விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை ; இறுதி ஒருநாள் போட்டி இன்று இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 4-0 என கைப்பற்றியுள்ள நிலையில், வைட் வொஷ் ஆவதை தடுப்பதற்கு இந்த போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியை பொறுத்தவரையில், இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சந்திமல் அணியில் இணைத்துக்கொள்ளப்படும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் சம்ஷிக்கு பதில…
-
- 0 replies
- 357 views
-
-
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி ராஜினாமா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அசார் அலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தவர் அசார் அலி. சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் அணிக்கு அசார் அலி கேப்டனாக இருந்தார். இந்த தொடரில் பாகிஸ்தான் 1-4 என படுதோல்வியடைந்தது. இதனால் அசார் அலி மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அனைத்த…
-
- 0 replies
- 293 views
-
-
சனத் ஜயசூரிய இராஜினாமா? இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/191279/சனத-ஜயச-ர-ய-இர-ஜ-ன-ம-#sthash.tvokm652.dpuf
-
- 0 replies
- 782 views
-
-
கிரிக்கெட்டுக்கோ, மைதானத்திற்கோ பாதிப்பேற்படுத்த இடமளியேன் : திலங்க சுமதிபால எமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ எவரேனும் பாதிப்பேற்படுத்த முனைந்தால் நான் ஒரு போது இடமளிக்கமாட்டேனென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைதானப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்…
-
- 0 replies
- 349 views
-
-
வஸிம் அக்ரமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு வக்கார் யூனிஸ் கடும் கண்டனம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வஸிம் அக்ரம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை மறுத்திருக்கும் அவரது சக வீரர் வக்கார் யூனிஸ், அது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் பதிவுசெய்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், டெல்லி - கோட்லா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ப்ளே 74 ஓட்டங்களுக்கு பத்து விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த நிகழ்வை நினைவு கூர்ந்திருக்கும் வஸிம் அக்ரம், சர்ச்சைக்குரிய மற்றொரு சம்பவத்தையும் அண்மையில் பதிவ…
-
- 0 replies
- 368 views
-
-
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்டெ் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணிய…
-
- 3 replies
- 832 views
-
-
மீண்டும் அணியில் இணைந்தார் மலிங்க : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவராக மலிங்க தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியும் அவரிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/16421
-
- 1 reply
- 369 views
-
-
இலங்கை வீரர்களுக்கான வரவேற்புபசாரம்; டிக்கட்கள் யாவும் விற்பனையாகிவிட்டன 2017-02-08 11:18:08 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் அவுஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காரண்யப் பணிக்கான நிதி திரட்டும் இராப்போசனத்திற்கான டிக்கட்கள் யாவும் விற்பனை செய்ப்பட்டுவிட்டதாக ஏற்பாட்டாளர்கள் மூலம் தெரியவருகின்றது. இதில் பெறப்படும் வசூல் கிரிக்கெட் எய்ட் எனும் கிரிக்கெட் உதவித் திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. கிரிக்கெட் உதவித் திட்டமானது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் திட்டமாகும். இந்த இராப்போசன விருந்தானது இலங்கை கிரிக்கெட் வீரர்களை வ…
-
- 0 replies
- 360 views
-
-
தினேஸ் சந்திமலுக்கு சில நாட்கள் ஓய்வு தேவை ; தரங்க தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தினேஸ் சந்திமல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனவரும் அறிந்த விடயம். அவருக்கு நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டமையானது மிகவும் கடினமான தீர்மானமாகும். ஏனெனில் அணியில் இடம்பிடித்துள்ள அனுபவம் வாய்ந்த வீரர் அவர் மட்டும்தான். எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில போட்டிகளில் சிறப்பானதாக அமையவில்லை. இதனால் அவருக்கு சில நாட்களுக்கு ஓய்வளிப்பது சிறந்த விடயம்.…
-
- 0 replies
- 321 views
-
-
39 சிக்ஸ், 14 பவுண்டரியுடன் டி20 போட்டியி்ல முச்சதம் விளாசிய டெல்லி வீரர் டி20 கிரிக்கெட் போட்டியில் 39 சிக்சர்களுடன் முச்சதம் அடித்து டெல்லி பேட்ஸ்மேன் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். டெல்லியில் கிளப் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மாவி லெவன் - பிரென்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாவி லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன மோகித் அலாவத் களம் இறங்கினார். தொடக்கம் முதலே பிரென்ட்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கும் பவுண்டரி…
-
- 0 replies
- 429 views
-
-
மலிங்க விளையாடலாம் ; வைத்திய குழு தீர்மானம் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உபாதையிலிருந்து மீண்டு முழு உடல் தகுதியுடன் உள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்திய குழு உறுப்பினர் அர்ஜுன் த சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலிங்க இம்மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 தொடரில் விளையாடுவதற்கான முழு உடற் தகுதியுடன் உள்ளார், வைத்திய குழு சார்பில் அவர் விளையாடலாம் என்ற அறிக்கையை கிரிக்கெட் சபையிடம் ஒப்படைத்துள்ளோம். எனினும் தேர்வு குழு இலங்கை அணிக்குழாமை தெரிவுசெய்வதுடன், கிரிக்கெட் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார…
-
- 0 replies
- 255 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்: இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்க…
-
- 1 reply
- 488 views
-
-
கனடா வீரர் நடுவரின் கண்ணில் தாக்கியதால், பிரிட்டன் டென்னிஸ் அணி காலிறுதிக்கு தகுதி பிரிட்டன் மற்றும் கனடா டென்னிஸ் அணிகள் இடையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைக்கான ஆட்டத்தில், கனடா விளையாட்டு வீரர் ஒருவர், நடுவரின் கண்ணில் டென்னிஸ் பந்தை அடித்து காயமுற செய்த அசாதரணமான சூழ்நிலையால் பிரிட்டன் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகனடாவுக்காக முதல்முறைாக டேவிஸ் கோப்பையில் டெனிஸ் ஷாபோவாலோவ் விளையாடியுள்ளார் ஒட்டவாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின்போது, பிரிட்டனின் கைல் எட்மண்ட்ஸின் பந்தை 17 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷாபோவாலோவ் சந்தித்தபோது, அது கோட்டுக்கு வெளியே விழுந்த கோபத்தில…
