விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
மெஸ்சியை விமர்சித்த அதிகாரியை நீக்குகிறது பார்சிலோனா பார்சிலோனா அணியின் அதிகாரி ஒருவர் மெஸ்சி இல்லாவி்ட்டாலும் அணி சிறப்பாக செயல்படும் என்று கூறியதுடன் விமர்சனமும் செய்திருந்தார். அவரை நீக்குகிறது பார்சிலோனா. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தொடர்ந்து விளையாடி வருகிறார். கோபா டெல் ரெய் தொடரில் அத்லெடிக் பில்பயோ அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-3 என வெற்றி பெற்றது. இதற்கு 78-வது நிமிடத்தில் மெஸ்சி ப்ரீ ஹிக் மூலம் அடித்த கோல்தான் முக்கியமாக காரணமாக இருந்தது. அத்துடன் பார்சிலோனா காலிறுதிக்கு முன…
-
- 0 replies
- 382 views
-
-
இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி இரண்டு கேப்டன் முறை இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதன்முதலாக மகேந்திரசிங் டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். ஓய்வு அறிவிற்குப்பின் இன்று முதன்முதலாக டோனி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இரண்டு கேப்டன் (டெஸ்ட் அணி, ஒருநாள் அணி) இந்த…
-
- 3 replies
- 672 views
-
-
இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம்: லயன் ஆருடம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடக்கி…
-
- 0 replies
- 305 views
-
-
இயன் சேப்பல் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த மிஸ்பா உல் ஹக் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆ…
-
- 0 replies
- 352 views
-
-
ஐ. சி. சி.யில் முழு அந்தஸ்து பெற ஆப்கானிஸ்தான் விருப்பம் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முழு அந்தஸ்து பெறுவதற்கான தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் இதற்கான விண்ணப்பத்தை ஆப்கானிஸ்தான் இன்னும் சம்பிரதாயபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் தனது விண்ணப்பத்தை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் இந்த விண்ணப்பம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திருப்திக்குரிய தேவைகள் அடங்கிய விரிவான அறிக…
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கை இருபது 20 குழாமில் புதுமுகம் திக்ஷில (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் துடுப்பாட்ட சகலதுறை வீரர் திக் ஷில டி சில்வா அறிமுக வீரராக இணைக்கப்பட்டுள்ளார். காலி மகிந்த கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிலாபம் மேரியன்ஸ் கழக வீரருமான திக்ஷில இதுவரை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியதில்லை. இதேவேளை, சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் மற்றொரு அறிமுக வீரராக சுழல்பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகானும் இலங்கை …
-
- 0 replies
- 375 views
-
-
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…
-
- 2 replies
- 518 views
-
-
திரும்ப வருகிறார் மரியா ஷரபோவா! முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, சென்ற ஆண்டு ஊக்கமருந்து தொடர்பான புகாரில் சிக்கி டென்னிஸ் விளையாட்டில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால் தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் அந்தத் தடை முடியப்போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைப் பெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா, மெல்டோனியம் என்ற மருந்தைப் பயன்படுத்தியதற்காக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/ne…
-
- 1 reply
- 597 views
-
-
வடக்கு, கிழக்கில் கராத்தே வெற்றியாளர்கள் மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சாம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்…
-
- 0 replies
- 526 views
-
-
கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…
-
- 4 replies
- 587 views
-
-
2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..? 2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ. சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77411…
-
- 2 replies
- 621 views
-
-
தோனி - யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு) தோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது. தோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார். இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ‘கிரிக்கெட் வீரராக…
-
- 0 replies
- 324 views
-
-
மலிங்க தயாராம் கிரிக்கெட் நிறுவனம் தயாரில்லையாம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இழந்துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறாமையே அவர் அணியில் இடம்பெறாததற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு கடந்த மாதம் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சீரான பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே மலிங்கவை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 க…
-
- 0 replies
- 549 views
-
-
ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…
-
- 0 replies
- 382 views
-
-
கனரக மட்டையுடன் இந்திய ‘சுழற்பந்து வீச்சை’ ஆதிக்கம் செலுத்த வார்னர் கடும் பயிற்சி யாசிர் ஷாவை சிட்னி டெஸ்ட் போட்டியில் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் சிக்ஸ் அடிக்கும் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ். துணைக்கண்டத்தின் ‘குறைந்த பவுன்ஸ்’, ‘சுழற்பந்து வீச்சு’ ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்த கனரக மட்டையைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, டேவிட் வார்னர் வழக்கமாக 1.23 கிலோ எடைகொண்ட மட்டையைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு எதிராக 1.28 கி…
-
- 0 replies
- 420 views
-
-
உலகக் கிண்ணப் போட்டிகளில் 48 நாடுகள்; பீபா வாக்கெடுப்பு இன்று இன்னும் ஒன்பது வருடங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48ஆக உயர்த்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம் (பீபா FIFA) திட்டமிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனொ பெரும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிரதிநிதிகள் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா என்பது குறித்து நடத்தப்படும் வாக்கெடுப்பில் கலந…
-
- 1 reply
- 470 views
-
-
பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…
-
- 0 replies
- 347 views
-
-
கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிக…
-
- 0 replies
- 426 views
-
-
இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந…
-
- 0 replies
- 277 views
-
-
10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி. நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடிய…
-
- 5 replies
- 529 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இவர்…
-
- 0 replies
- 361 views
-
-
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்க…
-
- 30 replies
- 2.3k views
-
-
சாம்பியனாகியும் நம்பர் ஒன்னை மிஸ் செய்த சானியா பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ், இறுதிப் போட்டியில் சானியாமிர்சா-பெதனி மட்டேக் இணை, ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னியா இணை மோதினர். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் சானியா இணை வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனாலும், சர்வதேச அரங்கில், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை சானியா இழந்துள்ளார். சானியா மிர்சா கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77223-sania-loses-no-1-spot-in-tennis.art
-
- 0 replies
- 362 views
-
-
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…
-
- 0 replies
- 334 views
-
-
மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…
-
- 0 replies
- 375 views
-