விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-01#page-12
-
- 0 replies
- 386 views
-
-
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் என்ரே ரஸலுக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டனில் உள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை குழுவுக்கு தனது இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்காத குற்றச்சாட்டுக்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊக்கமருந்து சோதனை குழு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பலமுறை அவரை தொடர்புக்கொண்டு அவரது இருப்பிடம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதும் ரொஸல் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரொஸல் எதிர்வரும் வருடம் ஜனவரி 30 ஆம் திகதிவரை கிரிக்கெட் விளையாடத் …
-
- 0 replies
- 314 views
-
-
வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra தான் செய்யும் தொழிலை நேசிப்பவன், தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அவற்றுக்காக தரத் துணிவான் எனச் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி தனது நாடி, தசை, நாளம், புத்தி எல்லாவற்றிலும் தனது தொழிலை நேசித்த, அதில் வெற்றியடைய முயற்சித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. அவரை கிண்டல் செய்யலாம், கேலி பண்ணலாம் ஆனால் புறக்கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பும் இருந்தது இல்லை, ரசிகர் பட்டாளமும் இல்லை, விளம்பர வருவாயும் கிடையாது, ஆனாலும் கிரிக்கெட்டை நேசித்த, அணியை நேசித்த, தேசத்தை நேசித்த பிளேயர் நெஹ்ரா…
-
- 0 replies
- 661 views
-
-
ஆஸ்திரேலியன் ஓபனில் நடாலை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஃபெடரர்.!! ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். பரபரப்பான ஆட்டத்தில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வென்றுள்ளார் ஃபெடரர். இருவரும் 2-2 செட்களை கைப்பற்றவே 5-வது செட்டில் அரங்கமே நுனி சீட்டுக்கு வந்தது. இறுதி செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், நடாலை திக்குமுக்காட வைத்தார். இது ரோஜர் ஃபெடரரின் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79088-roger-federer-beats-rafael-nadal-and-wins-australian-open-title.art
-
- 2 replies
- 589 views
-
-
தென்னாபிரிக்காவில் மூத்தவர்கள் சோடைபோக சம்பியனானது இளம் படை தென்னாபிரிக்காவில் இலங்கை அணி தட்டுத் தடுமாறி விளையாடிவரும் நிலையில், தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை இளம் அணி வெற்றிகொண்டு முக்கோணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளம் கிரிக்கெட் அணியும் தென்னாபிரிக்காவில் முகாமிட்டுள்ளன. இதில் 19 வயதிற்குட்பட்டோருக்கான மூன்று நாடுகள் மோதும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இலங்கை, சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்தத் தொடரின் இறுத…
-
- 0 replies
- 405 views
-
-
இந்தியாவின் மலிங்கா... பூம் பூம் பும்ராவின் பின்னணி தெரியுமா? #Bumrah இங்கிலாந்திடம் தோல்வியடைந்து தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டிய தருணத்தில், 'அவ்ளோ சீக்கிரம் விட்ர மாட்டோம் கண்ணுகளா' என கெத்தாக ஜெயித்து நிமிர்ந்திருக்கிறது இந்தியா. அணியின் வெற்றிக்கு அதிமுக்கிய காரணம் பும்ராவின் அந்த மேஜிக் ஓவர். தான் பதிவியேற்ற முதல் தொடரையே தோல்வியுடன் துவங்கியிருக்க வேண்டிய கோஹ்லிக்கு, டிவிஸ்ட் கொடுத்து மேட்ச்சை ஜெயிக்க வைத்து டி20 தொடரை உயிர்ப்புடன் வைக்க உதவியிருக்கிறது நெஹ்ரா - பும்ரா இணை. யார் இந்த பும்ரா ? குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பிறந்தவர் பும்ரா, ஆனால் சீக்கிய வம்சத்தை சேர்ந்தவர். ஜாஸ்பிட் பும்ராவின் முழு பெயர் ஜாஸ்பிட் ஜாஸ்பிர் …
-
- 0 replies
- 508 views
-
-
திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி ; மயிரிலையில் ஆஸி தோல்வி நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் புரூம் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் கடும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஒரு கட்டத்தில் அ…
-
- 0 replies
- 412 views
-
-
U-19 இந்திய அணி துணை பயிற்சியாளர் மரணம்! இந்திய கிரிக்கெட் (19 வயதுக்குபட்ட) அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவாந்த் மும்பையில் உள்ள ஹோட்டலில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் பயிற்சிக்கு வராததால், சந்தேகமடைந்து, அறையை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராகுல் டிராவிட்டுக்கு கீழ் உள்ள பயிற்சிக் குழுவில் இவரும் ஒருவர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/india/79078-indian-cricket-u-19-trainer-rajesh-sawant-died-in-hotel.art
-
- 0 replies
- 405 views
-
-
ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் தனது மூத்த சகோதரி வீனஸை வீழ்த்தி செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம் செரினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்களில் அவர் வெல்லும் 23-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79030-serena-williams-wins-in-australian-open-final.art
-
- 2 replies
- 567 views
-
-
சர்வதேச சைக்கிள் சவாரி வடக்கு - கிழக்கு அணிகளுக்கு விசேட அழைப்பு எஸ்.ஜே.பிரசாத் 'டீ – கப்' என்ற பெயரில் இலங்கையில் சர்வதேச அணிகளுக்கிடையிலான சைக்கிள் சவாரிப் போட்டி இவ்வருடம் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ளது. இந்தத் தொடரில் வடக்கு, கிழக்கு அணிகள் பங்குபற்ற வேண்டும் என்றும் ஏற்பாட்டுக்குழு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளது. அந்த வகையில் இந்தப் போட்டி சர்வதேச தரத்திற்கு அமைய நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத் துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இவ்வருடம் நடைபெறவுள்ள டீ – கப் சைக்கிள் சவாரியில் 100 பேர் பங்கு…
-
- 0 replies
- 286 views
-
-
பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…
-
- 0 replies
- 531 views
-
-
பல்கேரிய வீரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தினார் ரபேல் நடால்- இறுதியில் பெடரருடன் மோதல் டிமிட்ரோவை வீழ்த்திய நடால். | படம்.| ஏஎப்பி. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆட…
-
- 0 replies
- 418 views
-
-
ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா! இந்தியா - இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டி, நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா, 23 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இவர் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உதவியதுடன், அணியின் ரன் ரேட்டையும் அதிகரித்தார். 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக் கொள்ளாமல் அடித்து ஆடியது. …
-
- 0 replies
- 460 views
-
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் …
-
- 0 replies
- 314 views
-
-
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…
-
- 0 replies
- 388 views
-
-
ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …
-
- 0 replies
- 362 views
-
-
தென் ஆபிரிக்கா, இலங்கை மோதும் இருபது 20 தொடர் இன்று ஆரம்பம் தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் செஞ்சூரியன் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் - தென் ஆபிரிக்க அணித் தலைவர் பர்ஹான் புஹார்தீன் இரண்டு அணிகளும் 2012 முதல் கடந்த வருடம் வரை விளையாடியுள்ள 6 சர்வதேச இருபது 20 போட்டிகளில் 4 – 2 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. இதேவேளை தென் ஆபிரிக்காவுக்கு எதி…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவரும் வென்றதையடுத்து, இறுதி போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து களமிறங்கவுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார். முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார். …
-
- 0 replies
- 356 views
-
-
மேலாடையை தூக்கியதால் சர்ச்சையில் சிக்கிய தாஹீர் ; ஐ.சி.சி எச்சரிக்கை (காணொளி இணைப்பு) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது அவர் அணிந்திருந்த அணியின் சீருடைக்குள் தனிப்பட்ட நபரொருவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அணிந்திருந்த சீருடைக்குள் இருந்த புகைப்படத்தை அவர் போட்டியின் போது வெளிக்காட்டியதால் தாஹீரை ஐ.சி.சி எச்சரித்துள்ளது. இம்ரான் தாஹீர் தனது அணி மேலாடைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர் ஜுனைட் ஜேம்சாட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உள்ளாடையினை அணிந்திருந்தமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 372 views
-
-
எமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. …
-
- 0 replies
- 208 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-12
-
- 0 replies
- 488 views
-
-
சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…
-
- 0 replies
- 263 views
-
-
கருண் நாயர் முச்சதம் அடித்தது போல் இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளாச வேண்டும்: ஸ்மித் விருப்பம் வார்னர், கேப்டன் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் பெரிய ஸ்கோர் தேவை, அதற்கு வார்னர், கருண் நாயர் போல் முச்சதம் விளாச வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தொடரில் நமது மூத்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதைத்தான் நாம் இலங்கையில் சரிவர செய்யவில்லை. அதனால் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிட்டவில்லை. எனவே எங்கள் விரு…
-
- 4 replies
- 360 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 320 views
-
-
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…
-
- 0 replies
- 308 views
-