விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி: விஸ்டன் இதழ் புகழாரம் கடந்த 2016-ம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோலியை விஸ்டன் அறிவித்து அவருக்கு புதிய மகுடத்தை சூட்டியுள்ளது. இந்திய அணியில் தற்போது சூப்பர் மேனாக திகழ்ந்து வருபவர் கேப்டன் விராட் கோலி. ரன் எடுக்கும் எந்திரம் என்று தற்போது எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் மேலும் இவரது ரன் குவிக்கும் வேக சூடுபிடித்தது. நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து மற்ற…
-
- 0 replies
- 493 views
-
-
யார் இந்த அண்டர்டேக்கர்? அவர் வெளியேறினால் ரசிகர்கள் ஏன் அழுகிறார்கள்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மல்யுத்தம் என்பது வெறும் விளையாட்டல்ல. தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்காக அமர்வது, மல்யுத்த அட்டைகளை சேகரிப்பது, மல்யுத்தம் தொடர்பான விளையாட்டுகளை அதிகம் விரும்புவது - அப்போது கிரிக்கெட்டை விட மல்யுத்தத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஓய்வு பெறுவதாக அறிவித்த அண்டர்டேக்கர் WWF (பின்னர் WWE ஆக மாற்றப்பட்டது) இன் ஒவ்வொரு போட்டியும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. மல்யுத்தத்தில் நடைபெறும் சண்டை உண்மையானத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்? கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் அதிக ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்- டி20 கிரிக்கெட்டின் 10-வது தொடர் ஏப்ரல் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது 56 லீக் ஆட்டங்கள், ஃபிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் 2017 ஐபிஎல் தொடரில் நடைபெறுகின்றன. இந்த தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ; ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை ; ரசல் எடுத்த அதிரடி முடிவு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை விடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணொருவர் தன்னை திருமண செய்யுமாறு பதாதை ஏந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் ஏந்திய பதாதையை கண்ணுற்ற ரசல் ஆர்னோல்ட் போட்டியின் போது எதுவும் தெரிவிக்காது மௌனம் காத்துவிட்டு, போட்டி முடிவடைந்த பின் …
-
- 0 replies
- 345 views
-
-
கோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்? சார்லஸ் ``கோஹ்லி போன்ற ஒரு தெருச்சண்டைக்காரனை கேப்டனாக நியமித்தால், இதுபோன்ற அசிங்கமான கிரிக்கெட்டைப் பார்த்துதான் ஆக வேண்டும்.'' ``ஸ்டீவன் ஸ்மித் கிரிஸுக்கு வந்ததுமே, கோஹ்லி ஏதோ அவரைச் சிறைக்குள் வைப்பது போல ஃபீல்டிங்கை மாற்றினார். பேட்ஸ்மேனின் அருகில் நின்றுகொண்டு திட்டித் திட்டிப் பேசிக்கொண்டே இருந்தார்.'' ``கோஹ்லி தன்னுடைய செயல்களால் அல்ல, தன்னுடைய கெட்ட வார்த்தைகளால் தனது அணியினரை மோட்டிவேட் செய்ய முயல்கிறார். அவர் ஒரு தலைவனே அல்ல.'' -இப்படியெல்லாம் வீராட் கோஹ்லியை வசைபாடுவதும், அவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் யார் தெரியுமா? ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் இந்நாள் வீரர்களும் ஆஸ்திரே…
-
- 0 replies
- 709 views
-
-
இந்த 35 வயதிலும்... எதை நிரூபிக்க ஃபெடரர் இன்னும் போராடுகிறார்? ஆஸ்திரேலிய ஓபன், இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன் என இந்த ஆண்டு மட்டுமே ரோஜர் ஃபெடரர் வென்றது மூன்று பட்டங்கள். கடந்த ஆண்டு ஆறு மாத இஞ்சுரியால் முடங்கிக் கிடந்த ஃபெடரருக்கு இது அமர்க்கள சீசன். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தோற்றதால், ‘வயசாயிடுச்சு, இனிமே இவரால ஜெயிக்கமுடியாது' என்று கழித்துக்கட்டப்பட்ட ஒருவருக்காக, சமீபத்தில் உலகமே பிரார்த்தனைசெய்தது. அவர் ஜெயித்துவிடமாட்டாரா என ஏங்கியது. ஜெயித்ததும் சத்தமாகக் கத்தவில்லை; கொண்டாடவில்லை; கண்ணீர்விட்டு அழுதது; மறுகணம், 'அண்ணனோட அடுத்தபோட்டி எப்போ?' என்று ஆவலுடன் எதிர்பார்க்கத்தொடங்கிவிட்டது. இந்த அதிசயம்…
-
- 0 replies
- 612 views
-
-
உள்ளூர் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் 10 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். கொல்கத்தாவில் 2-வது டிவிஷன் லீக் பிளே-ஆப் மேட்ச் இன்று நடைபெற்றது. டால்டாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அரியாடாஹா ஸ்போர்ட்டிங் கிளப்பும், நேஷனல் அத்லெடிக் கிளப்பும் மோதின. இரண்டு நாள் கொண்ட போட்டியில் நேஷனல் அத்லெடிக் அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைவான ஸ்கோரை எளிதில் எட்டிவிடலாம் என்ற…
-
- 0 replies
- 403 views
-
-
நாணய சுழற்சியின் போது பங்களாதேஷ் அணித்தலைவர் திடீர் முடிவு : பங்களாதேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷா இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று ஆரம்பமாகிய போது அவர் இதனை அறிவித்துள்ளார். நாணய சுழற்சியின் போதே அவர் தனது ஓய்வை அறிவித்து பங்களாதேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்நிலையில் முர்தஷா ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/18706
-
- 1 reply
- 256 views
-
-
ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிக்கான கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை! (படங்கள்) ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சபர் கோஹார் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் செஹான் ஜயச…
-
- 0 replies
- 316 views
-
-
பார்சிலோனாவிற்காக 100 கோல்கள் அடித்து நெய்மர் அசத்தல் பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார். பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா லிகா கால்பந்து தொடர். இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் ஆகியவை தலைசிறந்த அணிகள். பார்சிலோனா அணியில் மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மூன்று தலைசிறந்த வீ…
-
- 0 replies
