விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
பல்கேரிய வீரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தினார் ரபேல் நடால்- இறுதியில் பெடரருடன் மோதல் டிமிட்ரோவை வீழ்த்திய நடால். | படம்.| ஏஎப்பி. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆட…
-
- 0 replies
- 411 views
-
-
ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா! இந்தியா - இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டி, நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா, 23 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இவர் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உதவியதுடன், அணியின் ரன் ரேட்டையும் அதிகரித்தார். 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக் கொள்ளாமல் அடித்து ஆடியது. …
-
- 0 replies
- 454 views
-
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் …
-
- 0 replies
- 309 views
-
-
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…
-
- 0 replies
- 382 views
-
-
ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …
-
- 0 replies
- 357 views
-
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவரும் வென்றதையடுத்து, இறுதி போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து களமிறங்கவுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார். முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார். …
-
- 0 replies
- 351 views
-
-
மேலாடையை தூக்கியதால் சர்ச்சையில் சிக்கிய தாஹீர் ; ஐ.சி.சி எச்சரிக்கை (காணொளி இணைப்பு) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது அவர் அணிந்திருந்த அணியின் சீருடைக்குள் தனிப்பட்ட நபரொருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அணிந்திருந்த சீருடைக்குள் இருந்த புகைப்படத்தை அவர் போட்டியின் போது வெளிக்காட்டியதால் தாஹீரை ஐ.சி.சி எச்சரித்துள்ளது. இம்ரான் தாஹீர் தனது அணி மேலாடைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர் ஜுனைட் ஜேம்சாட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உள்ளாடையினை அணிந்திருந்தமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 367 views
-
-
எமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. …
-
- 0 replies
- 203 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-12
-
- 0 replies
- 481 views
-
-
சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…
-
- 0 replies
- 257 views
-
-
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…
-
- 0 replies
- 304 views
-
-
இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் போட்டி கண்ணோட்டம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 20 ஓவர் போட்டிகள் பற்றி சில கண்ணோட்டங்களை பார்ப்போம். இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் முதல் முறையாக 2007-ல் மோதின. தென்ஆப்பிரிக்காவில் நடந்த உலககோப்பையில் இந்தியா 18 ரன்னில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், இங்கிலாந்து 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணி 2007-ல் டர்பன் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்ததே இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோராகும். அந்த அணி அதிகபட்சமாக 6 விக்கெட…
-
- 22 replies
- 1.3k views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 312 views
-
-
இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சர்வதே…
-
- 16 replies
- 1.2k views
-
-
'கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்' வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 828 views
-
-
7 மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்புகிறார் டி வில்லியர்ஸ்..! அதே வேகம், அதே அதிரடி என உற்சாகமாக அணிக்குத் திரும்பியிருக்கிறார் டி வில்லியர்ஸ். கடந்த ஜூன் மாதத்தில் கரீபிய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கினார். காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருந்தாலும் பூரண குணமடைய நீண்ட காலம் ஆனது. இதனால் அணியில் இருந்து பல மாதங்கள் ஒதுங்கியே இருந்தார். இதோ இந்த தொடரில் வந்துவிடுவார், அந்த தொடரில் வந்துவிடுவார் என ரசிகர்கள் ஒவ்வொரு முறை எதிர்பார்க்கும்போதும் ஃபிட்னெஸ் சோதனையில் தோல்வியைத் தழுவி விளையாட முடியாத சூழ்நிலையில் இருந்தார். …
-
- 0 replies
- 230 views
-
-
கருண் நாயர் முச்சதம் அடித்தது போல் இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளாச வேண்டும்: ஸ்மித் விருப்பம் வார்னர், கேப்டன் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் பெரிய ஸ்கோர் தேவை, அதற்கு வார்னர், கருண் நாயர் போல் முச்சதம் விளாச வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தொடரில் நமது மூத்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதைத்தான் நாம் இலங்கையில் சரிவர செய்யவில்லை. அதனால் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிட்டவில்லை. எனவே எங்கள் விரு…
-
- 4 replies
- 353 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் ; 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப்போட்டியில் ரஸ்யாவின் அனஸ்டாசியா பவ்ல்யுசென்கோவாவை எதிர்கொண்ட வீனஸ் வில்லியம்ஸ் 6-4 என்ற அடிப்படையில் முதல் செட்டை வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 6-6 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் செட்டை எதிர்கொண்ட வீனஸ் 7 -3 என்ற அடிப்படையில் வென்று அரையிறுதிக்கு தகுதி…
-
- 0 replies
- 338 views
-
-
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம் தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் செஞ்சூரியன் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் - தென் ஆபிரிக்க அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன் இரண்டு அணிகளும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளையாடியுள்ள 6 சர்வதேச இருபது 20 போட்டிகளில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. இதேவேளை தென் ஆபிரிக்காவுக்கு எதி…
-
- 10 replies
- 1.1k views
-
-
விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்று விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக …
-
- 0 replies
- 510 views
-
-
இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களித்தின் மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு வெற்றி கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர். குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ் நேற்று கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை இடம்பெற்றது. முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசான திணைக்கள அணியினர் பத்து பந்து பறிமாற்றத்தின் இறுதியில் 70ஒட்டங்களை பெற்றனர். தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பத்து பறிமாற்றத்தின் நிறைவில் 71 ஒட்டங்கள் பெற்றது இரணைமடு வெற்றிகின்னத்தை தமதாக்…
-
- 78 replies
- 9.4k views
-
-
2019 வரை மெத்தியூஸே அணித் தலைவர் ; திலங்க சுமதிபால இலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அணியில் தற்போது இருக்கும் குறைநிறைகளை பற்றியே நாம் ஆராய்ந்தோம்…
-
- 0 replies
- 412 views
-
-
“சுதந்திரக் கிண்ணம் ” கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும். இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்…
-
- 0 replies
- 326 views
-
-
மீண்டும் இருபது-20 போட்டிகளில் டில்சான் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார். இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார். இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 450 views
-
-
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட் சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து ம…
-
- 0 replies
- 387 views
-