விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
முதல் ஏ.டி.பி பட்டத்தை வென்றார் முர்ரே! லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி டென்னிஸ் இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே. இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையின் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இறுதிப் போட்டியில் 6-3, 6-4, என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல் முறையாக ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார் முர்ரே . இது பற்றி முர்ரே கூறுகையில், 'இன்று வெற்றி பெற்று, உலக அளவில் முதலிடத்தில் நீடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான்' என்று கூறியுள்ளார். போட்டியில் தோல்வி அடைந்தது பற்றி ஜோகோவிச் கூறுகையில், 'ஆட்டத்த…
-
- 0 replies
- 411 views
-
-
கொஸ்டாவின் கோலினால் வென்று முதலிடத்துக்குச் சென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டியில், மிடில்ஸ்பேர்க் அணியைத் தோற்கடித்த செல்சி, தாம் பிறீமியர் லீக் சம்பியன்களான 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் முதற்தடவையாக, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தது. சாதாரணமாக போட்டியை ஆரம்பித்த செல்சி, நேரம் செல்லச் செல்ல தமது ஆட்டத்தை வேகப்படுத்தியதுடன், போட்டியின் 41ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்ற கோலின் மூலம் இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து கோல் பெறும் வாய்ப்…
-
- 0 replies
- 251 views
-
-
செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை! இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவு…
-
- 0 replies
- 363 views
-
-
இந்திய மகளிர் அணியுடனான இருபது20 தொடரில் மேற்கிந்திய மகளிர் அணி வெற்றி 2016-11-21 11:28:56 இந்திய மகளிர் அணியுடனான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய மகளிர் அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரில் நேற்று இப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. அதையடுத்து மேற்கிந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டது. அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹெய்லி மெத்திவ்ஸ் 27 ஓட்டங்களையும் அணித்…
-
- 0 replies
- 267 views
-
-
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலிருந்து 5 பேர் அதிரடி நீக்கம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாட நான்கு புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய …
-
- 0 replies
- 461 views
-
-
இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…
-
- 0 replies
- 381 views
-
-
நன்றி, நன்றி, நன்றி... கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பேச்சு! (வீடியோ) கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து உலகின் காந்த சக்தி. கோல் அடித்தாலும் சரி, மிஸ் செய்தாலும் சரி... அவர் என்ன செய்தாலும் அது வைரல். யூரோ கோப்பை சாம்பியன் ஆனதும், டிரஸ்ஸிங் ரூமில் அவர் எமோஷனலாக பேசிய வீடியோ, கால்பந்து உலகின் தற்போதைய ஹாட் டாபிக். பாரிஸில் நடந்த 2016 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ஃபைனலில் ஃபிரான்ஸை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல். வெற்றிக்கான கோல் அடித்த போர்ச்சுகல் வீரரை (எடெர்) நாம் மறந்திருப்போம். ஆனால், அன்று ரொனால்டோ செய்த அழிச்சாட்டியங்கள் அவ்வளவு எளிதில்…
-
- 0 replies
- 370 views
-
-
ஆஸி.யை சின்னாபின்னமாக்கிய இரண்டு அணிகள் அடுத்த மாதம் மோதுகின்றன சிம்பாப்வேயில் விளையாடிவரும் இலங்கை அணியும் அவுஸ்திரேலியாவில் விளையாடிவரும் தென்னாபிரிக்க அணியும் அடுத்த மாதம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேபோல் இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களையும் வென்ற அணிகள் என்பதும் விசேட அம்சம். அதனால் டெஸ்ட்போட்டிகளில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருக்கும் நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் தென்னாபிரிக்கா…
-
- 0 replies
- 283 views
-
-
மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக மஹேல ஜயவர்தன நியமனம் 2016-11-18 20:31:34 எதிர்வரும் இண்டியன் பிறீமியர் லீக் 2017 சுற்றுப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இண்டியன்ஸ் நிர்வாகம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்குமுன் முன் மும்பை இண்டியன்ஸ் பயிற்றுநராக பதவி வகித்த, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்குக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20756#sthash.PFbkh…
-
- 1 reply
- 341 views
-
-
ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள்: சாதனைப் படைப்பாரா விராட் கோலி ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 151 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டத்தில் மேலும் 49 ரன்கள் எடுத்தால் விராட் கோலி இரட்டை சதம் அடிப்பார். அப்படி இரட்…
-
- 2 replies
- 592 views
-
-
ஆட்டம் காண்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட்! தேர்வாளர் ரொட்னி மார்ஷ் பதவி விலகினார் 2016-11-18 11:26:25 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் படுதோல்விகளி னால் மனம் நொந்துபோன ரொட்னி மார்ஷ், அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் மார் ஷும் தெரிவுக்குழு உறுப்பினர்களான ட்ரவொ ஹோன்ஸ், மார்க் வோ ஆகியோரும் ஹோபார்ட்டில் கூடினர். அந்தச் சந்தர்ப்பத்தில் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்வதாக ரொட்னி மார்ஷ் அறிவித்தார். அவரது பதவிக்காலம் அட…
-
- 0 replies
- 233 views
-
-
கிரிக்கெட் மைதானத்தில் சேட்டை காட்டிய நாய்க்கு டிவிட்டரில் அக்கவுன்ட்! புஜாராவும், கோஹ்லியும் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் ஒன்று இடத்தை கலகலப்பாக்கியது. கிரிக்கெட் கிரவுண்ட் மட்டுமின்றி இணைய கிரவுண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது அந்த நாய் குறித்து தான் பேச்சு. டிவிட்டர் வாசிகள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த நாய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதகளம் செய்திருக்கிறார்கள். இது #vizagdog என்ற ஹாஷ்டாகில் டிரெண்டாகி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.கான்பூரை போல புட்கள் இருக்கும் பிட்ச் இல்லாமல், பந…
