாஷ் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங். இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டிய…
-
- 0 replies
- 524 views
-
-
ஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம் சுவிஸ் நாட்டை சேர்ந்த யுலி ஸ்டெக் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த்தாக நேபாள சுற்றுலா அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைSCHWEIZER FERNSEHEN Image captionயூலி ஸ்டெக் விபத்தில் மரணம் "ஸ்விஸ் மெஷின்" என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார். நாற்பது வயதான ஸ்டெக், துரிதமாக மலையேறும் திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் காட்மண்டுவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "கீழ் முகாமில் இருந…
-
- 0 replies
- 371 views
-
-
15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தண்டனை காலம் முடிந்து 15 மாதங்களுக்குப்பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை களமிறங்குகிறார் மரியா ஷரபோவா. ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டு…
-
- 6 replies
- 631 views
-
-
பிரியாவிடை வாய்ப்பை கொடுக்க முன்வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: நிராகரித்தார் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அப்ரிடி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. தனது அதிரடி ஆட்டத்தால் ‘பூம் பூம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஷாகித் அப்ரிடி டி20 கிரிக்கெட் போட்…
-
- 0 replies
- 679 views
-
-
கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்த பாகிஸ்தான்: வங்கதேசம் அதிர்ச்சி வங்கதேச அணி. | படம்.| ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் தனது வங்கதேச கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்தது குறித்து வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை கூட இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” என்றார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ளைவிருந்தது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய பிரதிநிதி கூறும்போது, “2015-ல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு வாரியங்களுக்கும் இடையே நித…
-
- 0 replies
- 399 views
-
-
லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை பொழிந்தன. பார்சிலோனா 7-1 எனவும், ரியல் மாட்ரிட் 6-2 எனவும் எதிரணிகளை வீழ்த்தின. லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா- ஒசாசுனா அணிகள் மோதின. பலம் வாய்ந்த பார்சிலோனா அணியின் முன் ஒசாசுனா அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய…
-
- 0 replies
- 410 views
-
-
கிரிக்கெட்டுக்கு பை-பை... அடுத்து லாயர்... 25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இடது கை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்பட்ட இவருக்கு 25 வயதேயாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2015-ம் ஆண்டுதான் அவர் முதன்முறையாக விளையாடத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அணியில் இருந்தார். இப்படி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விளையாடி வந…
-
- 0 replies
- 289 views
-
-
உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்ப வசதி என்ன தெரியுமா?! கால்பந்து விளையாட்டில் வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் புதிய தொழிநுட்ப முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தங்களால் உறுதியாக முடிவெடுத்து தீர்ப்பு வழங்க முடியாத சூழ்நிலையில், மூன்றாவது அம்பயர் எனப்படும் டி.வி அம்பயரின் உதவியை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் நாடுவார்கள். ஹாக்-ஐ (Hawkeye), ஸ்னிக்கோ மீட்டர் (Snick-o-Meter), ஹாட் ஸ்பாட் (Hot Spot) போன்ற தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வீடியோ காட்சியை சோதித்து மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்குவார். 1992-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட்டில் தேர்ட் அம்பயர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல விளையாட்டு…
-
- 0 replies
- 301 views
-
-
புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்ன…
-
- 2 replies
- 373 views
-
-
கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 5 புதிய சாதனைகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் பிற்பகல் 4.00 மணிவரை ஐந்து புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டது. இதேவேளை வட மாகாண பாடசாலை ஒன்றுக்கு நேற்றைய தினமும் ஒரு தங்கப் பதக்கம் சொந்தமானது. 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் அருந்தவராஜா புவிதரன் (4.20 மீற்றர்) முன்னைய சாதனையை சமப்படுத்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூர…
-
- 1 reply
- 445 views
-
-
முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 286 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 407 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் மிஸ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற, சகல விக்கட்டுகளும் இழக்கப்பட்ட நிலையில், அவர் தனது சதத்தை பெறமுடியாமல் போனது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங…
-
- 0 replies
- 385 views
-
-
என் துணிகளை விற்று தோனியை வாங்குவேன், ஷாருக் கான் ஆவல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக தோனியை வாங்க என் உடைகளைகூட விற்கத் தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பொழுதுபோக்கே முதல் குறிக்கோள். இப்பொழுதுபோக்கில் தோனியை ரசிக்காதவர்கள் மிகக் குறைவே! இதில் ஷாருக் கானும் விதிவிலக்கல்ல. காரணம் தனது சமீபத்திய பேட்டியில் தோனியை தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டி அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில்,'தோனி போன்ற ஒரு சிறந்த வீரரை எங்கள் அணிக்காக வாங்குவதற்கு, எனது பைஜாமா உடைகளைக்கூட நான் விற்க தயார். ஆனால் அவர்…
-
- 1 reply
- 628 views
-
-
சாதனை நிலைநாட்டிய ஜொய்சனின் குதிக்காலில் ஐந்து தையல்கள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை நிலைநாட்டிய அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், குதிக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஐந்து தையல்கள் போட நேர்ந்தது. இப் போட்டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது மெத்தையில் சிக்குண்டு குதிக்காலில் காயத்திற்குள்ளானதாக அவரது பயிற்றுநர் பாகீஸ்வரன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 442 views
-
-
சகரிகா கட்ஜ்க்கு கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம் பிரபல கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் - பாலிவுட் நடிகை சகரிகா கட்ஜ்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சகரிகா கட்ஜ். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திர…
-
- 0 replies
- 366 views
-
-
வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி Tamil வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-2 இன் சம்பியனாகத் தெரிவாகி…
-
- 0 replies
- 455 views
-
-
பத்தாயிரம் ரன்களைக் கடந்து யூனிஸ்கான் புதிய சாதனை! இன்னும் 23 ரன்கள் எடுக்க வேண்டும். அதைச் செய்தால், 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைய முடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு களமிறங்கினார், யூனிஸ்கான். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் யூனிஸ்கான். இவர், இந்தத் தொடரோடு ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 22 ரன்களில் இருந்தபோது, ராஸ்டன் சேஸ் பந்தில் அழகான ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி எடுத்தார். அந்த பவுண்டரியோடு 10,000 ரன்களைக் கடந்த பெருமையும் கிடைத்தது. இன்று, அவர் சந்தித்த…
-
- 1 reply
- 389 views
-
-
வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல் கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் …
-
- 5 replies
- 522 views
-