Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. திரும்ப வருகிறார் மரியா ஷரபோவா! முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, சென்ற ஆண்டு ஊக்கமருந்து தொடர்பான புகாரில் சிக்கி டென்னிஸ் விளையாட்டில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால் தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் அந்தத் தடை முடியப்போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைப் பெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா, மெல்டோனியம் என்ற மருந்தைப் பயன்படுத்தியதற்காக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/ne…

  2. வடக்கு, கிழக்கில் கராத்தே வெற்றியாளர்கள் மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சாம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்…

  3. கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…

  4. 2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..? 2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ. சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77411…

  5. தோனி - யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு) தோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது. தோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார். இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ‘கிரிக்கெட் வீரராக…

  6. மலிங்க தயாராம் கிரிக்கெட் நிறுவனம் தயாரில்லையாம் தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளை­யாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க இழந்­துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறா­மையே அவர் அணியில் இடம்­பெ­றா­த­தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்­தோடு கடந்த மாதம் அவ­ருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்­பட்­ட­தால் சீரான பயிற்­சி­யிலும் அவர் ஈடு­ப­ட­வில்லை. அதன் கார­ண­மாகவே மலிங்­கவை அணியில் சேர்த்­துக்­கொள்­ள­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனாலும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 க…

  7. ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…

  8. கனரக மட்டையுடன் இந்திய ‘சுழற்பந்து வீச்சை’ ஆதிக்கம் செலுத்த வார்னர் கடும் பயிற்சி யாசிர் ஷாவை சிட்னி டெஸ்ட் போட்டியில் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் சிக்ஸ் அடிக்கும் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ். துணைக்கண்டத்தின் ‘குறைந்த பவுன்ஸ்’, ‘சுழற்பந்து வீச்சு’ ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்த கனரக மட்டையைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, டேவிட் வார்னர் வழக்கமாக 1.23 கிலோ எடைகொண்ட மட்டையைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு எதிராக 1.28 கி…

  9. உலகக் கிண்ணப் போட்­டி­களில் 48 நாடுகள்; பீபா வாக்­கெ­டுப்பு இன்று இன்னும் ஒன்­பது வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 48ஆக உயர்த்த சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்­களின் சங்கம் (பீபா FIFA) திட்­ட­மிட்­டுள்­ளது. உலகக் கிண்ணப் போட்­டி­களில் நாடு­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­ப­தற்கு பீபா தலைவர் ஜியானி இன்­பன்­டீனொ பெரும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றார். இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிர­தி­நி­திகள் அணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதா என்­பது குறித்து நடத்­தப்­படும் வாக்­கெ­டுப்பில் கலந…

  10. பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…

  11. கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிக…

  12. இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந…

  13. 10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி. நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடிய…

  14. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இவர்…

  15. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்க…

  16. சாம்பியனாகியும் நம்பர் ஒன்னை மிஸ் செய்த சானியா பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ், இறுதிப் போட்டியில் சானியாமிர்சா-பெதனி மட்டேக் இணை, ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னியா இணை மோதினர். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் சானியா இணை வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனாலும், சர்வதேச அரங்கில், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை சானியா இழந்துள்ளார். சானியா மிர்சா கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77223-sania-loses-no-1-spot-in-tennis.art

  17. இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…

  18. மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…

  19. 39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட் லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் பார்சிலோனா சிறந்த அணியாக விளங்கி வருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சாதனைப் படைத்திருந்தது. அந்த சாதனையை எந்த கிளப் அணி…

  20. 11 நாடுகளில் சதம் யூனுஸ்கான் புதிய சாதனை அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ரான கடைசி டெஸ்ட் போட்­டியில் பாகிஸ் தான் அணி யூனுஸ்­கானின் சதத்தால் 3ஆ-வது நாள் ஆட்­டத்தில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 271 ஓட்­டங்­களை எடுத்­தது. அவுஸ்­தி­ரே­லிய மண்ணில் யூனுஸ்கான் சதம் அடிப்­பது இதுவே முதல்­முறை. மேலும் டெஸ்ட் அந்­தஸ்து பெற்ற அனைத்து அணி­க­ளுக்கு எதி­ரா­கவும் சதம் அடித்­தவர் என்ற சாத­னை­யையும் யூனுஸ்கான் படைத்தார். இத்­துடன் டெஸ்ட் போட்­டிகள் நடை­பெற்ற 11 நாடு­களில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாத­னை­யையும் நிகழ்த்தி உள்ளார் யூனுஸ்கான். சங்­கக்­கார, மஹேல, ராகுல் டிராவிட், முக­மது யூசுப் ஆகியோர் 10 நாடு­களில் நடை­பெற்ற டெஸ்ட் போட்­டி­களில் சத…

  21. 10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் சிட்னி டெஸ்டில் 13 ரன்னில் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான். 39 வயதான இவர் சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 9964 ஆக உயர்ந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன் எடுத்ததில் யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவர் 13 ரன்னில் ஆட்டம் இழந்ததால் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். யூனுஸ்கான் 115 டெஸ்டில் விளையாடி 9…

  22. பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…

  23. தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட் கைல் அபாட். | கெட்டி இமேஜஸ். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியை விடுத்து இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துக் கிளம்புகிறார். கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன, தென் ஆப்பிரிக்காவுக்கு தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அபாட்டை கிரிக்கெட் வாரியத்தினால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. …

  24. 1996 உலக சம்பியன் அணி முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சம்­பி­ய­னான அணி வீரர்கள் இணைந்து முன்னாள் வீரர்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான அறக்­கட்­டளை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அங்­கு­ரார்ப்­பணம் செய்­தனர். இதன் மூலம் முன்னாள் வீரர்கள் இரு­வ­ருக்கு நிதி உத­வி­க­ளையும் அன்­றைய தினம் வழங்­கி­வைத்­தனர். அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்­ணத்தை வென்று இலங்­கையை உலக அளவில் பிர­கா­சிக்க வைத்­தது. அந்த அணி வீரர்கள் அனை­வரும் இணைந்து 3.6 மில்­லியன் ரூபா நிதி­யுடன் புதிய அறக்­கட்­டளை ஒன்றை நேற்­று­முன்­தினம் அங்­கு­ரார்ப்­பணம் செய்­…

  25. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு? இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.