- 321 views
-
-
தமிழக கிரிக்கெட்டில் சாதி... அஷ்வின் சர்ச்சை ட்வீட்! அஷ்வின் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பெருமை. டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். தற்போது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புதிய பல சாதனைகளையும் படைத்து வருகிறார் அஷ்வின். ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பிடம் இருந்தும் இப்போது விருதுகளாக குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஜூன் மாதம் நடக்கும் ச…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்தார் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய, இலங்கை அணியின் முன்னாள் வீரர் களுவிதாரண, இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் மற்றும் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவர் சஹ…
-
- 0 replies
- 281 views
-
-
மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை விதித்தது ஐ.சி.சி! பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷாவுக்கு ஒருநாள் போட்டியொன்றில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காகவே குறித்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 0 replies
- 294 views
-
-
இருபதுக்கு-20 குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கள் மோதும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். குசால் மெண்டிஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றார். எனினும் இவரது இருபதுக்கு-20 சராசரி 9.23 என்ற குறைவான மட்டத்தில் உள்ளது. இதனால் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாமில் இடம்பிடிப்பதுடன், இருபதுக்கு-20 போட்டிகள் குழாமில் சிறிது காலங்களுக்கு விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை திசர பெரேரா, குசல் பெரேரா, டில்ஷான் முனவீர…
-
- 8 replies
- 1k views
-
-
சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள் FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஆட்டத்தில் ஹிரா வீரர்களின்…
-
- 0 replies
- 298 views
-
-
பங்களாதேஷ் உடனான T20 தொடரலிருந்தும் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியேற்றம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரில் கெண்டைக்கால் உபாதை காரணமாக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். “நடைபெறவிருக்கும் முதலாவது T-20 போட்டியில் நிச்சயமாக மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார். இதே நிலைமை இரண்டாவது போட்டியிலும் தொடரும். அவர் இத்தொடரில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது. மேலும் மீண்டும் பூரண குணமடைவதற்காக அவர் கடினமாக போராடவேண்டியுள்ளது. அவரது பிற்தொடை தசை குணமடைந்து இருப்பினும் வலது கெண்டைக்கால் …
-
- 0 replies
- 309 views
-
-
சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு 2016/17 பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதி 32 அணிகளுக்கிடையிலான போட்டியில், புத்தளம் விம்பிள்டன் அணியை 12-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்ட சென்.மேரிஸ் அணி தமது ஆரதவாளர்களின் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் தமது கடந்த போட்டியில் மன்னார் ஹில்லரி அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட புத்…
-
- 0 replies
- 348 views
-
-
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் சேர்ப்பு இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் மொகமது சாய்புதின் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளைாடி வருகிறது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 6-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 வயதான வே…
-
- 0 replies
- 260 views
-
-
மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் ஆனது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொனாகோவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் லீக் 1. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், மொனாகோ அணியும் பலப்பரீட்சை நடத்தின. …
-
- 1 reply
- 368 views
-
-
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டி : இலங்கை அணியிலா, மும்மை அணியிலா விளையாடுவேன் : மாலிங்க அதிரடி தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரும் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் மும்மை அணி சுப்பர்ஜிகான்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது. …
-
- 0 replies
- 164 views
-
-
லிவிஸ் அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்தியது மே. தீவுகள் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது இருபதுக்கு-20 போட்டியில் மே.தீவுகள் அணி 7 விக்கட்டுகள் மற்றும் 31 பந்துகளினால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கம்ரன் அக்மல் 48 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் 138 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 14.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. மே.தீவுகள் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இவைன் லிவிஸ் 51 பந்துகளில…
-
- 0 replies
- 228 views
-
-
மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்: என்.சீனிவாசன் நம்பிக்கை கோப்புப் படம்.| ஆர்.ரகு. சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது: அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்ப…
-
- 0 replies
- 261 views
-
-
மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…
-
- 0 replies
- 232 views
-
-
2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது சாவ்பாலோ: 32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை! இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18543
-
- 0 replies
- 247 views
-