-
- 0 replies
- 317 views
-
-
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் : தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை ஆரம்பம் 11 ஆவது மகளிர் ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை 7ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளன. 2017 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காண் சுற்றுப் போட்டிகளே இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இம் முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 8 நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள ம…
-
- 1 reply
- 485 views
-
-
இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாறுகிறது ; அரவிந்த இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்துள்ளதெனவும், அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்துள்ள நிலையில், இருபதுக்கு-20 தொடரை மா…
-
- 0 replies
- 253 views
-
-
டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து அலஸ்டெயார் குக் இராஜினாமா! இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்டெயார் குக் தனது அணித்தலைமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையடுத்து குக்கின் தலைமையின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த காரணத்தால் இவர் அணித்தலைமையிலிருந்து இராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இங்கிலாந்து அணி சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள குக் அதில் 24 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இதில் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்திபெற்ற ஏசஷ் தொடரையும் இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய…
-
- 2 replies
- 630 views
-
-
ஆஸி. கிரிக்கெட் விஜயத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் இல்லை; தரங்க அல்லது சந்திமால் அணித்தலைவராகலாம் 2017-02-06 09:55:38 (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இம் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்கில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் அவசரமாக ஓட்டம் ஒன்றைப் பெற விளைந்தபோது மெத்யூஸ் உபாதைக்குள்ளானமை அனைவரும் அறிந்ததே. அவர் இன்னும் பூரண குணமடையாததால் அவுஸ்திரேலியா தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய…
-
- 0 replies
- 263 views
-
-
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார் வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார். இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்…
-
- 23 replies
- 1.8k views
-
-
ஒருநாள் போட்டிக்கான தரவரிசை: ஆஸ்திரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு அந்த இடத்தை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்றுள்ளது. மிகத்துள்ளியமான புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திர…
-
- 0 replies
- 392 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹேமில்டன்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …
-
- 1 reply
- 335 views
-
-
ஹைதராபாத்தில் இன்று வங்கதேசம் - இந்தியா ஏ பயிற்சி ஆட்டத்தில் மோதல் வங்கதேசம் - இந்தியா ஏ அணிகள் இடையிலான இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப் படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டிக்கான பயிற்சின்போது ஹர்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து குணமடைந்த அவர், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முடிவடைந்த குறுகிய வடிவிலான தொடர்களில் பங்கேற்றார். அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜெயந்த் யாதவ், சைய…
-
- 2 replies
- 408 views
-
-
20 ஓவர் உலக கோப்பையில் டி.ஆர்.எஸ், ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர்: ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்துவது மற்றும் ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என்று ஐ.சி.சி.யின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு…
-
- 0 replies
- 360 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: அர்செனலை 3-1 என வீழ்த்தியது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் அர்செனலை 3-1 என வீழ்த்தியது செல்சியா. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் செல்சியா, அர்செனல் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்கஸ் அலோன்சோ முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. பின்னர் 2-வது பாதி நேர …
-
- 0 replies
- 256 views
-
-
ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழா: வட மாகாண செயற்றிட்டம் ஆரம்பம் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் வட மாகாணத்திற்கான செயற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. சிறந்த வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை கௌரவிப்பதற்காக இலத்திரனியல் ஊடகமொன்று ஏற்பாடு செய்த முதலாவது விருது வழங்கல் விழாவாக ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழா காணப்படுகின்றது. இதன்படி, இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது வழங்கல் விழா யாழ்ப்பாணம் – வேம்படி மத்திய மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த செயற்திட்டத்தில் வட மாகாணத்தின் நட்சத்திர வீராங்கனையாக அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவு ச…
-
- 0 replies
- 287 views
-
-
கோஹ்லியை சீண்டாதீங்க! ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எச்சரிக்கை வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ஆஸ்திரேலிய அணி. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா அணி அவுட்-ஆஃப்-ஃபார்மில் இருக்கிறது. இந்நிலையில், மிஸ்டர்.கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கெல் ஹஸ்ஸி, 'விராட் கோஹ்லியிடம் வம்பு செய்வது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதல்ல' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஹஸ்ஸி கூறுகையில், 'இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விராட் கோஹ்லியிடம் வம்பு செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி செய்வது அவரை இன்னும் வீறு கொண்டு ஆட வைக்க…
-
- 1 reply
- 386 views
-