-
- 1 reply
- 780 views
-
-
ஆட்டநிர்ணய மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கை; சந்தேகத்திற்குரியவர்கள் தொலைபேசிகள், இலத்திரனியல் கருவிகளையும் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்படுவர் மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடும் சந்தேகத்திற்குரியவர்கள் கையடக்க தொலைபேசிகளையும் இலத்திரனியல் கருவிகளையும் கட்டாயம் ஒப்படைக்கவேண்டும் என நிர்ப்பந்திக்கப்படவுள்ளனர். வட்ஸ்அப், ஸ்னப்சட் ஆகியவற்றின் மூலம் அனுப்பப்படும் தனிப்பட்ட தகவல்களை இறக்கம் செய்வதற்கான அதிகாரத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி தடுப்புப் பிரிவு பெறவுள்ளது. இதற்கான பிரேரணை முன்மொழியப்ப…
-
- 0 replies
- 169 views
-
-
மீண்டும் ஒரு வீரரை பதம் பார்த்த பெளன்சர்...கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கம்! (வீடியோ) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்து வரும், ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடிய ஆடம் வோஜ்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அடிலெய்டில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கும் வகையில், உள்ளூர் போட்டியில் அவர் முத்திரை பதிக்கும் முனைப்பில் இருந்தார். முதல்நாள் ஆட்டம் இன்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக, டாஸ்மேனியா வேகப்பந்து வீச்சாளர் கேம்ரூன் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர், ஆடம் வோஜ்ஸ் ஹெல்மட்ட…
-
- 0 replies
- 291 views
-
-
ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விம…
-
- 1 reply
- 369 views
-
-
தென்ஆப்ரிக்காவில் இப்படி ஒரு ஃபீல்டர்! ஈஸி கேட்ச்சை மிஸ் செய்த எல்கர் (வீடியோ) தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 85, தென் ஆப்ரிக்கா 326 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடிக் கொண்டிருந்தது. டீன் எல்கர் என்ற சீனியர் ப்ளேயர் மூன்றாவது ஸ்லிப்பில் இருந்தார். அப்போதுதான் அந்த ஷாக் சம்பவம் நிகழ்ந்தது. தென் ஆப்ரிக்காவின் கைல் அபோட் ஆஃப் சைடில் வீசிய பந்தை டேவிட் வார்னர், ஓங்கி அடித்தார். பந்து மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த டீன் எல்கர் தலைக்கு மேலே பவுண்டரிக்கு சென்றது. ஆச்சரியம் என்னவெனில் கேட்ச் பிடிப்பதற…
-
- 0 replies
- 360 views
-
-
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியாளர் லீமேன் எச்சரிக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியில் நான்கு வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதியில்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார். ஹோபர்ட்: கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிகரான வீரர்கள் வரவில்லை. இதனால் அந்த அணி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே நிலையான ஆட்டத்தை வ…
-
- 0 replies
- 308 views
-
-
ஆசிய கிண்ணம் 2016 ; இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாமிலுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு, ஹசினி பெரேரா ( அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி ( உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா க…
-
- 0 replies
- 239 views
-
-
அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல் நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க! http://www.vikatan.com/news/sports/72533-messi-scores-a-stunning-free-kick-goal-and-saves-argentin…
-
- 1 reply
- 392 views
-
-
பந்துவீச்சாளர்களின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தில் ஹேரத் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் சிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த சிம்பாப்வே அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக வென்றது. இந்தப் போட்டித் தொடருக்கு ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு தலைமையேற்றார். சிம்பாப்வேயுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 152 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரங்கன ஹேரத், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகி…
-
- 0 replies
- 299 views
-
-
கால்பந்து அரங்கில் கரீபியப் புயல்: உசேன் போல்ட் 2.0! 10 நொடிகள் மட்டுமே ஓடி உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த மனிதன், இனி 90 நிமிடங்கள் நிற்காமல் ஓட எத்தணித்து நிற்கிறார். 4 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் உலகை ஆட்சி புரிவதில் அவருக்கு இனி விருப்பமில்லை. ஒவ்வொரு வாரமும் தலைப்புச் செய்தியாக வலம் வர விரும்புகிறார். 9 ஒலிம்பிக் தங்கங்கள் போதாமல், பாலன் டி ஓர், கோல்டன் பூட் போன்ற விருதுகளையும் தன் அலமாரியில் அடுக்கி வைக்கக் காத்திருக்கிறார். யாருப்பா அது மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் சவால் விடுவது என்று யோசிக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல, உங்கள் விழித்திரைகளை 10 நொடிகள் வரை உறையவைக்கவல்ல ஓட்டப்பந்தய அசுரன் உசேன் போல்ட் தான் அது! ஒலிம்பிக் என்னும்…
-
- 1 reply
- 476 views
-
-
ஆஸ்திரேலியான்னா 'பயம்'... அது இப்போ இல்லையா? #CricketAustralia "ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது" - வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கேப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க…
-
- 0 replies
- 460 views
-
-
ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…
-
- 0 replies
- 332 views
-
-
மைலோ கிண்ணக் கால்பந்தாட்டம்: சம்பியனானது குருநகர் பாடுமீன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், நூறுக்கும் மேற்பட்ட, யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்று வந்த இவ்வருடத்துக்கான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. மூன்றாவது வருடமாக இடம்பெற்ற இந்த மைலோ கிண்ணச் சுற்றுப் போட்டியில், பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய கால்பந்தாட்ட லீக்குக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெர…
-
- 0 replies
- 352 views
-
-
கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…
-
- 0 replies
- 331 views
-